PDA

View Full Version : சிறுவன் காட்டிய பாதை..

rajeshkrv
09-08-2006, 08:15 PM
சிறிய கதை..

சிறுவன் காட்டிய பாதை..

ராஜு சிக்னலில் காத்துக்கொண்டிருந்தான். காருக்குள்ளிருந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி.ஆம் ஒரு சிறுவன் குப்பைத்தொட்டியிலிருந்து எதோ ஒன்றை பொறுக்கி எடுத்துக்கொண்டிருந்தான்..அந்த சிறுவன் ராஜுவின் காரின் அருகே வருகையில் ராஜு அவனிடம் கேட்டான் .. என்னப்பா அது .. சிறுவனோ சில சிகரட் அட்டைகளை காட்டினான் . ராஜு உடனே எப்பத்தான் இந்த புகை பழக்கம் சுத்தமாக ஓயுமோ என்று தனக்குள் கேட்டான் அதற்கு அந்த சிறுவனோ அட போங்க சார் நீங்க வேற அது ஒழிஞ்சா எனக்கு வேலை இருக்காது என சொல்லி அடுத்த இடத்திற்கு ஓடினான்
ஆம் அவன் பேச்சில் தான் எத்தனை உண்மை .. நோயாளிகள் இல்லையேல் மருத்துவர்கள் இல்லை
துணி அழுக்காகவிடில் சலவை தொழிலாளிக்கு வேலை இல்லை இப்படி அடுக்கி கொண்டே போகலாம்
சிகனல் பச்சையாக மாறியது கூட தெரியாமல் ராஜு சிந்தனையில் ஆழ்ந்திருக்க பின்னடி இருந்தவன் ஹார்ன் அடிக்க காரை கிளப்பினான் ராஜு

pradeepkt
10-08-2006, 03:25 AM
சிறுவன் காட்டியது ஒரு உண்மை, மறுக்க இயலவில்லை.
ஆனால் மருத்துவர்கள் பிழைக்க நோயாளிகளை உருவாக்குவதுதான் தவறு. துணி அழுக்காவது சலவைத் தொழிலாளிக்கு நல்லதுதான். ஆனால் அதற்காகவே ஒரு தொழிலாளி மற்றோர் துணியை அழுக்காக்கக் கூடாது. இப்போது கோக்கோ/பெப்சி கோலா பிரச்சினை எங்கள் அலுவலகம் வரையில் வந்துவிட்டது. அவற்றை எடுக்க வேண்டும் என்றும் வைத்திருக்க வேண்டும் என்றும் மாறி மாறி அடித்துக் கொள்கிறார்கள்.

சின்ன வயதில் சிகரெட் அட்டைகளை நானும் பொறுக்கி இருக்கிறேன். பொறுக்கி எங்கள் வீட்டில் தர்ம அடி வாங்கி இருக்கிறேன். அவற்றை மடித்து ஒரு வட்டமிட்டு நடுவில் வைத்து சில்லு வைத்து அடித்து விளையாடுவோம். ஒவ்வொரு அட்டைக்கும் ஒவ்வொரு விதமான மதிப்பு. நான்கு கத்திரி சிகரெட் அட்டைகளுக்கு ஒரு பனாமா, ஆனால் 6 பனாமா அட்டைகள் கொடுத்தால்தான் ஒரே ஒரு கோல்டு பிளேக் பில்டர் கிடைக்கும். 555 போன்ற வெளிநாட்டு வகையறாக்களுக்கு மதிப்பே இல்லை :D அதாவது அந்த அட்டைகளைக் கிழித்து மடிக்க இயலாது இல்லையா??? அதான்!

gragavan
10-08-2006, 04:44 AM
இந்த உலகில் எது சரி எது தவறு என்று சொல்வது மிகக்கடினம். பொதுவில் அடுத்தவரைக் கொடுமைப் படுத்தாமல் துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும்.

சிகரெட் பழக்கம் எனக்குக் கிடையாது. பள்ளி கல்லூரியில் நண்பர்கள் குடிக்கும் பொழுது ஓரிரண்டு முறை முயன்றிருக்கிறேன். ஆனால் என்னவோ பிடிக்காமல் போய் விட்டது. இதுக்கெல்லாம் தெறமை பத்தாது என்று ஒதுங்கிக் கொண்டேன். நல்ல வேளை.

ஒரு நண்பன் ஒரு கதை சொன்னான். ஒருவன் ஆண்டவனிடம் போய் "ஆண்டவா என்னிடம் இத்தனை நோய்கள் இருக்கிறதே...இந்தக் கிருமியையெல்லாம் ஏன் படைத்தாய்" என்று கேட்டானாம். அதற்கு ஆண்டவன் சொன்னானாம் "மனிதர்கள் மட்டுமல்ல அந்தக் கிருமிகளும் என் குழந்தைகள்தான். நான் அனைவருக்கும் படியளப்பவன்" என்று.

இனியவன்
10-08-2006, 05:46 AM
நல்ல பயனுள்ள மறுமொழிகள்.

தாமரை
10-08-2006, 02:09 PM
இந்த உலகில் எது சரி எது தவறு என்று சொல்வது மிகக்கடினம். பொதுவில் அடுத்தவரைக் கொடுமைப் படுத்தாமல் துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும்.

சிகரெட் பழக்கம் எனக்குக் கிடையாது. பள்ளி கல்லூரியில் நண்பர்கள் குடிக்கும் பொழுது ஓரிரண்டு முறை முயன்றிருக்கிறேன். ஆனால் என்னவோ பிடிக்காமல் போய் விட்டது. இதுக்கெல்லாம் தெறமை பத்தாது என்று ஒதுங்கிக் கொண்டேன். நல்ல வேளை.

ஒரு நண்பன் ஒரு கதை சொன்னான். ஒருவன் ஆண்டவனிடம் போய் "ஆண்டவா என்னிடம் இத்தனை நோய்கள் இருக்கிறதே...இந்தக் கிருமியையெல்லாம் ஏன் படைத்தாய்" என்று கேட்டானாம். அதற்கு ஆண்டவன் சொன்னானாம் "மனிதர்கள் மட்டுமல்ல அந்தக் கிருமிகளும் என் குழந்தைகள்தான். நான் அனைவருக்கும் படியளப்பவன்" என்று.

இதே கேள்வியைக் கவிதா வைக் கேட்டபோது (புளு கிராஸ் கொசு பாக்டீரியா வைரஸ் இதையெல்லாம் காக்கப் போராடுமான்னு கேட்டப்ப ஓடிட்டாங்க.. ஆண்டவன் ஆண்டவன்தான்:D :D :D

தாமரை
10-08-2006, 02:12 PM
சிறிய கதை..

சிறுவன் காட்டிய பாதை..

ராஜு சிக்னலில் காத்துக்கொண்டிருந்தான். காருக்குள்ளிருந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி.ஆம் ஒரு சிறுவன் குப்பைத்தொட்டியிலிருந்து எதோ ஒன்றை பொறுக்கி எடுத்துக்கொண்டிருந்தான்..அந்த சிறுவன் ராஜுவின் காரின் அருகே வருகையில் ராஜு அவனிடம் கேட்டான் .. என்னப்பா அது .. சிறுவனோ சில சிகரட் அட்டைகளை காட்டினான் . ராஜு உடனே எப்பத்தான் இந்த புகை பழக்கம் சுத்தமாக ஓயுமோ என்று தனக்குள் கேட்டான் அதற்கு அந்த சிறுவனோ அட போங்க சார் நீங்க வேற அது ஒழிஞ்சா எனக்கு வேலை இருக்காது என சொல்லி அடுத்த இடத்திற்கு ஓடினான்
ஆம் அவன் பேச்சில் தான் எத்தனை உண்மை .. நோயாளிகள் இல்லையேல் மருத்துவர்கள் இல்லை
துணி அழுக்காகவிடில் சலவை தொழிலாளிக்கு வேலை இல்லை இப்படி அடுக்கி கொண்டே போகலாம்
சிகனல் பச்சையாக மாறியது கூட தெரியாமல் ராஜு சிந்தனையில் ஆழ்ந்திருக்க பின்னடி இருந்தவன் ஹார்ன் அடிக்க காரை கிளப்பினான் ராஜு

அது என்னங்க வேலை சிகரெட் அட்டையைச் சேகரிப்பது... விளையாட்டுதான்னு நான் நினைச்சுகிட்டு இருக்கேன்..

வில்ஸ் அட்டையில H M T சேர்த்து கொடுத்தா H M T வாட்ச் கிடைக்கும்னு ஒருகாலத்தில புரளி இருந்தது.. அதுக்காக இருக்குமோ..

ஓவியா
10-08-2006, 04:20 PM
அருமையான குட்டிகதை
வாழ்த்துக்கள் ராஜேஷ்....

இந்த உலகில் எது சரி எது தவறு என்று சொல்வது மிகக்கடினம்.
பொதுவில் அடுத்தவரைக் கொடுமைப் படுத்தாமல் துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும்.

சான்றோர்கள்
பிரதீப், ராகவனின் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன....

நன்றி மக்கா

இளசு
10-08-2006, 10:28 PM
இந்த உலகில் உள்ளவை எல்லாமே
தாம் தின்ன வேண்டும் + பிறவற்றால் தின்னப்பட வேண்டும்.

இது ஒரு வட்டம்.

நோய் - மருந்து, கழிவு - சேகரிப்பு , இறப்பு - பிறப்பு
எல்லாம் இந்த வட்டச்சங்கிலியின் கண்ணிகள்.

சிந்திக்கவைத்த சின்னஞ்சிறு கதை தந்த குருவுக்கு பாராட்டுகள்..