PDA

View Full Version : சிம்மக் குரலோன்இனியவன்
19-07-2006, 04:53 AM
சிம்மக் குரலோன்

கவிஞர் வாலி

சிலர் கணக்கில் _

சிலைகள்...

காகங்களின் கழிப்பறை ;

அல்ல ; அல்ல ;

அது _

நல்லோர் ஒருவர்

நற்செயலுக்குச்

சொல்லால் எழுதாது

கல்லால் எழுதிய பொழிப்புரை !



சிவாஜி நடிப்பால் _ தமிழன் சிலையானான் அன்று; தமிழனைச்

சிலையாக்கியவன் _ தானே

சிலையானான் இன்று!



வெண்கலச் சிலையானவன்

வெண்திரை வேந்து;

ஆஹா !

அவனிடம் _ இனி

கர்ச்சிப்பதைக்

கற்கும்...

வங்கக் கடலின் _

வெண்திரை போந்து !



கயத்தாற்றுக்

கட்டபொம்மனை _

எழுப்பி

எகிப்துக்குக் கூட்டிப் போனான்;

நைல் நதி

நாசர் _

காவிரி நாடன்

கணேசனை...

உலக நடிகன் என _

உச்சி முகர்ந்து கூவலானான் !



கோலிவுட் _ இவனால்

ஹாலிவுட் ஆனது ;

எந்நாட்டு விழியும் தென்னாட்டின் மேல் விழ... உயர _ இனி

உயரமில்லாத

உயரத்திற்கு _ இவனது

உன்னத நடிப்பு போனது!



இவன் இறந்தாரை _

எழுப்பிச் சிறந்தான்; இவனை

எழுப்ப இயலாது இறந்தான்

இளைய நடிகனே! சிலையாய் இவன் நிற்பது கண்டு _

கல் என எண்ணாது _ இந்தக் கல்லிடம் கல்... உயிர்த் துடிப்பைக் _ காட்டும் உயர்

மன்னன் சிவாஜியின் சிம்மக் குரலில் _ தொத்திக் கொண்டு தொன்மைத் தமிழ்...

உலக _ உலா போனதால்

இனி இவன் சிலையைத்

தீண்டித்

தீண்டித்

தீந்தமிழைத் திருட... கடல்கடந்து _ அயல்நாட்டுக்

காற்றுவரும் நித்தம் ;

கலைஞர் பெருமானின்

கைக்குத் தருவோம் கட்டிமுத்தம் !



நன்றி குமுதம்

pradeepkt
19-07-2006, 05:46 AM
ஆகா...
வாலிபக்கவியின் வரிகளில் நடிகர் திலகத்தின் புகழ்!
முக்கியமா இந்தத் திரியின் தலைப்பைப் பார்த்தவுடன் ஒருத்தா ஓடோடி வந்திருவாரே...
எங்கய்யா அவரு????

ஓவியா
19-07-2006, 01:28 PM
"அம்மாடி எனக்கு யாரை தெரியும்.....நான் என்ன பன்னுவேன்.ன்..ன்..."

சிலசமயம் நான் (சிவாஜி அங்கிள் போல் பேசி)
கேலியாக பயன்படுத்தும் ஒருவரி வசனம்.....:D :D

சிவாஜியால் நடிப்புக்கு பெருமையே

சிம்ம குரலோனுக்கு
வாலியின் வரிகள் பிரமாதம்...

தாமரை
19-07-2006, 01:35 PM


வெண்கலச் சிலையானவன்

வெண்திரை வேந்து;

ஆஹா !

அவனிடம் _ இனி

கர்ச்சிப்பதைக்

கற்கும்...

வங்கக் கடலின் _

வெண்திரை போந்து !

நன்றி குமுதம்


உனது சிம்மக் குரலுக்கு
அஞ்சியாவது
அந்தச்
சுனாமிச் சனியன்
திரும்ப வராதிருக்கட்டும்..

தாமரை..

இளசு
20-07-2006, 09:49 PM
விம்மி நிற்கிறேன்.. பேச்சிழந்து...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=260

பென்ஸ்
20-07-2006, 11:45 PM
ஆகா...
வாலிபக்கவியின் வரிகளில் நடிகர் திலகத்தின் புகழ்!
முக்கியமா இந்தத் திரியின் தலைப்பைப் பார்த்தவுடன் ஒருத்தா ஓடோடி வந்திருவாரே...


விம்மி நிற்கிறேன்.. பேச்சிழந்து...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=260

எங்கய்யா அவரு????

அதுதான் வந்திட்டாருல்ல்ல...
என்ன இளசு நலமா....

இனியவன்
21-07-2006, 03:40 AM
விம்மி நிற்கிறேன்.. பேச்சிழந்து...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=260

சிங்கப்பூரில் தமிழ்ப் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாக்க பல்வேறு முயற்சிகள். அவற்றுள் திரை வழிப் பாடப்பரிமாற்றமும் ஒன்று.
கட்டபொம்மன் படத்தில் நடிகர் திலகம் பேசிய அந்த மஞ்சள் அரைக்கும் வசனம் காண்பித்தார்கள். பார்க்கும் போதே மெய் சிலிர்த்தது. அடுத்து சுக்ரனில் விஜய் நடித்த நீதிமன்றக் காட்சியைத் திரையிட்டார்கள். இரண்டு காட்சிகளிலும் உள்ள தமிழ் வேறுபாட்டைப் பக்குவமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

சிவாஜி படத்தின் காட்சியமைப்பில் என்று சொன்ன இன்றைய தலைமுறை அவருடைய வசனங்களை ரசித்ததை உணர முடிந்தது. அது தான் அம்மாபெரும் கலைஞனின் வெற்றி. அவன் புகழ் வாழ்க.

இளசு
21-07-2006, 10:17 PM
அதுதான் வந்திட்டாருல்ல்ல...
....

இனிய பென்ஸ்...

சிவாஜி பெயரைப் பார்த்ததும் ஓடோடி வர பல பேருண்டு மன்றத்தில்..

இது நம்ம ராகவனுக்காய்ச் சொன்னது.. சரிதானே ராகவன்?


quote=benjaminv]...
என்ன இளசு நலமா....[/quote]

நலமே பென்ஸ்..

புது ஊரு.. புது வேலை... வாழ்க்கை எப்படி அங்கே..?