PDA

View Full Version : மறுபிறப்பு



இனியவன்
28-07-2006, 05:14 PM
மறு பிரசவம்
ஈசாக்


தாருமாறாய் திட்டித் தீர்த்தாய் நீ
நடு சாலையில் வைத்து
என்னை
சொன்ன வேலையை
செய்யவில்லை என்று.

இரவு
நெடு நேரமாகியும் காத்திருந்தாய்
வரும் வரை
வாசலிலெயே
எனக்காக.

புள்ளையை திட்டிவிட்டேன்
யார் மேலயோ உள்ள கோபத்தில்.
ராத்திரி
புள்ள வீட்டுக்கு வந்தபிறகுதான்
உசுரே வந்தது
எனக்கு.
சொல்லிக்கொண்டிருந்தாய்
பக்கத்து வீட்டு ஆயாவிடம்.

அம்மா
நீ
கோபப்படு போதெல்லாம்
மீண்டும்...மீண்டும்
பிறக்கிறேன்
உனக்கு மகனாக
நான்.

அறிஞர்
28-07-2006, 08:39 PM
அம்மாவின் செல்ல கோபங்கள்... நன்னெறி படுத்ததானே.....

அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும்.. பிறக்கலாம்...

M.Jagadeesan
06-08-2012, 01:28 PM
"பெற்றமனம் பித்து " என்பதைக் காட்டும் அழகான கவிதை!

jayanth
06-08-2012, 03:08 PM
மறுபிறப்பு....பாசம்...

அனுராகவன்
06-08-2012, 09:05 PM
மறுபிறவி ....புது வாழ்வு..
அம்மா ..நீ பெற்ற பிள்ளை நான்...

seguwera
06-08-2012, 09:06 PM
தாயின் பாசத்துக்கு நிகர் ஒன்றும் இல்லை உலகிலே

kulakkottan
07-08-2012, 03:30 PM
ஒரு தாய் மீது பாசம் கொண்ட பிள்ளையின் உணர்வை பிரதிபலிக்கும் அற்புதமான கவிதை !
உண்மைதான் தோழரே !சிறு சிறு கோபங்களும் சிறு சிறு சச்சரவும் அன்பை கூட்டி விடுகிறது !
அதுவே பெரிய தவறுகளையும் பிரிவுகளையும் தடுத்து விடுகிறது !