PDA

View Full Version : வரமா? சாபமா?



இனியவன்
28-07-2006, 05:16 PM
மீளத்துடிக்கும் மனம்
ஆரூர் புதியவன்


விமானம் கண்டுபிடித்த
மானுடம்
வெட்கப்படுகிறது
இறக்கை விரிக்கின்றன
போர் விமானங்கள்

**

நிரம்பி வழிகின்றன
ஆயுதக்கிடங்குகள்
காலியாய்க் கிடக்கின்றன
உணவுக்களஞ்சியங்கள்

**

அணுவைப்பிளந்து
காட்டிவிட்டு
தலை நிமிர்ந்தது அறிவியல்
தலைகுனிந்தது மனிதம்

**
கற்கால மக்களைக்
காட்டுமிராண்டிகளாய்க்
காட்டாதீர்கள்
எந்தக் காட்டுமிராண்டியும்
பிஞ்சுக்குழந்தைகளை
குண்டுவீசிக்
கொன்ற தகவல் இல்லை

***
மண்ணை அலங்கரித்தபோது
அறிவியல் வரமாயிருந்தது
ஆயுதங்களைக்
கருத்தரித்தபோது
அதுவே சாபமாகிவிட்டது

இணைய யுகம்தான்
ஆனால்
இணைய மறுக்கின்றன
இதயங்கள்

***
போர் மேகம்
குண்டுமழை பொழிய
வளமாய் வளர்கின்றன
மரணப் பயிர்கள்

**
கற்காலத்தில்
நாகரீகமில்லை என்பதை
நம்ப முடியாது
நாகரீகத்தின் தொட்டிலை
சுடுகாடாக்குபவர்களால்
வரையறுக்கப்பட்ட நாகரிகம்
'புஷ் 'வாணமாகட்டும்
***

புதிய ஆயுதங்களைக்
கண்டுபிடிக்கும் நாகரிக
மனிதன்
பழைய அமைதியைத்
தொலைத்துவிட்டான்
**

காக்கும் அறிவியல்
கண்டுபிடிப்புகள்
தூக்குமரத்தின்
தொழிலைச் செய்கின்றன

மரண ஆயுதங்களால்
மண்ணகமெங்கும் ரணம்
மின்சாரம் கண்டுபிடிக்காத
காலத்திற்கு
மீளத்துடிக்கிறது மனம்

***

அறிஞர்
28-07-2006, 08:37 PM
கவிதைகளை தொகுத்து கொடுத்ததற்கு நன்றி அன்பரே....

ஒவ்வொன்றும்.. மானிடத்தின் ஏக்கத்தை... வெளிப்படுத்துகிறது.

vckannan
01-08-2006, 11:52 AM
போர் அரக்கன் அழிந்தபோதுதான் - அசோகன் பிறந்தான்.
விச உள்ளான்களுக்கு இடையெ -ஸாக்கரடீஸ்
நமக்கு இடையே -காந்தி
காத்திருப்போம் -மற்றொரு மாற்றதுக்கு

சகிப்புதன்மையும் அன்புமே போர்களை அழிக்கும் ஆயுதம்

இனியவன்
01-08-2006, 12:04 PM
மன்றத்தாரின் மறுமொழிகளுக்கு நன்றி.

ஓவியா
01-08-2006, 04:28 PM
அணுவைப்பிளந்து
காட்டிவிட்டு
தலை நிமிர்ந்தது அறிவியல்
தலைகுனிந்தது மனிதம்

ஆ ஆ அருமையான கவிதை......

றெனிநிமல்
01-08-2006, 05:29 PM
நன்றாகவே உள்ளது கவிதை
இணைந்திருங்கள்.

ஓவியன்
26-02-2007, 12:02 PM
வரமா?

சாபமா?

எனக்கும் விடை தெரியவில்லை நண்பரே!.

மனோஜ்
26-02-2007, 12:37 PM
அருமையாக உள்ளது கவிதை இனியன்
விடை சாபம்தான்

வெற்றி
03-03-2007, 10:02 AM
மனிதன் தொலைத்து விட்டு பின் தேடும் அரிய விசயங்களில் ஒன்று தான்
போர் இல்லா உலகம்...
நல்ல தொகுப்பு...