PDA

View Full Version : அழுகிப்போட்டி



இனியவன்
28-07-2006, 05:13 PM
அழகிப்போட்டி
சுந்தர் பசுபதி


நிறம் ஏற்றி
நகச் சாயம் பூசி
சிகை செதுக்கி
சருமம் மினுக்கி
அரிதாரம் அணிந்து
இதழ் வண்ணத்துடன்
வளைவுகள் வெளித்தெரிய
உடை குறைத்து
ஆயிரம் பேர் பார்க்க
அங்கம் குலுக்கி
பட்டம் வென்ற
உலக அழகி
ஜெயிப்பதற்காய்
சொன்ன பதில்

' வெளி அழகு
பொருட்டல்ல...!! '

-சுந்தர் பசுபதி

arul5318
29-07-2006, 09:09 AM
ஐஸ்வெரியா ராயும் அழகிப்போட்டியில் வென்றவராம் அவரும் இப்படியெல்லாம் செய்திருப்பார்தானே.

இளசு
29-07-2006, 09:52 PM
உள்ள அழகு இருந்தால்
வெளி அழகு தவறல்ல....

பென்ஸ்
30-07-2006, 02:50 AM
இல்லாதவற்றை நோக்கி தானே
மனம் விரும்பி செல்லும்...

உலக சமாதனத்திற்க்காக பாடுபடுவேன் என்று சொன்ன இவர்களில்
ஒருவராவது இன்று வரை உருப்படியா எதுவும் செய்தது கிடையாது...

எல்லாம் அப்படிதான்... கண்டுக்காத, பிரீயா வுடு மாமூ....

pradeepkt
31-07-2006, 05:13 AM
அழுகிப்போட்டி



உங்க தலைப்பு எழுத்துப் பிழையான்னு தெரியலை. ஆனால் பொருத்தமா, நல்லா இருக்கு!!!

vckannan
31-07-2006, 09:02 AM
புளுகிப் போட்டினு சொன்னா சரியா இருக்கும்.

சரி பூரா நிகழ்ச்சியையும் பாத்துட்டு இப்படி (ஜொள்ள ஹி ஹி)சொல்லறிங்க?)

gragavan
31-07-2006, 10:39 AM
அது சரி...கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டீன்னு வெக்கிறாங்களே....அதுல ஜெயிச்சவங்க மட்டுந்தான் அறிவாளிகளா? மத்தவங்கள்ளாம் முட்டாள்களா? ஏதோ நிகழ்ச்சி நடந்ததா...பாத்தமா கண்டுக்காமப் போனமான்னு இருக்கனும்.

ஒரு ஜென் கதை உண்டு. இரண்டு துறவிகள் ஆற்று வழி போறப்போ...ஒரு பொம்பள கஷ்டப்பட்டான்னு ஒரு துறவி தூக்கிக்கிட்டுப் போயி உதவி செஞ்சாராம். ஆசிரமம் வந்ததும்...ஏன் அந்தப் பொண்ணத் தூக்குனன்னு அடுத்த துறவி கேட்டாராம்....அதுக்கு இவரு சொன்னாராம்.."அந்தப் பொண்ண அந்தக் கரையிலேயே இறக்கி வெச்சிட்டேன்..நீ இன்னமும் இறக்கி வைக்கல போலிருக்கே!"

vckannan
01-08-2006, 11:38 AM
அது சரி...கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டீன்னு வெக்கிறாங்களே....அதுல ஜெயிச்சவங்க மட்டுந்தான் அறிவாளிகளா? மத்தவங்கள்ளாம் முட்டாள்களா? ஏதோ நிகழ்ச்சி நடந்ததா...பாத்தமா கண்டுக்காமப் போனமான்னு இருக்கனும்.!"
சில சமயம் பாக்கர நாமதான் மூட்டா பயலா ஆயிடரோம்
ஒரு ஜென் கதை உண்டு. இரண்டு துறவிகள் ஆற்று வழி போறப்போ...ஒரு பொம்பள கஷ்டப்பட்டான்னு ஒரு துறவி தூக்கிக்கிட்டுப் போயி உதவி செஞ்சாராம். ஆசிரமம் வந்ததும்...ஏன் அந்தப் பொண்ணத் தூக்குனன்னு அடுத்த துறவி கேட்டாராம்....போலிருக்கே!"

இவரு உதவரத்துக்குள்ள அவரு முந்திக்கிட்டா கேக்காம என்னப் பண்ணுவாரு. பாவம் அந்த ஆளு கொடுத்து வச்சது அவ்வளவுதான்
(சு... சு... சும்மா ஒரு தமாசுக்கு தான்... )

இனியவன்
01-08-2006, 12:03 PM
அழுகிப்போட்டி



உங்க தலைப்பு எழுத்துப் பிழையான்னு தெரியலை. ஆனால் பொருத்தமா, நல்லா இருக்கு!!!

அது தெரிந்தே கொடுத்த தலைப்புத் தான்.
ஆசிய நாடுகளின் வணிகத்தைக் குறிவைத்து மேலை நாடுகள் விரிக்கும் மாயவலை தான் இந்தக் அழுகிப் போட்டிகள்.:) :)

ஓவியா
01-08-2006, 04:30 PM
சில சமயம் பாக்கர நாமதான் மூட்டா பயலா ஆயிடரோம்

இவரு உதவரத்துக்குள்ள அவரு முந்திக்கிட்டா கேக்காம என்னப் பண்ணுவாரு. பாவம் அந்த ஆளு கொடுத்து வச்சது அவ்வளவுதான்
(சு... சு... சும்மா ஒரு தமாசுக்கு தான்... )


:D :D :D :D :D :D

ஓவியன்
26-02-2007, 07:18 AM
அருமையான தலைப்பிலே நிதர்சனத்தை வெளிக்காட்டிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

மன்மதன்
26-02-2007, 10:31 AM
அழகிய கவிதை....

ஷீ-நிசி
26-02-2007, 10:47 AM
அழகிப்போட்டி
சுந்தர் பசுபதி


நிறம் ஏற்றி
நகச் சாயம் பூசி
சிகை செதுக்கி
சருமம் மினுக்கி
அரிதாரம் அணிந்து
இதழ் வண்ணத்துடன்
வளைவுகள் வெளித்தெரிய
உடை குறைத்து
ஆயிரம் பேர் பார்க்க
அங்கம் குலுக்கி
பட்டம் வென்ற
உலக அழகி
ஜெயிப்பதற்காய்
சொன்ன பதில்

' வெளி அழகு
பொருட்டல்ல...!! '

-சுந்தர் பசுபதி


கவிதை சும்மா 'நச்' னு இருக்கு நண்பா...