PDA

View Full Version : கைகட்டி...... வாய்பொத்தி...... கண் மட்டும் திறந்து.



rambal
24-04-2003, 08:19 PM
வாட்டமுள்ள மலர்களுக்கு
மத்தியில்
சோகையான வண்டு...
தேன் குடிக்க வந்து
பூக்களுக்குப் போடப்பட்டிருக்கும்
கருத்தடை கண்டு கண் கலங்கி...
வாசனை மட்டுமே
முகர்ந்து பார்க்க
அனுமதிக்கப் பட்டு...
குப்பைகளாய் குரு..
கிளறிப் பார்க்கும் கோழியாய்
சிஷ்யன்...
கிளறி மட்டுமே
பார்க்க முடிந்து..
உண்ண முடியா ஏக்கம்..
விரிந்து கிடந்தது வானம்..
சிறகுகள் இருந்த போதும்..
பறக்க முடியாமல் பறவை..
சிறகுகள் உதிர்ந்து
பறக்க முடியாமல்
வெறும் எழும்பு மட்டுமே..
இப்படியும் ஒரு நிலை..
நோய்கள் சொல்லிவிட்டு
வருவதில்லை.. மனிதனுக்கு மட்டுமல்ல...
வார்த்தை ஜாலங்கள்...
குறியீட்டு விளையாட்டுக்கள்...
ரொம்ப நாளாச்சு..
இருந்த போதும்...
வேடிக்கை கூட
அழகாய் இருக்கிறது சில சமயங்களில்...

(கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக என் கணிணியின் செயல்பாடுகள் அற்றுப் போய்.. அப்போது படைப்புகள் படைக்கமுடியவில்லை என்பதை விட மற்றவர் படைப்புகளுக்கு விமர்சனம் எழுத முடியவில்லை என்ற ஏக்கம்தான் இந்தக் கவிதை.)

நிலா
25-04-2003, 01:52 AM
கண் மட்டுமல்ல.......மனம் திறந்து.........கவலை கற்பனையாய் விரிய.........
கவிதை பிறக்க.. உம் கவிதைகாணாமல் தவித்திருந்த
எங்களுக்குக் காத்திருத்தலின் சுகம் கிடைத்துவிட்டது!
உணர்வுகளைவார்த்தையாய் உருக்கிவிட்டீர்!
உருகியது நாங்களும் தான்!

poo
25-04-2003, 01:40 PM
உன் ஏக்கங்களை அழகாய் வடிவமைத்துள்ளாய்... பாராட்டுக்கள் ராம்!!

lavanya
25-04-2003, 07:12 PM
அதனால் என்ன ராம்பால்ஜி... எங்களுக்கு கிடைத்தது இன்னொரு
முத்தான கவிதை....