PDA

View Full Version : ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் :



மயூ
25-07-2006, 07:05 AM
24 ஜூலை 2006

ஆதாரம்: வெப் உலகம்
பட ஆதாரம்: வெப் உலகம்



தமிழக அரசின் பட்ஜெட் பல வகையில் ஏமாற்றம் தருவதாக உள்ளது என்று நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் ஞாயிறன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும, மத்திய நிதி அமைச்சரே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள்தான். அவர்களின் வருவாயைப் பெருக்கவோ, விலைவாசியை குறைக்கவோ சலுகைகள் ஏதும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

ஓர் அரசின் வரவு செலவு திட்டம் என்பது அந்த அரசின் பற்றாக்குறையை ஈடுகட்டுவது மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் சுமையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதையும் குறைப்பதாக அமைய வேண்டும் என்று கூறியுள்ள அவர், இந்த நிதிநிலை அறிக்கையில் இத்தகைய நோக்கம் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர் நலன், ஆசிரியர் நலன், தொழில் மற்றும் வணிகர்களின் நலன் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

அறிஞர்
26-07-2006, 02:49 PM
வருங்காலத்தில் நல்ல பட்ஜெட் போட விஜயகாந்துக்கு வாழ்த்துக்கள்....

அரசியல்வாதிகள்.. மக்களை மட்டும் பார்த்து பட்ஜெட் போடுவதில்லை... பெரிய கம்பெனிகளிலிருந்து தங்களுக்கு வரும் வருமானத்தையும் கணக்கில் கொள்வர்

இனியவன்
26-07-2006, 03:31 PM
விசய காந்த்
நல்ல வரவு செலவு பண்ணுவாரா?
பார்ப்போம்.

mgandhi
06-08-2006, 06:44 PM
உள்ளாச்சி தேர்தலை மனதில் வைத்து வந்த பட்ஜெட இது