PDA

View Full Version : 54 GB நீலக்கதிர் வட்டு



இனியவன்
23-07-2006, 07:37 AM
ஒரே டிஸ்க்கில் 54 ஜிகாபைட் தகவல்களை உள்ளடக்கும் திறன் கொண்ட தொழில் நுட்பத்துடன் கூடிய சிடி ஒன்று விரைவில் பொதுவான புழக்கத்திற்கு வர இருக்கிறது. இதன் பெயர் புளூ ரே டிஸ்க் என்பதாகும். வழக்கமாக இப்போது செயல்படும் டிஸ்க் தொழில் நுட்பத்தில் பயன்படும் லேசர் ரே சிகப்பு கலரில் இருக்கும் இந்த புதிய தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் லேசர் கதிர் புளூ நிறத்தில் இருப்பதால் இந்த பெயர் "ஆடூதணூச்தூ" சூட்டப்பட்டுள்ளது. (வேண்டுமென்றே தான் "ஞடூதஞு" என்னும் ஆங்கிலச் சொல்லில் உள்ள கடைசி எழுத்து "ஞு" விடப்பட்டுள்ளது. ஏனென்றால் நாள் தோறும் புழக்கத்தில் உள்ள ஒரு சொல்லை ஒரு தொழில் நுட்பத்தின் ட்ரேட் மார்க் பெயராகச் சூட்ட க்கூடாது என்பது விதி.)

20 மணி நேர திரைப்படம்

சாதாரண சிடி புழக்கத்தில் இருந்த போது 1997ல் டிவிடி தொழில் நுட்பம் அறிமுகமாகித் தகவல் சேமிப்பில் குறிப்பாக வீடியோ மற்றும் ஆடியோ சேமிப்பில் பெரிய புரட்சியை உண்டு பண்ணியது. ஒரு பக்கத்தில் எழுதக் கூடிய டிவிடி டிஸ்க்கில் 4.7 ஜிகாபைட் தகவல்களை அடக்கி விடலாம். சாதாரணமாக 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் ஒன்றை வேறு சில கூறுகளுடன் ஒரு டிவிடியில் அடக்கி விடலாம். ஆனால் தற்போது அதிக சிறப்பம்சங்களுடன் படங்களை மிக மிகத் துல்லியமாகப் பதிந்து காட்டக்கூடிய ஹை டெபனிஷன் மூவிக்கள் வந்துவிட்டன. இவற்றை ஒரே டிஸ்க்கில் பதிந்திட தற்போதைய டிவிடிக்களினால் முடியாது. எனவே இந்த தேடல் தான் தற்போது புளூ ரே என்ற புதிய தொழில் நுட்பத்தில் முடிந்துள்ளது.

ஒரு லேயர் மட்டுமே உள்ள புளூ ரே சிடியில் 27 ஜிபி தகவல்களைப் பதிய முடியும். இரண்டு லேயர் உள்ள புளூ ரே சிடியில் 54 ஜிபி தகவல்களைப் பதிய முடியும். அதாவது சாதாரண சினிமா என்றால் 20 மணி நேரம் ஓடக் கூடிய அளவிற்குத் திரைப் படங்களை அடக்க முடியும். இதனை இன்னும் இரண்டு மடங்கு அதிகமாகக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறப்பம்சங்கள்

ஒரு புளூ ரே டிஸ்க்கில் ஹை டெபனிஷன் டெலிவிஷன் எனப்படும் படங்களை அதன் தன்மை கெடாமல் பதிய முடியும். சிடியில் எந்த இடத்திற்கும் நொடிப் பொழுதில் சென்று படித்தறிய முடியும். சிடியில் உள்ள ஒரு புரோகிராமினைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு புரோகிராமினைப் பதிய முடியும். பிளே லிஸ்ட்டுகளை உருவாக்க முடியும். பதிந்த புரோகிராம்களை எடிட் செய்திடலாம்; மற்றும் மாற்றி அமைத்திடலாம். டிஸ்க்கில் உள்ள காலி இடத்தைத் தானாகத் தேடி அந்த இடத்தில் பதியும் வசதி கிடைக்கிறது. இதனால் ஏற்கனவே பதிந்த தகவல்கள் அழிக்கப்படும் அபாயம் இல்லை. இணையத்தில் தேடி ஒரு படத்திற்கான சப் டைட்டில்களை இந்த சிடியில் பதிந்து கொள்ளலாம். புளூரே சிடியில் செயல்படும் புளூ கதிர்கள் குறுகிய வேவ் லென்த் உடையவை (405 நானோ மீட்டர் என்ற அளவில் இதனைக் கூறுவார்கள்) தற்போது பயன்படுத்தப்படும் சிடி பிளேயரில் உள்ள சிகப்பு கதிர்கள் 650 நானோ மீட்டர்கள் கொண்டு பெரிய வேவ் லென்த் உடையவை. புளூ ரேயின் பீம் குறுகியதாக இருப்பதால் தகவல்கள் துல்லியமாக எழுதப்பட்டுப் படிக்கவும்படுகின்றன.

உருவாக்கப்படும் விதம்

டிவிடி ஒன்றில் 0.6 மில்லி மீட்டர் கனம் உள்ள இரண்டு பாலிகார்பனேட் லேயர்களுக்கிடையே தகவல்கள் அமைக்கப்படுகின்றன. தகவல்களுக்கு மேல் ஒரு பாலிகார்பனேட் லேயர் இருப்பதால் தகவல்களைப் படிக்கையில் சிரமம் ஏற்பட்டு தகவல்கள் சிதைந்திடவும் அழிந்திடவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் புளூ ரே டிஸ்க்கில் 1.1 மி.மீ. கனம் உள்ள பாலிகார்பனேட் லேயர் மேலாகவே தகவல்கள் பதியப்படுகின்றன. இதனால் அவை அழியும் அல்லது சிதையும் வாய்ப்புகள் இல்லை. மேலும் தகவல்கள் சிடியின் மேல்புறத்திற்கு அருகே உள்ளதால் அதன் மீது அமைக்கப்படும் ஒரு பூச்சு ஸ்கிராட்ச் மற்றும் கைரேகை படிதலைத் தடுக்கிறது. புளூ ரே டிஸ்க்கில் 1.1. மி.மீ. கனம் உள்ள ஒரே டிஸ்க்கில் இஞ்செக்ஷன் மோல்டிங் செய்யப்படு கிறது. இதனால் உற்பத்திச் செலவு குறைகிறது. புளு ரே மூலம் அதிக வேகத்தில் தகவல் பரிமாற்றம் ஏற்படு கிறது. ஒரு நொடியில் 36 மெகாபைட் தகவல்கள் மாற்றப்படுகின்றன. இப்போதைய டிவிடியில் 10 மெகாபைட் தகவல்களே மாற்றப்பட முடியும்.
சிடி முதலில் வந்த போது படிக்க மட்டுமே முடியும் வகையில் வந்தன. பின்னரே பதியவும், பதிந்ததை அழித்து பதியவும் பார்மட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. புளூ ரே டிஸ்க் வரும்போதே அனைத்து பார்மட்டுகளிலும் கிடைக்க இருக்கின்றன. அதாவது படிக்க மட்டும், பதிந்து படிக்க மட்டும் மற்றும் அழித்து எழுதிப் படிக்க மட்டும் என பல பார்மட்டுகளில் கிடைக்க இருக்கின்றன. இதில் ஹை டெபனிஷன் டிவி என்ற வகைக்கென ஒரு பார்மட்டும் கிடைக்க இருக்கிறது. தற்போது சிடி/டிவிடி காம்போ டிரைவ் இருப்பது போல டிவிடி/புளூ ரே சிடி காம்போ டிரைவ் ஒன்றை ஜேவிசி நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதில் ஏறத்தாழ 33.5 கிகாபைட் தகவல்கள் அடைக்கப்படும் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.

தற்போது டிவிடி தயாரிக்கும் சாதனங்களைக் கொண்டே தயாரிக்கப்படக் கூடிய எச்.டி. டிவிடி என்றும் அட்வான்ஸ்டு ஆப்டிகல் டிஸ்க் என்றழைக்கப்படும் டிவிடி ஒன்றும் புளூ ரே சிடிக்குப் போட்டியாக சந்தையில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டிவிடி பார்மட்டினையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இதனைத் தயாரிக்க புதிய வடிவில் சாதனங்கள் தேவைப்படாது. ஆனால் இரண்டு லேயர் கொண்ட இந்த வகை எச்.டி. டிவிடியில் அதிக பட்சம் 30 ஜிபி தகவல்களை மட்டுமே எழுத முடியும். ஆனால் இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவில் டிஸ்க் ஒன்றை பயோனியர் நிறுவனம் தயாரிப்பதில் முனைந்திருக்கிறது. இந்நிறுவனம் தயாரித்து வெளியிட இருப்பது ஓர் ஆப்டிகல் டிஸ்க் ஆகும். இதில் 500 ஜிபி தகவல்களை மிக அநாயசமாகப் பதிய முடியுமாம். எப்படி என்று கேட்கிறீர்களா? இதில் லேசர் கதிர்களுக்குப் பதிலாக அல்ட்ரா வயலட் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை புளூ ரே டிஸ்க்குகளைக் காட்டிலும் சிறிய வகை வேவ் லென்த் கொண்டிருப்பதால் இது சாத்தியமாகிறது.

எப்போது பொதுமக்களுக்கு புளூ ரே டிஸ்க் கிடைக்கும்?

ஜப்பானில் புளூ ரே ரெகார்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால் அமெரிக்காவைக் காட்டிலும் அங்குள்ள மக்கள் தான் ஹை டெபனிஷன் டிவி எனப்படும் உயர் தொழில் நுட்ப படங்களைத் தயாரித்துப் பார்க்கின்றனர். சென்ற மாதம் தான் புளூ ரே டிஸ்க் பிளேயர்கள் பொதுமக்களுக்கு அமெரிக்காவில் சோனி நிறுவனத்தால் வழங்கப்பட்டது. சோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பல திரைப்படங்களை
புளூ ரே டிஸ்க்கில் பதிந்து வெளியிட்டது. தற்போது புளூ ரே பிளேயர்கள் 1000 டாலர் விலையில் கிடைக்கின்றன. நாளடைவில் இவற்றின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தினமலர்

மஸாகி
02-08-2006, 09:44 AM
நல்ல தகவல்களைத் தேடித் தரும் - இனியவனின் பணி தொடரட்டும்..

(இந்தக் கட்டுரையில் - ஆங்கில சொற்கள் சில தமிழ் எழுத்திற்கு மாறிக் காணப்படுகின்றன. நண்பர் அவைகளைக் கவனத்தில் கொண்டு திருத்தவும்)

நட்புக்கு - மஸாகி
02.08.2006

இனியவன்
02-08-2006, 01:46 PM
மஸாகி உங்கள் சுட்டலுக்கு நன்றி.
தவறைத் திருத்திக் கொள்கிறேன்.