PDA

View Full Version : இது செய்தி



இனியவன்
31-07-2006, 01:06 PM
மக்டோனால்ட், பிரிட்டனின் முதல் லேபர் கட்சிப் பிரதமர்.
அடிக்கடி வெளிநாடுகளுக்கு விஜயம் செய்வதில் ஆர்வமுள்ளவர். எதிர்கட்சிகள் எவ்வளவோ கண்டனம் செய்தும் அவர் காதில் ஏறவில்லை.

ஒருமுறை கனடாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துவிட்டு அவர் இங்கிலாந்து திரும்பிய நேரத்தில், "டைம்ஸ்' பத்திரிகை, "மக்டொனால்ட் இங்கிலாந்துக்கு விஜயம்!' என்று தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிட்டது.

இந்தத் தலைப்பு பிரதம மந்திரியை தாக்கியது; அதிலிருந்து அவருடைய
வெளிநாட்டுப் பயணங்கள் குறைந்தன!

நன்றி வாரமலர்

ஓவியன்
14-05-2008, 02:02 PM
"மக்டொனால்ட் இங்கிலாந்துக்கு விஜயம்!' என்று தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிட்டது.

என்னே ஒரு தந்திரமான வார்த்தைப் பிரயோகம்...!! :)

இது இன்றைய கால அரசியல்வாதிகள் பலருக்கும் தெரியவேண்டிய சம்பவமே...!! :frown:

praveen
14-05-2008, 02:22 PM
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, நிறைய வெளிநாட்டு சுற்றுபயனங்கள் தொடர்ந்து மேற்கொண்டிருந்த வேளையில், பார்லிமென்டில் கலந்து கொள்ள வந்த போது, எதிர்கட்சிகள் மேலே கண்டது போல செய்தால் தான் வெளிநாட்டு விஜயம் நிற்கும் என்று, இதே போல பார்லிமெண்டிற்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமரை வரவேற்கிறோம் என்று கிண்டல் செய்து பாதாகைகள் கையில் கொண்டு உயர்த்தி கிண்டல் செய்தது நியாபகம் வருகிறது.

அப்போது பத்திரிக்கைகளில் இந்த செய்தி பார்த்திருக்கிறேன், நினைவுபடுத்தியதற்கு நன்றி.