PDA

View Full Version : தொடர்-1 : எம்.எஸ். பவர்பாயின்ட் (Powerpoint)..



மஸாகி
23-07-2006, 05:48 AM
(இந்த தொடரினை அச்சிட விரும்புபவர்கள் - கிடையான (Horizontal) நிலத் தோற்றத்தில் (Landscape) அச்சிட்டால் அனைத்து தகவல்களையும் முழுமையாகப் பெறலாம்.)

( அன்பு நண்பர் - அருள் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க, பவர் பாயின்ட் பற்றிய சிறிய தொடர் ஒன்றை - புதியவர்களுக்காக இங்கே ஆரம்பிக்கின்றேன். என்னால், முடிந்தளவுக்கு தமிழ்படுத்திய சொற்களை பிரயோகிக்க முயற்சிக்கிறேன். முடியாமல் போகின்றவைகளுக்காக - நிர்வாகிகளும், நண்பர்களும் என்னை மன்னிக்கட்டுமாக.. )

பொதுவாக, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் வெளியீடாகிய - எம். எஸ். ஆபிஸ் என்ற மென்பொருட் பொதியில், எம். எஸ். பவர் பாயின்ட் என்கின்ற இந்த மென்பொருளும் உள்ளடக்கப்பட்டிருப்பதால், நாம் எமது கணினியில் - எம். எஸ். ஆபிஸ் என்ற மென்பொருட்களின் தொகுப்பை நிறுவுகின்றபோதே, பவர் பாயின்ட்டும் தானாகவே எம் கணினிக்குள் நிறுவப்பட்டுவிடும்.

இத் தொடரில், இன்று அதிகமானோரால் பயன்படுத்தப்படும் பதிப்பாகிய எம். எஸ். பவர் பாயின்ட் - Xp பற்றி ( நானறிந்த விடயங்களை ) நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.

இத் தொடரை நல்லபடி உங்களிடம் சமர்ப்பிக்க கடவுளிடம் பிரார்த்தித்தவனாக உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்..

மீண்டும் வருவேன்..

நட்புடன்
மஸாகி
23.07.2006

.

இனியவன்
23-07-2006, 06:16 AM
வாரே வாவ்
மஸாகி
வாங்க நல்லா
பிரசன்ட் பண்ணுங்க
பவர் பாயிண்டை...
ஆவலுடன் காத்திருக்கிறோம்,