PDA

View Full Version : (பழைய) புதுமுகம்



svenkat
02-08-2006, 04:43 PM
தமிழின் மீது அன்பும் ஆர்வமும் கொண்ட நான் சிதம்பரம் பகுதியை சொந்த ஊராகக் கொண்டவன். தமிழாசிரியரான தந்தையின் பணி நிமித்தம் கோவையில் வளர்ந்தவன்
அங்கேயே பள்ளி முதல் (பொறியியல்) கல்லூரிவரை பயின்று பல இடங்களில் பணி புரிந்து இப்பொழுது வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் வசித்து வருகின்றேன்.
ஒருவருடத்திற்கு முன்பே தமிழ் மன்றத்தில் உறுப்பினராக இணைந்தும் முதல் பதிவிட இத்தனை நாளாகிவிட்டது.
தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக உங்கள் அனைவருடனும் இணைந்து செயல்பட ஆசை!

paarthiban
02-08-2006, 04:59 PM
வாங்க வெங்கட். உங்களை மகிழ்ச்சியாய் வரவேற்கிறேன். கலக்குங்க.

இளசு
02-08-2006, 09:54 PM
வருக வருக வெங்கட் அவர்களே..

தில்லை பூர்வீகம், கோவைக் கல்வி, கத்தார் பணி என பல பரிமாணங்கள்..

படைப்புகள், விமர்சனப்பதிவுகள் என பன்முகம் காட்டி உலவி மகிழ வாழ்த்துகள்..

Mano.G.
03-08-2006, 01:01 AM
வாங்க வெங்கட்,
உங்களை போல் தமிழார்வம் கொண்டு
எங்களுக்கு இம்மன்றம் சிறக்க உங்கள் படைப்புக்களை
படைக்க வாழ்த்துக்கள்

மனோ.ஜி

vckannan
03-08-2006, 04:25 AM
வாங்க வெங்கட்
நாங் கூட கடலூர்காரந்தான்

ரொம்ப முயற்சி பண்ணி இருக்கீங்க போல மன்றத்துல முதல் பதிப்பு பதிப்பு செய்ய

பொறுத்தவர் வாழ்த்தும் பெறுவார் வாழ்த்துக்கள்

திபாவளிக்கு வெடிக்கற அணுக்குண்டுடோட திரி நீளந்தான் பத்தவச்சா வெடிக்க நேரமாகும்.......ம்...வெடிக்குமா... வெடிச்சா? ..... நீங்க பதிப்ப தொடருங்க வெங்கட்

pradeepkt
03-08-2006, 06:06 AM
வெங்கட்டுக்கு வரவேற்புகள்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி மகிழ்ந்து மகிழ்த்துங்கள்.

பரஞ்சோதி
03-08-2006, 06:19 AM
வாங்க வெங்கட், எப்படி இருக்கீங்க?

உங்களை தமிழ் மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

svenkat
03-08-2006, 06:42 AM
மிகவும் மகிழ்ச்சி, வரவேற்ற அனைவருக்கும் நன்றி.

மயூ
03-08-2006, 09:44 AM
வாங்க அன்பரே!
உங்களை அன்புடன வரவேற்கின்றேன்......
என்னோரு தடவை மறைய மாட்டீங்களே??? ;-)

pradeepkt
03-08-2006, 10:52 AM
இப்படிச் சொல்லியே வெரட்டி விட்டுறாத மயூரேசா!!! :D :D :D

svenkat
03-08-2006, 11:03 AM
வாங்க அன்பரே!
உங்களை அன்புடன வரவேற்கின்றேன்......
என்னோரு தடவை மறைய மாட்டீங்களே??? ;-)

உங்கள் "அவ்தார்" செயலைப் பார்க்கும்போது மறையத் தோன்றுமா?:cool:

அறிஞர்
03-08-2006, 01:40 PM
வாருங்கள்... தோழரே.... தங்களின் பதிப்புக்களை தொடர்ந்து கொடுங்கள்....

ஓவியா
03-08-2006, 03:28 PM
சீனி என்றாலே இனிப்புதான்....
நம்ப சீனி வெங்கட்டும் அப்படிதான் போல்..:D :D :D

வாங்க வாங்க...
:D :D இனிமையான :D :D
உங்களை வரவேர்ப்பதில் மகிழ்ச்சி....;)

உங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துக்கள்

மயூ
04-08-2006, 08:33 AM
இப்படிச் சொல்லியே வெரட்டி விட்டுறாத மயூரேசா!!! :D :D :D
:D :D :D அவர் பயப்பட்டதா தெரியல?:D