PDA

View Full Version : 4. மெல்லிசை மன்னரும் ஆந்திரா கொல்ட்டியும்

gragavan
07-08-2006, 09:28 AM
"இல்ல எதுவும் சொல்லனுமா? பாடுறதுக்கு முன்னாடின்னு கேட்டேன்" என்று இரண்டாம் முறையாக சுசீலா கேட்டார். "ஆமாம். கண்டிப்பாச் சொல்லனும்"னு என்று சுசீலாவிடம் சொன்னவர் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார். "கொஞ்ச நேரத்துக்கு நான் பி.சுசீலாவைக் காதலிக்கப் போறேன். ஆமா. இப்போ ஒரு டூயட் பாட்டு. டீ.எம்.எஸ் பாடியது. இப்ப அவருக்குப் பதிலா நான் பாடப் போறேன். பாடலாமா?"

கேட்டு விட்டு இசைக்குழுவிற்குச் சைகை காட்டினார். பாடல் தொடங்கியது. டொக் டொக் டொக் டொக்...குதிரைக் குளம்பு ஒலிக்க....ஜானகி "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று தொடங்கினார். அதுவும் கனமான ஆண் குரலில். அரங்கம் ஸ்தம்பித்தது. ஆனால் ஜானகி படக்கென்று சிரித்து விட்டார். பிறகு சமாளித்துக் கொண்டார். பாடல் மீண்டும் முதலில் இருந்து தொடங்கியது.

பாட்டில் பி.சுசீலா "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று பாடுகையில் ஜானகியைக் கை காட்டினார். புரிகிறது அல்லவா. இப்பிடிக் குறும்பு கொப்புளிக்கும் விளையாட்டுகளாக பாடல் நகர்ந்தது. பாடல் முடிந்ததும் "தேங்க் யூ வெரி மச்" என்று டீ.எம்.எஸ் சொல்வது போலச் சொல்லி முடித்தார் எஸ்.ஜானகி. எல்லாருக்கும் கை வலித்தது. ஆமாம். அந்த அளவு தட்டியிருக்கிறோம்.

பிறகு பேசிய ஜானகி இது புதிய முயற்சி என்றார். பிறகு கீழே அமர்ந்திருந்த பி.பீ.ஸ்ரீநிவாஸ் போலப் பாடப் போவதாகச் சொல்லி அவர் பாடிய "அனுபவம் புதுமை" பாடலைக் கொஞ்சம் பாடினார். அதற்கு ஸ்ரீநிவாஸ் அவர்களும் ஒன்ஸ்மோர் கேட்டார். அடுத்து எஸ்.பீ.பாலசுப்பிரமணியம் பாடிய பனிவிழும் மலர்வனம் பாடலை முயற்சித்தார்.

முதலில் நன்றாக இருந்த இந்தச் சோதனை பிறகு கொஞ்சம் சோதனையாக இருந்தது என்பது என் கருத்து. இப்படிச் சொல்வது ஜானகியின் குரல்வளத்தைக் குறை சொல்வதாகாது.

ஆனால் அந்தச் சோதனையைச் சாதனையாக்கும் வகையில் வந்தது அடுத்த பாடல். ஆமாம். பதினாறு வயதினிலே படத்தில் உள்ள "செந்தூரப் பூவே பாடல்". எஸ்.ஜானகி முதன்முதலாக தேசிய விருது பெற்ற பாடல். அந்தப் பாடலைத் தெலுங்கில் பாடியது பி.சுசீலா. "சிறுமல்லிப் பூவா...சிறுமல்லிப் பூவா" என்று தொடங்கும் அந்தப் பாடல். ஆனால் மேடையில் தமிழில் பி.சுசீலாவும் தெலுங்கில் எஸ்.ஜானகியும் பாடினார்கள்.

அதிலும் எப்படி ஒருவர் பல்லவி பாடி முடிப்பார். உடனே அடுத்தவர் பல்லவியைப் பாடுவார். அடுத்து அனுபல்லவி...இப்படி இருவரும் மாறிமாறி பாடுவார்கள். இசைக்கருவியாளர்களுக்குக் கடினமான வேலை. ஒரு இசைக்கோர்வையை வாசித்து விட்டு உடனே அதே கோர்வையை மீண்டும் வாசிக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் இரண்டு முறை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு மொழி. ஒவ்வொரு குரல். ஆனாலும் மிகச்சிறப்பாக அமைந்தது இந்தப் பாடல். நிகழ்ச்சியிலேயே மிகச்சிறப்பாகக் கையாளப்பட்ட பாடல் என்று இதைச் சொல்லலாம். ராஜாவின் பார்வைக்குக் கிடைத்த வரவேற்பைப் போல இரண்டு மடங்கு வரவேற்பை இந்தப் பாடல் அள்ளிக் கொண்டு போனது.

இந்தப் பாடல் முடிந்தது எஸ்.ஜானகி "மன்றத்தில் ஓடி வரும்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலை நினைவு கூர்ந்து சிறிது பாடினார். அதற்குள் இடைவேளை வந்தது. ஒவ்வொரு சிறப்பு விருந்தினராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். பி.பீ.ஸ்ரீநிவாஸ் முதலில் மைக்கைப் பிடித்தார். இரண்டு இசைமேதைகளையும் புகழ்ந்து அவர்களுடன் பாடிய பாடல்களை நினைவு கூர்ந்தார். இருவரையும் பாராட்டி ஒரு பெரிய குறுங்கவிதை எழுதி வந்து படித்தார்.

எஸ்.பி.பீ, மலேசியா வாசுதேவன், ஜெயராம், மாணிக்க விநாயகம் போன்றோர் இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கினார்கள். அடுத்து மெல்லிசை மன்னர் மேடையேறினார். மேடையில் இருந்த அனைவரும் அவரது காலில் விழுந்தார்கள். முதலில் பி.சுசீலா. பின்னர் எஸ்.ஜானகி. பிறகு பி.பீ.எஸ். பிறகு எஸ்.பி.பீ. பிறகு மலேசியா. பிறகு மாணிக்க விநாயகம். பிறகு எல்லாரும் விழுந்தார்கள். ஒரு பெரிய பட்டுத் துண்டை சுசீலாவிற்கும் ஜானகிக்கும் சேர்த்துப் போர்த்தினார்.

மைக்கைக் கையில் பிடித்தார் மெல்லிசை மன்னர். "இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வந்தா எல்லாரும் என்னோட கால்ல விழுந்து என்னைக் கெழவனாக்கிறாங்க. எனக்கு வயசு 22தான். நான் கலைஞன் இல்லை. முதலில் ஒரு ரசிகன். என்னவோ என்னாலதான் இவங்களுக்கு நல்ல பேர் கெடச்சதுன்னு இங்க எல்லாரும் சொன்னாங்க. ஆனா அது உண்மையில்ல. இவங்கள்ளாம் நல்லாப் பாடி எனக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்தாங்க. அதுதான் உண்மை. பி.சுசீலாவும் சரி. எஸ்.ஜானகியும் சரி. இரண்டு பேருக்கும் தமிழ் உச்சரிப்பு ரொம்பச் சுத்தமா இருக்கும். அவர்களுடைய சாதனை மிகப் பெரியது" இப்படி வஞ்சனையில்லாமல் இருவரையும் மனமாரப் பாராட்டினார். பேசி முடித்ததும் மேடையை அடைத்துக் கொண்டிருக்காமல் படபடவென சுறுசுறுப்புடன் (இந்த வயதில்) கீழிறங்கினார்.

அடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மைக்கைப் பிடித்தார். அவருடைய திரையுலகப் பயணம் தொடங்கவே இவர்கள் இருவரும்தான் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். ஒரு போட்டியில் பாடிய இவரை நடுவராக இருந்து ஊக்குவித்து திரைப்படத்திற்கு முயற்சிக்கச் சொன்னவர் எஸ்.ஜானகியாம். பின்னாளில் வாய்ப்புக் கிட்டியபின் தமிழில் (மெல்லிசை மன்னரின் இசையில்) முதல் பாடல் பி.சுசீலாவுடன். தெலுங்கில் பி.சுசீலாவுடன். கன்னடத்தில் பி.சுசீலாவுடன்.
தொடர்ந்து சொன்னார். "நான் ஆந்திரா கொல்ட்டி..............."

தொடரும்....

இனியவன்
07-08-2006, 09:38 AM

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது இது தானோ.
நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்தது போன்ற உணர்வு.
வார்த்தைகளில் தரும் உங்களுக்கு நன்றி.

pradeepkt
07-08-2006, 10:49 AM
ஆமாய்யா...
கற்றாரைக் கற்றாரே காமுறுவர். நாம் ரசிகர்கள். மெல்லிசை மன்னர், பாலசுப்பிரமணியம் போன்றோர் கலைஞர்கள். அவர்கள் தங்களுக்கு மேலாக இசைக் குயில்களைப் பார்த்துப் பாராட்டியதும் பாராட்டத் தகும்!!!

rajeshkrv
07-08-2006, 05:29 PM
ராகவன் கூறியது போல்
சமீபத்தில் அட்லாண்டாவில் நடந்த நிகழ்ச்சியிலும் சுசீலா அவர்கள் முதல் பாடலாக
மாணிக்க வீணை பாடலையே பாடினார்கள்
அதை இங்கே பார்த்து கேட்டு மகிழலாம்
http://dhool.com/ms/susheela/maanikkaveenai.wmv

gragavan
08-08-2006, 04:52 AM
ராஜேஷ், சிறுமல்லிப் பூவா பாடலைத் தெலுங்கில் பாடியது யார்? அந்தப் பாடல் எம்பி3 வடிவம் கிடைக்குமா? அல்லது வேறு ஏதேனும் ஒரு இசை வடிவம் கிடைக்குமா?

ஓவியா
08-08-2006, 02:38 PM
நன்றி ராகவன்

அருமையான பதிவு ...தொடரவும்

rajeshkrv
08-08-2006, 03:59 PM
தெலுங்கிலும் ஜானகியே பாடிய பாடல் அது
சுசீலா அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் அதை அவர் பாடினார்
http://www.raaga.com/channels/telugu/movie/A0000036.html

gragavan
09-08-2006, 06:24 AM
உண்மைதான் ராஜேஷ். நான் தவறான தகவலைக் கொடுத்து விட்டேன். சரியான தகவலைக் கொடுத்தமைக்கு நன்றி.

இளசு
10-08-2006, 11:08 PM
சுவை குறையாமல் இந்த பாகமும்.

மெல்லிசை மன்னரின் பேச்சில் நெகிழ்ந்தேன்.

ராஜாவின் பார்வையின் குதூகலமும், செந்தூரப்பூவே இரட்டைத் தித்திப்பும் எழுத்திலேயே சுவைக்கக் கொடுத்த வன்மைக்கு வந்தனம் ராகவன்..

( தகவல் சுரங்கம் குருவின் உதவிக்கு நன்றி)