PDA

View Full Version : பூப்படைந்த கவிதை!



ப்ரியன்
22-07-2006, 11:59 AM
* பூப்படைந்த கவிதை! *

நானும் நீயும்
தூரமாயிருக்கும் போது
சுடுகின்ற
அதே மவுனம்!

அருகருகே இருக்கையில்
அழகாய் இடையில்
வந்தமர்ந்துக் கொள்கிறது!

*

என் கவிதை புத்தகத்தில்
கண் தெரியாதவள் போல்
வருடி நீ படித்த
அக்கவிதைதான்
பூப்படைந்த கவிதை!

*

உனைப் பார்க்கப் போகும்
அந்நொடியில்தான்
அடைப்பட்டிருக்கிறது
எந்தன் உயிர்!

*

உன்னிடம்
பேசிக்களிக்க
புது மொழி கண்டறிந்தேன்!
மெள்ள விசாரித்ததில்
கண்டேன்
அதன் மொழி மவுனம்!

*

உன் நினைவுகளை
அடுக்கி அடுக்கி வைத்ததில்
என் இதயம் ஆனது
பெரிய காதல் நூலகம்!

*

காதல் கடவுளிடம் கேட்டுவைத்தேன்
அவனுக்கே தெரியவில்லையாம்; - இப்போது
உன் வாசலில் காத்து கிடக்கிறோம்
சாளரம் திறந்து சொல்லிவிட்டுப் போ
காதல் என்ன நிறம்!

- ப்ரியன்.

இளசு
23-07-2006, 09:50 PM
காதலால்
புல்லும் பூப்பூக்கும்
கல்லும் பஞ்சாகும்..

ரசவாதக் காதல் தாக்கும்போது
மயங்கி மாறாத இதயம் ஏது?


ப்ரியனின் கவிதைகள் படித்தால்
அழகான காதல் இன்னும் அழகாகிறது..

காதலிக்கப்படும் எல்லாமே அழகுதானே...


வாழ்த்துகள் ப்ரியன்...

பென்ஸ்
26-07-2006, 06:49 PM
ப்ரியன்...

அருமையான கவிதை...
விமர்சனம் எழுத முடியவில்லை...
பதில் கவிதையும் வாரலை...

அதனானல் எதாவது கிறுக்கலாம் என்று கிறுக்கியது....
தப்பா நினைக்காதிங்க...:D :D

!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தனிமையில் சுட்டெரிக்கும் மவுனமும்..
கூடலின் போது துனையாய்...
சிவ பூஜை கரடியா அது என்றால்.. !!!

தெரியாது...

என் மவுன மொழி
அவளுக்கு புரிந்திருந்தால்
நான் ஊமையில்லை...

!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அனைந்த விளக்குகளின்
வெளிச்சமான இரவுகளில்
நீ வரைந்த கடிதம்...
காதல் காயம்..

தனிமையில்
வாசித்து பார்க்கிறேன்
முடியவில்லை...
காதலில் இது என்ன மொழியோ..!!

!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இளசு
26-07-2006, 10:30 PM
ப்ரியன்...



அணைந்த விளக்குகளின்
வெளிச்சமான இரவுகளில்
நீ வரைந்த கடிதம்...
காதல் காயம்..

தனிமையில்
வாசித்து பார்க்கிறேன்
முடியவில்லை...
காதலில் இது என்ன மொழியோ..!!

!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


மிக ரசித்தேன் .. பென்ஸ்..

கல்யாணக் காலம் வந்ததைக்
கட்டியம் கூறும்
காதல் காயக் கவிதை....

பென்ஸ்
27-07-2006, 08:02 PM
மிக ரசித்தேன் .. பென்ஸ்..

கல்யாணக் காலம் வந்ததைக்
கட்டியம் கூறும்
காதல் காயக் கவிதை....

அம்மா...!!!
இந்த உலகத்தில்
என்னை புரிந்து கொள்ளாதவர்
நீங்கள் ஒருவர் தானோ????:rolleyes: :rolleyes: :rolleyes:

சகுனி செல்வனின்
பகடை திட்டங்களை
நான் வீசியும்
நீ பதுங்காதது ஏன்?????:confused: :confused: :confused:

ஏன் என்று யோசித்து
குழம்பி குழம்பி...
காலம் பதில் சொல்லட்டும் என்று
விட்டு விடுகிறென்...
பிச்சி பிடுங்க தான்
இனியும் ஒன்றும் இல்லையே !!!:D :D :D

என்னதான் பிச்சிக்கிடாலும்
அந்த "இளிச்சவாய்"..
அழுகிய ச்சீ தேவி...
இனிமையா பிறந்தா வரனும்...:p :p

எல்லாம் விதி விட்ட வழி.....:angry: :angry: :angry:


பொருள்:
இளிச்சவாய் ==> ரத்தகாட்டேரி மாதிரி பல்லை முன்னால தள்ளிகிட்டு...

றெனிநிமல்
27-07-2006, 08:05 PM
வாழ்த்துக்கள் ப்ரியன்
இணைந்திருங்கள்.