PDA

View Full Version : என் கவிதைகளில் சில



sunny
27-07-2006, 12:50 PM
வணக்கம்

என் கவிதைகளில் சில


காலையில் இயந்திரத்தில்
காபி கலக்கும் போதும்;

விடுதி உணவு சாப்பிட்டு
வயிறு முனங்கும் போதும்;

வாகன நெரிசலில்
மூச்சுவிடத்திணறி மாலை
அறைக்கு திரும்பும் போதும்;

பின்னிரவின் உறக்கத்தில்
புரண்டு படுக்கும் போதும்
நிலழாடுகிறது
அம்மாவின் முகம் !


:) sunny

இனியவன்
27-07-2006, 03:17 PM
வணக்கம்

என் கவிதைகளில் சில


அம்மாவின் முகம் !


:) sunny

தெள்ளிய நீரோட்டம் போல
உள்ளத்தை
அள்ளும்
வார்த்தையாடல்.
கடைசி வரியைப் படித்தபோது
இனம் புரியாத வலியும்
மகிழ்ச்சியும் மாறி மாறி வந்து
அலைமோதின உணர்வுகள்
நெஞ்சில்.

ஓவியா
27-07-2006, 03:35 PM
எப்ப பார்த்தாலும்
அவளையோ, ........இல்லை இவளையோ,
என்று உருகி உருகி வர்ணித்து....
கவிதை மழையை இடி முழக்கத்துடன் கொடுத்துகொண்டிருக்கும்
புது கவிஞர்களின் மத்தியில் இப்படி ஒரு கவிதையை கண்டு...:eek:

அம்மாவின் அன்பில்.....

நினைக்கும் பொழுதே.......
இனிப்பில்...புன்னகையில்
என் கன்னந்தின் குழி ஒரு முறை உதித்தது.....:D :D

நன்றி சன்னி

தீபன்
27-07-2006, 05:21 PM
வணக்கம்

என் கவிதைகளில் சில


காலையில் இயந்திரத்தில்
காபி கலக்கும் போதும்;

விடுதி உணவு சாப்பிட்டு
வயிறு முனங்கும் போதும்;

வாகன நெரிசலில்
மூச்சுவிடத்திணறி மாலை
அறைக்கு திரும்பும் போதும்;

பின்னிரவின் உறக்கத்தில்
புரண்டு படுக்கும் போதும்
நிலழாடுகிறது
அம்மாவின் முகம் !


:) sunny

பாராட்டுக்கள் நண்பரே... அப்படியே உங்கள் பெயரையும் தமிழில் மாற்றினால் நமக்கு உறுத்தலாக இருக்காது...

பென்ஸ்
27-07-2006, 07:39 PM
அம்மாவின் அன்பில்.....

நினைக்கும் பொழுதே.......
இனிப்பில்...புன்னகையில்
என் கன்னந்தின் குழி ஒரு முறை உதித்தது.....:D :D

நன்றி சன்னி
__________________
பாரதி காணாத புதுமைப்பெண்


ஓவியா... நீங்க எப்போ பெயரை மாத்தினிங்க....:rolleyes: :rolleyes: :rolleyes:

றெனிநிமல்
27-07-2006, 07:57 PM
வாழ்த்துக்கள் நண்பரே.
அடக்கமான அழகிய கவிதை.
இணைந்திருங்கள்.

பென்ஸ்
28-07-2006, 03:14 AM
வாருங்கள் சன்னி, உங்களை மன்றத்தில் வரவேற்கிறேன்...

கவிதைகளை மன்றத்தில் பதிக்க முதன் முதலாக தாய்காக எழுதிய கவிதை... அருமை...

தாய்... பாலை வற்ற காய்சி, அளவுடன் டிக்காசன் கலந்து, சிறிது சர்க்கரையும், நிறையவே பாசமும் கலந்து நுரைக்க ஆற்றி.. சர்க்கரை சரிதானா என்று ஒரு வாய் குடித்து ... வாங்கும் உன் கை சுட்டு விட கூடாது என்று தன் முந்தானையின் துனையுடன் அந்த காப்பி கோப்பையை சுற்றி பிடித்து மேல் பக்கத்தை மட்டும் உன்னை பிடிக்க வைத்து ... வாங்கும் போது " கவனமாப்பா" என்று கரிசனையுடன் கொடுக்கும் போது அந்த காப்பி ருசி இல்லாமலா இருக்கும்....
(இருந்தும், பல முறை "என்னமா காப்பி இது??" என்று அம்மாவை முறைத்ததுண்டு..)

அசைவம் சாப்பிட பிடிக்காத அம்மா, எனக்காகவே அசைவம் மட்டும் சமைத்து, உப்பு, புளி பார்க்க மட்டும் ருசி பார்த்து உபசரிக்கும் அம்மா நியாபகம்....உணர்வுகளே இல்லா உணவுகளில் இருக்குமா...

இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் உடனிருந்து கவனிக்கும் அம்மாவை பிரிந்து தூர இருப்பது என்றால்.... :angry: :angry: :angry:

pradeepkt
28-07-2006, 05:09 AM
சுலபமாகக் கிடைக்கும் எதற்கும் நமக்கு அதன் அருமை புரியாது.

என்ன செய்ய? இப்பல்லாம் காலைல அரக்கப் பறக்க எழுந்து எனக்கு மத்தியானம் டிபன் கட்டி தம்பிக்கும் எனக்கும் காலை டிபன் தயார் செய்தும் வெட்டியாய்ப் பொழுது போக்கி அவதி அவதியாகக் கடைசியில் சாப்பிடாமல் கிளம்பும் போதும் மறக்காமல் பஸ்ஸிலாவது சாப்பிட்டுப் போ என்று தனியாகக் கட்டி கொடுத்தாலும் சட்னியில் உப்பு கம்மி என்று குறை சொல்லும் போது உறுத்தவில்லைதான்.

ஆனால் உடனே, அடடா... அப்படியாப்பா, கொஞ்சம் கவனமில்லாம இருந்துட்டேனே, இனிமேல் கவனமாக இருக்கிறேன், இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னு சொல்லும் போதுதான் ரொம்ப உறுத்துது!!!

தாமரை
28-07-2006, 07:47 AM
சுலபமாகக் கிடைக்கும் எதற்கும் நமக்கு அதன் அருமை புரியாது.
!

ஓ இதுதான் காதலிக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசமோ???:confused: :confused:

இளசு
30-07-2006, 09:37 PM
சன்னியின் கவிதையும்..
பென்ஸ், பிரதீப்பின் கவிதையான நினைவலைகளும்
என் நெஞ்சிலும் தாலாட்டோசை எழுப்புகின்றன...

மஸாகி
31-07-2006, 03:50 AM
பாராட்டுக்கள் நண்பரே... அப்படியே உங்கள் பெயரையும் தமிழில் மாற்றினால் நமக்கு உறுத்தலாக இருக்காது...

நண்பர் தீபன் - சொன்னதை நிர்வாகத்தினர் கவனத்தில் எடுத்தால் நன்று..

vckannan
02-08-2006, 05:03 AM
பின்னிரவின் உறக்கத்தில்
புரண்டு படுக்கும் போதும்
நிலழாடுகிறது
அம்மாவின் முகம் ![/B]


:) sunny
அம்மாவை பிரிந்து இருப்பவருக்கு தெரியும் வலியை வார்த்தைகளில் வடித்துள்ளீர்.

வேற என்ன படிக்கும் போது படிப்பவரின் அம்மாவின் முகம் நினைவிலாடுவது நிஜம்.