PDA

View Full Version : பழைய நினைவுகள் - 2தாமரை
21-07-2006, 01:51 PM
1990 ஆம் வருடம்.. மார்ச் மாதம்...

ராணுவத்துக்கு ஷார்ட் சர்வீஸ் கமிஷன் செலக்ஷனுக்கு போபால் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது.. நான் செலக்ட் ஆகப்போவதில்லை என்று நன்கு தெரியும்..

இருந்தும் ரயில் ஏறினேன். இது எனது நான்காவது ரயில் பயணம். பெங்களூரிலிருந்து ரயில் கிளம்பியது. அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்.. கூட சில பல ராணுவ வீரர்கள். பயணம் முக்கியமில்லை..

போபால் சென்று சேர்ந்த பின் முதலில் இரு எழுத்துத் தேர்வுகள்..இரண்டிலும் தேறிய பிறகு 5 நாட்கள் லீவு...அரசாங்க விருந்தாளிகளாக்கப்பட்டோம்..

வேலைக்கே சேரவில்லை அதற்குள் லீவா என்று அதிசயப் படாதீர்கள்.. இது அரசு வேலைதான்... இருந்தாலும்... எங்களுக்கு தேர்வுகளை நடத்துபவர் லீவு அதனால் 5 நாட்கள் எங்களை தங்க வைத்து அடுத்த பேட்ஜுடன் தேர்வு...

தினம் காலை எழுந்து டிஃபன் சாப்பிட்டு விட்டு ஊர் சுற்றி வந்து மதியம் நன்கு சாப்பிட்டுவிட்டு மறுபடி ஊர் சுற்றி இரவு நன்கு வயிறு புடைக்க சாப்பிட்டு தூங்குவதுதான் வேலை.. மேனே பியார் கியா படம் பார்த்தோம்.. ஒரு பிர்லா மந்திர் சென்று வந்தோம்.. பழமையான ஒரு ஜூம்மா மசூதி இருந்தது அதிலும் சென்று தொழுகை செய்து விட்டு வந்தோம்..

அங்கே ஆட்டோ வை டாக்ஸி என்றார்கள். எனக்கு ஹிந்தி சுத்தமாக தெரியாது.. ஷோலே, குர்பானிக்குப் பிறகு நான் பார்த்த மூன்றாவது ஹிந்திப்படம் மேனே பியார் கியா!.

அங்கே நான் கற்ற மலையாளப் பாட்டு..

சமயமாம் ரதத்தில் ஞான் ஸ்வர்க்க யாத்ர போகுன்னு
என்சுதேசம் கான்பதின்னாய் ஞான் தனியே போகுன்னு (சமய)

ஆகயல்ப தூரமாத்ரம் ஈ யாத்ர போகுண்ணு
ஆகயல்ப நேரமாத்ரம் சக்ரம் மும்போட்டோடுண்ணு (சமய)

ஈ ப்ரப்ஞ்ச சுகம் தேடான் இது வல்ல சமயம்
என்சுதேசத்தின் சன்னிதானம் யேசுவிண்டே நாமம் (சமய)

இதையும் விடுங்கள்.. முக்கியமான விஷயம் இப்போதுதான் வருகிறது..

ஜூம்மா மசூதியில் இருந்து வரும்போழுது திடீர் நண்பர்களான நாங்கள் ஐவரும் தமிழில் பேசிக்கொண்டே வந்தோம்.. அதிகாரிகளின் பங்களாக்கள், குட்டி பொமரேனியன் நாய்.. பெரிய அல்சேஷன், வாயில் காக்கும் பணியில் இருந்த சிப்பாய் எவரும் எங்கள் கிண்டலில் இருந்து தப்பவில்லை.. பள்ளிப் படிப்பிற்கு பின் என்.டி.ஏ முறையில் வரும் கடைநிலைச் சிப்பாய்கள் பலர் இப்படி மேஜர்களின் வீட்டுப்பணிகளை செய்வதைப் பற்றி எக்கச் சக்க கிண்டல் .. அப்போதுதான் எதிரே வந்தான் அவன்..

ராணுவத்தின் அடையாளமாய் மண்டை தோல் பச்சையாய் தெரியும் கிராப். ஒல்லியாய் ஆனால் உறுதியாய் உடல் வாகு.. 20 வயது இருக்கலாம்.. கையில் இருந்த சங்கிலியின் மறுமுனையில் பளீர் வெள்ளையில் ஒரு பொமரேனியன் நாய்..

'இவனப் பார்ரா இங்க வந்து நாய் மேய்க்கிறான்" சிரிப்பு சிரிப்பு சிரிப்பு மேலும் சிரிப்பு,,,

"என்ன பண்றது எல்லாம் தலைவிதி" பதில் வந்து விழுந்ததும் சிர்ப்புகள் சட்டென பவர் கட்டாகி அனைவரும் முகமும் இருண்டன...

அப்புறம் அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து பேச அவர் பெயர் முருகன் என்பதும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதும் எங்களுக்குத் தெரிய வந்தது (நல்ல வேளை கைல அருவா இல்லை :rolleyes: :rolleyes: )

அப்ப தெரிஞ்சுகிட்டோம்... வாயைக் கட்டணும் னு...

மிச்சம் என்ன டெஸ்ட் முடிஞ்சு முதல் வகுப்பு ரயில் கட்டணம் பெற்றுக் கொண்டு திரும்ப வந்தோம்...

இளசு
22-07-2006, 12:25 AM
கூட்டமாய்ப் போனால் - குதூகலம் மட்டுமல்ல.. குத்தல் பேச்சுகளும் பலமடங்காகிவிடும்..

முருகன் அதற்கு இயல்பாய் பதில் சொல்லி அசத்திவிட்டார்.

செல்வன் - நல்ல தொடர். பாராட்டுகள்..வாழ்த்துகள்.. தொடருங்கள்.

படிக்க சுவையும் கற்க பாடமுமாய் இருக்கும் உங்கள் பதிவுகளுக்கு
என் வரவேற்பும் எதிர்பார்ப்பும்..

pradeepkt
24-07-2006, 07:20 AM
நல்ல வேளைங்க... ஆனாலும் நீங்க என்னத்தையாச்சும் சொல்லி நாலு அடி வாங்கியாச்சும் சமாளிச்சுருப்பீங்க...
உங்க மேல எனக்கு அத்தனை நம்பிக்கை :D :D :D

gragavan
24-07-2006, 07:41 AM
வாய வெச்சுக்கிட்டு இப்பத்தான் சும்மாயிருக்கிறதில்லை...அன்னைக்கும் அப்படியா...முருகனே வந்து உபதேசம் செஞ்சும்.........ம்ம்ம்ம்ம்

gragavan
24-07-2006, 07:42 AM
மைனே பியார் கியா படம் எனக்குப் பிடிக்கும். பள்ளிக்கூடச் சமயத்துல வந்தது. ரெண்டு மூனு பாட்டு நல்லாயிருக்கும். குறிப்பா ஜா ஜா கபூத்தரு ஜா ஜா பாட்டு...அப்புறம் ஊட்டியில ஒரு பாட்டு வரும். அது வரிகள் நினைவில் இல்லை....ஆனா நல்ல பாட்டு.

pradeepkt
24-07-2006, 12:57 PM
எங்க ஊருல சினிப்பிரியா தியேட்டர்லயே 50 நாளைக்கு மேல ஓடிய படம். அப்புறம் காதல் கவிதைன்னு தமிழில் டப் பண்ணி வந்தும் ஓடுச்சு...
ஒல்லி சல்மான் கான், அழகு பாக்யஸ்ரீ... அருமையான பாடல்கள்... ஹ்ம்ம்... அது ஒரு காலம்.

தாமரை
24-07-2006, 01:13 PM
நல்ல வேளைங்க... ஆனாலும் நீங்க என்னத்தையாச்சும் சொல்லி நாலு அடி வாங்கியாச்சும் சமாளிச்சுருப்பீங்க...
உங்க மேல எனக்கு அத்தனை நம்பிக்கை :D :D :D

அப்ப என்னோட வெயிட்டு 48 கிலோதான், அடிச்சா கொலைகேஸாயிடும்னு யாரும் அடிக்க மாட்டாங்க... இருந்தாலும் அந்த கமெண்டை அடிச்சவன் நானில்லை,,, பாண்டிச்சேரியில் இருந்து வந்த ஒரு பையன்.. நல்லா வாட்ட சாட்டமானவன்.. அவன் செலெக்ட் ஆவான்னு எதிர்பார்த்தோம்.. யாருமே ஆகலை...

gragavan
25-07-2006, 09:58 AM
அப்ப என்னோட வெயிட்டு 48 கிலோதான், அடிச்சா கொலைகேஸாயிடும்னு யாரும் அடிக்க மாட்டாங்க... இருந்தாலும் அந்த கமெண்டை அடிச்சவன் நானில்லை,,, பாண்டிச்சேரியில் இருந்து வந்த ஒரு பையன்.. நல்லா வாட்ட சாட்டமானவன்.. அவன் செலெக்ட் ஆவான்னு எதிர்பார்த்தோம்.. யாருமே ஆகலை...48 கிலோவா? அடடா! அதுனாலதான் இப்போ 84 கிலோவாயிட்டீங்களா?

தாமரை
25-07-2006, 10:23 AM
48 கிலோவா? அடடா! அதுனாலதான் இப்போ 84 கிலோவாயிட்டீங்களா?

நைஸா உங்க எடையைச் சொல்லீட்டிங்களே!!:D :D :D

ஓவியா
25-07-2006, 02:44 PM
நல்ல வேளைங்க... ஆனாலும் நீங்க என்னத்தையாச்சும் சொல்லி நாலு அடி வாங்கியாச்சும் சமாளிச்சுருப்பீங்க...
உங்க மேல எனக்கு அத்தனை நம்பிக்கை :D :D :D

வாய வெச்சுக்கிட்டு இப்பத்தான் சும்மாயிருக்கிறதில்லை...அன்னைக்கும் அப்படியா...முருகனே வந்து உபதேசம் செஞ்சும்.........ம்ம்ம்ம்ம்

:D :D :D :D :D

தாமரை
25-07-2006, 02:47 PM
வாய வெச்சுக்கிட்டு இப்பத்தான் சும்மாயிருக்கிறதில்லை...அன்னைக்கும் அப்படியா...முருகனே வந்து உபதேசம் செஞ்சும்.........ம்ம்ம்ம்ம்

மைண்ட் யுவர் ஓன் பிஸினெஸ் அப்படின்னு பகவத் கீதைல கண்ணன் சொல்லலியா.. யாரு கவனிச்சா.. (அரவான் செத்தபோது வருந்தாத அர்ச்சுனன் பீஷ்மரைக் கொல்லுணுமே, துரோணரைக் கொல்லணுமேன்னு வில்லை நழுவ விட்டாராம்.. அப்போ கிருஷ்ணன் சொன்னது)

பென்ஸ்
30-07-2006, 04:48 AM
சம்பவங்களின் சங்கதி சமமாய்... ஆனால் 10 வருடங்களுக்கு பிறகு...
சில மாற்றம்...

இடம்: மைசூர்..


முதல் 4 நாலு நாள் நல்லாதான் இருந்தேன்...
சேலக்ட் கூட ஆகி இருக்கும்...
4வது நாள் இரவு... துணி அயர்ன் செய்ய கொடுத்த இடத்தில் வைத்து ஒருத்தரிடம் இடக்கு முடக்க பேச... அப்புறமா அவரு என் சூப்பர்வைசர் கிட்ட சொல்ல...
அப்புறம்....
கிடைக்காது என்று ஆயிடுச்சு...
அப்புறம் என்ன வழக்கமான என்னுடைய சாகசங்கள்...
திரும்பவும் 2 எச்சரிக்கைகள்....
பிறகு எங்கு செலக்ட் ஆக....
போகும் போது பஸ்ல கூப்பிட்டு போயி, லாரியில் போட்டு அனுப்பினாங்க....

இருந்தாலும் ... வாரனாசியில் கூட ஒரு முறை டெஸ்ட் எழுதினேன்...

செல்வன் ...

******/சமயமாம் ரதத்தில் ஞான் ஸ்வர்க்க யாத்ர போகுன்னு/******* இதில் யாத்ர செய்யுன்னு.. என்று வரும்... :D :D
இது கல்லறை தோட்டதிற்க்கு , இறந்தவரை கொண்டு செல்லும் போது பாட படும் பாடல்...

அப்புறம் .. அந்த "தானரோ தன்னாரோ.." பாடல் படிக்கவில்லை என்று பொய் சொல்லகூடாது ...:rolleyes: :rolleyes: :D :D :D

பரஞ்சோதி
30-07-2006, 05:15 AM
செல்வன்,

பழைய நினைவுகள் திரும்பி பார்ப்பதில் தனி சுகமுண்டு.

தெரியாத இடத்திலும், தெரியாத ஆட்களிடமும் கொஞ்சம் அடக்கி தான் வாசிக்கணும். நான் இது மாதிரி தர்மசங்கட நிலைக்கு ஆளாகி அடங்கியிருக்கிறேன்.

ஓவியன்
23-06-2007, 01:13 PM
'இவனப் பார்ரா இங்க வந்து நாய் மேய்க்கிறான்" சிரிப்பு சிரிப்பு சிரிப்பு மேலும் சிரிப்பு,,,

"என்ன பண்றது எல்லாம் தலைவிதி" பதில் வந்து விழுந்ததும் சிர்ப்புகள் சட்டென பவர் கட்டாகி அனைவரும் முகமும் இருண்டன...


அப்ப தெரிஞ்சுகிட்டோம்... வாயைக் கட்டணும் னு...

மிச்சம் என்ன டெஸ்ட் முடிஞ்சு முதல் வகுப்பு ரயில் கட்டணம் பெற்றுக் கொண்டு திரும்ப வந்தோம்...


ஹீ!,ஹீ! செல்வண்ணா! :D :D :D :aktion033:

அப்ப உங்க முகம் எப்படி இருந்திருக்கும்னு நினைச்சா சிரிப்புச் சிரிப்பா வருகுது!:icon_shout:

ஹீ!,ஹீ!

அமரன்
23-06-2007, 02:25 PM
பழைய கள்ளு மன்னிக்கவும் பழைய நினைவு நகைச்சுவையாக இருக்கு...அடுத்த நினைவுகளை மீட்டி தாலாட்டுவது எப்போ செல்வரே!

maxman
02-07-2007, 08:41 PM
இடம், பொருள் ஏவல் என்ற ஒன்றை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

இப்பவாவது சொல்லுங்களேன் எத்தனை முறை ராணுவத்திற்கு படை எடுத்தீர்கள்?.

ந*ன்றி தாம*ரை :)

gayathri.jagannathan
03-07-2007, 04:47 AM
இந்தியாவில்(உலகில்) நாம் எந்த இடத்துக்குப் போனாலும் அங்கு நமக்கு முன்னே தமிழ் சென்று நம்மை வரவேற்கிறது.. என்ன* செய்வ*து?

gayathri.jagannathan
03-07-2007, 04:50 AM
ஏதோ ஒரு ராமராஜன் படத்தில் அயல் நாட்டில் ஒரு உணவகத்தில் பணிபுரியும் ஒரு மலேஷியப் பெண் அழகிய தமிழில் சொல்வாள் ...
"தமிழ் உலகத்தில் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது"
என்று... அது உண்மை அன்றோ....

ஓவியா
04-07-2007, 05:43 AM
ஏதோ ஒரு ராமராஜன் படத்தில் அயல் நாட்டில் ஒரு உணவகத்தில் பணிபுரியும் ஒரு மலேஷியப் பெண் அழகிய தமிழில் சொல்வாள் ...
"தமிழ் உலகத்தில் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது"
என்று... அது உண்மை அன்றோ....

காயூ,
மலேசியா பெண்களுக்கு தமிழ் பற்று அதிகம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க, ஏன்னா அங்க வாழ்க்கை அப்படிதான், இது உண்மை. எதோ ஒன்று இரண்டு மக்கள் என்னை போல் இருப்பார்கள். ஆனால் ராமராஜன் சார் சொன்னது (!?) தற்ப்பொழுது அங்கே ஒரே அயல் நாட்டு மோகந்தான்.

இதயம்
04-07-2007, 06:35 AM
மன்றத்தில் நீதிக் கதைகள், சுவையான சம்பவங்கள் பகுதியில் மட்டும் பொய் சொல்லக்கூடாது என்பது சொல்லப்படாத விதி.!! ஆனால், நீங்களோ மிகவும் சமயோசிதமாக முருகன் சொன்னதாக என்று ஏதோ ஒன்றை எழுதி மழுப்பிவிட்டீர்கள். எங்கள் ஊர் பக்கம் நீங்கள் சொன்னமாதிரி சொன்னால் குறைந்த பட்சம் அரிவாள் வெட்டு வரை போகும்.:violent-smiley-004:

ஆனால் போபாலில் அது வெறும் பேச்சோடு போனதாக நீங்கள் சொல்லுவதை நாங்கள் நம்ப தயாரில்லை. எனவே நடந்ததை உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டும் என்று மன்ற நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. அப்படி உண்மை வராத பட்சத்தில் முருகனையோ அல்லது (அன்று அந்த சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த (இன்னும் உயிரோடு இருந்தால்) நாயையோ (உங்கள் நண்பர்கள் உங்களுக்கு பாதகமாக நடந்து கொள்ள மாட்டார்கள்) தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறது..!!:icon_tongue: :icon_tongue: :icon_tongue:

தாமரை
01-08-2008, 06:15 AM
1978 ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது இது. சேலத்திற்கு குடி வந்த முதல் வருடம்... எங்கள் வீட்டில் கோழி வளர்க்கும் வழக்கமுண்டு.

நான் பிறந்தது முதலே கோழிகளை வளர்த்து வருகிறோம்.. சில நேர்ந்து விடப்பட்டவை. சூரியனுக்கு, நாகருக்கு, புதுப்பட்டி துளுக்கச் சூடாமணி அம்மனுக்கு, மோகனூர் நவலடியானுக்கு என வருடத்திற்கு நான்கு பலிக்கோழிகள்... பெட்டைக் கோழிகள் (முட்டைக்காகவும், இனவிருத்திக்கும் மற்றும் முட்டைக் கோழி (எச்சில் ஊறுதே) )எனவும், சில பலச் சேவல்கள் என நிறையக் கோழிகள் வளர்த்தது மாறி, சேலத்தில் ஒரு சேவல், ஒரு கோழி மட்டும் வளர்த்தோம்..

கோழி முட்டைகளைச் சேகரித்து அடைகாக்க வைத்து குஞ்சும் பொறித்தாயிற்று.. மொத்தம் 10 குஞ்சுகள்.

மரவண்ணம், கருவண்ணம், செவ்வண்ணம் என பல வண்ணக் குஞ்சுகள் தாயுடன் இறை பொறுக்கித் திரியும். கழுகுகள் காக்கைகள் வானத்தில் பறந்தவாறே நோட்டமிட, தாயின் காலைச் சுற்றியே சென்று திரும்பும் குஞ்சுகள் சிலமுறை வீடு வந்து சேர்வதற்குள் திக் திக் தான்.

ஒரு முறை ஒரு காக்கை எப்படியோ ஒரு குஞ்சைக் கவர்ந்து விட நான்கைந்து சிறுவர்களாகக் காக்கையை விரட்ட, அது "ச்சீ நீங்களே வச்சுக்குங்கடா உங்களது கோழிக்குஞ்சை" எனக் குஞ்சைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போனதும் உண்டு.. அது அல்ல கதை...

அன்று மாலை பள்ளியில் இருந்து திரும்பி வந்தேன். கதவு திறந்துதான் இருந்தது.. கோழிகள் எல்லாம் வீட்டில்தான் இருந்தன,

சரி நேரமாயிடுச்சி. புடுச்சி கூடையில் அடைக்க வேண்டியதுதான்..

சாதாரணமா அம்மாக் கூடவே இருக்கிற குஞ்சுகளுக்கு வீட்டுக்குள்ள வந்துட்டா எகத்தாளம் அதிகமாயிடும்.. அவுத்து விட்ட கழுதை கணக்கா அதது இஷ்டத்துக்கு மேயும்.. பிடிக்கப் போனா வெளியக் கூட ஓடிடும்..

போய்ச் சட்டுன்னு முன் கதவைச் சாத்தினேன்..

கீச் கீச் என்றச் சத்தம் கேட்டுப் பதறிப் பார்த்தா..

கதவுக்கும் நிலவிற்கும் மத்தியில ஒரு குஞ்சுத் தலை மாட்டிகிச்சு..

கதவைத் திறந்து குஞ்சை எடுத்துப் பார்த்தா, குஞ்சோட தலை தொங்கிப் போச்சு.. அழுதுகிட்டே வீட்டுக்குள்ளப் போனேன்..

அம்மா வந்து பாத்தாங்க.. கொஞ்ச நேரம் முறைச்சிட்டு, குஞ்சை எடுத்துகிட்டுப் போய் அறுத்துச் சுத்தம் பண்ணி மிளகு வறுவல் பண்ணிக் கொடுத்தாங்க..

நீதானே கொன்னே.. நீதான் இதைச் சாப்பிடணும் (கொன்னாப் பாவம் தின்னாப் போச்சு - என்பதை எப்படி அர்த்தம் பண்ணி வச்சிருக்காங்கப் பாருங்கய்யா :icon_rollout:)

ஒரு முழுக் கோழிக்குஞ்சு மிளகு வறுவல்.. அறியாமல் செய்த தவறுக்குத் தண்டனையாக!...

எத்தனையோக் கோழிகளை வளர்த்து சந்தோசமாய் உறவு கூடி அறுத்துச் சாப்பிட்டிருக்கோம்..

வாழ்க்கையில அழுதுகிட்டே கோழிக்கறி சாப்பிட்ட நாள் அது ஒண்ணுதான்,,

சாப்பிடும் போது என் அண்ணனும் அக்காமார்களும் ஏதோ ராஜத் துரோகியைப் பார்க்கிற மாதிரி பார்த்தாங்களே ஒரு பார்வை.. குறுகிப் போயிட்டேன்..

ஓவியாவோட மன்றம் விட்டுப் போற வைராக்யம் மாதிரி அந்தச் சின்ன மனசுக்குள்ளயும் ஒரு வைராக்யம்.. இனி கோழிக்கறி சாப்பிட மாட்டேன் என...

அடுத்தக் கோழி வீட்டில அறுக்கிற வரை.. அதுவும் அதேக் குஞ்சோட அம்மாக் கோழி. அடுத்த முட்டை வைக்கும் பருவத்திற்கு வந்த பின்னால்.

அப்பா அறுக்கும்பொழுது என்னைத் தான் இறக்கை கால்களை இறுகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார்..

குஞ்சு செத்தப்ப எடுத்த வைராக்யம் அம்மாக்கோழியை அறுத்துச் சாப்பிட்டுக் காணாமல் போச்சு..

பல சமயம் நம்ம மனசையே நம்மால புரிஞ்சுக்க முடிவதில்லை.. இல்லையா? :icon_rollout::icon_rollout::icon_rollout: ஹி ஹி:D:D:D..

shibly591
01-08-2008, 06:27 AM
1990 ஆம் வருடம்.. மார்ச் மாதம்...
அங்கே நான் கற்ற மலையாளப் பாட்டு..

சமயமாம் ரதத்தில் ஞான் ஸ்வர்க்க யாத்ர போகுன்னு
என்சுதேசம் கான்பதின்னாய் ஞான் தனியே போகுன்னு (சமய)

ஆகயல்ப தூரமாத்ரம் ஈ யாத்ர போகுண்ணு
ஆகயல்ப நேரமாத்ரம் சக்ரம் மும்போட்டோடுண்ணு (சமய)

ஈ ப்ரப்ஞ்ச சுகம் தேடான் இது வல்ல சமயம்
என்சுதேசத்தின் சன்னிதானம் யேசுவிண்டே நாமம் (சமய)


அப்ப தெரிஞ்சுகிட்டோம்... வாயைக் கட்டணும் னு...

...

ரசிக்கும்படி சொல்லியிருக்கீங்க..

வாழ்த்துக்கள்

தாமரை
04-08-2009, 06:28 AM
ஜூம்மா மசூதியில் இருந்து வரும்போழுது திடீர் நண்பர்களான நாங்கள் ஐவரும் தமிழில் பேசிக்கொண்டே வந்தோம்.. அதிகாரிகளின் பங்களாக்கள், குட்டி பொமரேனியன் நாய்.. பெரிய அல்சேஷன், வாயில் காக்கும் பணியில் இருந்த சிப்பாய் எவரும் எங்கள் கிண்டலில் இருந்து தப்பவில்லை.. பள்ளிப் படிப்பிற்கு பின் என்.டி.ஏ முறையில் வரும் கடைநிலைச் சிப்பாய்கள் பலர் இப்படி மேஜர்களின் வீட்டுப்பணிகளை செய்வதைப் பற்றி எக்கச் சக்க கிண்டல் .. அப்போதுதான் எதிரே வந்தான் அவன்..

ராணுவத்தின் அடையாளமாய் மண்டை தோல் பச்சையாய் தெரியும் கிராப். ஒல்லியாய் ஆனால் உறுதியாய் உடல் வாகு.. 20 வயது இருக்கலாம்.. கையில் இருந்த சங்கிலியின் மறுமுனையில் பளீர் வெள்ளையில் ஒரு பொமரேனியன் நாய்..

'இவனப் பார்ரா இங்க வந்து நாய் மேய்க்கிறான்" சிரிப்பு சிரிப்பு சிரிப்பு மேலும் சிரிப்பு,,,

"என்ன பண்றது எல்லாம் தலைவிதி" பதில் வந்து விழுந்ததும் சிர்ப்புகள் சட்டென பவர் கட்டாகி அனைவரும் முகமும் இருண்டன...

...

" ராணுவ அதிகாரிகளின் ஆர்டர்லியாக பணிபுரிபவர்களை, நாய் பராமரிப்பதற்கும், வீட்டு வேலை செய்வதற்கும் மட்டும் பயன்படுத்தும் போக்கை அரசு மாற்றும் " என்று இராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=12933

ரொம்ப ரொம்ப வருஷம் கழிச்சி இப்படி ஒரு அறிவிப்பு.. அறிவுப்பு மட்டுமா? இல்லை நடைமுறைக்கு வருமா?

வெற்றி வாசன்
13-08-2009, 08:43 PM
உங்க வாழ்கையில் நடந்த நகைச்சுவை கதையை சொல்லி சிரிக்க வைத்து உள்லேர்கள். அதை "நீதிக் கதைகள்," பகுதியில் போடு, சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள் .
நம் நாடு ராணுவ, மற்றும் போலீஸ் வீரர்கள் ஆரம்ப நாட்கள் பெரும்பாலும் இது மாதிரி தான் அமைந்து விடுகறது.
பின் அவர்கள் பெரிய பதவி கிடைத்தவுடன் அவர்களும் அதையீ தான் செய்கிறார்கள்.
௨ நாட்களில் நாம் இந்திய சுதந்திர தினம். அதில் வரும் ராணுவ அணிவகுப்பை பார்க்கும் பொது, அவர்களும் ஒரு காளிதில் எப்படி இருந்து இருப்பார்கள் என்று னினிது பார்க்க வேண்டும்.

அறிஞர்
13-08-2009, 09:41 PM
வித்தியாசமான அனுபவங்கள் தாமரையின் சுவையான வரிகளில்.

வீட்டு வேலை மட்டும் பார்க்கும் இராணுவத்தினரின் நிலை மாறவேண்டும்...

கீதம்
14-08-2009, 03:21 AM
தாமரை அவர்களே, தங்களுடைய பழைய நினைவுகள் அருமை. பழைய நினைவுகளில் சில சுகம் தரும்; சில சோகம் தரும்; சிலவற்றை நாம் நினைத்துப் பார்க்கவும் விரும்புவதில்லை; சிலவற்றையோ மீண்டும் மீண்டும் அசைபோட விரும்புவோம். சுவையான நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி.

த.ஜார்ஜ்
14-08-2009, 05:10 AM
மாடு அசை போடுகிற மாதிரி பழைய நினைவுகளை தூசி தட்டி எடுத்துப் பார்ப்பதென்பது ஒரு சுகானுபவம்தான்.
அதையே சுவாரசியமாகச் சொல்லத்தெரிகிறதென்றால்...
கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போல் தோன்றுகிறது.

அமரன்
14-08-2009, 08:06 AM
மாடு அசை போடுகிற மாதிரி பழைய நினைவுகளை தூசி தட்டி எடுத்துப் பார்ப்பதென்பது ஒரு சுகானுபவம்தான்.
அதையே சுவாரசியமாகச் சொல்லத்தெரிகிறதென்றால்...
கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போல் தோன்றுகிறது.

அண்ணன் தவறுகளை இடிச்சுரைக்கிறார் என்பதுக்காக அவரை மாட்டுடன் ஒப்பிடக் கூடாது ஜார்ஜ். உங்களுக்கு என் வன்மையான கண்டனங்கள்.

த.ஜார்ஜ்
14-08-2009, 09:53 AM
மாடு என்றால் செல்வம் என்றொரு பொருளுமுண்டு. தாமரை அதைதான் வாரி வழங்குகிறாராக்கும் என்று சொன்னால்... ...
இப்போது கண்டனம் உங்களை வந்து சேர்ந்திருக்குமே [எப்பூடீ]

கா.ரமேஷ்
14-08-2009, 01:46 PM
நல்லதொரு நிகழ்ச்சியை மேலெழுப்பி எங்களுக்கு படிக்க தந்தமைக்கு நன்றிகள்...

தாமரை
15-08-2009, 04:11 AM
மாடு நமக்கெல்லாம் அப்பா மாதிரி அமரன்..

பசு நமக்கு பால் கொடுத்து அம்மா வா இருக்கு. அதே சமயம் மாடு???

வீட்டுக்கு உழைச்சு கொட்டுது..

விளைஞ்ச்தையெல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து சந்தைக்குக் கொண்டுபோய் பணமாக்க உதவுது..

அப்புறம் குடும்பத்தை பல இடங்களுக்கு அழைத்திச் செல்வது...

இதுமட்டுமில்லை...

ஜல்லிக் கட்டில் மாட்டை அப்பாவாகவும் அடக்க வருபவர்களை மகன்களாகவும் நினைச்சுப் பாருங்க புரியும்...

இவ்வளவு செய்யற மாட்டுக்கு ஒரு நாள் பொங்கல் வச்சி மரியாதை பண்ணினா போதுமா?

அப்பா மாதிர்தான் சாப்பாடு கூட...

அரிசியை நாம சாப்பிட்டு விட்டு மாட்டுக்கு வைக்கோல் கொடுப்போம்,.

கடலையை நாம சாப்பிட்டு விட்டு பொட்டு புண்ணாக்கை மாட்டுக்கு கொடுப்போம்..

எண்னையை நாம எடுத்துகிட்டு புண்ணாக்கை மாட்டுக்கு கொடுப்போம்...

அப்பாக்களும் அப்படித்தான், பீஸாவின் கிரஸ்ட், எலும்புகளுடன் ஒட்டிய கறி இப்படி குடும்பத்தினர் ஒதுக்கும் பகுதிகளை உண்டு சந்தோசமா குடும்பத்துக்கு உழைப்பவர்கள் அவர்கள்.

(நான் சொல்றது நல்ல அப்பாக்களைப் பற்றி)

அப்பனைச் பிச்சுப் பிச்சுத் திங்கிற மகன்களும் உண்டு...

செத்தாலும் மாட்டுத் தோல் அட்பட்டு சத்தம் எழுப்பிச் சந்தோஷம் கொடுக்கும்..

பால் கொடுக்கும் பசுவுக்கு அன்பும் பாசமும் வசதிகளும் கிடைக்குது...

ஒரு தந்தையாய் குடும்பத்திற்கு உழைக்கும் மாட்டுக்கு என்னிக்காவது அப்பா ஸ்தானம் கொடுத்திருக்கமா???

அதை விடுங்க.. அப்பாவுக்காவது அவருக்கு உரிய ஸ்தானம் கிடைச்சிருக்கா என்ன?

மயூ
15-08-2009, 03:58 PM
அப்ப செலக்ட் ஆகவே இல்லையா???

தாமரை
16-08-2009, 03:42 AM
அப்பவும் செலக்ட் ஆகலை.. இப்பவும் செலக்ட் ஆகலை.,..

ஆனா ஒண்ணு இதனால நஷ்ட்மடைஞ்சது யார் லாபமடைஞ்சது யார்ன்னுதான் இன்னும் புரியலை!!! :D :D :D