PDA

View Full Version : என் நிலை!



நிலா
24-04-2003, 10:55 PM
இங்கே நான்!அங்கே நீ!
உனை அறிவேன்1உன் முகவரி அறிவேன்!
இருந்தும் என் நினைவை உணர்த்தயியலா நிலையில் நான்!
திசையறியாமல் சுழலும் காற்றைப் போல் என் மனம்!
நீ அனுப்பிய உள்ளுணர்வுகள் என்னுள்
இரசவாதத்தை ஏற்படுத்தியதை உனக்கெப்படி உணர்த்த?
என் உடல்தனை அடைத்துவைத்து உள்ளத்தை திறந்துவிட்டுள்ளனர்!
மடியவும் முடியாமல்,வாழவும் வழிதெரியாமல் நான்..........

குமரன்
25-04-2003, 12:19 AM
இவனுக்கு புரியவில்லையே...நிலா.

நிலா
25-04-2003, 01:43 AM
காதலனைப் பார்க்கயியலாமல் தவிக்கும் காதலியின் நிலையிது!
புரிந்தால் தெரிவியுங்கள்!

குமரன்
25-04-2003, 01:53 AM
என்னுள்
இரசவாதத்தை ஏற்படுத்தியதை உனக்கெப்படி உணர்த்த?


கவிதை புரிந்தது...இரசவாதம் என்பதன் அர்த்தம்தான் புரியவில்லை.
எனினும் விளக்கத்திற்கு நன்றி.

Narathar
25-04-2003, 06:38 AM
இரசவாதம் என்பதன் அர்த்தம்தான் புரியவில்லை.
-குமரன்.

ஏதாவது நோயாக இருக்குமோ?

rambal
25-04-2003, 07:21 AM
இதுக்குப் பெயர் காதல். என்று அகராதியில் உண்டு..

ரசவாதத்திற்கு அறிஞர்காள் யாராவது பதில் சொல்லுங்கள்..

இளசு
25-04-2003, 07:36 AM
இதுக்குப் பெயர் காதல். என்று அகராதியில் உண்டு..

ரசவாதத்திற்கு அறிஞர்காள் யாராவது பதில் சொல்லுங்கள்..

நான் அறிஞன் அல்லன்..இருந்தாலும் பதில் சொல்ல விழைகிறேன்!!!!
(தமிழன் பழக்கம்தானே!!! :) )
பள்ளிப்பாட வேதியியலில் Alchemistry என்பார்களே...
அதுவே ரசவாதம்...
தாமிரத்தில் உள்ள மூலக்கூறு எடையை ரசாயன வதை செய்து
தங்கமாய் மாற்ற முடியுமா... இது ரசவாதிகளின் யுகக்கேள்வி!
மூலிகை பெட்ரோல்- நமக்குப் பரிச்சயமான கேள்வி!

Narathar
25-04-2003, 10:21 AM
காதல் வரும் போது உடலில் ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுமாம்
அந்த மற்றத்தைத்தான் ரசவாதம் என்கின்றார்களோ??
(இங்கு ஒரு டாக்டர் இருக்கின்றார் அல்லவா அவர் எங்கே?)

குமரன்
25-04-2003, 11:32 AM
இதுக்குப் பெயர் காதல். என்று அகராதியில் உண்டு..

ரசவாதத்திற்கு அறிஞர்காள் யாராவது பதில் சொல்லுங்கள்..

பள்ளிப்பாட வேதியியலில் Alchemistry என்பார்களே...
அதுவே ரசவாதம்...
தாமிரத்தில் உள்ள மூலக்கூறு எடையை ரசாயன வதை செய்து
தங்கமாய் மாற்ற முடியுமா... இது ரசவாதிகளின் யுகக்கேள்வி!
மூலிகை பெட்ரோல்- நமக்குப் பரிச்சயமான கேள்வி!


நானும் அப்படித்தான் நினைத்தேன்...ஆனால் ஆய கலை 64 -ல் ரசவாதம் எனப்படுவது 42வது இடத்தில் வருகிறது.(நன்றி பிரபாவுக்கு)...
அதனால்தான் மேலும் குழப்பம்...

karikaalan
25-04-2003, 01:40 PM
காதலைப் பிழிந்து ரசமாக்கிவிட்டீர்களா என்ன!!!

பசலை படர்ந்த காதலியின் நோய்க்கவிதை நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள், நிலாஜி.

===கரிகாலன்

poo
25-04-2003, 01:45 PM
வேதியியல்பூர்வமான அலசலுக்கு வித்திட்ட கவிதை?!!..

காதலின் கொடுமை அருமை..

பாராட்டுக்கள் நிலா!!

lingam
25-04-2003, 06:08 PM
காதலியின் வேதனையை துல்லியமாய் வெளிக்காட்ட பயன் படுத்திய ரசவாதமே ஒரு வாதமாகி விட்டது. கவிதை எழுதிய நிலாவுக்கும், விளக்கம் கொடுத்து இளசுவுக்கும் பாராட்டுக்கள்.

நிலா
25-04-2003, 06:37 PM
விளக்கம் கொடுத்த கொள்ளுத்தாத்தா,பாராட்டிய தாத்தா,மற்றும் ராம்,
லிங்கம்,குமரன்,நாரதர் அவர்களுக்கும் என் நன்றிகள்!

gans5001
26-04-2003, 12:39 AM
காதல் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது போலும்

Nanban
26-04-2003, 03:11 PM
இளசு எழுதியதே சரி - ஒரு சிறு திருத்த்துடன் - Alchemistry அல்ல, alchemy என்பதே சரி.

puppy
08-01-2004, 07:36 PM
alchemist உண்டு....alchemistry என்று ஒன்று கிடையாது.....alchemy சரியே...
அவசரத்தில எழுதியிருப்பார் நம்ம இளசு.......சரி ...நிலா.....நல்ல கவிதை....

விகடன்
08-06-2008, 04:40 AM
காதல் நோய் வைரஸ் மாதிரியாம்.
கெதியாக குண்ணப்படுத்தி விடுங்கள் நிலா

சூரியன்
08-06-2008, 04:51 AM
கெதியாக குண்ணப்படுத்தி
இதற்கு அர்த்தம் விரைவில் குணப்படுத்துதல் தானே?