PDA

View Full Version : போருக்கு முன்...

தீபன்
21-07-2006, 05:41 PM
போருக்கு முன்...

எல்லாத் திசைகளிலிருந்தும்
யுத்த இருள் நெருங்குகிறது...

எந்தத் துப்பாக்கி
தொடக்கிவைக்கப் போகிறது
இந்தத் தேசத்தின்
இறுதிப்போரை...!

முன்னைப் போலில்லை முகங்கள்...

அநிச்சயமும் பீதியும் சூழ
களையிழந்து போயின சந்திகள்..

கந்தகக் கிடங்கு நோக்கி
ஊர்கிறது நெருப்புக்கோடொன்று..!

இன்று பௌர்ணமி,
நிலவை...
நட்சத்திரங்களுடனான தெளிந்த வானத்தை
நாளைக்கு உதவுமென
ஞாபகத்தில் சேமிக்கிறேன்...

செல் விழும் பேரதிர்வை
தசைகளைப் பிய்த்தெறியும் குண்டுகளை
விழியும் இதயமுமற்ற சன்னங்களை
இன்னும்...
மரணத்தின் முகங்களை
எப்படி எடுத்துரைத்து
தயார்ப்படுத்துவது இந்தக் குழந்தைகளை...?

இரும்புப் பறவைகள்
மரண எச்சமிட
அணிவகுத்து வரும்போது
என் வானமே...,
உன் பறவைகள் எங்கு போகும்...?

தூணோரம் மறைந்து தோன்றி
விளையாட்டுக் காட்டும்
உற்சாக வெண்பந்தே, பூனைக்குட்டீ!
நீயேனும் தப்பித்துப் போ...
உயிர்பற்றும் அவசரத்தில்
உன்னை நான்
தெரிந்தே மறந்துவிடக்கூடும்...!

மழைக்கென்ன...
ஊரை இரட்டிப்பு அழகாக்கிப் பொழிகிறது...

நடுங்கும் கைகளால்
மெழுகுவர்த்திச் சுடரைக் காக்கும்
தாயின் குரல் ஒலிக்கிறது,

மகனே! அவர்கள் மறுபடி வருகிறார்கள்

எதிரொலிக்கும் பதிலாய்

இழப்பில்லாமல் உயிர்ப்பில்லை அம்மா...

இனியவன்
21-07-2006, 06:03 PM
போருக்கு முன்...

நடுங்கும் கைகளால்
மெழுகுவர்த்திச் சுடரைக் காக்கும்
தாயின் குரல் ஒலிக்கிறது,

மகனே! அவர்கள் மறுபடி வருகிறார்கள்

எதிரொலிக்கும் பதிலாய்

இழப்பில்லாமல் உயிர்ப்பில்லை அம்மா...

படித்ததும் நெஞ்சில்
பட்டென வந்து மையமிட்டது
பயத்தின் நிழல்,
அனுபவிக்கும் மக்களுக்கு?

இளசு
21-07-2006, 10:39 PM
தெரிந்தே மறந்துபோகக்கூடும் பூனைக்குட்டியை...

இந்த ஒரு வரி போதும்...

பயம், வன்முறை - எத்தனை நற்பண்புகளை நாசமாக்கக்கூடிய நச்சரவுகள் என்று...

உணர்வுகளை படமாய்க் காட்டும் வரிகள்...

பாராட்டுகள் என்று முடிக்க கைவரவில்லை தீபன்..

தோளணையுங்கள் என்று சொல்லி முடிக்கிறேன்..

தீபன்
24-07-2006, 05:19 PM

நன்றி தலை... உங்கள் அணைப்பு எனக்குமட்டுமல்லாது எம்மவர் எல்லோருக்குமாய் அமையுமென நம்புகிறேன்... இன்றய எமது நாட்டு நடப்பையே இன்கு பதிவு செய்திருக்கிறேன்... ஆனா மற்றவர்கள் எவரும் கண்டுகொண்டதா தெரியலையே...!!?

தீபன்
24-07-2006, 05:23 PM
படித்ததும் நெஞ்சில்
பட்டென வந்து மையமிட்டது
பயத்தின் நிழல்,
அனுபவிக்கும் மக்களுக்கு?

நன்றி இனியவன்... அனுபவிப்பவர்களைவிட தொலைவில் நின்று பார்ப்பவர்களுக்குத்தான் அச்சமாகவிருக்கும்... அனுபவிப்பவர்களுக்கோ ஆக்ரோஷமாகவிருக்கும்... உங்களுக்கு புரியுமென நினைக்கிறேன்..

ஓவியா
25-07-2006, 12:33 PM
தீபன் அருமையான கவிதை

உம் கவிதையின் ஓவ்வொரு வரிகளுக்கும்
சிதறிய ரத்தங்கள் உறைந்த பொழுது மை எடுத்தீறோ..!!

படிக்கும் யுகமே இதயம் உறைய
எழுதியா கைகள் என்ன இரும்பு பெட்டகமா.....!!

கைகளுக்கு மட்டும் இதன் வேதனை புரிந்திருந்தால்..
ஒருவேளை பாரில் எழுதுக்களே மலர்ந்திருக்காதோ...!!

இனியவன்
25-07-2006, 12:54 PM
நன்றி இனியவன்... அனுபவிப்பவர்களைவிட தொலைவில் நின்று பார்ப்பவர்களுக்குத்தான் அச்சமாகவிருக்கும்... அனுபவிப்பவர்களுக்கோ ஆக்ரோஷமாகவிருக்கும்... உங்களுக்கு புரியுமென நினைக்கிறேன்..
புரிகிறது தோழரே.
களத்தில் இருந்தால்
அச்சம் அச்சம் கொள்ளும்
போராளியின் பக்கம் வர.

தீபன்
25-07-2006, 06:04 PM
தீபன் அருமையான கவிதை

உம் கவிதையின் ஓவ்வொரு வரிக்கும்
சிதறிய ரத்தங்கள் உறைந்த பொழுது மை எடுத்தீறோ..!!

படிக்கும் யுகமே இதயம் உறைய
எழுதியா கைகள் என்ன இரும்பு பெட்டகமா.....!!

கைகளுக்கு மட்டும் இதன் வேதனை புரிந்திருந்தால்..
ஒருவேளை பாரில் எழுதுக்களே மலர்ந்திருக்காதோ...!!

அடடா... ஓவியம் ஒன்று என்னை விமர்சித்ததே கவிதயாக இருக்கிறது... அருமையான வரிகள் தோழி... என்னை பாரட்டிய உங்கள் அம்சமான வரிகளுக்கு என் பாராட்டுக்கள்.. கூடவே நன்றிகளும்..

ஓவியா
26-07-2006, 04:52 PM
தீபன் அருமையான கவிதை
[/B][/COLOR]

இன்று கவிதையை மீண்டும் ஒரு முறை வாசிக்கும் பொழுதுதான் வாக்கியத்தின்(ல்) பிழையை கண்டேன்.....:eek:

இது
தீபன் அருமையான கவிதை
என்பது போல் அல்லவா உள்ளது....:D :D

மன்னிக்கவும். நான்
தீபன்,
உங்கள் கவிதை அருமையாக உள்ளது என்று கூரினேன்...:)

தீபன்
26-07-2006, 05:14 PM
என்ன இது... கடசியில இப்பிடி சொல்லிட்டியளே...

பென்ஸ்
30-07-2006, 02:40 AM
தீபன்....

இன்றும் ஒருமுறை வாசித்து பார்த்தேன்....

இதற்க்கு முன் வாசித்த போது எழுதிய பதில் கணினியில் எதோ விபரீதம் நடக்க அழிந்து விட்டது....

உயிர்ப்பிற்க்காக உயிரையும் மதிக்காத வீர குழந்தை...
தன் மகனை தன் சிறகின் கீழ் காக்கும் தாய்...
எரியும் மெழுகில் உருகும் உயிர்கள்...
தெரிந்து மறந்த பூனைகுட்டி...

......இன்னும் ... இன்னும்.. மனதில் நிற்க்கும் வரிகள்...

இது அனுபவித்த வரிகள் என்பதில் ஐயம் இல்லை...

வலியில் பங்கு கொண்டு....

தீபன்
01-08-2006, 05:29 PM

நன்றி நண்பரே... என் வரிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள் என்பதிற்குமேலாக எமது நாட்டு மக்களின் வலிகளை புரிந்துகொண்ட அடையாளமாகவே உங்கள் பாராட்டுக்களை பார்க்கிறேன்... முன்னயதில் கிடைக்கும் மகிழ்வைவிட இதன்போது அதிகமாகவே நான் திருப்தியை உணர்கிறேன்... மீண்டும் நன்றி நண்பரே...

vckannan
02-08-2006, 03:58 AM
போருக்கு முன்...

எப்படி எடுத்துரைத்து
தயார்ப்படுத்துவது இந்தக் குழந்தைகளை...?

தெரிந்தே மறந்துவிடக்கூடும்...!

நடுங்கும் கைகளால்
மெழுகுவர்த்திச் சுடரைக் காக்கும்
தாயின் குரல் ஒலிக்கிறது,

மகனே! அவர்கள் மறுபடி வருகிறார்கள்

இழப்பில்லாமல் உயிர்ப்பில்லை அம்மா...

வேறென்ன சொல்ல எல்லாரும் சொன்ன பிறகு......

"அட ஆஹா " தவிர

ஓவியா
04-05-2007, 09:29 PM
தீபன் கவிதையை மீண்டும் வாசித்தேன்.

பிரமாதம் சாரே.

கவிஞர் அறிமுக பகுதியில் ஒரு அறிமுகம் கொடுத்து இந்த கவிதையின் சுட்டியை தாருங்கள்..

நன்றி.

தீபன்
05-05-2007, 07:31 PM
தீபன் கவிதையை மீண்டும் வாசித்தேன்.

பிரமாதம் சாரே.

கவிஞர் அறிமுக பகுதியில் ஒரு அறிமுகம் கொடுத்து இந்த கவிதையின் சுட்டியை தாருங்கள்..

நன்றி.

அதெல்லாம் எனக்கு தெரியாதம்மா... யாராவது உதவி பண்ணுங்கப்பா..

அன்றய காலகட்டத்தில் எளுதப்பட்ட இவ் ஆக்கம் இன்றயனிலையில் நிதர்சனமாகும் தருணத்தை நெருங்கிவிட்டது...

சக்தி
05-05-2007, 07:50 PM
போர்கள்
இவை
மனித உதிரம்
பருகும்
ராட்சசன்கள்
தவறேயென்று
தெறிந்தும்
தவறு செய்யும்
மனிதர்களை
என்ன சொல்ல

அக்னி
05-05-2007, 08:48 PM
இழப்பில்லாமல் உயிர்ப்பில்லை அம்மா...

இழந்ததும் கொஞ்சமல்ல...
சுதந்திரமும் தூரமல்ல...

நம்பிக்கையுடன் காத்திருப்போம்...

தீபன்
07-05-2007, 05:49 PM
இழந்ததும் கொஞ்சமல்ல...
சுதந்திரமும் தூரமல்ல...

நம்பிக்கையுடன் காத்திருப்போம்...

காத்திருக்க நாங்கள் தயார்தான்.. ஆனால் விட்டுவைக்கத்தான் அவர்கள் தயாரில்லையே..!

ஆதவா
07-05-2007, 06:05 PM
கவிதை அருமை தீபன்... சூரியன் உதிக்கும் காலம் கொஞ்ச நாட்களில்..... உணர்வுகள் அருமை....

poo
08-05-2007, 07:02 AM
போரின் உக்கிரம் மனதை உலுக்குகிறது...
களத்தில் நிற்பவரை நினைத்தால் மனம் பதறுகிறது...

எதற்கும் முடிவுண்டென்று சொல்வோரிடம் இதற்கு விடிவுண்டா என்று கேட்கத் தோணுகிறது..

தீபன் உங்கள் உணர்வுகள் மட்டிலாவது பங்கெடுக்கும் வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றிகள்..

தீபன்
10-05-2007, 04:59 PM

பூந்தோட்டத்திலிருந்து போர்க்களத்தில் இருப்பவனின் உணர்வுகளிற்கு மதிப்பளித்தமைக்கு நன்றி நண்பரே..!

ஓவியா
10-05-2007, 05:12 PM
Originally Posted by ஓவியா

கவிஞர் அறிமுக பகுதியில் ஒரு அறிமுகம் கொடுத்து இந்த கவிதையின் சுட்டியை தாருங்கள்..

நன்றி.

அதெல்லாம் எனக்கு தெரியாதம்மா... யாராவது உதவி பண்ணுங்கப்பா..

அன்றய காலகட்டத்தில் எளுதப்பட்ட இவ் ஆக்கம் இன்றயனிலையில் நிதர்சனமாகும் தருணத்தை நெருங்கிவிட்டது...

தீபன், உங்கள் கவிஞசர் அறிமுக பதிவை நீங்கள் தான் எழுதி துவக்க வேண்டும். இது தான் சரி.

பின் சுட்டிகளை இணைக்க மேர்ப்பார்வையாளர்கள் உதவுவார்கள்.

தீபன்
28-06-2008, 01:28 AM
தீபன்....
சில விடயங்களை உணரத்தான் முடியும் , உணர்த்தமுடியாது என்பதை பொய்யாக்கிவிட்டீர்கள்.
உங்கள் கவிதையில் உணர்ந்தேன் அத்தனையும்.

பாராட்டுக்களிற்கு நன்றி நண்பா. என்ன, என் பதிவுகளை தோண்டிக்கொண்டிருப்பதுபோல் உள்ளது...

உன்னால் உணர முடிகின்றமைக்கு காரணம் கவிதை மட்டுமல்ல... நியும் அந்த வரலற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றமையும்தான் நண்பா...!

"பொத்தனூர்"பிரபு
28-06-2008, 06:47 PM
இரும்புப் பறவைகள்
மரண எச்சமிட
அணிவகுத்து வரும்போது
என் வானமே...,
உன் பறவைகள் எங்கு போகும்...?

தூணோரம் மறைந்து தோன்றி
விளையாட்டுக் காட்டும்
உற்சாக வெண்பந்தே, பூனைக்குட்டீ!
நீயேனும் தப்பித்துப் போ...
உயிர்பற்றும் அவசரத்தில்
உன்னை நான்
தெரிந்தே மறந்துவிடக்கூடும்...!

அற்ப்புதமான வரிகள் தொடர்ந்தூ எழுதுங்கள்
"பத்தனூர்"பிரபு

மறத்தமிழன்
01-07-2008, 04:03 AM
நிஜங்களை சற்றும் பிசகாமல் சித்தரித்துள்ளீர்கள். வேதனையையும் கூடவே நம்பிக்கையையும் சேர்த்தே பிரதிபலிக்கிறது உங்கள் படைப்பு. சண்டைக்கு முன்னான இடப்பெயர்வு ஆரம்பிக்கும் கணங்களை தரிசித்த நண்பர்களுக்கு இக்கவிதை மீழ ஒரு அனுபவமாய் அமையும்.

தீபா
09-07-2008, 07:29 AM
அய்யோ!! மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரையிலும் யுத்தம் ஓயவேயில்லை. ஒருமனிதன் இன்னொருவனை அடித்துத் தின்கிறான். உங்கள் வரிகள் கடுமையாகத் தாக்குகின்றன. இந்தக் கவிதைக்குப் பாராட்டு சொல்வதா? முடியாது. கண்ணீர் தருவோம்... என்னால் அதுமட்டுமே முடியும் தீபன்..