PDA

View Full Version : காதல் நிலா



இனியவன்
21-07-2006, 02:24 PM
"நிலா வெளிச்சத்தில் காதலர்களுடன் கூடி மகிழும் காதலிகள், காதலரைப் பிரிந்து விட்டால் முதலில் திட்டுவது நிலவைத் தான்...

"காதலனைப் பிரிந்த நிலையில் வானத்தில் முழு நிலவு தோன்றி பெண்களைப் படுத்தும் பாடு சொல்லி முடியாது. காதலனுடன் முந்தைய இரவு நேரங்களில் பேசி மகிழ்ந்தவை யாவும் நினைவுக்கு வந்து, பெண்களைக் கொடுமைப்படுத்தும்.

"நந்திக் கலம்பகத்தில், நந்தி வர்மன் மீது காதல் கொண்ட ஒரு பெண் நிலவைப் பார்த்து இப்படிச் சொல்கிறாள்:

பெண்ணில்லா ஊரில்
பிறந்தாரைப் போல வரும்
வெண்ணிலாவே இந்த
வேகம் உனக்காகாதே!

"சந்திரன் பெண் மக்கள் பிறக்காத ஊரில் பிறந்து, பெண் இனத்தின் உணர்ச்சியை அறியாதவன் போல் வருகிறானாம். இந்த இரண்டு அடிகளில் பிரிவாற்றாமையினால், துயரடையும் பெண்களின் இதய உணர்ச்சிகளையெல்லாம் கவிஞர் கொட்டி விட்டார் .

"உமர் கய்யாமைத் தெரியுமா?'
"பாரசீக நாட்டு பெருங்கவி.அவரது முழுப் பெயர் கியாது டீன் அபுல்பாத் உமர். தம் பெயரோடு "கய்யாம்' என்பதைச் சேர்த்துக் கொண்டார். கய்யாம் என்பதற்கு கூடாரம் செய்பவன் என்று பொருள்.

"அவரோடு பள்ளியில் படித்த நண்பன், இளமையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தான் ஒரு மாகாணத்தை ஆளும் உன்னத பதவிக்கு வந்ததும், உமர் கவலையின்றி வாழ, ஆண்டுதோறும் பெரும் தொகையை உமருக்குக் கொடுத்து வந்தான்.

"உமர் கவியாக மட்டும் வாழவில்லை; கணிதத்திலும், ஜோதிடத்திலும் சிறந்த மேதையாக விளங்கினார். அது பற்றி பல நுல்களை எழுதினார். ஆனால், அவைகளால் அவர் உலகப்புகழ் பெறவில்லை.

"கணித ஜோதிட ஆராய்ச்சிகளுக்கு நடுவே நேரம் கிடைக்கும் போது இம்மை, மறுமை பற்றி ஆழ்ந்து சிந்தித்து பல கவிதைகளை எழுதினார். இந்தக் கவிதைகளுக்கு, "ரூபாயத்' என்று பெயர். ரூபாயத் என்றால், நான்கடிச் செய்யுள் என்று பொருள்.

"இவரது பாடல்களில் சோக உணர்ச்சி இழையோடும்... "மது, மாது, மதுரமான பாடல்... இவற்றைத் தவிர இன்பம் தருவது இவ்வுலகில் ஏதுமில்லை' என்பது இவரது பாடல்களின் கருத்து.

"இவரது பாடல் ஒன்றுக்கு கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின் மொழி பெயர்ப்பு இதோ:

வெய்யிற் கேற்ற நிழலுண்டு;
வீசும் தென்றல் காற்றுண்டு...
கையில் கம்பன் கவியுண்டு;
கலசம் நிறைய மதுவுண்டு...
தெய்வ கீதம் பலவுண்டு;
தெரிந்து பாட நீயுண்டு...
வையாந்தருமில் வனமின்றி
வாழும் சொர்க்கம்
வேறுண்டோ?

"பாரதியார் கூட, "காணி நிலம் வேண்டும்' பாடலில், "பக்கத்திலே ஒரு பத்தினிப் பெண் வேண்டும்' என்கிறார்!

நன்றி வாரமலர்

இளசு
21-07-2006, 10:51 PM
மூளைக்குத்தான் நிலா ஒரு துணைக்கிரகம்..
இதயத்துக்கு இன்னும் அது காதல்சின்னம்...

நன்றி இனியன்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=318