PDA

View Full Version : மனம் திறக்கிறார் ஜிடேன்இனியவன்
21-07-2006, 02:15 PM
பாரிஸ்: ஜிடேன் தனது செயலுக்காக சிறுவர்கள் உள்ளிட்ட "டிவி' பார்த்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார். தன்னை துண்டிய மாட்டராஸியையும் தண்டிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக கோரியுள்ளார்.

பிளாஷ் பேக்: 18 வது உலககோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடந்தது. பைனலில் இத்தாலி அணி பிரான்சை வீழ்த்தி கோப்பை வென்றது. இப்போட்டியில் பிரான்ஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலி வீரர் மாட்டராஸியின் நெஞ்சில் தலையால் முட்டி கீழே தள்ளினார். உடனே, ஜிடேன் ரெட்கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பிரான்ஸ் பரபரப்பு: இப்பிரச்னை கால்பந்து உலகில் பெரும் பூகம்பத்தை கிளப்பியது. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாயின. மாட்டராஸி அப்படி சொன்னார்...இப்படி திட்டினார் என்று ஆளாளுக்கு ஒரு கதையை கிளப்பினர். இந்தச் சூழலில் ஜிடேன் மவுனம் கலைக்கிறார் என்ற செய்தி கேட்டதும் பிரான்ஸ் நாடே பரபரப்பானது. ரசிகர்கள் அனைவரும் "டிவி' முன் அமர்ந்து, அவரது பேட்டியை கண் கொட்டாமல் பார்த்தனர். மாட்டராஸியை தலையால் முட்டிய சம்பவம் பற்றி பிரான்சின், கேனால் பிளஸ் "டிவி' க்கு ஜிடேன் அளித்த பேட்டி:

* இத்தாலி மண்ணில் சுமார் 5 ஆண்டுகள் விளையாடி இருக்கிறீர்கள். அவர்களை பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு முன், ஏதாவது ஒரு வீரருடன் இதுபோன்று பிரச்னை ஏற்பட்டதுண்டா?
யாருடனும் மோதல் ஏற்பட்டது இல்லை. சில நேரங்களில் சிலருடன் தள்ளுமுள்ளு ஏற்படும். அவ்வளவு தான்! இது கால்பந்தில் சகஜமான ஒன்று. இதை தவிர யாருடனும் கைகலப்பில் ஈடுபட்டதில்லை.

* மாட்டராஸியுடன் கூட மோதல் ஏற்பட்டதில்லையா?
இல்லவே இல்லை! அவருடன் எவ்வித மோதலும் கிடையாது. உலக கோப்பை கால்பந்து பைனலில் எனது சட்டையை பிடித்து அவர் இழுத்த பிறகு தான் பிரச்னை ஆரம்பமானது. எனது சட்டையை விடாமல் இழுத்ததும், ""சட்டையை இழுப்பதை நிறுத்து, வேண்டுமானானால் போட்டி முடிந்ததும் இருவரும் சட்டையை மாற்றிக் கொள்ளலாம்,'' என்று சாதாரணமாக தான் கூறினேன். அந்த நேரத்தில் தான் மாட்டராஸி தகாத வார்த்தைகளை கொட்டினார். அது செய்கையால் காண்பிப்பதை காட்டிலும் கடினமானதாக இருந்தது. அதே வார்த்தைகளை திரும்ப, திரும்ப சொல்லி வெறுப் பேற்றினார். இதெல்லாம் மிக விரைவாக நடந்து விட்டது. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் எனது மனதில் இடியாக இறங்கியது.

* அவர் அப்படி என்ன தான் சொன்னார்...? அந்த வார்த்தைகள் என்ன...?என்பதை அறிய ஒவ்வொருவரும் ஆவலாக இருக்கிறார்கள்?
அது மிகவும் சீரியசான விஷயம். மிகவும் தனிப்பட்ட விஷயங்கள்...!
* உங்கள் தாய் மற்றும் சகோதரியை பழித்து பேசினாரா?
ஆமாம்! மிகவும் கடுமையான சொற்கள். ஒரு தடவை கேட்டாலே அங்கிருந்து ஓடி விடுவீர்கள். அப்படியிருக்கையில் இரண்டு தடவை...மூன்றாவது தடவை என தொடர்ந்து சொல்லும் போது...நானும் மனிதன் தானே! சில வார்த்தைகள் செயலை காட்டிலும் கடினமானது. அந்த வார்த்தைகளை கேட்பதற்கு பதிலாக எனது முகத்தில் ஓங்கி ஒரு அடி கொடுத்திருந்தாலும் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன்.

* உங்கள் தாய், சகோதரிக்கு எதிரான வார்த்தைகளை இரண்டு அல்லது மூன்று முறை சொன்னாரா?
ஆமாம்! இதற்கு தான் நான் பதிலடி கொடுத்தேன். அந்த மாதிரி செயல்பட்டிருக்கவே கூடாது. ஏனென்றால் சிறுவர்கள் உட்பட கோடிக்கணக் கான மக்கள் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். சிறுவர்களிடம் இதை செய்யலாம், அதை செய்யக் கூடாது என்று கற்றுத்தர வேண்டிய நிலையில் நிறைய பேர் இருந்து இருப்பார்கள். அவர்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

* நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள்...ஆனால் அந்த சம்பவத்துக்காக உண்மையிலேயே வருத்தப்படவில்லையா?
நான் வருத்தம் தெரிவிக்க முடியாது. அப்படி தெரிவித்தால் எதையும் சொல்வதற்கு மாட்டராஸிக்கு உரிமை இருப்பது போலாகி விடும்.
மேலும் அவர் சொன்னது எல்லாம் தவறான வார்த்தைகள். நாம் எப்போதுமே ஒரு பதிலடியை பற்றி தான் பேசுகிறோம். அதற்கு தான் தண்டனையும் அளிக்கிறோம். ஆனால், யாரும் தூண்டவில்லை என்றால், பதிலடியும் இருக்கப் போவதில்லை என்பதை உணர வேண்டும். எரிச்சலை துண்டுகிறவர் தான் குற்றம் செய்தவர். ஆனால் பதிலடி கொடுத்தவர் தண்டிக்கப்படுகிறார். நான் பதிலடி கொடுத்தேன்...அந்த சம்பவமும் நடந்து விட்டது.

நீங்களே கற்பனை செய்து பாருங்கள். உலக கோப்பை பைனலில் எனது ஓய்வுக்கு இன் னும் 10 நிமிடங்கள் இருக்கும் போது, நான் அந்த மாதிரி செய்தது எனக்கு மகிழ்ச்சி தருமா?
* நிச்சயமாக இல்லை.. .ஆனாலும் அந்த நேரத்தில் வெடித்து வீட்டீர்களே?
என்னை துண்டினார்கள்...அதுவும் மிகவும் சீரியசாக...அவ்வளவு தான்! எனது செயல் மன்னிக்க முடியாதது. ஆனாலும் உண்மையான குற்றவாளியையும் தண்டிக்க வேண்டும். அந்த உண்மையான குற்றவாளி என்னை துண் டியவர் (மாட்டராஸி) தான்!

நன்றி தினமலர்

இளசு
21-07-2006, 10:46 PM
ஊகித்ததுதான்..

தூண்டியது ஒரு திட்டமிட்ட செயல்.. காற்றோடு போன வார்த்தைகள்.. சாட்சி இல்லை.. ஆனால் மன்னிக்க முடியாத குற்றம்.

வீரனாய் இருந்து, திட்டமிட்ட தூண்டலுக்கு ஆட்பட்டு, மாட்டராஸியின் குறிக்கோளை நிறைவேற்றித்தந்து, மனவேதனையை பரிசாகப்பெற்ற ஜிடேனின் ஒரே தவறு... அந்த நொடியில் அங்கே அப்படி நடந்ததுதான்.


இதை மன்னித்து விட்டிருந்தால் - ஜிடேன் தெய்வம்.
போட்டி முடித்த பின் அவரை செருப்பால் அடித்திருந்தால் - ஜிடேன் மனிதன்.

இப்போது - ?

aren
24-07-2006, 07:11 AM
ஜிடேன் செய்தது தவறு என்றே தோன்றுகிறது. மட்டராஸியின் பழிச்சொல் பற்றி நடுவரிடம் சொல்லியிருக்கலாம். அவர் கவனித்துக்கொண்டிருப்பார். ஒரு நாட்டிற்காக ஆடும்பொழுது அதுவும் உலகப்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இப்படி செய்து தன்னுடைய நாட்டிற்கு கிடைக்கவிருந்து கோப்பையை இப்படி இழக்க வைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

எங்கேயும் சாதுர்யம் வேண்டும், அது ஜிடேனிடம் மிகவும் குறைவாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

gragavan
24-07-2006, 08:41 AM
ஜிடேன் செய்தது தவறு என்று சொல்வது மிக எளிது. ஆனால்...போட்டி முடிந்த பின் என்ன தண்டனை கொடுத்திருந்தாலும் அது மாட்டராஸியின் தவறை வெளியே கொண்டு வந்திருக்காது. இப்பொழுதுதான் மாட்டராஸியின் தவறின் பரிமாணம் வெளியே தெரிகிறது அல்லவா. ஆகையால் ஒரு மனிதன் செய்யக்கூடியதைத்தான் ஜிடேன் செய்திருக்கிறார்.

போட்டியில் மூழ்கி வெற்றிக் கனியைச் சுவைக்கச் சற்று நேரமே இருக்கையில்....வெறியோடு இருப்பவரிடம்...இப்படியெல்லாம் சொன்னால்...ஒரு மனிதனாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து விட்டார். அவ்வளவுதான். போட்டியில் தோல்வி என்பது சிவப்பு அட்டை என்பதும் இருக்கட்டும்....மாட்டராஸியின் மதிப்பும் குலைந்து போயிருக்கிறதே. ஜிடேன் மேல் அநுதாபம் எழுந்திருக்கிறதே.

மயூ
24-07-2006, 10:49 AM
இன்று தான் நம்ம பேராசிரியர் கற்பித்தார்
Do not react to actions but you must proact to actions.....

pradeepkt
24-07-2006, 01:34 PM
அதாவது மாட்டராஸி திட்டுறதுக்கு முன்னாடியே முட்டித் தள்ளிருக்கலாமா???
மயூரேசா, கொஞ்சம் விவகாரமா இருக்கே??? :D

muthu1006
24-07-2006, 01:42 PM
hello zidane made a mistake they should punish him

pradeepkt
24-07-2006, 03:34 PM
வந்தவுடனே காரமா கருத்து சொல்றீங்க...
முதல்ல உங்களைப் பத்தி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.

மயூ
25-07-2006, 04:23 AM
அதாவது மாட்டராஸி திட்டுறதுக்கு முன்னாடியே முட்டித் தள்ளிருக்கலாமா???
மயூரேசா, கொஞ்சம் விவகாரமா இருக்கே??? :D

ஆகா!
எதையுமே விவகாரமாத்தான் புரிஞ்சுப்பீங்களா?
நான் சொல்லவந்தது அந்த சந்தர்ப்பத்தில் சிடான் யோசிக்க வேண்டும் அவன் என்ன சொன்னாலும் என்னோட வேலை விளையாடுறது. வேட்டை யாடுறது இல்லை.....:D

pradeepkt
25-07-2006, 04:26 AM
அப்படியே வேட்டையாடிட்டாலும்...
ஆனாலும் ரொம்ப தமிழ் சினிமா பாக்குறேன்னு நினைக்கிறேன்...
படிப்பெல்லாம் எப்படிப் போகுது?

மயூ
25-07-2006, 04:31 AM
அப்படியே வேட்டையாடிட்டாலும்...
ஆனாலும் ரொம்ப தமிழ் சினிமா பாக்குறேன்னு நினைக்கிறேன்...
படிப்பெல்லாம் எப்படிப் போகுது?
புத்தகம் திறந்து ரெம்ப நாளாகிடிச்சு......:D :D :D :D

தாமரை
25-07-2006, 04:35 AM
அப்படியே வேட்டையாடிட்டாலும்...
ஆனாலும் ரொம்ப தமிழ் சினிமா பாக்குறேன்னு நினைக்கிறேன்...
படிப்பெல்லாம் எப்படிப் போகுது?

அதுசரி..
Do not react to actions but you must proact to actions.....

இதை செஞ்சவர் "மட்ட"ரஸி.. அவர் "மாட்ட"ரஸி ஆவதற்குள் கோப்பை இத்தாலி கையில்...

நடுவர்களையே மதிக்காத, விதிமுறைகள் மீறுதல் சகஜமான WWF சண்டைகளைப் பார்த்து ரசிக்கும் இன்றைய சிறுவர்கள் நாளை இம்மாதிரிப் போட்டிகளில் எப்படியெல்லாம் வீரம் காட்டப் போகிறார்களோ! கவலையாய் இருக்கிறது..

மயூ
25-07-2006, 05:59 AM
அதுசரி..
நடுவர்களையே மதிக்காத, விதிமுறைகள் மீறுதல் சகஜமான WWF சண்டைகளைப் பார்த்து ரசிக்கும் இன்றைய சிறுவர்கள் நாளை இம்மாதிரிப் போட்டிகளில் எப்படியெல்லாம் வீரம் காட்டப் போகிறார்களோ! கவலையாய் இருக்கிறது..
இதைப் பார்க்க அனுமதிக்கும் பெற்றோர்களை என்ன செய்வது? :confused:

தாமரை
25-07-2006, 06:10 AM
இதைப் பார்க்க அனுமதிக்கும் பெற்றோர்களை என்ன செய்வது? :confused:

இதை எதிர்த்து ஒரு போராட்டமே நடத்த வேண்டியதாய் இருக்கிறது..
பல பெற்றோர்கள் குழந்தை தன்னை தொந்தரவு செய்யாத வரை சரிதான் என்று விட்டு விடுகிறார்கள்.. இதைப் பார்ப்பதற்காக அம்மாவையே அடிக்கத் தயங்காத குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். விளைவு

குழந்தைகள் சண்டை போட்டுக் கொண்டே இருக்க, வலியவன் வைத்தது சட்டம் என்ற மனப்பான்மை தோன்றி விடுகிறது..

குழந்தைகளை பாதிக்கும் இது போன்ற "விளையாட்டு நிகழ்ச்சிகளை" ஒளிபரப்ப அனுமதிப்பதே மிகப் பெரிய குற்றம்.

பிரதீப்பு.. உம்ம தலைவர் விஜயகாந்துகிட்ட சொல்லி இதை தடை பண்ன வேண்டும் என சட்டசபையில பேசச் சொல்லுங்களேன்...

gragavan
25-07-2006, 08:27 AM
என்னது பிரதீப்பு தலைவரு விஜயகாந்த்தா? இல்லையே...வேற யாரோட பாதங்கள்ளயோ வெற்றிக்கனியைச் சமர்பிச்சாரே.....இப்ப மாறீருச்சுதோ!

pradeepkt
25-07-2006, 08:34 AM
நல்லா சமர்ப்பிச்சேன் நானு...
அட நீங்க வேற... நான் இல்லாத கட்சிதான் எது???

gragavan
25-07-2006, 08:36 AM
நல்லா சமர்ப்பிச்சேன் நானு...
அட நீங்க வேற... நான் இல்லாத கட்சிதான் எது???அதச் சொல்லுங்க...அரசியல்வாதிங்கதான் அப்படிச் செய்யுறாங்கன்னா...நீங்களுமா?

pradeepkt
25-07-2006, 11:56 AM
இருக்குறவனுக்கு அந்த மடம்...
இல்லாதவனுக்குச் சந்தை மடம்...
நம்மதான் எல்லாத்தையும் வாழ வைப்பம்ல...

ஓவியா
25-07-2006, 12:03 PM
நல்லா சமர்ப்பிச்சேன் நானு...
அட நீங்க வேற... நான் இல்லாத கட்சிதான் எது???


மகளீர் கட்சியுமா....:D

இனியவன்
25-07-2006, 12:06 PM
மகளீர் கட்சியுமா....:D
மகளிர் மன்றத் தலைவர் பிரதீப் வாழ்க.அடியேனுக்கும் ஒரு சீட்டுக் கொடுங்க.

தாமரை
25-07-2006, 12:21 PM
மகளிர் மன்றத் தலைவர் பிரதீப் வாழ்க.அடியேனுக்கும் ஒரு சீட்டுக் கொடுங்க.

என்ன பிரதீப்பு? சொல்லவே இல்லை.. தலைக்கு சொன்னீங்களா? அவர் ஆசிர்வாதம் எப்பவும் உண்டுதானே!