PDA

View Full Version : மனசும் மண்ணாங்கட்டியும்



அகத்தியன்
05-08-2006, 05:22 PM
உறவுகள் யாவும் செத்தே போயின,
துரோகம் கூறும் நட்புகளும்,
குற்றம் சொல்லும் காதலுமாய்.

யாரில் உன்னை திணிக்கப் போகிறாய்?
வேலையற்று,காத்திருந்து,கவலைப்பட்டு........
சே!
முட்டாளாகிப்போன நீ பற்றி
நான் இனிப் பாடப் போவதில்லை.

என் பேனா முனையில்
உலகம் சிருஸ்டித்த நீ பற்றி-இனி
நான் பாடப்போவதே இல்லை.

இழிந்த உன் உணர்வுகள் பற்றி
என்க்கேதும் அக்கறையில்லை.
ஏதுமற்றே போய்விட்டாய்.
எதற்குனக்கு உணர்வுகளின் மீதான அக்கறை?
விட்டுத்தொலை!
எல்லோரும் சாகடித்த ஒன்று பற்றி,
நீ வருந்துவதில் ஏதுமாகா!
மனசும் மண்ணாங்கட்டியும்.

இளசு
05-08-2006, 09:36 PM
இத்தனை தூரம் வருந்தி, கோபப்பட்டு சொல்லும் விதமே சொல்லுகிறது-
உங்கள் மனம் இற்றுப்போய்விடவில்லை - அதை நீங்கள்
விற்றுவிடவும் இல்லை என்று...

வாருங்கள் அகத்தியன். ஆழ்மன ஆவேசத்தை வார்த்தைகளில் வடிக்கத்தெரிந்த உங்களுக்கு வாழ்த்தும் வரவேற்பும்..

இன்னும் எழுதுங்கள்..

அகத்தியன்
06-08-2006, 08:25 AM
நன்றி இளசு
உணர்வுகள்தானே கவிதைகளாகின்றன.
இன்னும் எழுத முனைகிறேன்.
தங்கள் வரவேற்புக்கு மீண்டும் என் நன்றிகள்.

பென்ஸ்
07-08-2006, 12:51 AM
அகத்தியன்...

அருமையான கவிதை...

காதலியை ஏமாற்றாதே;
ஏமாற்றவிடு...
இது... காதலில், காதல்வலியில் இருந்து தப்ப மனது சொல்லும் ஒரு முகமூடி வழி....

என் வலிமை வலியறியாதது...
மனம் மனிதம் அற்றது..
நான் எதற்க்கும் கவலைபடவில்லை
என்று நம்மை நாமே ஏமாற்றும் இந்த நிலமையோ???

வலியை அப்படியே புரிந்து கொள்கிறென்... எனினும் மாற்ற முடியாதது இல்லியே...

மீண்டும்... வாழ்த்துகள்...


மன்றத்தில் கவிதா இதை போலவே ஒரு கவிதை கொடுத்து இருந்தார் அது இங்கே..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5102



இளசு...

வழக்கமான கேள்வி..
கோபமும், ஆவேசமும்.. இயலாமையின் வேளிப்பாடோ???

தாமரை
07-08-2006, 04:05 PM
உறவுகள் யாவும் செத்தே போயின,
துரோகம் கூறும் நட்புகளும்,
குற்றம் சொல்லும் காதலுமாய்.

யாரில் உன்னை திணிக்கப் போகிறாய்?
வேலையற்று,காத்திருந்து,கவலைப்பட்டு........
சே!
முட்டாளாகிப்போன நீ பற்றி
நான் இனிப் பாடப் போவதில்லை.

என் பேனா முனையில்
உலகம் சிருஸ்டித்த நீ பற்றி-இனி
நான் பாடப்போவதே இல்லை.

இழிந்த உன் உணர்வுகள் பற்றி
என்க்கேதும் அக்கறையில்லை.
ஏதுமற்றே போய்விட்டாய்.
எதற்குனக்கு உணர்வுகளின் மீதான அக்கறை?
விட்டுத்தொலை!
எல்லோரும் சாகடித்த ஒன்று பற்றி,
நீ வருந்துவதில் ஏதுமாகா!
மனசும் மண்ணாங்கட்டியும்.

பாடப்போவதில்லை என்று ஒரு பாட்டா?

மனது தோற்றுப்போவதில்லை.. மனிதன் தான் தோற்றுப்போகிறான்.. மனதின் எல்லைகளை மனிதன் அறிவதில்லை..

உலகம் சிருஷ்டித்தற்கு ஒரு உண்மை நட்பை சிருஷ்டிக்க எவ்வளவு காலமாகும்?