PDA

View Full Version : ஐயோ அப்பா ஐயப்பா



இனியவன்
25-07-2006, 12:59 PM
அம்புலிமேல் அமர்ந்துவரும்

அம்புலியே!

என நான்

ஏத்தும் ...

சபரிமலை _ தர்ம

சாஸ்தாவின் _

சந்நிதானப் புனிதம் _ இன்று

சர்ச்சையில் ;

ஆசாரங்கள்

அருகிவிட்டன _ எனும்

ஆத்திரம் தெரிகிறதாம் அர்ச்சையில் !



பிரசன்னம் பார்ப்பதில் _

பிரசித்தி பெற்ற _

உன்னி கிருஷ்ணன் விண்டவ _

உள்நோக்கம் கொண்டவ!

என

எண்ணுகிறார் _

நம் நம்பியார் ; அவரைவிட

அய்யப்பன் வழிபாட்டில் _

ஆண்டுக் கணக்கில் ஆழங்காற்பட்ட நம்பி யார் ?



அய்யப்பன்

அர்ச்சையைத்

தொட்டுத்

துதித்தேன் _

ஒரு நொடி ! _ என்கிறார்

ஒரு நடி !



சாஸ்தாவின்

சமீபம் சென்று _ தொடச்

சாத்தியமே இல்லயெனச்

சாதிக்கிறார் ...

திருக்கோயில் தந்திரி ; அனல் _

விட்டெரிகிற _ அவரது

விழியெனும் செந்தி



இது _

இந்து மதத்தின் மீது _

எறியப்பட்ட கல் !

எனக் காதில் விழுகிற சொல் !

ன்ன்ன்

புனிதத்திற்குப்

புரை வந்திருக்கிறதோ _

என

எழுந்திருக்கிற ...

ஐயப்பாடு ; அதைத்தீர்ப்பது _

ஐயப்பன் பாடு !



கவிஞர் வாலி.

நன்றி குமுதம்

தாமரை
25-07-2006, 01:17 PM
:D ஒரு சாத்தியம் உண்டு.. அவர் மேக்கப் போடாமல் போயிருக்கக் கூடும்..:D

இனியவன்
25-07-2006, 01:19 PM
:D ஒரு சாத்தியம் உண்டு.. அவர் மேக்கப் போடாமல் போயிருக்கக் கூடும்..:D
:) :) :)
:) :)
:)

இளசு
26-07-2006, 11:02 PM
முன்பு குஷ்பு பிரச்சினை..
நடுவில் தேர்தல் தெருக்கூத்து
இன்று சாஸ்தா சச்சரவு..

நாளை வேறு வரும்.
நாமும் நாலு நாள்
காரசாரமாய்ப் பேசிவிட்டு..

அப்புறம் மீடியா வீசும்
அடுத்த துண்டைக் கவ்வி......

gragavan
27-07-2006, 07:58 AM
எல்லாரும் தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியே இது. நிலமை மாற வேண்டும்.

ஓவியா
27-07-2006, 03:03 PM
ஐயப்பாவின் தலைப்பு...

அப்ப நான் 60வது வயதில் வந்து பதில் போடுகின்றேன்...:D

சுவாமியே....சரணமயைப்பா

vckannan
01-08-2006, 12:06 PM
ஐயப்பனா ஐயத்தின் அப்பனா?
செயமாலா இது மற்றொரு ரோலா ?
சங்கரன்மகன் அம்பலத்துக்கே சங்கடமா
உண்மை அம்பலத்துக்கே வராமல் (இருளே) தங்கிடுமா
சரணம் ஐயப்பா உண்மை சொல்ல நீர் வரணும் ஐயப்பா

ஓவியன்
26-02-2007, 07:22 AM
அப்ப நான் 60வது வயதில் வந்து பதில் போடுகின்றேன்...:D


அப்ப, உங்களது வயது இப்ப அறுபது இல்லையா???

ஏன் ஓவியா இப்படிப் பொய் பேசுறீங்க??

ஹி,ஹி,ஹி....

ஓவியன்
26-02-2007, 07:39 AM
நிலமை மாற வேண்டும்.

உண்மையைத் தான் பகன்றுள்ளீர்கள்!
ஆனால் எப்படி மாற வேண்டும், எங்கே அங்கே மாற்ற வேண்டுமென்று கூட நாம் இன்னமும் சிந்திக்காமல் இருக்கிறோமே!!! - அதனை நினைத்தால் தான் கவலையாக உள்ளது!.