PDA

View Full Version : புன்னகை..



rambal
24-04-2003, 08:20 PM
என் வாசிப்பிற்குள்
சிக்காத
வார்த்தைகளாய்...

புரியாத சங்ககால
இலக்கியமாய்..
தொல்காப்பியமாய்...

என்ன நடக்கிறது என்று
புரியா வண்ணம் போகும்
அயல்மொழி கலைப் படமாய்..

சித்தனாய்..
பித்தனாய்..
கிறுக்கனாய்..

போதும் நிறுத்து
உன் இதழில்
தெறிக்கும் சிரிப்பை..

நிலா
24-04-2003, 09:33 PM
சித்தனாய், கிறுக்கனாய்,பித்தனாய் மட்டுமா?
கவிஞனாயும் தானே?
காதல் காதல்காதல் காதற்போயின் சாதல் சாதல் சாதல்
அவஸ்தயிலும் ஆனந்தம் உள்ளது தானே?

Narathar
25-04-2003, 05:23 AM
சித்தனாய், கிறுக்கனாய்,பித்தனாய் மட்டுமா?
கவிஞனாயும் தானே?


ஏன்? காதலனாயும்!!!

poo
25-04-2003, 01:42 PM
ஒரு தெற்றுப்பல் சிரிப்பின் வலிமை நானும் உணர்ந்திருக்கிறேன்..

அருமை ராம்!!!

Nanban
26-04-2003, 02:52 PM
என்ன நடக்கிறது என்று
புரியா வண்ணம் போகும்
அயல்மொழி கலைப் படமாய்..

.

புரியாத கலைப்படைப்பு தானே - பெண் ?

புரியாவிட்டாலும், புரிந்து கொண்டாலும், கவிதையின் தோற்றத்திற்கு பெண் அவசியமானவளாய் தான் அன்றும் இன்றும் என்றும் இருக்கிறாள் பெண்.

Emperor
27-04-2003, 06:30 AM
அருமையான கவிதை ராம்பால் அவர்களே ! பாராட்டுக்கள்

கூந்தல் காட்டில் வழி தெரியாமல்
மாட்டி கொண்டேன் என் வலி என்ன!!

இளசு
09-05-2003, 05:46 PM
காதல் முகிழ்ப்பது ஒரு கணத்தில்..
தெறித்த சிரிப்பில் உதித்த காதல் அருமை ராம்!
பாராட்டுகள்...