PDA

View Full Version : படித்ததில் பிடித்தது - கல்யாணம் செஞ்சுக்Ĩ

தாமரை
18-07-2006, 01:47 PM
இப்பொழுதெல்லாம் நண்பர்களை சந்திப்பதென்றால் கொஞ்சம் தயக்கமாகவே உள்ளது. ஏன் வீட்டை விட்டு வெளியே போகக் கூட தயக்கம் தான் . எல்லாவற்றையும் விட பல சமயங்களில் வீட்டிற்கு போகவே எரிச்சலாய்த்தாய் இருக்கிறது. கூடப் படித்தவர்கள், உடன் வேலைப்பார்ப்பவர்கள், பயண சினேகிதங்கள், கடைக்காரர்கள், ஓட்டல்காரர்கள் இப்படி என்னைத் தெரிந்தோர் எனக்குத் தெரிந்தோர் புதிதாய் அறிமுகமானோர் நிச்சயம் இனி அறிமுகம் ஆகப் போகிறவர் உட்பட எல்லோருமே சொல்லி வைத்தாற்போல் ஒரே கேள்விகளைத்தான் கேட்டு வைக்கிறார்கள். 'கல்யாணம் எப்ப ? ', 'கல்யாணம் எப்பன்டே ? ' 'கல்யாணம் எப்பப்பா ? ' என்பதுதான் அக்கேள்வி.

'ஏல, இப்பவெல்லாம் முன்னமாதிரி வேலை செய்ய முடியல. உட்கார்ந்து உட்கார்ந்து வீட்டு வேலைய செஞ்சிடுவேன் இந்தத் தண்ணீர் பிடிக்கத்தான் முடியல, குறுக்கெல்லாம் வலிக்குது ' என்று அம்மா துவங்க ' அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைங்கம்மா ' என தம்பியோ தங்கையோ முடித்து வைப்பார்கள். தண்ணீர் பிடிக்க ஆள் வேண்டுமாம் அதனால் கல்யாணமாம். இப்படி வீட்டார் எரிச்சல் படுத்துவது அவ்வப்போது என்றாலும் ' கல்யாணம் கில்யாணமுன்னு பேசாதீங்க ' என்று நான் கத்திவிட பேச்சு முற்றி சில நாட்களுக்கு அம்மாவோடு 'டூ ' விட்டு அரைகுறையாய் சாப்பிடும்படியாகி விடும்.

இன்று நரை முடியைப் பற்றி சொல்லவே வேண்டாம். பத்து வயது பையனுக்குக் கூட நரைத்து விடுகிறது. நரையில்லாமைக்கு பிசிராந்தையார் என்னும் புலவர் சொன்ன காரணமோ இல்லை அறிவியல் அறிஞர்கள் சொல்லும் ஊட்டச் சத்துக்குறை காரணமோ எதுவானாலும் தலை மயிரைப் பற்றி அப்படி என்ன கவலை ? ஆனால் காதோரமாய் இரண்டு, உச்சியில் மூன்று அப்படியே அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் எனக் கொஞ்சம் நரைகள் தென் படவே ' டேய், தலை நரைச்சிட்டுடா சீக்கிரம் கல்யாணத்தை பண்ணித் தொலை ' என்பார்கள் கோரசாய். பாருங்கள் தலை மயிர் நரைத்தால் கல்யாணமாம். இப்பொழுதெல்லாம் மாதமிருமுறை சலூனுக்குச் சென்று சாயம் பூசிக் கொண்டு இவர்கள் வாயை அடைத்து வைக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள் என் பயத்தை.

அடுத்ததாக சர்வதேசிய அளவில் ஆண்கள் சந்திக்கும் மகா பிரச்சனை ' தொப்பை ' . செல்லாமாய் ஆரம்பித்து கிண்ணமாகி, சொம்பாகி, பானையாகி இப்படி வயிற்றின் வடிவங்கள் பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டே போகும். வார இறுதிகளில் மாத இறுதிகளில் வருட இறுதிகளில் என பல முறை எழுதியெழுதி சத்தியமெடுத்தும் நடவடிக்கைகள் நடைமுறைக்கு கொண்டுவர முடிவதில்லை. பயிற்சி துவங்கும் போது நண்பர் வந்து தொலைக்க வெட்கத்தில் அன்று விட நாளைநாளையென தொடர்ந்து பின் சத்தியமோ சபதமோ எடுத்துக் கொண்டு மேற்சொன்ன நிலைக்கே திரும்பத் வேண்டியதுதான். சிறுசோ பெரிசோ வயிறு வளர ஆரம்பித்து விட்டால் போதும் 'நாலு புள்ளைக்கு அப்பன் மாதிரி இருக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்காப்பா ' என முழங்குவர். தொப்பையாம் அதனால கல்யாணம் பண்ணனுமாம் இப்பொழுதெல்லாம் பெல்ட் போட்டுக் கொள்வதை நிறுத்தி விட்டேன்.

சாலையில் ஏதேனும் பெண்ணைப் பார்த்து விடக் கூடாது. 'என்னங்க அப்படிப் பார்வை பேசாம கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே ' என்பார்கள். இன்னைக்கு ஒரு பொண்ணப் பார்த்தேன் எவ்வளவு அழகாயிருந்தா தெரியுமா ? ' என்றால் போச்சு 'யப்போ! அய்யாவுக்கு கல்யாண ஆசை வந்துட்டுப் போல வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கோங்க! ' என்று பதில் வர மீண்டும் இப்படி அபிப்ராயங்களை தெரிவிப்பதில்லை என்று பல்லைக் கடித்துக் கொள்வதோடு சரி.

குழந்தைகள் என்றால் கொள்ளப் பிரியம் என்று தூக்கிக் கொஞ்ச முடிவதில்லை. 'புள்ள பெத்துக்கனுமுன்னு ஆசை வந்திடுச்சி, கல்யாணம் பண்ணிட வேண்டியது தான் ' என்று உடனே முழங்கத் தொடங்கி விடுவர்.

சரி! தொப்பை வளர்ந்தால்தான் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் எலும்பும் தோலுமாய் இருக்கும் நண்பரைப் பார்த்து என்ன கல்யாண ஏக்கத்துல கரைஞ்சு போயிட்டியான்னு ' அதற்கும் கிண்டல்தான்.

மீண்டும் தலை மயிர் பிரச்சனை ஒன்று. நரைத்தால்தான் கல்யாணம் பண்ணச் சொல்கிறார்கள் என்றால் கருப்பு வெளுப்பு ஏதுவும் வேண்டாமென்று கொட்டி விட்டாலும் 'ஏய்! தலையில வழுக்கை ஏறிக்கிட்டே போகுது சீக்கிரம் கல்யாணத்தை முடிப்பா ' என்றும் உசுப்பி விடுகின்றனர்.

இவ்வளவு நாள்தான் வேலையில்லாம இருந்த இப்பதான் வேலைக்குப் போறியே கல்யாணம் பண்ணிக்கோயேன் ' 'புது வீடு வாங்கியாச்சு அடுத்தது என்ன கல்யாணம் தானே ? ' ' தங்கச்சி கல்யாணம் நல்லபடியாய் முடிஞ்சு போச்சு அடுத்து உன் கல்யாணம் தானே ? ' இப்படி என்ன நிகழ்ந்தாலும் கல்யாணம் எப்ப ? கல்யாணம் எப்ப ? என்ற கேள்விகள்தான் எதிரொலிக்கும். எதாவது பத்திரிக்கை கொடுக்க வருபவர்கள் உங்க கல்யாணப் பத்திரிக்கை எப்ப தருவீங்க ? என்று பத்திரிக்கைக்குப் பதில் பத்திரிக்கை கேட்பது நல்ல நகைச்சுவை.

நிறைய தொல்லைப் பட்டுகொஞ்சம் ஆத்திரத்தோடு ' நான் கல்யாணம் பண்ணப் போறதில்லை ' என்றால் 'டேய் ! இப்படி சொன்னவனெல்லாம் தான் சுவர் ஏறி குதிச்சு மாட்டிக்கிறான் ' பேசாம சீக்கிறம் கல்யாணத்தை முடி ' இப்படி ஊரெல்லாம் கல்யாணம் பண்ணச்சொல்லி நச்சரித்துத் திரிவதற்குக் காரணம் தெரியவில்லை. கல்யாணமானவர் வேண்டுமானால் ' நாமெல்லாம் கல்யாணத்த பண்ணிக்கிட்டு படாத பாடு படுறோம் இவன் மட்டும் இப்படி ஜாலியா இருக்கானே ' என்ற பொறாமையில் சொல்லலாம். ஆனால் இந்த கல்யாணமாகாத வாலிபர்களுக்கு என்னவாயிற்று எனக்குத் தெரிந்து கல்யாண உறவில் மாட்டிக் கொண்ட பின் நட்புறவுவில் விரிசல் ஏற்படுவது இயல்பு. நட்பு போய்விடுமே என்று ஏன் இவர்கள் அஞ்சுவதில்லை.

ஒட்டுமொத்த ஆண்வர்க்கம்தான் இப்படி கல்யாணம் பண்ணச்சொல்லி தொல்லை செய்கிறது என்றால் சில தோழிகள் இவர்களை மிஞ்சி விடுகிறார்கள். 'ஆகா! உனக்கு இந்த சேலை ரொம்ப அழகாயிருக்கு ' என்றால் போதும் 'ஏன் இப்படி அலையிற, பேசாம ஒரு நல்லப் பொண்ணப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே ' என்று கடித்துத் துப்பி விடுவார்கள்.

இப்பொழுதெல்லாம் எங்கும் வாய் திறப்பதில்லை. பேசுவது கூட துண்டு துண்டாய் தவனை முறையில் இல்லையேல் வல்லென நாய் போல் குரைத்து விடுவது. பெரும்பாலான சமயங்கள் தனிமையில் கழிக்கிறேன். இப்பொழுதாவது சும்மா இருப்பார்களா ? ' பாவம் அந்த பையனுக்கு கல்யாணம் முடியாம ஆளு கொஞ்சம் ஒரு மாதிரியாயிட்டான் ' என்று கொஞ்சம் கூட கூசாமல் சொல்லி விடுகிறார்கள். இன்னும் கொஞ்சம் உரிமையோடு 'கல்யாணப் பைத்தியம் ' கல்யாணக் கிறுக்கு ' என்று கூட பிரபலப் படுத்தி விடுகிறார்கள்.

இனி எது நடந்தாலும் கல்யாணம் நடக்காததால் தான் இப்படி என்று கண்டிப்பாய் சொல்லி விடுவார்கள். இந்த புலம்பலை வாசித்து முடித்ததும். ' பாவம் ரொம்பத்தான் ஆதங்கப் பட்டிருக்கிறார் ' என்று வருத்தமோ அனுதாபமோ பட்டுவிட்டு, கொஞ்சம் அதிக பட்சமாக உச்சுக் கொட்டி விட்டு 'சரி சரி கல்யாணம் எப்ப ? ' என்று கேட்டு வைக்காதீர்கள்.
------------ -------------- --------------------

மதியழகன் சுப்பையா (http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE,%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88)வின் கட்டுரை இது. திண்ணை (http://www.thinnai.com/) யில் இருந்து எடுத்தாளப்பட்டது.

sarcharan
18-07-2006, 01:53 PM
ஹ்ம்ம் இதுல வேறயா!!!!!!! (தனி மடல் போதாதா????:angry: :angry:

தாமரை
18-07-2006, 01:55 PM
ஹ்ம்ம் இதுல வேறயா!!!!!!! (தனி மடல் போதாதா????:angry: :angry:

பின் குறிப்பு : இந்த மதி நம்ம மதி அல்ல..:D :D
உமக்கு ஏன் கோபம்? புரியவில்லையே:confused: :confused: :confused: :confused:

ஓவியா
18-07-2006, 03:16 PM
அருமையான கட்டுரை

படித்து முடித்தவுடன்.....:D எனக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது.....:D

மதி
19-07-2006, 04:03 AM
அருமையான கட்டுரை

படித்து முடித்தவுடன்.....:D எனக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது.....:D
நல்லது நடந்தா சரி..

தாமரை
19-07-2006, 04:04 AM
அருமையான கட்டுரை

படித்து முடித்தவுடன்.....:D எனக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது.....:D

ஏதோ நம்மாலான நல்ல காரியம்...:D :D :D

pradeepkt
19-07-2006, 05:42 AM
அடடா.. இதைப் படிச்சவுடனேயே கலியாண ஆசை வந்திருச்சா?
இதில இந்த ஆம்பளைப் பயலுக படுற பாட்டைத்தானே ஒரே ராகத்துல வாசிச்சிருக்காரு, உங்களுக்கு ஏன்?

தாமரை
19-07-2006, 05:53 AM
யாருக்கோ வாழ்வு கொடுக்க மனசு வந்திருக்கு அதைப் போய் கெடுக்கலாமா பிரதீப்பு...

pradeepkt
19-07-2006, 06:00 AM
ஆனா வாழ்வு கொடுக்க வந்தவரை நினைச்சு ஒரு நிமிடமாவது அஞ்சலி செலுத்தணுமா வேணாமா?

ஓவியா, சும்மா பகிடிக்கு! விடுதிக்குத் திரும்பப் போயிட்டீங்களா?

தாமரை
19-07-2006, 06:10 AM
என்னடா இது ஒருபக்கம் கல்யாணக் கவலைகளை எழுதி மறுபக்கம் கல்யாண அவதிகளை எழுதி மக்களை குழப்புகிறானே என்று எண்ண வேண்டாம்.. உலகம் போற போக்கை சொல்றேன்.. பிடிச்ச விஷத்தை நீங்களே தேர்ந்தெடுங்க..ஹி ஹி

pradeepkt
19-07-2006, 06:15 AM
என்னடா இது ஒருபக்கம் கல்யாணக் கவலைகளை எழுதி மறுபக்கம் கல்யாண அவதிகளை எழுதி மக்களை குழப்புகிறானே என்று எண்ண வேண்டாம்.. உலகம் போற போக்கை சொல்றேன்.. பிடிச்ச விஷத்தை நீங்களே தேர்ந்தெடுங்க..ஹி ஹி
சொல்லியாச்சுல்ல,
ஊருக்கு, மன்னிக்க உலகுக்கே உங்கள மாதிரி ஒருத்தர் போதும்...
உருப்படும் :D

ஓவியா
19-07-2006, 02:00 PM
அடடா.. இதைப் படிச்சவுடனேயே கலியாண ஆசை வந்திருச்சா?
இதில இந்த ஆம்பளைப் பயலுக படுற பாட்டைத்தானே ஒரே ராகத்துல வாசிச்சிருக்காரு, உங்களுக்கு ஏன்?

சந்தோஷமா, நிம்மதியா இருக்கும் பசங்கலை எப்படியேல்லாம் அன்பா கவனிக்கலாம்னு தான் :D :D :D

ஆனா வாழ்வு கொடுக்க வந்தவரை நினைச்சு ஒரு நிமிடமாவது அஞ்சலி செலுத்தணுமா வேணாமா?

ஓவியா, சும்மா பகிடிக்கு! விடுதிக்குத் திரும்பப் போயிட்டீங்களா?

வாழ்வு தந்த எங்களை நினைத்து சந்தோஷபடவும்....:mad: :eek: :cool: ;) :) :D :D :

ஆம் பிரதீப் நேற்றுதான் விடுத்திக்கு திரும்பினோம்...
என் அறை ஒரே வெள்ளம்....சுத்தம் செய்து முடிப்பதர்க்குள்...
(ஒட்டியானத்தில் இருத்து வளயலாய் இளைத்துவிட்டேன்.....:D )

sarcharan
19-07-2006, 02:38 PM
சந்தோஷமா, நிம்மதியா இருக்கும் பசங்கலை எப்படியேல்லாம் அன்பா கவனிக்கலாம்னு தான் :D :D :D

வாழ்வு தந்த எங்களை நினைத்து சந்தோஷபடவும்....:mad: :eek: :cool: ;) :) :D :D :

ஆம் பிரதீப் நேற்றுதான் விடுத்திக்கு திரும்பினோம்...
என் அறை ஒரே வெள்ளம்....சுத்தம் செய்து முடிப்பதர்க்குள்...
(ஒட்டியானத்தில் இருத்து வளயலாய் இளைத்துவிட்டேன்.....:D )

ஓவியா இளைத்துத்தான் போனாரோ ஆவியா(ய்)......
பென்ஸூ கட்ட எண்ணுவது காவியா...

மதி
19-07-2006, 02:44 PM
ஓவியா இளைத்துத்தான் போனாரோ ஆவியா(ய்)......
பென்ஸூ கட்ட எண்ணுவது காவியா...
சரவணன்..ஒரு சந்தேகம்..
காவியா...
இது பொண்ணோட பேரா?
இல்ல...சாமியார் உடுத்தற காவித் துணினா..பென்ஸ் மட்டுமா???:D :D

ஓவியா
19-07-2006, 03:33 PM
ஓவியா இளைத்துத்தான் போனாரோ ஆவியா(ய்)......
பென்ஸூ கட்ட எண்ணுவது காவியா...

அப்ப பென்ஸ்க்கு பார்த்தாகிவிட்டதா?...:D :D

பென்ஸ் + காவியா = பென்ஸ்க்காவி....யா
பென்ஸ்க்கு இவ்வலவு சிக்கிரமா காவி.....யா.....:eek: :eek:
(எல்லாம் நம்ப தொல்லை தாங்காமல் தான்)

அப்ப இனிமேல்
பஜனை பன்னலாம் வாங்க
பக்தி மான்கள் நாங்கள் தானா...:D

செல்வன் அண்ணா
அந்த மஞ்சள் வெட்டி மொத்தமும் கொடுத்தாகி விட்டதா?
நம்ப மாப்பிளைக்கு ஒன்னு தேவைப்படுது போல.....:D

sarcharan
20-07-2006, 05:10 AM
சரவணன்..ஒரு சந்தேகம்..
காவியா...இது பொண்ணோட பேரா?
இல்ல...சாமியார் உடுத்தற காவித் துணினா..பென்ஸ் மட்டுமா???:D :D

அது எப்படி மதி அந்த பாயிண்ட மட்டும் கரெக்டா புடிச்சீங்க...

இதுல உங்க ஆதங்கத்தை(மனக்குறையை)வேறு தெரிவித்துள்ளீர்கள்..

sarcharan
20-07-2006, 05:15 AM
அப்ப பென்ஸ்க்கு பார்த்தாகிவிட்டதா?...:D :D

ஆமாமா பென்ஸ் பல பேரை பாத்தாகிவிட்டது...

பென்ஸ் + காவியா = பென்ஸ்க்காவி....யா
பென்ஸ்க்கு இவ்வலவு சிக்கிரமா காவி.....யா.....:eek: :eek:
(எல்லாம் நம்ப தொல்லை தாங்காமல் தான்)

என்ன பென்ஸூ நீங்க தீஸிஸ் எழுதறீங்களோ இல்லையோ ஓவியா உங்களை வைத்து தீஸிஸ் தலைப்பு எழுதியாச்சு

மயூ
20-07-2006, 05:44 AM
கலியான புரோக்கர் வேலையும் இங்க நடக்குதா?

தாமரை
20-07-2006, 06:54 AM
அப்ப பென்ஸ்க்கு பார்த்தாகிவிட்டதா?...:D :D

பென்ஸ் + காவியா = பென்ஸ்க்காவி....யா
பென்ஸ்க்கு இவ்வலவு சிக்கிரமா காவி.....யா.....:eek: :eek:
(எல்லாம் நம்ப தொல்லை தாங்காமல் தான்)

அப்ப இனிமேல்
பஜனை பன்னலாம் வாங்க
பக்தி மான்கள் நாங்கள் தானா...:D

செல்வன் அண்ணா
அந்த மஞ்சள் வெட்டி மொத்தமும் கொடுத்தாகி விட்டதா?
நம்ப மாப்பிளைக்கு ஒன்னு தேவைப்படுது போல.....:D

ஓவியா அது சுட்ட பழம்.. என்னுடையது அல்ல...:D :D

மதி
20-07-2006, 08:09 AM
அது எப்படி மதி அந்த பாயிந்த மட்டும் கரெக்டா புடிச்சீங்க...

இதுல உங்க ஆதங்கத்தை(மனக்குறையை)வேறு தெரிவித்துள்ளீர்கள்..
என் ஆதங்கமில்ல சரவணன்..எனக்கு தெரிஞ்சவர் குடும்ப செலவுகள நினச்சு பயந்து போயிருக்கார். அவரோட ஆதங்கத்த எழுதினேன்..

pradeepkt
20-07-2006, 09:10 AM
என் ஆதங்கமில்ல சரவணன்..எனக்கு தெரிஞ்சவர் குடும்ப செலவுகள நினச்சு பயந்து போயிருக்கார். அவரோட ஆதங்கத்த எழுதினேன்..
அந்தத் தெரிஞ்சவருக்கும் தெரிஞ்சவர்தான் நானு!
மதி, உனக்குத் தெரிஞ்சவருக்கும் இது தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். :rolleyes:

மதி
20-07-2006, 09:22 AM
அந்தத் தெரிஞ்சவருக்கும் தெரிஞ்சவர்தான் நானு!
மதி, உனக்குத் தெரிஞ்சவருக்கும் இது தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். :rolleyes:

இன்னேரம் தெரிஞ்சிருக்கும்..

sarcharan
20-07-2006, 09:27 AM
அந்தத் தெரிஞ்சவருக்கும் தெரிஞ்சவர்தான் நானு!
மதி, உனக்குத் தெரிஞ்சவருக்கும் இது தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். :rolleyes:

என்ன சிலேடைப் பேச்சா....

மதி
20-07-2006, 09:54 AM
என்ன சிலேடைப் பேச்சா....
எங்கப்பா குதிருக்குள்ள இல்ல..:D :D :D

தாமரை
20-07-2006, 09:58 AM
சந்தோஷமா, நிம்மதியா இருக்கும் பசங்கலை எப்படியேல்லாம் அன்பா கவனிக்கலாம்னு தான் :D :D :D

வாழ்வு தந்த எங்களை நினைத்து சந்தோஷபடவும்....:mad: :eek: :cool: ;) :) :D :D :

ஆம் பிரதீப் நேற்றுதான் விடுத்திக்கு திரும்பினோம்...
என் அறை ஒரே வெள்ளம்....சுத்தம் செய்து முடிப்பதர்க்குள்...
(ஒட்டியானத்தில் இருத்து வளயலாய் இளைத்துவிட்டேன்.....:D )

யார் கொடுத்து வச்சிருக்காங்களோ!!! ..

இன்னும் கொஞ்சம் இளைச்சு மோதிரமாயிடுங்களேன்..

pradeepkt
20-07-2006, 11:42 AM
யார் கொடுத்து வச்சிருக்காங்களோ!!! ..

இன்னும் கொஞ்சம் இளைச்சு மோதிரமாயிடுங்களேன்..
சௌக்கியமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஓவியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சௌக்கியமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

அட... அந்தா இந்தான்னு "மாண்டுஃ" ராகம் நினைவுக்கு வந்துருச்சே, இந்த மண்டுவுக்கு!!! :D

ஓவியா
20-07-2006, 01:31 PM
யார் கொடுத்து வச்சிருக்காங்களோ!!! ..
இன்னும் கொஞ்சம் இளைச்சு மோதிரமாயிடுங்களேன்..

இதென்ன இங்கே இப்படி எழுதி போட்டுட்டு
பாட்டுக்கு பாட்டுலா ஓவியா மாதிரி இருக்கக்கூடாதுனு உண்மையை எழுதியாச்சா...?

தாமரை
20-07-2006, 01:33 PM
இதென்ன இங்கே இப்படி எழுதி போட்டுட்டு
பாட்டுக்கு பாட்டுலா ஓவியா மாதிரி இருக்கக்கூடாதுனு உண்மையை எழுதியாச்சா...?

அதுக்கு பதிலும் எழுதியாச்சே! அவன் குடுத்து வச்சது அவ்வளவுதான் :rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
20-07-2006, 01:34 PM
சௌக்கியமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஓவியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சௌக்கியமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

அட... அந்தா இந்தான்னு "மாண்டுஃ" ராகம் நினைவுக்கு வந்துருச்சே, இந்த மண்டுவுக்கு!!! :D

ஆமம்மாம் கண்னு சௌக்கியம் தான்......:D :D

மோதிரம் போல் இளைத்தால்....:eek: :eek:
ஒடிந்துடுவேன்...:D :D :D

தாமரை
20-07-2006, 01:35 PM
ஆமம்மாம் கண்னு சௌக்கியம் தான்......:D :D

மோதிரம் போல் இளைத்தால்....:eek: :eek:
ஒடிந்துடுவேன்...:D :D :D

அப்போ விஜய் ஏன்

ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு
ஒத்தை விரல் மோதிரம் போதுமடி அதுக்கு

அப்படின்னு பாடினாரு

அப்பாவி...

ஓவியா
20-07-2006, 01:41 PM
அதுக்கு பதிலும் எழுதியாச்சே! அவன் குடுத்து வச்சது அவ்வளவுதான் :rolleyes: :rolleyes: :rolleyes:

எப்படியோ உண்மையை சைக்கிள் கேப்பில் சொல்லியாச்சு......

சமாலிபிகேஷனை பார்த்தேன்...:D :D

பதில் எழுத.............
மனதில் அறுவிபோல் எண்ணம் தொன்றியது
ஆனால் கமால் போல் வார்த்தைதான் வரவில்லை.....

தாமரை
20-07-2006, 01:44 PM
எப்படியோ உண்மையை சைக்கிள் கேப்பில் சொல்லியாச்சு......

சமாலிபிகேஷனை பார்த்தேன்...:D :D

பதில் எழுத.............
மனதில் அறுவிபோல் எண்ணம் தொன்றியது
ஆனால் கமால் போல் வார்த்தைதான் வரவில்லை.....

எனக்குத்தான் அப்படிப்பட்ட எண்ணங்கள் வரும் என்று நினைத்தேன்! அப்பு ஜாக்கிரதை அப்பு ஏற்கெனவே தம்பி மயூ ரேசரு இருக்காரு. இன்னொரு அறுவையை மன்றம் தாங்காது...

ஓவியா
20-07-2006, 01:52 PM
அப்போ விஜய் ஏன்

ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு
ஒத்தை விரல் மோதிரம் போதுமடி அதுக்கு

அப்படின்னு பாடினாரு
அப்பாவி...

அப்பாவிதான்
உண்மையை சொல்லவும் யருக்காவது இதுவரை மொத்திரத்தை ஒட்டியானமா அணிந்திருப்பர்களா.....

பின் குறிப்பு
அது யாருக்கொ தொப்பையை குறைக்க வழி தேடுராங்களே...:D
பதிலுக்கு அவரும் என்க்கு தொப்பை இல்லைனு சொல்லிக்கிட்டு இருகாறாமே...:D
ஒருவேளை அவரை ரோல்மோடலா வச்சு பாடிருப்பர் போல

தாமரை
20-07-2006, 02:14 PM

அது ரோல் மாடல் இல்லை.. ரோட் ரோலர்...:rolleyes: :rolleyes: :rolleyes:

sarcharan
20-07-2006, 03:23 PM
பின் குறிப்பு
அது யாருக்கொ தொப்பையை குறைக்க வழி தேடுராங்களே...:D
பதிலுக்கு அவரும் என்க்கு தொப்பை இல்லைனு சொல்லிக்கிட்டு இருகாறாமே...:D
ஒருவேளை அவரை ரோல்மோடலா வச்சு பாடிருப்பர் போல

இதுக்கு ராசா பதில சொல்லு ராசா

தாமரை
21-07-2006, 04:39 AM
இதுக்கு ராசா பதில சொல்லு ராசா
உனக்கும் காலம் வரு ராசா.. அனிருத்துக்கு டிரெய்னிங் குடுக்கறேன் இரு ,,:rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
21-07-2006, 05:04 AM
சரவணா,
ஒரே வழிதானிருக்கு உனக்கு இப்போ...
நீ நல்லவனா மாறுறது.. இல்லைன்னா... ஆட்டோ ஏற்கனவே செல்வன் வீட்டு வாசல்ல ரெடியா இருக்கு!
இன்னொரு ஆட்டோ கனடாவுக்கும் அனுப்பத் தயார் பண்ணிட்டு இருக்கோம்

தாமரை
21-07-2006, 05:08 AM
சரவணா,
ஒரே வழிதானிருக்கு உனக்கு இப்போ...
நீ நல்லவனா மாறுறது.. இல்லைன்னா... ஆட்டோ ஏற்கனவே செல்வன் வீட்டு வாசல்ல ரெடியா இருக்கு!
இன்னொரு ஆட்டோ கனடாவுக்கும் அனுப்பத் தயார் பண்ணிட்டு இருக்கோம்

ஆட்டோ வந்தாலும் ஆட்ட முடியாது.. கனடாவுக்கு எதுக்கு ஆட்டோ.. லண்டனுக்கு தானே அனுப்பனும்??

சரி சரி.. ஆத்திரக்...:eek: :eek: :eek:

pradeepkt
21-07-2006, 05:11 AM
ஆட்டோ வந்தாலும் ஆட்ட முடியாது.. கனடாவுக்கு எதுக்கு ஆட்டோ.. லண்டனுக்கு தானே அனுப்பனும்??

சரி சரி.. ஆத்திரக்...:eek: :eek: :eek:
யோவ், உங்களை ஆட்டோ தயார் பண்ணி லண்டனுக்கு (மாத்திட்டம்ல) அனுப்பச் சொன்னா ஏன் டென்ஷன் ஆகி வெற்றி கொண்டான் ரேஞ்சுக்கு சவால் விடுறீங்க... :rolleyes: :rolleyes:

தாமரை
21-07-2006, 05:13 AM
யோவ், உங்களை ஆட்டோ தயார் பண்ணி லண்டனுக்கு (மாத்திட்டம்ல) அனுப்பச் சொன்னா ஏன் டென்ஷன் ஆகி வெற்றி கொண்டான் ரேஞ்சுக்கு சவால் விடுறீங்க... :rolleyes: :rolleyes:

அப்ப ரோட் ரோலரை படிக்கலியா???:rolleyes: :rolleyes: :rolleyes:

தாமரை
03-05-2007, 03:25 PM
அந்தத் தெரிஞ்சவருக்கும் தெரிஞ்சவர்தான் நானு!
மதி, உனக்குத் தெரிஞ்சவருக்கும் இது தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். :rolleyes:

தெரிஞ்ச தெரிஞ்சவருக்கு தெரிஞ்சவரே தெரிஞ்சது இப்ப தெரியுதா?:Christo_pancho:

ஆதவா
03-05-2007, 04:17 PM
தெரிஞ்ச தெரிஞ்சவருக்கு தெரிஞ்சவரே தெரிஞ்சது இப்ப தெரியுதா?:Christo_pancho:

ஒன்னுந்தெரியலையே :icon_smokeing:

ஓவியா
04-05-2007, 12:02 AM
தெரிஞ்ச தெரிஞ்சவருக்கு தெரிஞ்சவரே தெரிஞ்சது இப்ப தெரியுதா?:Christo_pancho:

பிரதீப்,
டிமிக்கி போதும் இப்போ அண்ணாவின் கேள்விக்கு விடை தாரும்.

மதி
04-05-2007, 03:27 AM
தெரிஞ்ச தெரிஞ்சவருக்கு தெரிஞ்சவரே தெரிஞ்சது இப்ப தெரியுதா?:Christo_pancho:
தெரிஞ்சிருக்கும் தெரிஞ்சிருக்கும் :icon_dance: :icon_dance:

ஓவியா
04-05-2007, 10:57 PM
தெரிஞ்சிருக்கும் தெரிஞ்சிருக்கும் :icon_dance: :icon_dance:

நான் நம்பலே

- எண்ணை வியாபாரி

lolluvathiyar
16-08-2007, 11:51 AM
அப்பப்ப பேச்சுலரா ஜாலிய சுத்தர ஒருத்தர சமூகம் எப்படி எல்லாம் பொறாமையில் கின்டல் பன்னி அதலபாதளத்தில் தள்ளும்னு அருமையான கட்டுரையா எழுதிபுட்டாரே நம்ம தாமரை.

சரிங்க எப்ப கல்யானம் பன்ன போறீங்க. எனக்கு அழப்பு உண்டா

ஓவியா
17-08-2007, 12:55 AM

!!!!!!!!!!!!! ?????????

− :traurig001::traurig001::traurig001:

ஆதவா
17-08-2007, 01:00 AM
அப்பப்ப பேச்சுலரா ஜாலிய சுத்தர ஒருத்தர சமூகம் எப்படி எல்லாம் பொறாமையில் கின்டல் பன்னி அதலபாதளத்தில் தள்ளும்னு அருமையான கட்டுரையா எழுதிபுட்டாரே நம்ம தாமரை.

சரிங்க எப்ப கல்யானம் பன்ன போறீங்க. எனக்கு அழப்பு உண்டா

அநிருத்தே வ*ந்து உதைப்பான்...... வாத்தியாரே! அவ*ருக்கு க*ல்யாண*மாகி இரு குழ*ந்தைக*ள் உள்ளார்க*ள்.

!!!!!!!!!!!!! ?????????

− :traurig001::traurig001::traurig001:

இதுக்கு நீங்க ஏங்க அழறீங்க?

ஓவியா
17-08-2007, 01:20 AM
அவருக்கு இப்படி கல்யாண கலை சுத்தி சுத்தி அடிக்குதேனு பொறாமைதான். சொந்த கத சொக கத.

வெண்தாமரை
17-08-2007, 08:18 AM
அட நீங்க வேற வீட்டிற்குள் இருந்தாலும் தேடி வந்து வம்பு இழுகிறார்கள்.. யாரவது அண்ணாவின் நண்பர்கள் அவர்களது உறவினர் வந்தால் உன்ன பொண்ணு பாக்க வந்தாகளா? அப்படி ஒரு குதறல்.. நமது கதறலை எங்கே போய் சொல்வது?.. கல்யாணம் தற்போது வேண்டாம் என்று சொன்னால் எழு கழுதை வயசாச்சி இன்னும் கல்யாணம் வேண்டாம் வேண்டாம் என்கிற என்று ஏக அர்ச்சனைகள்.. என்ன தான் செய்ய??

தாமரை
20-08-2010, 10:13 AM
மதியழகன் சுப்பையா (http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE,%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88)வின் கட்டுரை இது. திண்ணை (http://www.thinnai.com/) யில் இருந்து எடுத்தாளப்பட்டது.

இப்போ மீளப்படிக்கறப்ப...

இந்த மதி நம்ம மதியோன்னு ஒரு தக்கணூண்டு டவுட் வருது.. இல்லை.. மதின்னு பேர வச்சாவே இப்படியோ?

தாமரை
27-08-2010, 10:31 AM
இதை அமரன் இப்ப படிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

அமரன்
27-08-2010, 10:38 AM
இதை அமரன் இப்ப படிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

நிறையப்பேரு மாட்டி முழிச்சிருக்காங்களே.. நானும் மாட்டிக்கொண்டு முழிக்கலாமே என்றுதான்..

அமரன்
27-08-2010, 10:42 AM
இதுபோல நிறை மதி காணாத நிறைய மதியைப் கண்டிருக்கிறேன்.

கல்யாணமாகாதவர் ஆணா இருந்தா என்ன., பெண்ணா இருந்தா என்ன, சங்கடங்களைச் சந்திச்சுத்தான் தீரனும்.

ஆகவே மதி.. சீக்கிரமே கட்டிடுங்க.