PDA

View Full Version : என் லட்சியங்கள்



அகத்தியன்
06-08-2006, 08:42 AM
நீண்டு கொண்டே போனது
என் லட்சியத்தின் பயணம்.
என்று முடியும் என்பதில்
எப்போதும்,
வெறுமையே விடையாகிப்போனது.

ஓர் பார்வையில் இளைப்பாறி,
காதலில் அமிழ்ந்து......
இன்னும்..
என் லட்சியங்கள்
தொடமுடியா இலக்கின் தடங்கல்களுக்குள்.

எதை தேடி அலைகிறேன்?
என் தேடலில்
இன்னும் ஓர் வினா இணைகிறது.

கருமை பூசிய காலங்களின் ராட்சதபசி
என் லட்சியங்களை உண்ணுமா?

இன்னும் செறிவற்று,
நான் ஏதுமின்றி,
திறந்தே கிடக்கின்றேன்.
விடைகள் ஏதும் மேலிருந்து விழவில்லை.
இன்னும் இன்னும் லட்சியங்களாக....

நீண்டு கொண்டே போனது
என் லட்சியத்தின் பயணம்.

பென்ஸ்
07-08-2006, 02:15 PM
அகத்தியன்...

தோள்களை காமியுங்கள் ..
தட்டி கொடுக்க வேண்டும்...
அருமை... மிக அருமை...
சில நினைவுகள்...

8 - 9 வயசு இருக்கும் ....
காலையிலையே எழும்பி ,
பல்லை மட்டும் தேய்த்து விட்டு ,
ஒரு செம்பு தண்ணி குடித்து,
துண்டை இடுப்பில் கட்டில்
அதில் வெட்டுகத்தியை தொங்கவிட்டு
என்னுடய தோட்டத்தை நோக்கி போவேன்..
தனியாக...

தோட்டத்தில் தங்கி வேல செயுறவங்களுக்குன்னு
அரிசி, கருவாடு, காய்கறி, மசாலா எல்லாம் கட்டி
தலையில் சுமக்கனும்... அவங்களுக்கு வெள்ளகுடி கொடுக்குறதுக்கு இதை சமைக்கனும்...
பிந்துச்சுன்னா அப்பா திட்டுவாரு....
சூரியன் வந்துச்சுனா வயக்காட்டுல நடந்து போச்சுல உடம்பு எல்லாம் எரியும்....

மலையின் அடியில் இருக்கும் எங தோட்டத்துக்கு போறதுக்கு 7 மயில் தூரம் போவனும்..
1.5 மயில் நல்ல ரோடு இருக்கும்..
அப்புறம் ஒரு 3 மயில் தூரன் வ்யக்கட்டில் நடக்கனும்....
அப்புறம் மீதி தூரம் மலயேற்றம் தான்...

மலையை நோக்க நடக்க நடக்க ...
மலை தூர தூர போவது போல் இருக்கும்...
தலையில் பாரம் என்னை படுத்தும்...
ஏன் என்னை மட்டும் அனுப்புறங்க., அவன் (அண்ணன்) சும்மா வீட்டில் தான் இருக்கான் ..
நம்ம மட்டும் இளக்காரம் என்று எண்ணி கோபம் வரும், சில நேரம் அழுகையும்...
ஆனாலும் வலிக்க வலிக்க நடந்து வழியில் சிறிது ஓய்வு கூட எடுக்காமல் போனால்,
"ஏன் இவ்வளவு நேரம்??" என்ரு கேக்கும் போது அமைதியாக ஒரு சிரிப்பை மட்டும் அப்பாவுக்கு கொடுப்பேன்...

நடக்க நடக என்னை விட்டு விலகி போகும் இந்த மலையின் உச்சியை என்றாவது தொட்டு விட வேண்டும் என்ற ஒரு வெறி என்னுள்...
அப்பாவிடம் கேட்டால்.. "ஒரு நாளில் மேலே போயிட்டு வரமுடியாது"... இந்த தடைகள் என்னை இன்னும் ஆவேசமாக்க...

12 வயது இருக்கும் போது ஒரு நாள் அப்பாவுக்கும் தெரியாமல் தலை சுமடை வைத்துவிட்டு மலையேறி... மாலைக்குள் இறங்கவும் செய்தேன்...

பின்னோருநாள் அப்பாவிடம் இதை சொல்ல ... அவர் பொய் கோபபட்டாலும்,
என் (வீர) செயல்களுக்கு எப்போதும் சந்தோச பட்டு கொள்வார்...

அன்னைக்கு ஆரம்பிச்ச மலையேற்றம்.. இன்னும் தொடருது...
ஒவ்வொரு சிகரத்தையும் கைபற்றும் போது இன்னும் ஒரு சிகரத்தை தேடி...

இங்கும் என் லச்சிய புள்ளி ஏது???

மாற்றம் ஒன்றே மாறாமல்....(நன்றி: இளசு)

இந்த வாழ்க்கை பயணத்தில் தேடலுக்கு முடிவில்லை....

இப்போ கவிதை:

வரிகள் ஒவ்வொன்றும் பொறிக்க படவேண்டியவை...
********/கருமை பூசிய காலங்களின் ராட்சதபசி
என் லட்சியங்களை உண்ணுமா?/**************

அது நம் மனவலிமையை போறுத்ததோ???

சில வெற்றிகளுக்காக பல சிறு இழப்புகள் வரும்...
சில நேரங்களில் லச்சியங்களும் புதைக்கபடும்...
மரமாய் வளக்க வேண்டி....

sarcharan
07-08-2006, 02:38 PM
நீண்டு கொண்டே போனது
என் லட்சியத்தின் பயணம்.
என்று முடியும் என்பதில்
எப்போதும்,
வெறுமையே விடையாகிப்போனது.
.


அருமையான வரிகள்.


.

எதை தேடி அலைகிறேன்?
என் தேடலில்
இன்னும் ஓர் வினா இணைகிறது.

கருமை பூசிய காலங்களின் ராட்சதபசி
என் லட்சியங்களை உண்ணுமா?

இன்னும் செறிவற்று,
நான் ஏதுமின்றி,
திறந்தே கிடக்கின்றேன்.
விடைகள் ஏதும் மேலிருந்து விழவில்லை.
இன்னும் இன்னும் லட்சியங்களாக....

நீண்டு கொண்டே போனது
என் லட்சியத்தின் பயணம்.



உண்மை அகத்தியன்

இனியவன்
07-08-2006, 03:18 PM
அகத்தியனின் வார்த்தைகள்
அனைவர் மனதிலும்
ஆழப் பதிந்த உண்மைகள்.
எப்படி யோசித்தாலும்
அவர் சொல்ல வரும்
சேதிகளைச் சடுதியில்
கலைத்து விட முடியாது.

பென்சின் மறுமொழியும்
நினைவுப் புதையலை
கிளர்ந்தெழச் செய்து விட்டது.

வாழ்த்துகள்.

அகத்தியன்
07-08-2006, 04:32 PM
என் நண்பர்களே,
வாழ்க்கை புத்தகத்தில் ஒவ்வொரு இடுக்குகளும் உண்மைகளையும் சில இனிமைகளையும் பல ஞாபகங்களையும் கொண்டுள்ளது.
எனக்கு புரிந்ததை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் பாராட்டுக்கள் இன்னும் என்னை எழுத தூண்டும். நன்றி

எனக்கு எத்தனை வயதிருக்கும் பெஞ்சமின்?
உங்கள் அனுபவ வரிகள் அழகாய் உள்ளன-

பென்ஸ்
07-08-2006, 04:40 PM
எனக்கு எத்தனை வயதிருக்கும் பெஞ்சமின்?


2 மாதங்கள்... தமிழ்மன்றத்தில்....
நிஜமா...18 வயது.... (எனக்கு எப்பவுமே அந்த நினைப்புதான்)

அகத்தியன்
07-08-2006, 04:43 PM
சில வெற்றிகளுக்காக பல சிறு இழப்புகள் வரும்...
சில நேரங்களில் லச்சியங்களும் புதைக்கபடும்...
மரமாய் வளக்க வேண்டி....

உண்மை பெஞ்சமின்,ஆனாலும் இன்று குறித்த லட்சியம் நோக்கிய பயணம் இல்லை போலுள்ளது.செல்கின்ற பாதையில் கிடைப்பதை பற்றிக்கொள்கின்றோம். என்ன நான் சொல்வது?

தாமரை
07-08-2006, 04:47 PM
நீண்டு கொண்டே போனது
என் லட்சியத்தின் பயணம்.
என்று முடியும் என்பதில்
எப்போதும்,
வெறுமையே விடையாகிப்போனது.

ஓர் பார்வையில் இளைப்பாறி,
காதலில் அமிழ்ந்து......
இன்னும்..
என் லட்சியங்கள்
தொடமுடியா இலக்கின் தடங்கல்களுக்குள்.

எதை தேடி அலைகிறேன்?
என் தேடலில்
இன்னும் ஓர் வினா இணைகிறது.

கருமை பூசிய காலங்களின் ராட்சதபசி
என் லட்சியங்களை உண்ணுமா?

இன்னும் செறிவற்று,
நான் ஏதுமின்றி,
திறந்தே கிடக்கின்றேன்.
விடைகள் ஏதும் மேலிருந்து விழவில்லை.
இன்னும் இன்னும் லட்சியங்களாக....

நீண்டு கொண்டே போனது
என் லட்சியத்தின் பயணம்.

ஓர் பார்வையில் இளைப்பாறி,
காதலில் அமிழ்ந்து......
இன்னும்..
என் லட்சியங்கள்
தொடமுடியா இலக்கின் தடங்கல்களுக்குள்.

லட்சியப் பயணம்! இளைப்பறுதலில்

எதை தேடி அலைகிறேன்?
என் தேடலில்
இன்னும் ஓர் வினா இணைகிறது.

இலக்கு மறந்து போய் வெறுமையாய் பயணம் ஆகியதோ?

நான் ஏதுமின்றி,
திறந்தே கிடக்கின்றேன்.

அப்பயணமும் அசைவின்றி கிடக்க ஆரம்பித்து விட்டதோ?

எதை தேடி அலைகிறேன்?
என் தேடலில்
இன்னும் ஓர் வினா இணைகிறது.

லட்சியங்களை அலட்சியங்கள் அழித்துவிடும்..

நீண்டு கொண்டே போனது
என் லட்சியத்தின் பயணம்.
என்று முடியும் என்பதில்
எப்போதும்,
வெறுமையே விடையாகிப்போனது

லட்சியம் பயணிக்க வேண்டியதில்லை.. லட்சியத்தை நோக்கி நாம் தான் பயணிக்க வேண்டும்.

பென்ஸ்
07-08-2006, 04:51 PM
உண்மை பெஞ்சமின்,ஆனாலும் இன்று குறித்த லட்சியம் நோக்கிய பயணம் இல்லை போலுள்ளது.செல்கின்ற பாதையில் கிடைப்பதை பற்றிக்கொள்கின்றோம். என்ன நான் சொல்வது?

எதற்காக நல்லவற்றை பற்றி கொள்கிறோம்????...
மனது அதிகமாக "pleasure principle" வகையை சார்த்து செல்லும்...

சிலர்.. நித்திய பேரின்பம்..
சிலர் .. நீண்ட கால சுகம்..
சிலர்... வாழ்க்கை சுகம்
பலர்.. அல்ப சுகம்..
கடைசி இரண்டு பாகுதியினர் அதிகமாக இருப்பதால்... "நாம் எல்லோரும் அப்படிதான்" என்று பொதுவாக சொல்லிவிடுகிறோம்... என்ன சரிதானே???

அகத்தியன்
07-08-2006, 05:09 PM
லட்சியம் பயணிக்க வேண்டியதில்லை.. லட்சியத்தை நோக்கி நாம் தான் பயணிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றே நான் சொல்வேன். எம்மை செலுத்துவது லட்சியங்கள்தான். ஆகவே அது லட்சியத்தின் பயணம்தான்.

லட்சியத்தின் பயணம்=எமது பயணம்

பென்ஸ்
07-08-2006, 05:39 PM
அப்படி இல்லை என்றே நான் சொல்வேன். எம்மை செலுத்துவது லட்சியங்கள்தான். ஆகவே அது லட்சியத்தின் பயணம்தான்.

லட்சியத்தின் பயணம்=எமது பயணம்
__________________
தேடி சோறு நிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதை பேசி,
மனம் வாட பல பணிகள் புரிந்து,
நரை கூடி கிழப்பருவமெய்தி,
கொடுங்கூற்றுக்கிரையென மாயும் பல வேடிக்கை மனிதரை போல் வீழ்வேனென நினைத்தாயோ!!!


புரிகிறது.... :) :) :)

தாமரை
07-08-2006, 05:45 PM
அப்படி இல்லை என்றே நான் சொல்வேன். எம்மை செலுத்துவது லட்சியங்கள்தான். ஆகவே அது லட்சியத்தின் பயணம்தான்.

லட்சியத்தின் பயணம்=எமது பயணம்

இது தவறு

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் நாமே நமது லட்சியம் என்றாகி விடுகிறது..

லட்சியங்கள் அடையப்படும் வரை லட்சியங்கள் வேறு நாம் வேறு.. அடையப்பட்டால் நமது லட்சியங்களால் நாம் அறியப்படுகிறோம்..

லட்சியத்தின் பயணம் தனி ஒருவரை சார்ந்திருப்பது இல்லை.. நமது பயணம் லட்சியத்தை நோக்கி இருக்கிறது,,

ஒவ்வொருவருக்கும் பெரிதோ சிறிதோ லட்சியங்கள் இருக்கத்தான் செய்கிறது..

பென்ஸ்
07-08-2006, 06:20 PM
செல்வன்...
இது லச்சியத்தை நோக்கிய லச்சிய பயணமோ????

"நான் யார்??" இந்த கேள்விக்கு கூட இந்த மானுடம் இன்னும் பதில் கொடுக்க வில்லையே....

இளசு
07-08-2006, 09:20 PM
அகத்தியன்,

பலர் மனதிலும் உலவும் எண்ணங்களை
நேர்த்தியான வரிகளில் வடித்ததற்கும்..

இரு கவிதைகளில் மன்ற நட்சத்திரங்களின்
மனசை இழுத்ததற்கும்..

பாராட்டுகள் இரட்டிப்பாக...

இனிய பென்சின் பின்னோக்கல் சிறப்பான பின்னூட்டம்..


இந்த முத்தாய்ப்பு வரிதான் அதன் உச்சம்:


...
சில நேரங்களில் லட்சியங்களும் புதைக்கப்படும்...
மரமாய் வளக்க வேண்டி....

செல்வன் செய்யும் ஆரோக்கிய உரையாடல் கவிதையின் ஆழத்தை, பாதிப்பைப் பறைசாற்றுகிறது.

அகத்தியன்
08-08-2006, 04:41 PM
"நான் யார்??" இந்த கேள்விக்கு கூட இந்த மானுடம் இன்னும் பதில் கொடுக்க வில்லையே....
சரியாக சொன்னீர்கள் பெஞ்சமின்.
"நான் ஐ தேடி எத்தனையோ பேர் அலைகின்றனர்"