PDA

View Full Version : கடிகள் பத்து

pradeepkt
19-07-2006, 06:10 AM
1. நாய்க்கு நால் கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது.

2. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், பாவம், அவரால ஒரே ஒரு குரலில்தான் பேச முடியும்.

3. என்னதான் தலை சுத்தினாலும் முதுகைப் பாக்க முடியுமா? (இது கொஞ்சம் பழசு)

4. மீன் பிடிக்கிறவனை மீனவன்னு சொல்லலாம், ஆனால், நாய் பிடிக்கிறவனை நாயவன்னு சொல்லக் கூடாது.

5. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போட முடியாது.

6. தேள் கொட்டினா வலிக்கும்
தேனீ கொட்டினா வலிக்கும்
முடி கொட்டினா வலிக்குமா?
வழுக்கும்!!!

7. பள்ளி டெஸ்டுல பிட் அடிக்கலாம்
காலேஜ் டெஸ்டுல பிட் அடிக்கலாம்
ப்ளட் டெஸ்டுல பிட் அடிக்க முடியுமா?

8. பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க.
அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா?

9. கோலமாவில் கோலம் போடலாம்
ஆனால் கடலைமாவில் கடலை போட முடியுமா?

10. வாழ்க்கையில் ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்.
தலையில ஒண்ணுமே இல்லைன்னா க்ளேர் (glare) அடிக்கும்.

செல்வன்,
இப்ப உங்க சான்ஸூ, பின்னுங்க... :D

தாமரை
19-07-2006, 06:22 AM
1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது.

காலுள்ளவன் எதுக்கு கால் பண்ணனும்??:confused: :confused: :confused:

2. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், பாவம், அவரால ஒரே ஒரு குரலில்தான் பேச முடியும்.

அவருக்கு மிமிக்ரி தெரியாதா? :confused: :confused: :confused:

3. என்னதான் தலை சுத்தினாலும் முதுகைப் பாக்க முடியுமா? (இது கொஞ்சம் பழசு

பாக்கலாமே! அடுத்தவர் முதுகை... சரவணன் எடுத்துச் சொல்லுங்க..

4. மீன் பிடிக்கிறவனை மீனவன்னு சொல்லலாம், ஆனால், நாய் பிடிக்கிறவனை நாயகன்னு சொல்லக் கூடாது.

அப்போ கேன் பிடிச்சுகிட்டு போறவன்???

5. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போட முடியாது.

நீங்க சேஃப். இல்லியா.. :rolleyes: :rolleyes: :rolleyes:

]6. தேள் கொட்டினா வலிக்கும் தேனீ கொட்டினா வலிக்கும்[/font]
முடி கொட்டினா வலிக்குமா? வழுக்கும்!!!

இது சாந்தினி சௌக் ரெஸ்டாரண்ட்ல பென்ஸை பார்த்து அனிருத் சொன்னதோட விரிவாக்கம் தானே!!!:D :D :D

7. பள்ளி டெஸ்டுல பிட் அடிக்கலாம்
காலேஜ் டெஸ்டுல பிட் அடிக்கலாம்
ப்ளட் டெஸ்டுல பிட் அடிக்க முடியுமா?

பிட் அடிக்க முடியாது.. "பைட்" (கடி) அடிக்கலாம்...

8. பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க.அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா?

பொங்கலுக்கு லீவு குடுத்தா நீங்க ஏன் ஆஃபிஸ் வர மாட்டேங்கிறீங்க.. நீங்க என்ன பொங்கலா? :eek: :eek: :eek: ( நிஜமாவே இப்ப பொங்கிருவீங்க தானே?)

9. கோலமாவில் கோலம் போடலாம்..
ஆனால் கடலைமாவில் கடலை போட முடியுமா?

போடலாமே.. பென்ஸை கேளுங்க.. கடலை மாவு தேச்சுக் குளிச்சா ஸ்கின் பளபளப்பா இருக்கும், ஸ்கின் டோன் ஒரே மாதிரி பாதாம் பருப்பு கலர்ல மாறும்னு 3 மணி நேரம் கடலை போட்டாரே!.. பிளஷ் பதிப்பை பாருங்க... சாட்சி: சரவணன்
ஆதாரம் :
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5373&page=3

10. வாழ்க்கையில் ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்
தலையில ஒண்ணுமே இல்லைன்னா க்ளேர் (glare) அடிக்கும்

இதைப் படிச்சா உங்களை ஒரு கும்பலே அடிக்கும் .. ஆட்டோவில் வந்து...

pradeepkt
19-07-2006, 08:21 AM
சபாஷ்... :D :D :D
எம் எதிர்பார்ப்பை வழக்கம்போல் நிறைவேற்றினீர்... இன்னும் இது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும் என்றும் அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்!!!

தாமரை
19-07-2006, 11:07 AM
சபாஷ்... :D :D :D
எம் எதிர்பார்ப்பை வழக்கம்போல் நிறைவேற்றினீர்... இன்னும் இது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும் என்றும் அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்!!!

இந்த இடத்தில் ஒரு கமா போட வேண்டும். அதை என்றுமிற்கு முன்னால் போடுவதா இல்லை பின்னால் போடுவதா?

இது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும், என்றும் அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்!!![/

இது போல் பத்தாயிரம் கடி உமக்கு கைவரும் என்றும், அதை எம்மேல் பாய்ச்ச மாட்டீர் என்றும் வரம் அருளினோம்!!![/

pradeepkt
19-07-2006, 11:33 AM
ஐயா நானும் யோசிச்சேன், இங்க ரெண்டு விஷயங்களைப் பேசுறதாலும் இன்னொரு என்றும் இருக்குறதாலும் ரெண்டாவது கமா போட்டுக்கங்க!!!

தப்பிச்சேனய்யா!!! :D

gragavan
19-07-2006, 11:40 AM
நீர் பிரதீபரா? கடியில் பிரதாபரா? இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.

கடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........

இதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

gragavan
19-07-2006, 11:42 AM
ஐயா நானும் யோசிச்சேன், இங்க ரெண்டு விஷயங்களைப் பேசுறதாலும் இன்னொரு என்றும் இருக்குறதாலும் ரெண்டாவது கமா போட்டுக்கங்க!!!

தப்பிச்சேனய்யா!!! :Dஎன்னது தப்பு இச்சேனா!!!!!!!!!! ஆந்துராவுல இருக்குறதால தெலுகுல இச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சேரா!

pradeepkt
19-07-2006, 11:51 AM
நீர் பிரதீபரா? கடியில் பிரதாபரா? இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.

கடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........

இதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... என்னாஆஆஆஆல தாஆஆஆங்க முடியலை (இதை அண்ணாமலை சிவகுமார் போல் படித்துக் கொள்ளவும்)
பைதிவே தாமரையை நான் கடிக்க வைத்தேனா? என்னய்யா இது மதுரைக்கு வந்த சோதனை?

இன்னும் ஒரு பத்து கடிகள் இருக்கு, அதை தனிப்பதிவா போடுறேன், நம்மளும் பதிவுகள் போட்டு நாளாச்சுல்ல :D :D :D

pradeepkt
19-07-2006, 11:52 AM
என்னது தப்பு இச்சேனா!!!!!!!!!! ஆந்துராவுல இருக்குறதால தெலுகுல இச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சேரா!
லேது லேது நேனு தப்பு இவ்வலேது... ஏய்யா உங்க பன்மொழிப் புலமைக்கு ஒரு அளவே கிடையாதா? :rolleyes:

gragavan
19-07-2006, 11:54 AM
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... என்னாஆஆஆஆல தாஆஆஆங்க முடியலை (இதை அண்ணாமலை சிவகுமார் போல் படித்துக் கொள்ளவும்)
பைதிவே தாமரையை நான் கடிக்க வைத்தேனா? என்னய்யா இது மதுரைக்கு வந்த சோதனை?

இன்னும் ஒரு பத்து கடிகள் இருக்கு, அதை தனிப்பதிவா போடுறேன், நம்மளும் பதிவுகள் போட்டு நாளாச்சுல்ல :D :D :Dமுதலில் பாட்டைச் சொல்லும். பிறகு பதிவுகளில் கடியும். இல்லையென்றால் எண்ண முடியாது...உமது முதுகில் விழும் ஒவ்வொரு அடியும்.

தாமரை
19-07-2006, 11:59 AM
நீர் பிரதீபரா? கடியில் பிரதாபரா? இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.

கடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........

இதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

பதில் எழுதும் முன்னே இந்த மாதிரி யாருக்காவது ஆகும்னு நினைத்தேன் வந்தாய் நூறு வருஷம் இந்த மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டுக்கார வேலா உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசாவே உன்னை நம்பி இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி மாலைப்பொழுது சிந்தட்டும் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் ராஜாவின் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் காதல் என்பது எதுவரை கல்யாண மாப்பிள்ளை பாரப்பா பழனியப்பா பட்டிணமாம் பட்டிணமாம் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவமே புதிய பாட்டு ஒண்ணு பாடட்டுமா பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக இது யாருக்காக இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் ஒரு கோடி எந்த உயிர் தேடும் கண் பார்வை ஒன்றே போதுமா இந்த சுகம் எதிலே மது ரசமா கண்ணாடிக் கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன்

போதுமா இன்னும் வேணுமா?

gragavan
19-07-2006, 12:00 PM
லேது லேது நேனு தப்பு இவ்வலேது... ஏய்யா உங்க பன்மொழிப் புலமைக்கு ஒரு அளவே கிடையாதா? :rolleyes:தூத்துக்குடித் தேங்காய் பன் மிகச் சுவையானது. அந்த பன் கிடைத்தால் போதும் என்று பன்னுக்குப் பாடும் தேங்காய் பன் மொழிப் புலமை என்கிறீரா! ம்ம்ம்....நான் என்ன வேண்டாம் என்றா சொல்கிறேன்.

பன்னே
தேங்காய் பன்னே
ஆசையா முந்தித் தின்னேன்
என்னுடைய கனவிலாவது வந்து
ஆசையப் பூர்த்தி பண்ணேன்
அரை வட்ட வடிவ பன்னே
அதுக்குத்தான் எழுதினேன் இப்பண்ணே!

gragavan
19-07-2006, 12:03 PM
பதில் எழுதும் முன்னே இந்த மாதிரி யாருக்காவது ஆகும்னு நினைத்தேன் வந்தாய் நூறு வருஷம் இந்த மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டுக்கார வேலா உன் நெஞ்சத் தொட்டு சொல்லு என் ராசாவே உன்னை நம்பி இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி மாலைப்பொழுது சிந்தட்டும் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் ராஜாவின் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் காதல் என்பது எதுவரை கல்யாண மாப்பிள்ளை பாரப்பா பழனியப்பா பட்டிணமாம் பட்டிணமாம் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவமே புதிய பாட்டு ஒண்ணு பாடட்டுமா பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக இது யாருக்காக இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் ஒரு கோடி எந்த உயிர் தேடும் கண் பார்வை ஒன்றே போதுமா இந்த சுகம் எதிலே மது ரசமா கண்ணாடிக் கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன்

போதுமா இன்னும் வேணுமா?அருமை அருமை...மெச்சினோம். மெச்சினோம். புலமையை பலமையில் தோய்த்துத் தோய்த்து எழுதிய களமை உங்கள் எழுத்தில் தெரிகிறது.

தாமரை
19-07-2006, 12:05 PM
தூத்துக்குடித் தேங்காய் பன் மிகச் சுவையானது. அந்த பன் கிடைத்தால் போதும் என்று பன்னுக்குப் பாடும் தேங்காய் பன் மொழிப் புலமை என்கிறீரா! ம்ம்ம்....நான் என்ன வேண்டாம் என்றா சொல்கிறேன்.

பன்னே
தேங்காய் பன்னே
ஆசையா முந்தித் தின்னேன்
என்னுடைய கனவிலாவது வந்து
ஆசையப் பூர்த்தி பண்ணேன்
அரை வட்ட வடிவ பன்னே
அதுக்குத்தான் எழுதினேன் இப்பண்ணே!

தப்பு இச்சின உடனே தேங்காய் பன் மொழிப் புலவர் இப்படி அழலாமா? அதன் தயாரிப்பு முறையை சமையல் குறிப்பு பகுதியில் பதிவு செய்திருக்க வேணாமா?

பாடும் பாட்டை எண்ணுவதா இல்லை மக்கள் படும் பாட்டை எண்ணுவதா? எண்ணி எண்ணி பார்க்கிறேன்...என்ன எண்ணமோ இல்லை எண்ண எண்ணமோ இல்லை என்ன என்னமோ(என்னென்னமோ)

gragavan
19-07-2006, 12:12 PM
தப்பு இச்சின உடனே தேங்காய் பன் மொழிப் புலவர் இப்படி அழலாமா? அதன் தயாரிப்பு முறையை சமையல் குறிப்பு பகுதியில் பதிவு செய்திருக்க வேணாமா?

பாடும் பாட்டை எண்ணுவதா இல்லை மக்கள் படும் பாட்டை எண்ணுவதா? எண்ணி எண்ணி பார்க்கிறேன்...என்ன எண்ணமோ இல்லை எண்ண எண்ணமோ இல்லை என்ன என்னமோ(என்னென்னமோ)ஆதியாங் கயிலை ஈசன்
ஜோதியாம் அடுப்பில் வெந்த
பூதியாம் நீற்றைக் கண்டான்
ஏதிலா தேங்காய் பன்னைத்
தீதிலா பேக்கர் செய்யத்
தோதிலா வகை தவிர்த்து வாயில்
போயிடா வகையே கண்டான் - என்று புகழப்படும் தேங்காய் பன்னைச் செய்யும் முறையை அந்த பேக்கரி அறியும். தமிழ்ப் போக்கிரி அறியுமா!

தாமரை
19-07-2006, 12:23 PM
ஆதியாங் கயிலை ஈசன்
ஜோதியாம் அடுப்பில் வெந்த
பூதியாம் நீற்றைக் கண்டான்
ஏதிலா தேங்காய் பன்னைத்
தீதிலா பேக்கர் செய்யத்
தோதிலா வகை தவிர்த்து வாயில்
போயிடா வகையே கண்டான் -

என்று புகழப்படும் தேங்காய் பன்னைச் செய்யும் முறையை அந்த பேக்கரி அறியும். தமிழ்ப் போக்கிரி அறியுமா!

ஏதிலா நெஞ்சம் தன்னில்
தீதிலா எண்ணம் தன்னில்
காதிலா நாகம் கடிக்கும்
போதிலா நாயகன் நாமம்

சிற்றுண்டி நேரம் தன்னில்
பற்றின்றி பன்னை நினைக்க
கற்றிலோம் காத்தவ ராயா
கூற்றுவனே போதும் போய்யா!!!

தாமரை
19-07-2006, 12:37 PM
ஐயா நானும் யோசிச்சேன், இங்க ரெண்டு விஷயங்களைப் பேசுறதாலும் இன்னொரு என்றும் இருக்குறதாலும் ரெண்டாவது கமா போட்டுக்கங்க!!!

தப்பிச்சேனய்யா!!! :D

அதாவது என்றும் என்பதற்கு எந்த நாளும் என்ற அர்த்தம் எடுக்கத் தேவையில்லை என்று சொல்லிட்டீங்க... தப்பிக்கலையே.. பத்தாயிரம் கடிதானே உங்களைக் கடிக்கக் கூடாது.. எனக்குத்தான் இந்த மாதிரி கோடிக்கணக்கில் கடிக்கத் தெரியுமே!!!!:eek: :eek: :eek:

ஓவியா
19-07-2006, 03:05 PM
பிரதீப் கடி ஜோர்

கடிக்கு பதில் கடி கடிச்ச செல்வருக்கு நன்றி

தேங்காய் பன் மொழிப் புலவர்ருக்கு வணக்கம்.

அது சரி மக்கா மோத்தம் எத்தனை பட்டுதான் இருக்குனு சொல்லவே இல்லை

இனியவன்
19-07-2006, 03:54 PM
பிரதீபும் தாமரையும்
ஒருத்தரையொருத்தர் நல்லாவே கடிக்கிறீங்க,
பாட்டுக்குப் பாட்டுன்னு தனித்திரி ஒண்ணு ஓடுது.
இப்படி சத்தமில்லாம வேட்டு வைச்சா சுவேதா கோவிக்க மாட்டாங்க.

gragavan
19-07-2006, 04:23 PM
பிரதீப் கடி ஜோர்

கடிக்கு பதில் கடி கடிச்ச செல்வருக்கு நன்றி

தேங்காய் பன் மொழிப் புலவர்ருக்கு வணக்கம்.

அது சரி மக்கா மோத்தம் எத்தனை பட்டுதான் இருக்குனு சொல்லவே இல்லைஅட அத நீங்கதான கண்டு பிடிக்கனும்..........

ஓவியா
19-07-2006, 04:32 PM
அட அத நீங்கதான கண்டு பிடிக்கனும்..........

:eek: :eek: :eek: நான் தமிழ் பாடலே கேட்டதில்லை :D :D :D

அது சரி தேங்காய் பன் மொழிப் புலவர்றே
இப்ப உங்கள் கை எப்படி? குணமடைந்து விட்டதா?

gragavan
19-07-2006, 05:06 PM
ஏதிலா நெஞ்சம் தன்னில்
தீதிலா எண்ணம் தன்னில்
காதிலா நாகம் கடிக்கும்
போதிலா நாயகன் நாமம்

சிற்றுண்டி நேரம் தன்னில்
பற்றின்றி பன்னை நினைக்க
கற்றிலோம் காத்தவ ராயா
கூற்றுவனே போதும் போய்யா!!!
கூற்றுவார் தாமே வந்தும்
போற்றுவார் தேங்காய் பன்னை
மாற்றுவார் யாரும் இலர்
தூற்றுவார் யாரும் இலர்
காற்றுவார் மண்ணைப் போலே
தேற்றுவார் பசியைப் பன்னால்!

gragavan
19-07-2006, 05:08 PM
:eek: :eek: :eek: நான் தமிழ் பாடலே கேட்டதில்லை :D :D :D

அது சரி தேங்காய் பன் மொழிப் புலவர்றே
இப்ப உங்கள் கை எப்படி? குணமடைந்து விட்டதா?குணமாகி விட்டது ஓவியா. இப்பொழுது கை முழுக்கவே பயன்படுத்த முடிகிறது.

தாமரை
20-07-2006, 04:58 AM
கூற்றுவார் தாமே வந்தும்
போற்றுவார் தேங்காய் பன்னை
மாற்றுவார் யாரும் இலர்
தூற்றுவார் யாரும் இலர்
காற்றுவார் மண்ணைப் போலே
தேற்றுவார் பசியைப் பன்னால்!

பசிப்பிணி கொடிது கொடிது
ருசிப்பிணி அதனினும் கொடிது
வசிப்பதும் வரவை ஈட்டலும்
புசித்தலின் பொருட்டே யன்றோ

ஆற்றுவார் ஆயிரம் உரைகள்
சாற்றுவார் ஆயிரம் கவிகள்
ஏற்றுவோர் துளியைக் கேட்டால்
மாற்றுவோர் வழியும் சொல்லார்

பேசிடும் வாயினைத் தைத்து நறுமணம்
வீசிடும் அல்வா முறுக்கு அதிரசம்
நாசியில் வாசனை காட்டியே நாலுநாள்
வாசிக்க வேதருக பன்-பா

sarcharan
20-07-2006, 07:09 AM
கணிப்பொறி வல்லுநர் சினிமா படமெடுத்தால் என்னென்ன தலைப்பு வைப்பார்??

உங்கள் பார்வைக்கு சில:

1. 7g hard disk colony
2. எனக்கு 20 gb, உனக்கு 18 gb
3. புதுக்கோட்டையிலிருந்து வைரஸ்
4. காலமெல்லாம் anti-virus வாழ்க
5. வைரஸை- வேட்டையாடு விளையாடு
6. சொல்ல மறந்த password
7. எங்க ஊரு programmer
8. ஒரு mouseன் கதை

தாமரை
20-07-2006, 11:54 AM

கூடிய சீக்கிரம் கல்யாணமாகப் போறவர் என்ன தலைப்பு வைப்பார் சரவணன்?

pradeepkt
20-07-2006, 11:59 AM
சரியாத்தானய்யா கேட்டிங்க... சொல்லுப்பா சரவணா, நீ சிங்கத்தின் குகையில் போயி சிங்கத்தின் பிடறியையே சீப்பால சீவ நினைச்சுட்ட... இப்ப பதில் சொல்லு...

ராகவா, செல்வன்
என்னமா ரெண்டு பேரும் சிலம்பம் ஆடுறீங்க... ஒரு பத்துக் கடி போட்டதுக்கே இந்தப் பாடா, இதே மெயில்ல இன்னும் பத்து வந்துச்சு, நல்ல வேளையா அதை நான் போடலை...

தாமரை
20-07-2006, 12:20 PM
கூடிய சீக்கிரம் கல்யாணமாகப் போறவர் என்ன தலைப்பு வைப்பார் சரவணன்?

கனவுகள் ஓராயிரம்
நான் பிஸியா இருக்கேன்
ஆசையா இருக்கு பயமாவும் இருக்கு
யார்கிட்டயாவது சொல்லணுமே
"செல்" லமே

தாமரை
20-07-2006, 12:42 PM
சரியாத்தானய்யா கேட்டிங்க... சொல்லுப்பா சரவணா, நீ சிங்கத்தின் குகையில் போயி சிங்கத்தின் பிடறியையே சீப்பால சீவ நினைச்சுட்ட... இப்ப பதில் சொல்லு...

ராகவா, செல்வன்
என்னமா ரெண்டு பேரும் சிலம்பம் ஆடுறீங்க... ஒரு பத்துக் கடி போட்டதுக்கே இந்தப் பாடா, இதே மெயில்ல இன்னும் பத்து வந்துச்சு, நல்ல வேளையா அதை நான் போடலை...

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=151520&postcount=4

இதைப் படிங்க.. சிங்கம் சிலிர்த்தா என்னாகும்ம்னு தெரியும்...

தாமரை
20-07-2006, 01:13 PM
நீர் பிரதீபரா? கடியில் பிரதாபரா? இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.

பால் திரிஞ்சா பன்னீராகலாம்.. மனுஷன் திரிஞ்சா பரதேசி ஆவான் :D :D :D :D

ஓவியா
20-07-2006, 01:15 PM
கணிப்பொறி வல்லுநர் சினிமா படமெடுத்தால் என்னென்ன தலைப்பு வைப்பார்??

உங்கள் பார்வைக்கு சில:

1. 7g hard disk colony
2. எனக்கு 20 gb, உனக்கு 18 gb
3. புதுக்கோட்டையிலிருந்து வைரஸ்
4. காலமெல்லாம் anti-virus வாழ்க
5. வைரஸை- வேட்டையாடு விளையாடு
6. சொல்ல மறந்த password
7. எங்க ஊரு programmer
8. ஒரு mouseன் கதை

அப்ப ஒரு டாக்டர் எப்படி பெயர் வைப்பார்...
கொஞ்சம் சொல்லுங்களேன்

தாமரை
20-07-2006, 01:30 PM
அப்ப ஒரு டாக்டர் எப்படி பெயர் வைப்பார்...
கொஞ்சம் சொல்லுங்களேன்

டாக்டரெல்லாம் படமெடுத்தா வம்பாயிரும். வேணாம் ..:eek: :eek: :eek:

ஓவியா
20-07-2006, 01:54 PM
டாக்டரெல்லாம் படமெடுத்தா வம்பாயிரும். வேணாம் ..:eek: :eek: :eek:

:D :D :D :D

pradeepkt
20-07-2006, 04:50 PM
டாக்டரெல்லாம் படமெடுத்தா வம்பாயிரும். வேணாம் ..:eek: :eek: :eek:
எல்லாத்தையும் பிரகாசமா நினைவுல வச்சிருக்கீங்களே :D :rolleyes: :cool:

மயூ
21-07-2006, 03:50 AM
பால் திரிஞ்சா பன்னீராகலாம்.. மனுஷன் திரிஞ்சா பரதேசி ஆவான் :D :D :D :D
பூவுடன் சேரும் நாரும் மணம் பெறும்...
அதையேன் மாற்றி மாற்றி பேசுறீங்க:confused: :confused:

பி.கு - பன்றியுடன் சேரும் பசுவும் ...... தின்னும்.....
ஹி.... ஹி.....:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

இனியவன்
21-07-2006, 03:52 AM
பூவுடன் சேரும் நாரும் மணம் பெறும்...
அதையேன் மாற்றி மாற்றி பேசுறீங்க:confused: :confused:

பி.கு - பன்றியுடன் சேரும் பசுவும் ...... தின்னும்.....
ஹி.... ஹி.....:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

மயூரா
யாரு முதல்ல?
யாரு ரெண்டாவது?

ஏதோ நம்மால முடிஞ்ச நாரதர் வேலை,,,:) :) :)

மயூ
21-07-2006, 03:54 AM
மயூரா
யாரு முதல்ல?
யாரு ரெண்டாவது?

ஏதோ நம்மால முடிஞ்ச நாரதர் வேலை,,,:) :) :)

சத்தியமா நான் இரண்டுமில்லை!!!!!!!! :D :D :D
தொப்பி அளவானவங்க போட்டுக்குங்க!!!!!!:confused:

இனியவன்
21-07-2006, 04:01 AM
சத்தியமா நான் இரண்டுமில்லை!!!!!!!! :D :D :D
தொப்பி அளவானவங்க போட்டுக்குங்க!!!!!!:confused:
:) :) :)
:) :)
:)

தாமரை
21-07-2006, 04:52 AM
சத்தியமா நான் இரண்டுமில்லை!!!!!!!! :D :D :D
தொப்பி அளவானவங்க போட்டுக்குங்க!!!!!!:confused:

அப்போ நீங்க அளவில்லாதவரோ??:confused: :confused: .. ஆமாம் சட்டக்கு 10 மீட்டர் துணியா இல்லை 25 மீட்டர் பீஸா???:D :D :D

மயூ
21-07-2006, 05:11 AM
அப்போ நீங்க அளவில்லாதவரோ??:confused: :confused: .. ஆமாம் சட்டக்கு 10 மீட்டர் துணியா இல்லை 25 மீட்டர் பீஸா???:D :D :D
கடிக்கிறதுக்கு என்றே பிறந்த அண்ணா அவர்களே
கடியுங்க!:D கடியுங்க!:D

தாமரை
21-07-2006, 05:15 AM
கடிக்கிறதுக்கு என்றே பிறந்த அண்ணா அவர்களே
கடியுங்க!:D கடியுங்க!:D

கடிகளே கடிபடும் பதிவில் நீங்க உங்க பல் வலிமையை சோதிக்க நினப்பது தவறு.. அப்புறம் பென்ஸாயிடுவீங்க..:rolleyes: :rolleyes: :rolleyes:

மயூ
21-07-2006, 05:18 AM
கடிகளே கடிபடும் பதிவில் நீங்க உங்க பல் வலிமையை சோதிக்க நினப்பது தவறு.. அப்புறம் பென்ஸாயிடுவீங்க..:rolleyes: :rolleyes: :rolleyes:
அதுதான் அடங்கிட்டம்ல.....!

இளசு
23-07-2006, 10:10 PM
அடடா..

பத்து கடி என்று பிரதீப் ஆரம்-பிக்க..
உள்கடி ஒவ்வொன்றுக்கும் செல்வன் வைக்க..

பன் என்றும் பசி என்றும் ராகவன் பண்ணிசைக்க
அந்தாதி பாட்டில் அந்நாள்+இந்நாள் ஜுகல்பந்தி வைக்க

கணினி வகை கடியை சரவணன் சந்திலே சிந்து பாட..

பாட்டை எண்ணுவதா.... பட்ட பாட்டை எண்ணுவதா..
பஞ்சதந்திர தேவயானி போல எண்ணி எண்ணி நோவதா..?

சிங்கப்பிடரி சீப்பாய் சீரழிந்து செப்பனிட டாக்டர் தேட
சிலபல பேரைச்சொல்லி ஆப்பு வைத்தார்களே பயந்தோட..

ராகவன் , செல்வனின் ' துரிதக்' கவிதைகளைச் சுவைத்த பாதிப்பு எனக்கும்...

மக்கா.. சடசடவென எழுதிப் பதியும்போது உங்களில் ஒரு சிலிர்ப்பு வந்திருக்குமே.... பன்னையும் மிஞ்சும் ருசியான குஷி அது.. உண்மைதானே?

vckannan
01-08-2006, 01:10 PM
ஐயோ அம்மா வலிக்குதே

தெரியாம இங்க வந்து மாட்டிகிட்டேனே

காப்பாத்துங்க காப்பாத்துங்க:eek: :eek:

மயூ
02-08-2006, 02:48 AM
ஐயோ அம்மா வலிக்குதே

தெரியாம இங்க வந்து மாட்டிகிட்டேனே

காப்பாத்துங்க காப்பாத்துங்க:eek: :eek:
செல்வன் அண்ணா இருக்கிறார் என்றால் கவனமாகப் பார்த்து வரவேண்டும்.
இல்லாவிட்டால் இந்த நிலைதான் :D :D :D :D

vckannan
02-08-2006, 04:10 AM
செல்வன் அண்ணா இருக்கிறார் என்றால் கவனமாகப் பார்த்து வரவேண்டும்.
இல்லாவிட்டால் இந்த நிலைதான் :D :D :D :D

ஏதோ பச்சபுள்ள தெரியாம வந்து மாட்டிக்கிடேன்.:eek:

அது சரி பாத்தா செல்வன் அண்ணா மாதிரி நிறைய பேரு இங்க சுத்திகிட்டு இருக்காங்க போல கையில ஆயுதத்த வைச்சிக்கிட்டு...ஆவ்:eek: :eek:

தாமரை
07-08-2006, 03:57 PM
பஸ் ஸ்டாப்பில பஸ் இருக்கும். ஃபுல் ஸ்டாப்பில ஃபுல் இருக்குமா?

1 லிட்டர் 1000 மில்லி
1/2 லிட்டர் 500 மில்லி
1/4 லிட்டர் 250 மில்லி

ஃபுல் 750 மில்லி
ஆஃப் 375 மில்லி
குவார்ட்டர் 180 மில்லி

குடிகாரனை ஏமாத்தறாங்களா? இல்லை இதைத் தயாரிப்பவர் ரேஷன் கடைய்ல் வேலை பார்த்தவரா?

பென்ஸ்
07-08-2006, 04:02 PM
"குவார்ட்டர்"அடிக்கிறவங்களுக்கு "புல்"லா "ஆப்"பு வைக்கிறாங்க செல்வன்...

அறிஞர்
07-08-2006, 10:14 PM
"குவார்ட்டர்"அடிக்கிறவங்களுக்கு "புல்"லா "ஆப்"பு வைக்கிறாங்க செல்வன்... ரொம்ப தெளிவா சொல்லுறீங்க.. பழக்க தோசமா.... :confused: :confused: :confused:

மயூ
08-08-2006, 05:23 AM
"குவார்ட்டர்"அடிக்கிறவங்களுக்கு "புல்"லா "ஆப்"பு வைக்கிறாங்க செல்வன்...
ரொம்பவுமே நொந்து போயீட்டீங்களா பென்ஸு அண்ணா!!!!!!1 :D :D

vckannan
08-08-2006, 11:23 AM
"குவார்ட்டர்"அடிக்கிறவங்களுக்கு "புல்"லா "ஆப்"பு வைக்கிறாங்க செல்வன்...
:D :D :D

ஓவியா
08-08-2006, 01:59 PM
பஸ் ஸ்டாப்பில பஸ் இருக்கும். ஃபுல் ஸ்டாப்பில ஃபுல் இருக்குமா?

1 லிட்டர் 1000 மில்லி
1/2 லிட்டர் 500 மில்லி
1/4 லிட்டர் 250 மில்லி

ஃபுல் 750 மில்லி
ஆஃப் 375 மில்லி
குவார்ட்டர் 180 மில்லி

குடிகாரனை ஏமாத்தறாங்களா? இல்லை இதைத் தயாரிப்பவர் ரேஷன் கடைய்ல் வேலை பார்த்தவரா?

அண்ணா, யுவார் வெரி ஷ்டேடி...:D
நீங்களும் ஒரு கனித மேதைதான்....:D

crisho
17-09-2006, 11:53 AM
11. ஏழு பரம்பரைக்கு உக்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் புட் (fast food) கடையில நின்னுகிட்டு தான் சாப்பிடனும்.

12. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜிசினியர் ஆகிடலாம். பிரசிடென்சி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா?

13. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்.... ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது! (என்ன கொடுமை சார் இது)

14. வாழை மரம் தார் போடும்... ஆனா அதை வச்சி ரோடு போட முடியுமா?

15. ஏண்ட் (hand) வாஷ் என்றல் கை கழுவுவது... பேஸ் வாஷ் என்றால் முகம் கழுவுவது... அப்போ பிரெயின் வாஷ் என்றல் மூளைய கழுவுவதா?

16. டீ கப்ல டீ இருக்கும். அப்ப வோர்ல்ட் (world) கப்ல உலகம் இருக்குமா?

17. பால் கோவா பாலில் பண்ணலாம். ஆனா ரசகுல்லா ரசத்தில் பண்ண முடியுமா?

18. பல் வலித்தால் பல்ல புடுங்கலாம். ஆனா கால் வலி வந்தா காலை புடுங்க முடியுமா? இல்ல தலை வலி வந்தா தலையதான் புடுங்க முடியுமா?

19. சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும்... மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா?

babuas2000
17-09-2006, 01:11 PM
Enna thamil eluthukkale varaleya

crisho
17-09-2006, 01:19 PM
என்ன தமிழ் எழுத்துக்களே வரலயா?

உங்களுக்கே வராதபோது ஐயா.... எனக்கு மட்டும்....?? :D :D

உதவி கேட்டிருக்கிறேன்....

கண்மணி
17-09-2006, 04:10 PM
11. ஏழு பரம்பரைக்கு உக்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் புட் (fast food) கடையில நின்னுகிட்டு தான் சாப்பிடனும்.

பிஸ்ஸா ஹட், மெக் டொனால்ட்ஸ், கெண்டகி ஃபிரைடு சிக்கன், பர்கர் கிங் எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கடைதானே.. அண்ணன் கையேந்தி பவனைத் தவிர வேற பார்த்ததில்லை போல இருக்கு,,

12. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜிசினியர் ஆகிடலாம். பிரசிடென்சி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா?

இஞ்சினியரிங் படிச்சா மட்டும் போதாது.. பாஸும் பண்ணனும்.. அதே மாதிரிதான்.. பிரெசிடென்ஸி காலேஜில் படிச்சா மட்டும் போதாது..

13. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்.... ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது! (என்ன கொடுமை சார் இது)

தூக்க மருந்த சாப்பிட்டா கையை காலைத் தூக்க முடியாது,, புரிஞ்சிக்காதது உங்க தப்பு...

14. வாழை மரம் தார் போடும்... ஆனா அதை வச்சி ரோடு போட முடியுமா?

சல்லிகளை வச்சி முயற்சி செய்து பாருங்களேன்

15. ஏண்ட் (hand) வாஷ் என்றல் கை கழுவுவது... பேஸ் வாஷ் என்றால் முகம் கழுவுவது... அப்போ பிரெயின் வாஷ் என்றல் மூளைய கழுவுவதா?

அதெல்லாம் ஒரு ஐ வாஷுக்காக..

16. டீ கப்ல டீ இருக்கும். அப்ப வோர்ல்ட் (world) கப்ல உலகம் இருக்குமா?

டீ கப் காலியா கூட இருக்குமே!..

17. பால் கோவா பாலில் பண்ணலாம். ஆனா ரசகுல்லா ரசத்தில் பண்ண முடியுமா?

ரசத்துக்கு குல்லா போட்டு முயற்சி பண்ணுங்களேன்...

18. பல் வலித்தால் பல்ல புடுங்கலாம். ஆனா கால் வலி வந்தா காலை புடுங்க முடியுமா? இல்ல தலை வலி வந்தா தலையதான் புடுங்க முடியுமா?

அண்ணனுக்கு மதுரை வீரன் தண்டனை தெரியாது போல இருக்கே..19. சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும்... மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா?

விட்ற அறையில செவ்வாய் அன்னிக்கு உங்க வாய் செவ்வாய்தான்..

ஓவியா
18-09-2006, 05:22 PM
11. ஏழு பரம்பரைக்கு உக்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் புட் (fast food) கடையில நின்னுகிட்டு தான் சாப்பிடனும்.

12. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜிசினியர் ஆகிடலாம். பிரசிடென்சி காலேஜ்ல படிச்சா பிரசிடென்ட் ஆக முடியுமா?

13. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்.... ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது! (என்ன கொடுமை சார் இது)

14. வாழை மரம் தார் போடும்... ஆனா அதை வச்சி ரோடு போட முடியுமா?

15. ஏண்ட் (hand) வாஷ் என்றல் கை கழுவுவது... பேஸ் வாஷ் என்றால் முகம் கழுவுவது... அப்போ பிரெயின் வாஷ் என்றல் மூளைய கழுவுவதா?

16. டீ கப்ல டீ இருக்கும். அப்ப வோர்ல்ட் (world) கப்ல உலகம் இருக்குமா?

17. பால் கோவா பாலில் பண்ணலாம். ஆனா ரசகுல்லா ரசத்தில் பண்ண முடியுமா?

18. பல் வலித்தால் பல்ல புடுங்கலாம். ஆனா கால் வலி வந்தா காலை புடுங்க முடியுமா? இல்ல தலை வலி வந்தா தலையதான் புடுங்க முடியுமா?

19. சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும்... மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா?

கிஷோர்,

தூள்................................:D

அறிஞர்
21-09-2006, 04:54 PM
கலக்கல் அப்பு..... கிஷோர்...

கண்மணியில் பதில் கடிகள் அருமை... கலக்குங்கள்

karikaalan
24-09-2006, 11:40 AM
இன்றுதான் அமைதியாக முழு பதிவையும் படித்தேன்.. சுவை..சுவை.. நன்றிகள் அனைவருக்கும்.

===கரிகாலன்

crisho
29-09-2006, 06:16 AM
டீ மாஸ்டர் டீ போடுரார்
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுரார்
மெக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்
ஹட் மாஸ்டரால மண்டைய போட முடியுமா?

தாமரை
29-09-2006, 06:26 AM
டீ மாஸ்டர் டீ போடுரார்
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுரார்
மெக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்
ஹட் மாஸ்டரால மண்டைய போட முடியுமா?

முடியாதுன்னு நிரூபியுங்க பார்க்கலாம்..
எல்லோரும் ஒரு நாள் மண்டையை போட்டு தான் ஆகனும்,,,

meera
29-09-2006, 06:52 AM
சரி,சரி தாமரை,கிஷோர் சண்டை போடாதீங்க நானும் கடிக்க வரேன்.

தீபாவளிக்கு பொங்கல் சாப்டலாம்.ஆனா பொங்களுக்கு தீபாவளிய சாப்டமுடியுமா?

மனுசனுக்கு சிக்கன் குனியா வரும்.ஆனா சிக்கனுக்கு மனிச குனியா வருமா?

தாமரை
29-09-2006, 07:11 AM
ஆராய்ந்து சொல்லுங்கள்.. மனிதர்கள் கோழிகளை சாப்பிடா விட்டால்.. (சாப்பாட்டுக்காக வளர்க்கா விட்டால்.. ) கோழி என்ற இனம் இருக்குமா?
மனுஷக் குனியா அப்பவே வந்துருச்சீங்க,,, அது வந்தா கோழி தலையை குலுக்கும்.. அப்புறம்.. என்ன கழுத்தறுப்பும்.. குழம்பும்தான்...

crisho
29-09-2006, 07:17 AM
முடியாதுன்னு நிரூபியுங்க பார்க்கலாம்..
எல்லோரும் ஒரு நாள் மண்டையை போட்டு தான் ஆகனும்,,,

எல்லோரும் ஒரு நாள் மண்டையை போட்டு தான் ஆகனும்னு யாருக்கும் தெரியாதா என்ன...

ஹெட் மாஸ்டரால விரும்பி மண்டைய போட முடியாது....

எனினும்... குண்டக்கா மண்டக்கா கேள்விகளை தடுக்க ஒரு திருத்தம்.... ;)

டீ மாஸ்டரால - 10 டீ போடலாம்
பரோட்டா மாஸ்டரால - 10 பரோட்டா போடலாம்
மெக்ஸ் மாஸ்டரால - 10 கணக்கு போடலாம்
ஹெட் மாஸ்டரால - 10 தடவ மண்டைய போட முடியுமா?

தாமரை
29-09-2006, 07:31 AM
கடி மாஸ்டர் - ஒரே கடியை பத்து தடவை போடுவார்..
சரியா

meera
29-09-2006, 07:33 AM
ஆராய்ந்து சொல்லுங்கள்.. மனிதர்கள் கோழிகளை சாப்பிடா விட்டால்.. (சாப்பாட்டுக்காக வளர்க்கா விட்டால்.. ) கோழி என்ற இனம் இருக்குமா?
மனுஷக் குனியா அப்பவே வந்துருச்சீங்க,,, அது வந்தா கோழி தலையை குலுக்கும்.. அப்புறம்.. என்ன கழுத்தறுப்பும்.. குழம்பும்தான்...
அடடா இப்படி ஒன்னு இருக்கா? எனக்கு தெரியாம போச்சே.இதுக்கு தான் உங்கள மாதிரி ஒரு புத்திசாலி பக்கத்துலயே இருக்கனும்னு சொல்றது...

crisho
29-09-2006, 10:09 AM
கடி மாஸ்டர் - ஒரே கடியை பத்து தடவை போடுவார்..
சரியா

அடப்பாவி கடைசில என்னைய கடி மாஸ்டர் ஆக்கியாச்சா?? :D

தாமரை
03-10-2006, 10:59 AM
அடடா இப்படி ஒன்னு இருக்கா? எனக்கு தெரியாம போச்சே.இதுக்கு தான் உங்கள மாதிரி ஒரு புத்திசாலி பக்கத்துலயே இருக்கனும்னு சொல்றது...
அந்த சேவல் ரொம்ப புத்திசாலி.. அதை வளர்த்தவரோ ரொம்ப பக்திசாலி..
சேவலுக்குத் தெரியும், ஊர்கோடி சுடலை மாட சாமி திருவிழா வரைதான் தன் ஆயுசு என்று.. சாமிக்கு நேர்ந்த சேவலாச்சே நல்ல சாப்பாடு.. இஷ்டத்துக்குத் திரியலாம்.. ஆனால் மரணத்திலிருந்து தப்ப முடியுமா???
அந்த நாளும் வந்தது.. சேவலுக்கு கால் கழுவி, மஞ்சள் பூசி மரியாதையெல்லாம் தடபுடல்.. சேவல் உறுதி எடுத்துகிச்சு என்ன நடந்தாலும் தலையைக் குலுக்குவதில்லை என்று..
தீர்த்தம் தலையில் தெளிக்கப்பட,, குறு குறு வென நீர் தலையில் இருந்து சிறகுகள் வழியே வழிய.. ரொம்பத்தான் தினவெடுத்தது.. தலையை குலுக்கினால் தலை இருக்காதே!!!..
என்னமோ சாமி கோபம் போல இருக்கே.. பக்திமான்.. சுடலை மாடா நாங்க என்ன தப்பு செஞ்சி இருந்தாலும் மன்னிச்சுக்கப்பா.. இந்த காணிக்கையை ஏத்துக்கோ என்று வேண்டி இறைஞ்சி தண்ணீர் தெளிக்க..
சேவல் இன்னைக்கு நான் அசர மாட்டேனே என்று கல்லுளி மங்கனாய் நின்றது..
சுடலை மாடா என்ன தப்பிருந்தாலும் மன்னிச்சுக்கோ இன்னும் நாலு சேவல் அடுத்த வருஷம் பலி தர்றேன் என இரைய..
பட பட வென தலை உடம்பெல்லாம் சேவலுக்கு சிலிர்த்துவிட.. அப்புறம் என்ன.. குழம்புதான்

அறிஞர்
03-10-2006, 01:15 PM
பட பட வென தலை உடம்பெல்லாம் சேவலுக்கு சிலிர்த்துவிட.. அப்புறம் என்ன.. குழம்புதான் என்ன கோழியை பத்தியே பேசுறீங்க...
வீட்டுல சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு சாப்பிட்டு.. இப்படி பேச்சு மாறிட்டதா....

தாமரை
03-10-2006, 03:46 PM
என்ன கோழியை பத்தியே பேசுறீங்க...
வீட்டுல சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு சாப்பிட்டு.. இப்படி பேச்சு மாறிட்டதா....

இது புரட்டாசி மாசமாம்.. எங்க மாமனார் வீட்ட்ல அசைவம் கிடையாதாம்..
அடுத்து ஐப்பசி போனா கார்த்திகை மாசமாம்.. எங்க வீட்ல அசைவம் கிடையாதாம்..
என்ன செய்யச் சொல்றீங்க

pradeepkt
04-10-2006, 04:56 AM
வீட்டிலதானே இல்லை????

கண்மணி
04-10-2006, 08:04 AM
வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்குறார்னு எடுத்துக்கலாமா?

தாமரை
04-10-2006, 08:16 AM
வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்குறார்னு எடுத்துக்கலாமா?

எடுத்துக்கலாமே!.. நம்ம நாக்கு ருஷிக்கு ஓட்டல் காரங்களை அதட்ட முடியாதே!

நாணயத்துக்கு தலையின் மறுபக்கம் பூ
நாணயமானவர்களுக்கு?
காதுல பூ!!!

அறிஞர்
04-10-2006, 01:27 PM
இது புரட்டாசி மாசமாம்.. எங்க மாமனார் வீட்ட்ல அசைவம் கிடையாதாம்..
அடுத்து ஐப்பசி போனா கார்த்திகை மாசமாம்.. எங்க வீட்ல அசைவம் கிடையாதாம்..
என்ன செய்யச் சொல்றீங்க வீட்டுல தானே இல்லை.... ஹோட்டலில் இல்லையே.... :D :D

அறிஞர்
04-10-2006, 01:28 PM
எடுத்துக்கலாமே!.. நம்ம நாக்கு ருஷிக்கு ஓட்டல் காரங்களை அதட்ட முடியாதே!

நாணயத்துக்கு தலையின் மறுபக்கம் பூ
நாணயமானவர்களுக்கு?
காதுல பூ!!! கண்டிப்பா அதட்ட முடியாது......
வீட்டுல யாரு யாரை அதட்டுறாங்கன்னு வந்து பார்க்கனும்...

நாணயம், பூ.... அருமை......

ஓவியா
04-10-2006, 04:25 PM
எடுத்துக்கலாமே!.. நம்ம நாக்கு ருஷிக்கு ஓட்டல் காரங்களை அதட்ட முடியாதே!

நாணயத்துக்கு தலையின் மறுபக்கம் பூ
நாணயமானவர்களுக்கு?
காதுல பூ!!!

உங்கள் சொந்த கதை சோக கதை............;)
தூள் அண்ணா

pradeepkt
05-10-2006, 10:53 AM
எடுத்துக்கலாமே!.. நம்ம நாக்கு ருஷிக்கு ஓட்டல் காரங்களை அதட்ட முடியாதே!

நாணயத்துக்கு தலையின் மறுபக்கம் பூ
நாணயமானவர்களுக்கு?
காதுல பூ!!!
அப்படியே நீங்க வீட்டுல அதட்டீட்டாலும்... B) B)

தாமரை
05-10-2006, 01:21 PM
அப்படியே நீங்க வீட்டுல அதட்டீட்டாலும்... B) B)

48 - 70 ஆனது வீட்டு சாப்பாட்டால...

மன்மதன்
06-10-2006, 11:30 AM
சில்வர் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:
ப்ளாஸ்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:
:rolleyes: ஆனா கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்க முடியுமா??:rolleyes: :rolleyes:

(முடியும் என்று செல்வன் வாதிடுவார் :D :D ...)

அறிஞர்
06-10-2006, 01:46 PM
சில்வர் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:
ப்ளாஸ்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:
:rolleyes: ஆனா கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்க முடியுமா??:rolleyes: :rolleyes:

(முடியும் என்று செல்வன் வாதிடுவார் :D :D ...) கூலிங் கிளாஸ்ன்னா கூலா இருக்கிற கிளாஸ் டம்ளரு தானே மன்மதா... கண்டிப்பா குடிக்கலாமே...... (செல்வனை முந்திக்கொண்டேன்)

தாமரை
06-10-2006, 01:47 PM
சில்வர் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:
ப்ளாஸ்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..:cool:
:rolleyes: ஆனா கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்க முடியுமா??:rolleyes: :rolleyes:

(முடியும் என்று செல்வன் வாதிடுவார் :D :D ...)

கண்ணுல தண்ணி இருக்கும்,
கூலிங் கிளாசை கண்ணுல போட்டா
கூலிங்கிளாஸ்ல தண்ணி..:rolleyes: :rolleyes: :rolleyes:
சின்ன வயசில நீலிக் கண்ணீர் வடித்து அடம் பிடிச்சப்ப கண்ணீரை சுவைத்திருக்கிறேன்..

திருப்தியா மன்மதரே..
கூலிங் கிளாஸ்னு ஏன் பேர் வந்தது தெரியுமா?
அதுலதான் ஐஸ் இருக்கே!!!:eek: :eek: :eek: :eek:

தாமரை
06-10-2006, 03:55 PM
ஐஸோட(ஐஸ்வர்யா ராய்) ஐஸூக்கு (கண்ணுக்கு) கூலிங் கிளாஸ் போட்டா கண்ணு கூலா இருக்குமா கிளாஸ் கூலா இருக்குமா?

தாமரை
06-10-2006, 03:57 PM
விவ"ரம்" ரம் இருக்கு, விவ"காரம்" ல காரம் இருக்கு.. விவ"ரம்"-க்கு விவ"காரத்தை" தொட்டுக்கலாமா?

ஓவியா
06-10-2006, 04:08 PM
கண்ணுல தண்ணி இருக்கும்,
கூலிங் கிளாசை கண்ணுல போட்டா
கூலிங்கிளாஸ்ல தண்ணி..:rolleyes: :rolleyes: :rolleyes:
சின்ன வயசில நீலிக் கண்ணீர் வடித்து அடம் பிடிச்சப்ப கண்ணீரை சுவைத்திருக்கிறேன்..

திருப்தியா மன்மதரே..
கூலிங் கிளாஸ்னு ஏன் பேர் வந்தது தெரியுமா?
அதுலதான் ஐஸ் இருக்கே!!!:eek: :eek: :eek: :eek:

தூள் அண்ணா,

பென்ஸ்
06-10-2006, 04:17 PM
என்னக்கட இது... தாங்ங்ங்ங்ங்க முடியலை...

யம்மாடி ஓவியா அந்த ஆளு (அதுதான் என் எதிரியோட அப்பா) அறுக்கிறாருன்னா நீ அதுல உப்பை தடவுறியா....

மம்முதா, இதுக்கு எல்லாம் காரணம் நீதான்...

பிரதிப்பு.... இந்த திரியை நீ தானையா துவங்கினது... வா நாளைக்கு இங்கதானே வாறே.. மவனே உன்னை....

தாமரை
06-10-2006, 04:26 PM

என்ன உலகமய்யா இது.. அன்னிக்கு எம்.டி.ஆர்ல விளையாட்டா ஒரு பொண்ணை காட்டி அந்த அக்காவை போட்டோ எடுன்னு நீங்க சொன்னவுடனே,
அந்த அக்காவை லவ் பண்ணறீங்களா, நான் போய் சொல்லட்டுமா எங்க அங்கிள் உங்களை லவ் பண்ணறாரு அப்படினு உதவிக்கரம் நீட்டி, அதே பெண் லால் பாக் வாசலுக்கு வர அங்கிள் இன்னும் நேரமிருக்கு இப்ப போய் சொல்லட்டுமா என உங்க வாழ்க்கைக்கு கை கொடுத்த (இல்லைன்னா வெறும் "வாழ்க்" தான்) அனிருத்தா உங்க எதிரி.. எலே பிரதீப்பு, ராகவா, மதி, பரம்ஸூ, உமாநாத் உண்மையை உரக்கச் சொல்லுங்களேன்..

பென்ஸ்
06-10-2006, 04:37 PM
சத்தியமாயா....
எனக்குகூட கல்யாணம்ன்னு ஒன்னு நடந்து,
அதுக்கு அனிருத்த கூப்பிட்டாகூட கூப்பிடுவேனே தவிர
உம்மளை கூப்பிடவேமாட்டேன்....

ஆனாலும் இப்படியா ஓய் மானத்தை வாங்கிறது???

ஓவியா
06-10-2006, 04:48 PM
பெஞ்சு இதெல்லாம் சொல்லவே இல்லை,

எதொ நல்லா இருந்தா சரிதான்

வாழ்த்துக்கள் பெஞ்சு

பென்ஸ்
06-10-2006, 04:55 PM
ஆமா... வாழ்த்துக்கள் எதுக்கு.. ???
ஈவ்-டீசிங் கேசுல உள்ளே போறதுக்கா???

ஓவியா
06-10-2006, 05:01 PM
ஆமா... வாழ்த்துக்கள் எதுக்கு.. ???
ஈவ்-டீசிங் கேசுல உள்ளே போறதுக்கா???

இல்லை அருனித்த்கூட உங்களுக்கு பொண்னு பார்க்க ஆரம்பிச்சாச்சு....

அப்ப கல்யாணம் கன்போர்ம்....

மாட்டிகிறதுனு முடிவாயுடுச்சு இல்லே அதான்....

மீண்டும் ஒரு............

வாழ்த்துக்கள்..... பெஞ்சு...............:D

தாமரை
07-10-2006, 03:07 AM
[quote=stselvan]உங்க வாழ்க்கைக்கு கை கொடுத்த (இல்லைன்னா வெறும் "வாழ்க்" தான்)[quote]

வாழ்க்கையில கை இல்லைன்னா வாழ்க்
காலில்லைன்னா????
வழ்(ழு)க்கை.:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

மதி
07-10-2006, 03:33 AM
என்ன உலகமய்யா இது.. அன்னிக்கு எம்.டி.ஆர்ல விளையாட்டா ஒரு பொண்ணை காட்டி அந்த அக்காவை போட்டோ எடுன்னு நீங்க சொன்னவுடனே,
அந்த அக்காவை லவ் பண்ணறீங்களா, நான் போய் சொல்லட்டுமா எங்க அங்கிள் உங்களை லவ் பண்ணறாரு அப்படினு உதவிக்கரம் நீட்டி, அதே பெண் லால் பாக் வாசலுக்கு வர அங்கிள் இன்னும் நேரமிருக்கு இப்ப போய் சொல்லட்டுமா என உங்க வாழ்க்கைக்கு கை கொடுத்த (இல்லைன்னா வெறும் "வாழ்க்" தான்) அனிருத்தா உங்க எதிரி.. எலே பிரதீப்பு, ராகவா, மதி, பரம்ஸூ, உமாநாத் உண்மையை உரக்கச் சொல்லுங்களேன்..
சத்தியமான உண்மை..இவரு ஏதோ சொல்ல அத அனிருத் கரெக்ட்டா புரிஞ்சுகிட்டு...எல்லோருக்கும் கேக்கற மாதிரியே சொன்னான்..
"அங்கிள்..அந்த அக்காவ லவ் பண்றாராம்...!" இது போதாதா...ஆனாலும் நல்லது பண்றேன்னு இப்படி மானத்த வாங்கியிருக்க வேணாம்...அதானே பென்ஸூ நீங்க நினைக்கிறது..!

gragavan
08-10-2006, 05:50 AM
என்ன உலகமய்யா இது.. அன்னிக்கு எம்.டி.ஆர்ல விளையாட்டா ஒரு பொண்ணை காட்டி அந்த அக்காவை போட்டோ எடுன்னு நீங்க சொன்னவுடனே,
அந்த அக்காவை லவ் பண்ணறீங்களா, நான் போய் சொல்லட்டுமா எங்க அங்கிள் உங்களை லவ் பண்ணறாரு அப்படினு உதவிக்கரம் நீட்டி, அதே பெண் லால் பாக் வாசலுக்கு வர அங்கிள் இன்னும் நேரமிருக்கு இப்ப போய் சொல்லட்டுமா என உங்க வாழ்க்கைக்கு கை கொடுத்த (இல்லைன்னா வெறும் "வாழ்க்" தான்) அனிருத்தா உங்க எதிரி.. எலே பிரதீப்பு, ராகவா, மதி, பரம்ஸூ, உமாநாத் உண்மையை உரக்கச் சொல்லுங்களேன்..உரக்கச் சொன்னாலும் உறைக்கச் சொன்னாலும் பயனுண்டா? அந்தக் கண்கொள்ளாக் காட்சிக்கு நானுந்தானே சாட்சி? இதிலிருந்து பெஞ்சுக்கு எப்போ மீட்சி?

gragavan
08-10-2006, 05:51 AM
சத்தியமான உண்மை..இவரு ஏதோ சொல்ல அத அனிருத் கரெக்ட்டா புரிஞ்சுகிட்டு...எல்லோருக்கும் கேக்கற மாதிரியே சொன்னான்..
"அங்கிள்..அந்த அக்காவ லவ் பண்றாராம்...!" இது போதாதா...ஆனாலும் நல்லது பண்றேன்னு இப்படி மானத்த வாங்கியிருக்க வேணாம்...அதானே பென்ஸூ நீங்க நினைக்கிறது..!நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!!!!!!!!

மன்மதன்
12-10-2006, 09:58 AM
:D 'என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் (பிரதீப் அல்ல :rolleyes: :rolleyes:)
அவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது...' :D :D

அறிஞர்
12-10-2006, 03:12 PM
:D 'என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் (பிரதீப் அல்ல :rolleyes: :rolleyes:)
அவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது...' :D :D இதுல ஏம்பா.. பிரதீப்பை இழுக்கிற.....

pradeepkt
12-10-2006, 04:44 PM
:D 'என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் (பிரதீப் அல்ல :rolleyes: :rolleyes:)
அவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது...' :D :D
ஏய் என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே... :D :D

ஓவியா
12-10-2006, 04:52 PM
:D

'என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் (பிரதீப் அல்ல :rolleyes: :rolleyes:)
அவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது...' :D :D

அதுசரி...:D :D

பாவம் பீரதீப்....:இதான் கீமெடியா :p

pradeepkt
13-10-2006, 05:45 AM
ஓவியா உடம்பு இப்ப சரியாப் போயிருச்சா... ரொம்பச் சத்தம் அதிகமா இருக்கே...

தாமரை
13-10-2006, 04:07 PM
:D 'என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் (பிரதீப் அல்ல :rolleyes: :rolleyes:)
அவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது...' :D :D

இரண்டாவது பதிவைப் பார்க்க...

5. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போட முடியாது.

நீங்க சேஃப். இல்லியா.. :rolleyes: :rolleyes: :rolleyes:

அரைச்ச மாவையே அரைக்கறதுன்னு கேள்விபட்டிருக்கேன், ஆனா இதுக்கு என்ன சொல்றது??:confused: :confused: :confused:

ஓவியா
13-10-2006, 06:01 PM
ஓவியா உடம்பு இப்ப சரியாப் போயிருச்சா... ரொம்பச் சத்தம் அதிகமா இருக்கே...

சுகம்,
நன்றி

உங்க சத்தத்தை தான் காணோம்....
என்னாச்சு.........;) .......டும் டும் கொட்டியாச்சா.....:eek:

பென்ஸ்
14-10-2006, 06:31 AM
சுகம்,
நன்றி

உங்க சத்தத்தை தான் காணோம்....
என்னாச்சு.........;) .......டும் டும் கொட்டியாச்சா.....:eek:

பரவாயில்லையே...
டும் டும் கொட்டுன பிறகு , பிரதிப்புகிட்ட இருந்து சத்தம் வராதுன்னு நல்லா தெரின்சு வச்சிருக்கே...

என்ன கொடுமை இது சரவணன் இது?
கல்யானத்துக்கு முன்னாலையே இந்த நிலமையா???:eek: :eek: :D :D :D

guna
14-10-2006, 07:30 AM
ஒரு 10 கடியை வச்சு இவ்ளோ சுவையா (சுவையான விசயங்களை) பேச முடியுமா?

ணெஜமாவெ ப்பிரமிச்சு போய்தேன் குணா, அதிலேயும் தாமரை செல்வன் சாரோட பதில்கள் அருமை அருமை..
தொடருங்கள் உங்கள் கடி வேட்டய்யை..

பிரமிப்புடன்
குணா.

தாமரை
15-10-2006, 02:37 AM
பரவாயில்லையே...
டும் டும் கொட்டுன பிறகு , பிரதிப்புகிட்ட இருந்து சத்தம் வராதுன்னு நல்லா தெரின்சு வச்சிருக்கே...

என்ன கொடுமை இது சரவணன் இது?
கல்யானத்துக்கு முன்னாலையே இந்த நிலமையா???:eek: :eek: :D :D :D

டும் டும் கொட்டறதே மாப்பிள்ளைக்கு மாத்து எப்படி விழும்கறதை சுட்டிக் காட்டத்தானே:D :D :D :D

கடிச்சு சுவைப்பது ஒருவகை, கரும்பு மாதிரி... எத்தனையோ மிட்டாய்கள் வந்தும் கரும்பு இன்னும் கசக்கலியே!!!:D :D :D

பென்ஸ்
15-10-2006, 10:56 AM
டும் டும் கொட்டறதே மாப்பிள்ளைக்கு மாத்து எப்படி விழும்கறதை சுட்டிக் காட்டத்தானே:D :D :D :D

கடிச்சு சுவைப்பது ஒருவகை, கரும்பு மாதிரி... எத்தனையோ மிட்டாய்கள் வந்தும் கரும்பு இன்னும் கசக்கலியே!!!:D :D :D

அது கரும்பை நுனியில் இருந்து சாப்பிடுறவங்களுக்கு....

ஆமா.. டும் டும் அடிக்கிறப்பவே எதோ குழாய் வைத்து ஊதுறாங்களே, அது எதுக்கு????
(கடைசியில் உனக்கு சங்குதான் என்று சொல்லும் பதில் இங்கு ரிசர்வ் செய்ய படுகிறது.)

தாமரை
15-10-2006, 01:46 PM

இப்பவே காதை செவிடாக்கி விட்டால் பையன் கொஞ்சம் நிம்மதியாய் இருப்பானே என்ற நல்ல (!) எண்ணத்தில் தான்.. நாயனமும்..

ஓவியா
07-11-2006, 07:28 PM
இப்பவே காதை செவிடாக்கி விட்டால் பையன் கொஞ்சம் நிம்மதியாய் இருப்பானே என்ற நல்ல (!) எண்ணத்தில் தான்.. நாயனமும்..

அண்ணா,
அப்படியே அந்தா இந்தானு யோசிகிற மூளையையும்
சமலிபிகேஷனை அள்ளி வீசுற வாயையும் கட்ட எதவது நல்ல எண்ணன் உண்டா.....

இப்பவே தெரிஞ்சா நல்லதுதானே...
கடைசி நேரத்திலாவது ஐயருகிட்ட மறக்காமல் சொல்லிவைப்பேனே...
(அந்த மந்திரத்தை மறந்துடாதீங்கோ மாமானு...:D :D )

pradeepkt
09-11-2006, 02:18 AM
அண்ணா,
அப்படியே அந்தா இந்தானு யோசிகிற மூலையையும்
சமலிபிகேஷனை அள்ளி வீசுற வாயையும் கட்ட எதவது நல்ல எண்ணன் உண்டா.....

இப்பவே தெரிஞ்சா நல்லதுதானே...
கடைசி நேரத்திலாவது ஐயருகிட்ட மறக்காமல் சொல்லிவைப்பேனே...
(அந்த மந்திரத்தை மறந்துடாதீங்கோ மாமானு...:D :D )
நிஜமாவே... அவங்களுக்கு மூளை தலைல ஒரு தக்கணூண்டு மூலைலதான் இருக்குன்னு ஓவியா சொல்றாப்புல :rolleyes: :rolleyes:

பென்ஸ்
09-11-2006, 06:43 AM
என்னபா இங்க என்ன ஞாயிற்றுகிழமை ஒன்றே கால் மணி செய்தியா நடக்குது....???
அவங்க எதோ சொல்லுறாங்க.. இவரு எதோ அசைக்கிறரு.. ஒன்னுமே புரியலையே...

ஓவியா
09-11-2006, 05:05 PM
நிஜமாவே... அவங்களுக்கு மூளை தலைல ஒரு தக்கணூண்டு மூலைலதான் இருக்குன்னு ஓவியா சொல்றாப்புல :rolleyes: :rolleyes:

:eek: :eek:
:D :D :D :D

தாமரை
26-12-2006, 12:41 PM
நீர் பிரதீபரா? கடியில் பிரதாபரா? இப்படிக் கடிக்கிறீரே.....திரிந்த பாலோடு சேர்ந்து பாத்திரமும் கெடுவது போல நீரும் கடித்துத் தாமரையையும் கடிக்க வைத்திருக்கிறீர்.

கடியோ இடியோ தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மன்றத்து அன்பர்களை இப்படிச் சோதிப்பது ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம் சுகமே ஏய் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று சேர்ந்த அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை தருமோ என் மேகமே மேகமே பால் போலவே வான் போலே வண்ணம் கொண்ட வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........

இதில் எத்தனை பாட்டுகள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.
1. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
2. இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
3. போதுமோ இந்த இடமோ கூடுமோ அந்தச் சுகம்
4. சுகம் சுகமே ஏய்
5. ஏய் பாடல் ஒன்று
6. ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று
7. ஒன்று சேர்ந்த அன்பு
8. அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை
9. மழை தருமோ என் மேகமே
10. மேகமே மேகமே பால்
11. பால் போலவே வான்
12. வான் போலே வண்ணம் கொண்ட
13. வண்ணம் கொண்ட வெண்ணிலவே
14. வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை
15. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணில
16. வெண்ணிலா வானிலே மேடை அமைந்தது........

pradeepkt
01-01-2007, 08:53 AM
ராகவன் கேட்ட கேள்விக்கும் மனசு வந்து பதில் போட்டிருக்காரே...
செல்வன், அப்படியே உணர்ச்சி வசப்பட்டுட்டேன்

தாமரை
15-06-2007, 04:30 PM
பரவாயில்லையே...
டும் டும் கொட்டுன பிறகு , பிரதிப்புகிட்ட இருந்து சத்தம் வராதுன்னு நல்லா தெரின்சு வச்சிருக்கே...

என்ன கொடுமை இது சரவணன் இது?
கல்யானத்துக்கு முன்னாலையே இந்த நிலமையா???:eek: :eek: :D :D :D

ம்ம்ம்ம்.. பெரியவங்க சரியாத்தான் சொல்லி வச்சிருக்காங்க.:4_1_8: :4_1_8:

அக்னி
15-06-2007, 04:35 PM
மொட்டைக் கத்தி வைத்தல்லவா அறுத்திருக்கிறார்கள்...
கடித்திரியை மீண்டும் கடிக்கவைத்த தாமரை அவர்களுக்கு நன்றிகள்...

அமரன்
15-06-2007, 04:40 PM
மொட்டைக் கத்தி வைத்தல்லவா அறுத்திருக்கிறார்கள்...
கடித்திரியை மீண்டும் கடிக்கவைத்த தாமரை அவர்களுக்கு நன்றிகள்...
என்ன சொல்றீங்க. இந்ததிரியில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா கொடுத்திருக்காங்க. மாட்டிக்கிட்டீரே அக்னி மாட்டிக்கிட்டீரே

அக்னி
15-06-2007, 04:46 PM
என்ன சொல்றீங்க. இந்ததிரியில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா கொடுத்திருக்காங்க. மாட்டிக்கிட்டீரே அக்னி மாட்டிக்கிட்டீரே
சந்தில சிந்து பாடீட்டாங்கடா...:music-smiley-019: :music-smiley-019: :musik010: :musik010: :music-smiley-008: :music-smiley-008: :music-smiley-009: :music-smiley-009:
அக்னி ஜூட்ட்ட்ட்ட்....:auto003: :auto003: :auto003:

namsec
15-06-2007, 04:48 PM
1. நாய்க்கு நால் கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது.

செல்வன்,
இப்ப உங்க சான்ஸூ, பின்னுங்க... :D

பார்த்தாவுடன் தலையா சுத்துது யப்பா என்ன கடி

அமரன்
15-06-2007, 04:49 PM
ஆமா... வாழ்த்துக்கள் எதுக்கு.. ???
ஈவ்-டீசிங் கேசுல உள்ளே போறதுக்கா???

இல்லை அருனித்த்கூட உங்களுக்கு பொண்னு பார்க்க ஆரம்பிச்சாச்சு....
அப்ப கல்யாணம் கன்போர்ம்....
மாட்டிகிறதுனு முடிவாயுடுச்சு இல்லே அதான்....
மீண்டும் ஒரு............
வாழ்த்துக்கள்..... பெஞ்சு...............:D
எப்படியோ தணடனை உறுதின்னு ஓவியா அப்பவே சொல்லிட்டாங்கபோல..
தண்டனைக்கு வாழ்த்துச்சொல்றது நம்ம பழக்கமாப் போட்டுது.

அமரன்
15-06-2007, 04:55 PM
ம்ம்ம்ம்.. பெரியவங்க சரியாத்தான் சொல்லி வச்சிருக்காங்க.:4_1_8: :4_1_8:
ஏன் பென்சு அண்ணாவிடமிருந்து இப்போ சத்தம் வாரதில்லையா?:music-smiley-010: :music-smiley-010: :music-smiley-010: :music-smiley-010:

தாமரை
15-06-2007, 04:56 PM
பிரதீப்பைக் காணோமே!... எல்லாப் பதிவுகளையும் படித்தீரா! ..

மதி
15-06-2007, 05:00 PM
பிரதீப்பைக் காணோமே!... எல்லாப் பதிவுகளையும் படித்தீரா! ..
வராரு..வராரு..வராரு..
சீக்கிரமே வந்துடுவார்...

அமரன்
15-06-2007, 05:01 PM
பிரதீப்பைக் காணோமே!... எல்லாப் பதிவுகளையும் படித்தீரா! ..
படித்தேன்...உண்மையாக்கிவிட்டாரா...

தாமரை
15-06-2007, 05:04 PM
வராரு..வராரு..வராரு..
சீக்கிரமே வந்துடுவார்...
சிவாஜி யே வந்திட்டாரு

அமரன்
15-06-2007, 05:07 PM
சிவாஜி யே வந்திட்டாரு
ரொம்ப அடிவாங்கிட்டாரா....சிவாஜி

ஆதவா
16-06-2007, 06:03 PM
பால் திரிஞ்சா பன்னீராகலாம்.. மனுஷன் திரிஞ்சா பரதேசி ஆவான் :D :D :D :D

அண்ணா. இப்படியா உடம்பு முழுக்க கடிக்கிறது?????

என்ன உலகமய்யா இது.. அன்னிக்கு எம்.டி.ஆர்ல விளையாட்டா ஒரு பொண்ணை காட்டி அந்த அக்காவை போட்டோ எடுன்னு நீங்க சொன்னவுடனே,
அந்த அக்காவை லவ் பண்ணறீங்களா, நான் போய் சொல்லட்டுமா எங்க அங்கிள் உங்களை லவ் பண்ணறாரு அப்படினு உதவிக்கரம் நீட்டி, அதே பெண் லால் பாக் வாசலுக்கு வர அங்கிள் இன்னும் நேரமிருக்கு இப்ப போய் சொல்லட்டுமா என உங்க வாழ்க்கைக்கு கை கொடுத்த (இல்லைன்னா வெறும் "வாழ்க்" தான்) அனிருத்தா உங்க எதிரி.. எலே பிரதீப்பு, ராகவா, மதி, பரம்ஸூ, உமாநாத் உண்மையை உரக்கச் சொல்லுங்களேன்..

இந்த கதையை நல்லா கவனிங்க மக்களே! அநிருத்த முதல் தடவ பார்க்கும்போது சொன்ன உண்மைக் கதை... அப்படியே ஆடிப்போய்ட்டேனப்பு..... (பென்ஸ் அங்கிள்...நீங்களா அது?? :D )

ஓவியன்
16-06-2007, 07:08 PM
சிவாஜி யே வந்திட்டாரு

நம்ம பிரதீப் நானா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவாராக்கும்!:sport-smiley-018:

அமரன்
17-06-2007, 06:26 PM
நம்ம பிரதீப் நானா லேட்டா வந்தாலும் லேட் டஸ்ட்டா வருவாராக்கும்!:sport-smiley-018:
ஏங்க ஓவியன். பிரதீப் அண்ணா மீது இந்தளாவு கோபம்