PDA

View Full Version : போர் வேண்டுமா?



vckannan
01-08-2006, 12:40 PM
சண்டை போடாதீங்க அங்கிள்

அம்மாவின் முகமும்
அப்பாவின் கையும்
என் பர்பிக்குட்டியையும்
அள்ளி கொண்டு போனார்கள் - கோணிகளில்
சண்டைகள் வேணாமே அங்கிள்

இளசு
01-08-2006, 09:02 PM
அடுத்த தலைமுறையை காக்க வேண்டிய கடமை
நம் அனைவருக்கும் உள்ளது.

மாசற்ற சூழல் வேண்டி ஒரு பக்கம் முயற்சிகள்...
குழந்தை மனசை முறிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்வுகள்..


மழலையின் பார்வையில் சுரீர் என உறைக்க..உறைய வைக்கும் கவிதை..

கண்ணனுக்கு பாராட்டுகள்.

அறிஞர்
01-08-2006, 10:21 PM
வித்தியாசமான சிந்தனை.. கண்ணன்....

இளசு சொல்வது போல் இளம் சமுதாயம் பாதுகாக்கப்படவேண்டும்....

சண்டைகளற்ற சாம்ராஜ்யத்தை காண ஆசை

vckannan
04-08-2006, 11:38 AM
நன்றி இளசு
நன்றி அறிஞர்:)

இனியவன்
04-08-2006, 03:41 PM
நல்ல சிந்தனை,
கண்ணன்,
வாழ்த்துகள்.

பென்ஸ்
04-08-2006, 04:50 PM
கண்ணன்...
மழலையின் பார்வையில் ஒரு போர் கவிதை....
அருமை....

vckannan
08-08-2006, 12:46 PM
கண்ணன்...
மழலையின் பார்வையில் ஒரு போர் கவிதை....
அருமை....
நன்றி இனியவன்
நன்றி பென்ஞமின்

உங்கள் பாராட்டு எனக்கு உற்சாகத்தை மேலும் பதிக்கும் ஆர்வத்தை தருகின்றது நன்றி

ஓவியா
08-08-2006, 12:55 PM
மழலையின் பார்வையில்................சிந்தனைகள்..அருமை
பாராட்டுக்கள் கண்ணன்

எனக்கு கவிதை ஓர் அளவு புரிந்தது
ஆனால் ஏன் இந்த பர்பிக்குட்டியை அள்ளிக்கொண்டு போனார்கள்.....இந்த வரி புரியவில்லை மக்கா...:confused:

vckannan
08-08-2006, 01:05 PM
மழலையின் பார்வையில்....................சிந்தனைகள்...அருமை
பாராட்டுக்கள் கண்ணன்

நன்றி
எனக்கு கவிதை ஓர் அளவு புரிந்தது
ஆனால் ஏன் இந்த பர்பிக்குட்டியை அள்ளிக்கொண்டு போனார்கள்.....இந்த வரி புரியவில்லை மக்கா...:confused:

குழந்தைக்கு பொம்மயும் மத்தவங்களும் ஒன்னுதான். அதுனால வலி ஒன்றுத்தான் விவரம் தெரியாத பருவம் அந்த குழந்தை

நாம தான் பொம்மய பொம்மயா பார்ப்போம் குழந்தை தோழியாதான் பார்க்கும்.பவுடர் பூசறது தூங்க பண்ணறதுன்னு பிரியமாயிற்றே- பர்பி.

அந்த பொம்மையை இழந்ததும் ஒரு பெரிய இழப்பு தான் அந்த சின்ன பாப்பாவிற்கு

இன்னொரு காரணம் குழந்தை ரொம்ப சிறிய வயசுன்னு காட்டறதுக்கு பொம்மய பயன்படுதினேன்