PDA

View Full Version : ப(ல்)டிங்க முதல்லஇனியவன்
18-07-2006, 09:34 AM
பிரபல ஹாலிவுட் நடிகை கேத் ஹட்சன் நீச்சல் உடையில் இருந்ததை ஹெலிகாப்டரில் பறந்தபடி ரசித்த அமெரிக்க கடற்படை வீரர், நிலை தடுமாறி ஹெலிகாப்டருடன் கீழே விழுந்தார்.

இதுகுறித்து அமெரிக்க கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை கேத் ஹட்சன் நடித்து வரும் யூ, மி அன்ட் டுப்ரீ என்ற படத்தின் ஷுட்டிங் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.

இதற்காக நீச்சல் உடையில் ஹட்சன் இடம் பெறும் காட்சிகளை கடற்கரையில் வைத்துப் படமாக்கி வந்தனர். அப்போது அமெரிக்கக் கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று வானில் மிகவும் தாழ்வாக பறந்தபடி வந்தது.

ஹட்சன் இருந்த இடத்திற்கு மேலே சில நிமிடங்கள் அந்த ஹெலிகாப்டர் நிலை கொண்டிருந்தது. பின்னர் தட்டுத் தடுமாறியபடி பறந்த அந்த ஹெலிகாப்டர் அருகில் இருந்த புதரில் போய் ஹெலிகாப்டர் விழுந்தது.
பலத்த சப்தத்துடன் ஹெலிகாப்டர் விழுந்ததால் ஷுட்டிங் ஸ்பாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை ஹட்சன் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது, ஹெலிகாப்டரில் ஒரு வீரர் மட்டும் இருந்தது தெரிய வந்தது.

நடிகை ஹட்சனை நீச்சல் உடையில் பார்க்க விரும்பிய அவர் ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக தோன்றிய ஹட்சனை வானில் வட்டமடித்தபடி ரசித்துப் பார்த்துள்ளார்.

அவரது அழகில் மூழ்கிய அவர் தடுமாறி ஹெலிகாப்டருடன் கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஹட்சன் கூறுகையில், நான் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக தோன்றியது அந்த வீரரை தூண்டி விட்டதாக உணர்கிறேன்.

எனது அழகை ரசித்த அவர் ஹெலிகாப்டரை இயக்க முடியாமல் தடுமாறி விழுந்து விட்டார். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. நல்லவேளையாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றார் ஹட்சன்.

நடிகையை ரசிப்பதற்காக கடற்படை ஹெலிகாப்டரை எடுத்துச் சென்ற அமெரிக்க வீரரிடம் இப்போது கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்லவேளை, ஹெலிகாப்டரை விட்டு விட்டு, நடிகை மீது பாயாமல் இருந்தாரே!

தாமரை
18-07-2006, 12:10 PM
அந்தச் சிரிப்பைப் பார்த்தால் கவுக்குற மாதிரிதான் தெரியுது!..

mgandhi
06-08-2006, 06:51 PM
நல்ல வேலை அவர் விமானத்தை ஒட்டி வரவில்லை

gragavan
07-08-2006, 06:39 AM
அடப்பாவி...நல்லவேள...யார் செஞ்ச புண்ணியமோ....பொழச்சான்.

sarcharan
07-08-2006, 07:33 AM
அந்தச் சிரிப்பைப் பார்த்தால் கவுக்குற மாதிரிதான் தெரியுது!..
ஹை நல்லா வேணும் விழுந்தியா என்னும் கேலிச்சிரிப்போ??;)

sarcharan
07-08-2006, 07:36 AM
பின்னே, ரசிகன் ஜாக்கிரதையாய் ரசிக்க வேண்டாமோ? ஏன் பென்ஸூ!! ஒருவேளை ஹெலிகாப்டர் சரியாய் இயங்கவில்லையோ??:p :p

தாமரை
07-08-2006, 03:46 PM
அதில எதாவது கிராக் டெவலப் ஆகியிருக்கும்னு சந்தேகப்படறியளோ???

பென்ஸ்
07-08-2006, 04:22 PM
நம்ம சென்னையில "டட்டானிக்" ஓடுற ஒரு தியேட்டர் முன்னால, ஒரு "அழகிய" வெளி நாட்டு பெண் நின்று கூட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்க்கு, இந்த கூட்டத்தை பார்த்து மிகுந்த வருத்தமாம்...
வருத்தபட்டவர் வேறு யாருமல்ல " கேட் வின்ஸ்லேட்" தான்... பாவன் யாரும் அவரை அடயாளம் கண்டுக்கலையாம்...
முதலில் கேலிகாப்பரில் இருந்து ரசித்த நம்ம ஆளை பாராட்டனும்...
ஆமா... இப்ப எதுக்கு அதுல "கிராக்" இருக்கா இல்லையான்னு சொல்லிகிட்டு... அவனை கேலிகாப்டர் "ஜாய் ஸ்டிக்"க்கை மட்டும் பிடிக்க சொல்லி இருக்கனும்... அதை விட்டுடு வேற எதாவது செஞ்ஜா... இப்படிதான் விபத்து நடக்கும்...

தீபன்
07-08-2006, 05:24 PM
இப்ப எதுக்கு அதுல "கிராக்" இருக்கா இல்லையான்னு சொல்லிகிட்டு... அவனை கேலிகாப்டர் "ஜாய் ஸ்டிக்"க்கை மட்டும் பிடிக்க சொல்லி இருக்கனும்... அதை விட்டுடு வேற எதாவது செஞ்ஜா... இப்படிதான் விபத்து நடக்கும்...

என்னண்ண விசயத்தை விவகாரமாக்கிறியள் போல கிடக்கு...!

sarcharan
08-08-2006, 05:52 AM
நம்ம சென்னையில "டட்டானிக்" ஓடுற ஒரு தியேட்டர் முன்னால, ஒரு "அழகிய" வெளி நாட்டு பெண் நின்று கூட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்க்கு, இந்த கூட்டத்தை பார்த்து மிகுந்த வருத்தமாம்...
வருத்தபட்டவர் வேறு யாருமல்ல " கேட் வின்ஸ்லேட்" தான்... பாவன் யாரும் அவரை அடயாளம் கண்டுக்கலையாம்...
முதலில் கேலிகாப்பரில் இருந்து ரசித்த நம்ம ஆளை பாராட்டனும்...
ஆமா... இப்ப எதுக்கு அதுல "கிராக்" இருக்கா இல்லையான்னு சொல்லிகிட்டு...
...நம்ம
அவனை கேலிகாப்டர் "ஜாய் ஸ்டிக்"க்கை மட்டும் பிடிக்க சொல்லி இருக்கனும்... அதை விட்டுடு வேற எதாவது செஞ்ஜா... இப்படிதான் விபத்து நடக்கும்...

பாத்து பெ(ண்)ன்ஸூ பண்பட்டவர் பகுதிக்கு மாத்தீரப்போறாங்க...