PDA

View Full Version : DVD யில் இருந்து படங்களை எப்படி Capture செய்வது?.



உதயா
29-07-2006, 10:14 AM
வணக்கம்..

எனக்கு ஒரு சின்ன பிரச்சணை.. அதாவது என்னிடம் உள்ள DVD யில் இருந்து சில படங்களை காப்பி செய்து, படமாக சேமிக்கவேண்டும். நான் Windows Media Player 11 இப்போது உபயோகப்படுத்துகிறேன். நான் எத்தனை முறை முயன்றும் தோல்விதான்.

நான் செய்த முறை, படத்தை ஓடவிட்டேன், பின் அதை ஸ்டில் (pause) அடித்து நிருந்தி sreen print செய்து, பின் paint brush ல் bitmap பைலாக சேமித்தேன். கணினியில் CD இருக்கும் வரை, படம் வருகிறது. CD யை எடுத்த பிறகு படம் காணாமல் போய் விடுகிறது.

இதே முறையில் JPEG யாக சேமித்தாலும் அதே கதைதான். இந்த பிரச்சனை DVD க்கு மட்டும் தான்.

தெறிந்தவர்கள் உதவி செய்யுங்களே பிலிஸ்


.

உதயா
31-07-2006, 03:51 AM
யாருமே பதில் தறவில்லை!!

ஓ.கே நானே பதில் தருகிறேன். நான் யாகூ மூலம் தேடியதில் ஒரு Freeware(Trail) கிடைத்தது. PowerDVD என்று பெயர். அது நன்றாக இருந்தது. இருப்பினும் அது கொஞ்ச நாட்களுக்கு தானே வேலை செய்யும் என்று மீண்டும் மீண்டும் தேடியதில், என் கணிணியிலேயே உள்ளது Intervideo WinDVD என்ற செயழி. இது IBM computer மூலம் சேர்ந்தே வருகிறது. அதன் மூலம் முயற்சி செய்தேன் மிகவும் நன்றாக உள்ளது.

pradeepkt
31-07-2006, 05:26 AM
நன்றி வெற்றி.
பவர்டிவிடி டிரையல் வெர்சனில் இந்தத் திறமையை முடக்கி வைத்திருந்தார்களே... எந்த வெர்சனில் இது வேலை செய்கிறது என்று சொல்ல இயலுமா?

gragavan
31-07-2006, 05:57 AM
என்னுடைய நண்பன் ஒரு .avi file டவுண்லோடு செய்திருக்கிறான். அது dvd ripped. அவனுடைய கணினியில் divx player உதவியோடு அதனைப் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. ஆனால் என்னுடைய கணினியில் பார்க்க மட்டுமே முடிகிறது. கேட்க முடியவில்லை. என்ன பிரச்சனையாக இருக்கும்? ஏதோ tag நம்பர் கொடுத்து அதை ஒலிக்க முடியாது என்று சொல்கிறது. எப்படி சரி செய்வது?

உதயா
31-07-2006, 08:35 AM
நன்றி வெற்றி.
பவர்டிவிடி டிரையல் வெர்சனில் இந்தத் திறமையை முடக்கி வைத்திருந்தார்களே... எந்த வெர்சனில் இது வேலை செய்கிறது என்று சொல்ல இயலுமா?
அதன் வெர்சன் : PowerDVD_Trail Version 4.0.100.1190

அந்த File 32.4MB உள்ளது மெயில் ஐடி கொடுங்கள் அனுப்பிவைக்கிறேன்.

உதயா
31-07-2006, 08:39 AM
என்ன பிரச்சனையாக இருக்கும்? ஏதோ tag நம்பர் கொடுத்து அதை ஒலிக்க முடியாது என்று சொல்கிறது. எப்படி சரி செய்வது?
uninstall செய்துவிட்டு மீண்டும் புதிய version லோட் செய்து பாருங்கள்.

சுட்டி : http://www.divx.com/divx/windows/

gragavan
31-07-2006, 05:20 PM
uninstall செய்துவிட்டு மீண்டும் புதிய version லோட் செய்து பாருங்கள்.

சுட்டி : http://www.divx.com/divx/windows/

வெற்றி...இதுதான் என்னிடம் இருந்தது. ஆனாலும் நீங்கள் சொன்னது போலச் செய்தேன். திரும்பவும் அதே error.

The video file you are opening includes audio data that is not recognized by the DivX player.

The file contains the following type of data.

Audio Data: tag 8192

you need to install a new audio codec on your computer to listen to the audio.

வேறொரு DivX file திறக்கும் பொழுது இந்த error வரவில்லை.

மயூ
01-08-2006, 03:13 AM
வெற்றி...இதுதான் என்னிடம் இருந்தது. ஆனாலும் நீங்கள் சொன்னது போலச் செய்தேன். திரும்பவும் அதே error.

The video file you are opening includes audio data that is not recognized by the DivX player.

The file contains the following type of data.

Audio Data: tag 8192

you need to install a new audio codec on your computer to listen to the audio.

வேறொரு DivX file திறக்கும் பொழுது இந்த error வரவில்லை.

http://www.Tamilmp3world.com எனும் தளத்தில் இதை நான் பதிவிறக்கினேன். ஜோராக வேலை செய்கின்றது!
இதை முயன்று பாருங்களேன்???

உதயா
02-08-2006, 03:50 AM
ராகவான் சார், திரு.மயூரேசன் சொன்னது போல் செய்து பாருங்களே. நானும் என்னவென்று பார்க்கிறேன்.

தீபன்
02-08-2006, 05:33 PM
DVD யிலிருந்து VCD யாக மாற்றுவதற்கு இலவச மென்பொருட்கள் உள்ளதா...? எங்கு கிடைக்கும்..? பலவற்றை முயன்று பாத்துவிட்டேன்.. பலனில்லை.. யாராச்சும் உதவுங்களேன்..

உதயா
03-08-2006, 04:06 AM
இங்கே போய் பாருங்களே... நான் இதுவரை முயற்சி செய்யவில்ல. (http://www.dvd-converter.net/)

மயூ
03-08-2006, 08:06 AM
DVD யிலிருந்து VCD யாக மாற்றுவதற்கு இலவச மென்பொருட்கள் உள்ளதா...? எங்கு கிடைக்கும்..? பலவற்றை முயன்று பாத்துவிட்டேன்.. பலனில்லை.. யாராச்சும் உதவுங்களேன்..
http://www.download.com
இங்கு சென்று DVD ripper எனத் தேடுங்கள் பல டரயல் வேர்சன் கிடைக்கலாம்....

svenkat
03-08-2006, 12:29 PM
http://www.dvdtovcdripper.com/

இனியவன்
03-08-2006, 01:28 PM
தகவல்களுக்கு நன்றி அன்பர்களே.

தீபன்
03-08-2006, 05:28 PM
நன்றி நண்பர்களே... முயற்சித்துப் பார்க்கிறேன்...

தமிழன்
04-08-2006, 09:00 AM
nandri:) :) :)

svenkatesan
18-08-2006, 08:55 AM
"வெர்சுவல் டப்" முயற்சிக்கவும்.

drjperumal
11-02-2007, 03:28 PM
உங்கள் அனைத்து பிறச்சனைகளுக்கும் DVD,VCD,AVI,MPEG,1.2,3,4,CAPTURE,EDIT,GRAFIX,MAKE MOVIE, DVD VCD WRITING,MUSIC MIXING
அனைத்து செயல்களுக்கும் http://www.pinnaclesys.com/ இந்த தளத்துக்கு செல்லூங்கள் பதில் கிடைக்கும்

மயூ
11-02-2007, 04:02 PM
nandri:) :) :)
தமிழா தமிழில் தட்டச்சிடுங்கோ!!!

ஆதவா
11-02-2007, 04:03 PM
தமிழா தமிழில் தட்டச்சிடுங்கோ!!!

எதிர்கட்சி தலைவருக்கு ஒரு மூக்கு கண்ணாடி வாங்கிப் போடனும்... அவர் எழுதிய மாதம் பாருங்க அண்ணாச்சி

drjperumal
12-02-2007, 10:43 AM
விளம்பர படங்களை தயாரிப்பது எப்படி?

தொலைத் தொடர்பு சாதனங்கள்தான் விளம்பரங்களின் உயிர் மூச்சு, இவற்றுள் ஒளி / ஒலிச் சாதனங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. இதனாலேயே வியாபாரிகளும் இத்தகு ஊடகங்கள் மூலம் தமது பொருட்களை விளம்பரம் செய்ய விரும்புகின்றனர்.

இதிலும் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு என தனி தன்மைகள் உள்ளன. இத்தகு விளம்பரங்களில் ஒலியும், ஒளியும் இணைந்து வெளிப்படுவதால் இவ்விளம்பரங்கள் மிகவும் உயிரோட்டமுள்ளதாய் தோன்றுகின்றன.

இதற்கேற்ப இவ்விளம்பரங்களுக்கான கட்டணமும் அதிகமாக உள்ளன. இவ்விளம்பரங்கள் ஒளி பரப்பப்படும் நேரம் மற்றும் கால அளவிற்கேற்ப விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை நேரம், மாலை நேரம், நுகர்வோர் விரும்பிக் கேட்கும் நேரம் என்று பிரித்து விளம்பரம் எவ்வளவு மணித்துளி ஒளிபரப்பப்படுகிறது என்பதைப் பொறுத்துக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

சான்றாக செய்திகள் புதிய திரைப்படங்களுக்கு இடையே தோன்றும் விளம்பரங்கள் பலரைக் கவர்வதால் இவற்றின் விளம்பரக் கட்டணம் அதிகமாகிறது. ஆக, பார்ப்பவரின் (Viewership) எண்ணிக்கையே விளம்பரக் கட்டணங்களை நிர்ணயிக்கப்படுகின்றன.

தொலைக்காட்சி விளம்பரங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?
தொலைக்காட்சி விளம்பரங்களைத் தயாரிப்பது எளிதானது தான் என்றாலும், இவ்விளம்பரங்களை தயாரிக்க பல இலட்சங்கள் செலவழிக்கப்படுகின்றன. கால விரயமும் இத்தயாரிப்பில் அதிகம். ஒரு சில மணித் துளிகளே ஒளிபரப்பப்படும் விளம்பரத்திற்காக பல மாதங்கள் உழைக்க வேண்டும்.

பொதுவாக தொலைக்காட்சி விளம்பரத் தயாரிப்பை இருவகையாக பிரிக்கலாம். தயாரிப்புக்கு முன் செய்ய வேண்டியவை, தயாரித்த பின் செய்ய வேண்டியவை:

தயாரிப்புக்கு முன் செய்ய வேண்டியவை
முதலில் நமது நுகர்வோர் யார்? எந்தச் சூழலில் வாழ்பவர்கள் ஆகியவற்றை நாம் ஆராயவேண்டும். நமது பொருளைப் பயன்படுத்தக்கூடியவர்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவரா, முதலாளிகளா, இளைஞர்களா, வீட்டிலுள்ள பெண்களா போன்ற எந்த வகையினர் என்பதைத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.

நுகர்வோரைத் தேர்வு செய்த பின் விளம்பரத்தை எந்த வகையில் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தல் அவசியம். விளம்பரம் விளக்கம் தருவது போல் அமைய வேண்டுமா அல்லது நகைச்சுவை உணர்வுடனா, அன்றி கனமான உணர்வு பூர்வமாக அமையவேண்டுமா என்று தேர்வு செய்ய வேண்டும்.

விளம்பரம் எந்த வகையில் அமைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்தபின், விளம்பர நடிகரைத் தேர்வு செய்ய வேண்டும். விளம்பரத்தில் வரும் கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்ற வயதினராயும், விளம்பரப் பொருளுக்குப் பொருந்துபவராயும் அமைப்பது மிகவும் அவசியம்.

விளம்பர நடிகரைத் தேர்வு செய்தபின் படப்பிடிப்புக் களத்தை நிர்ணயிக்க வேண்டும். முதலில் வெளிப்புறப் படப்பிடிப்பா அல்லது உட்புறப் படப்பிடிப்பா என்று தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் குறிப்பாக எந்த இடத்தில் காட்சிகள் படமெடுக்கப்படவேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.

படப்பிடிப்பு நடத்தவேண்டிய இடத்தைத் தேர்வு செய்தபின், ஜிங்கிள்ஸ் எனப்படும் இசையைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஜிங்கிள்ஸ், குறியீட்டுப் பெயரைப் போல் விளம்பரப் பொருளை எளிதில் நினைவில் கொள்ளும் வகையில் அமைகிறது.

ஜிங்கிள்ஸ் அமைத்தபின் விளம்பரத்திற்கான பின்னணி இசையைத் தேர்வு செய்து அமைக்க வேண்டும்.

இசை அமைத்தபின் கதைக் குறிப்பு (Story line) தயார் செய்தல் அவசியம்.

கதைக் குறிப்பு (Story Line) தயாரிப்பது எப்படி?
தொலைக்காட்சி விளம்பரத் தயாரிப்பில் மிகவும் அவசியமானது கதைக் குறிப்பு. இதனைக் கொண்டே மொத்த விளம்பரப் படமும் ஒரு முழு வடிவம் பெறுகிறது.

கதைக் குறிப்பானது இரண்டு பகுதிகளைக் கொண்டது.

1. ஒளி அமைப்பு
2. ஒலி அமைப்பு

ஒளி அமைப்பின் கீழ் - விளம்பரத்தில் எடுக்கப்படும் படப்பதிவை தெளிவாக சுருக்கமாக விவரிக்க வேண்டும்.

ஒலி அமைப்பின் கீழ் விளம்பரத்தில் இடம்பெறும் இசை, வசனம் போன்றவற்றை விவரிக்க வேண்டும்.

ஒளிப்பதிவில் பல வகையான நுணுக்கங்கள் உள்ளன. அவை :

அவற்றைப் பற்றிய சில அடிப்படை செய்திகளை தெரிந்து கொள்வது பயனுள்ளதாகும்.

தொலைதூரப் படக்காட்சி
இவ்வகைப் படக்காட்சி (Very Long Shot) பொதுவாக விளம்பரத்தின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ இடம்பெறும். இப்படக் காட்சியில் காட்சியின் பின்னணியும் தெளிவாகப் படமாக்கப்படுகிறது.

இவ்வகைக் காட்சியில், (Long Shot) காட்சியின் முழுப் பின்னணியும் இடம் பெறுவதில்லை. ஆனால் பின்னணியின் சில பகுதியும் நடிகரின் முழு உருவமும் இடம்பெறும். இக்காட்சியில் பின்னணியை விட நடிகருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இவ்வகைக் காட்சியில் (Mid Shot) பின்னணி முழுவதுமாக இடம் பெறுவதில்லை. நடிகரின் மேல் பகுதி (இடை வரை) மட்டுமே இடம் பெறும். இக்காட்சியில் நடிப்பு மற்றும் உரையாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

நெருக்கமான படக்காட்சி
இவ்வகைக் காட்சியில் (Closeup Shot) நடிகரின் தோள் வரை மட்டுமே காண்பிக்கப்படும். நடிகர் பேசும் உரையாடலுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மிக நெருக்கப் படக்காட்சி
இவ்வகைக் காட்சியில் (Very Close Shot) நடிகரின் முகத்தை மட்டுமே பார்க்க முடியும். சில சமயம் முகத்தின் ஏதோ ஒரு பாகத்தை மட்டும் வடப் படம் பிடிப்பர். இவை பார்ப்பவரின் மனதில் விளம்பரப் பொருளை நிலை நிறுத்தும். இவ்வகை காட்சிக்கு ஜமிங் (Zoowing) எனப்படும் படமெடுக்கும் முறையைப் பயன்படுத்தலாம்.

பான்
பான் (Pan) ஒளிப்பதிவுக் காமெராக் கருவியின் இயக்கத்தைக் குறிக்கிறது. காமிராக் கருவியை ஒரே இடத்திலிருந்து வலப்புறமும், இடப்புறமும் திருப்பிப் படமெடுக்கும் முறையே பானிங் எனப்படும்.

டிராக்கிங்
டிராக்கிங் (Tracking) இவை பொதுவாக வெளிப்புற ஒளிப்பதிவின் போது பயன்படும் நுணுக்கம். இதில் கருவி படமாக்கப்படும் பொருளுக்கு அருகில் நகர்த்தப்படுகிறது.

டிராலி
டிராலி (Trolly) இவ்வகை நுணுக்கத்தில் கருவி ஓர் சக்கர வண்டி மீது வைத்துத் தள்ளிச் செல்லப்படுகிறது. இது வேகமான அசைவுகளைப் படமெடுக்கப் பயன்படுகின்றன.

ஜுமிங்
புகைப்படக் கருவியின் லென்சை மட்டும் முன்னோ, பின்னோ நகர்த்தி தூரக் காட்சி, கிட்டக்காட்சிகளைப் படமாக்கும் முறை ஜுமிங் (Zooming).

டில்டிங் (Tilting)
காமிராக் கருவியைக் கீழாகவோ மேலாகவோ சாய்த்துப் படமெடுக்கும் முறையே டில்டிங் எனப்படும். இதில் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளை உருவாக்க இயலும். இவ்வகைக் காட்சிகளை ஆங்கிள் காட்சிகள் (Angle Shots) என்று கூறுகிறோம்.

கீழ்நோக்கும் காட்சிகள்
படமெடுக்கப்படும் பொருளை, ஆளை கீழ் இருந்து (Top Angle Shots) எடுப்பது இக்காட்சி. இதில் பொருளின் முக்கியத்துவம், ஆளுமை வெளிப்படும்.

மேல்நோக்குக் காட்சி
இது முந்தைய காட்சிக்கு நேர் மாறானது. பொருளை நபரை மேலிருந்து எடுப்பது (Low Angle shots). இவ்வகைக் காட்சியில் பொருள் சிறிதாகக் காட்டப்பட்டு, பொருளின் மீது அனுதாபம் ஏற்படச் செய்கிறது.

நேர்நோக்குக் காட்சி
இவ்வகைக் காட்சியில் காமிராக் கருவி (Straight Angle Shots) பொருளுக்கு எதிரில் பொருளின் உயரத்திற்குச் சமமாக வைத்து எடுக்கப்படுகிறது. இவ்வகைக் காட்சி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது.

தயாரிப்புக்குப் பின் செய்ய வேண்டியவை
தயாரித்து வைத்துள்ள படப்பதிவையும், ஒலிப்பதிவையும் ர் செய்து, இரண்டையும் இணைத்து விளம்பரத்திற்கு முழு உருவம் கொடுப்பதே தயாரிப்புக்குப் பின் செய்ய வேண்டியவை.

drjperumal
12-02-2007, 10:43 AM
அவை:

படத்தொகுப்பு (Editing)
1. முதலில் எடுக்கப்பட்டுள்ள படப்பதிவில் தேவையற்ற காட்சிகளை நீக்க வேண்டும். இதனை ஆங்கிலத்தில் Making rought cuts என்பர்.

2. கதைக் குறிப்பின்படி (Story Line) படக் காட்சிகளை வரிசைப்படுத்த வேண்டும். (Sequencing)

3. நுண்ணிய படத்தொகுப்பு: காலத்தைக் கணக்கில் கொண்டு எடுத்துள்ள படக் காட்சிகளுள் மிகச் சிறந்தவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொதுவாகப் படத்தொகுப்பு இருவகைப்படும்.

ஆஃப்லைன் எடிட்டிங் (Offline Editing)
சாதாரணக் கருவிகள் கொண்டு அடிப்படையில் செய்யப்படும் படத் தொகுப்பு.

ஆன்லைன் எடிட்டிங் (Online Editing)
ஆப்லைன் எடிட்டிங் முடிந்தவுடன் அந்தப் படத்தொகுப்பிலிருந்து திரையிடக்கூடிய சரியான காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுப்பது ஆன்லைன் எடிட்டிங்.

கிராஃபிக்ஸ்
1. எழுத்து வடிவமைப்பு.
2. வரைபடங்கள்.

விளம்பரத் தயாரிப்பில் கணினி மிகவும் பயன்படுகிறது. கணினி மூலம் வரைபடங்களும் எழுத்து அமைப்புகளும் அழகாக அமைக்கப்படுகின்றன.

சில தனித்தன்மையான வடிவங்களும், அசைவுகளும் (Special effects) கணினி மூலம் விளம்பரங்களில் புகுத்தப்படுகின்றன.

நகரும் சித்திரப் படக்காட்சி (Animation)
ஓவியர்கள் ஓர் நுட்பமான திரையின் மீது ஓவியம் வரைந்து அதைக் கணினி மூலம் தேவைக்கேற்ப மாற்றி அமைப்பார்கள். இவ்வகையில் வரையப்படும் ஓவியங்கள் எளிதாக அசையக்கூடிய வகையில் உள்ளன. இம்முறையில் தேவையான வண்ணங்களையும் பயன்படுத்தி விளம்பரத்தை மேலும் மெருகூட்டலாம்.

சில சமயங்களில், உண்மையான படக்காட்சியோடு இவ்வகை நகரும் சித்திரப்படக் காட்சிகளையும் ஒன்றாக இணைக்கலாம். இன்றைய மல்ட்டி மீடியா தொழில்நுட்பங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி வருகிறது.

காட்சி குறிப்பின்படி காட்சி அட்டவணையின் வடிவம் அமைத்தல்
ஒரு பக்கத்தை இரு பாகமாகப் பிரிக்கவும்.

ஒளி அமைப்பு
ஒவ்வொரு காட்சியையும், நுணுக்கங்களையும் தனித்தனியே எழுத வேண்டும்.

ஒவ்வொரு காட்சிக்கும் இடையே இடைவெளி விட்டு எழுதவும். படத் தொகுப்பைக் காட்சிகளாகப் பிரித்து எழுதவேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் தேவைப்படும் கால அளவையும் நொடிக்கணக்கில் குறிப்பிட வேண்டும்.

ஒலி அமைப்பு
ஒவ்வொரு காட்சியையும், நுணுக்கங்களையும் தனித்தனியே எழுதவேண்டும்.

ஒவ்வொரு காட்சிக்கும் இடையே இடைவெளி விட்டு எழுதவும். படத்தொகுப்பைக் காட்சிகளாகப் பிரித்து எழுதவேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் தேவைப்படும் கால அளவையும் நொடிக் கணக்கில் குறிப்பிட வேண்டும்.

ஒலி அமைப்பு
ஒவ்வொரு காட்சிக்கான பின்னணி இசை, வசனம் போன்றவற்றை அந்தந்தக் காட்சிக்கு எதிரில் எழுதவேண்டும்.

தொடரும்.......

அறிஞர்
13-02-2007, 03:49 PM
டாக்டர் கொடுக்கும் தகவல்கள் புதிதாக உள்ளது. தொடருங்கள்.

செல்வா
23-01-2008, 08:30 PM
பெருமாள் அவர்கள் தங்கள் பதிவைத் தனித்திரியாக பதிக்கலாமே... பொறுப்பாளர்கள் உதவுவார்கள்... தொடருங்கள் கற்றுக்கொள்ள காத்திருக்கிறோம்

வெற்றி
30-04-2008, 01:09 PM
மீடியா பிளேயர் க்ளாசிக் (http://www.free-codecs.com/K_Lite_Codec_Pack_download.htm)
http://www.free-codecs.com/VideoLAN_download.htm
இரண்டிலும் படத்தை கேப்சர் செய்யலாம்

வெற்றி
30-04-2008, 01:10 PM
மீடியா பிளேயர் க்ளாசிக் (http://www.free-codecs.com/download_soft.php?d=4522&s=95)
வி.ஓ.எல் பிளேயர் (http://www.free-codecs.com/download_soft.php?d=4392&s=171)
இரண்டிலும் படத்தை கேப்சர் செய்யலாம்