PDA

View Full Version : காலப்பானை



இளசு
17-07-2006, 09:10 PM
காலப்பானை..



அளிக்கப்பட்டது
அழகிய தங்கப்பானை.
அள்ளும் அகப்பை எல்லாம்
அளந்து வைத்த துளிகள்..

உடற்கோவில் கட்ட
கல்வி விளக்கேற்ற
செல்வ மலர் சேகரிக்க
பாச ஆராதனை பாட
நட்பு முழுக்காட
சுக வேள்வி எரிக்க
துயிலாகி புதிதாக

திருப்தி என்னும் கானலை
திருப்தி இல்லாமல் தேட

தன்னை மதித்து -தன்னைப்போல்
பிறரை மதித்து - பின்னர்
பிறர் மதிப்பை ஈன
உள்(ளக்) கிரகத்தில்
உண்மைச் சுயம் காண
...
ஒவ்வாருவருக்கும் அளிக்கப்பட்டது
ஒரே ஒரு தங்கப்பானை..
எடுக்கும் அகப்பை எல்லாம்
எண்ணி இருபத்து நாலே துளிகள்..
.....
அள்ளி இரைத்துத் தீர்க்கும்வகை
அனைத்தும் சுய விருப்பம்
...
எப்படி செலவழிப்பேன்..?
என் விருப்பம்..!
எப்படி செலவழித்தேன் ?
காலிப்பானை சொல்லும்..

-------------------------------------------------------------

தாமரை
18-07-2006, 04:03 AM
காலப்பானை ஒரு ஓட்டைப்பானையும் கூட. பொன்னான மணித்துளிகள் ஒழுகிக் கொண்டே இருக்கின்றன..

இளசு
24-07-2006, 09:45 PM
காலப்பானை ஒரு ஓட்டைப்பானையும் கூட. பொன்னான மணித்துளிகள் ஒழுகிக் கொண்டே இருக்கின்றன..

கருத்துக்கு நன்றி செல்வன்..

(காலத்தின் அருமை கருதி சுருக்கமாகச் சொன்னீர்கள் போல,,,,:) )

ஒழுகினாலும் சரி.. அள்ளி ஊற்றினாலும் சரி..
போனால் வாராது.. 'பொழுது' வந்தால் தங்காது...

ஒரு முறை.. ஒருவழி... அது செலவு வழி மட்டும்...

அதுதான் காலத்தின் பெரும்பண்பு...

பென்ஸ்
25-07-2006, 02:08 AM
காத்திருக்கையில் குளத்தை
கல்லால் கலைத்து..

புகைவண்டி வர தாமதித்தால்
வெண்குழல் புகைத்து..

பலவந்தமாய் தூங்கி..

ஒன்றாம் வகுப்பில் படித்த
ஒன்று இரண்டு மூண்றை
நூறில்லிருந்து தலைகீழாக சொல்லி...

தொலைத்த நேரம்...

அவள் பிரிந்து போகையில்
கைவிட்டு போன கற்களை போல்..

-----------------------------------------

இளசு.... நேரம் தொலைந்தாலும் , தொலைத்த நேரத்தில்
கிடைத்ததேன்ன என்று புரியுமானால் பயமில்லையே....

செல்வன்: அதாவது சொட்டு நீர் பாசனம் மாதிரி இல்லையா...
கொஞ்ச தண்ணீரில் நல்ல விளைச்சல்...

பி.கு: இருந்தாலும் நம்ம ஐன்ஸ்டின் பற்றியும் அவர்
எழுத்துக்கள் பற்றியும் கொஞ்சம் படிச்சுட்டு காலம் பற்றி நமக்கு
சண்டை போடலாம். சரியா தெரியலை... இவரு எதோ டைம் சேவிங்
(உடனே 7ஓ கிளாக்கா என்று கேக்க கூடாது) டைம் கேய்னிங் பற்றி
சொல்லி இருக்கிறார்...

தாமரை
25-07-2006, 04:09 AM
காத்திருக்கையில் குளத்தை
கல்லால் கலைத்து..

புகைவண்டி வர தாமதித்தால்
வெண்குழல் புகைத்து..

பலவந்தமாய் தூங்கி..

ஒன்றாம் வகுப்பில் படித்த
ஒன்று இரண்டு மூண்றை
நூறில்லிருந்து தலைகீழாக சொல்லி...

தொலைத்த நேரம்...

அவள் பிரிந்து போகையில்
கைவிட்டு போன கற்களை போல்..

-----------------------------------------

இளசு.... நேரம் தொலைந்தாலும் , தொலைத்த நேரத்தில்
கிடைத்ததேன்ன என்று புரியுமானால் பயமில்லையே....

செல்வன்: அதாவது சொட்டு நீர் பாசனம் மாதிரி இல்லையா...
கொஞ்ச தண்ணீரில் நல்ல விளைச்சல்...

பி.கு: இருந்தாலும் நம்ம ஐன்ஸ்டின் பற்றியும் அவர்
எழுத்துக்கள் பற்றியும் கொஞ்சம் படிச்சுட்டு காலம் பற்றி நமக்கு
சண்டை போடலாம். சரியா தெரியலை... இவரு எதோ டைம் சேவிங்
(உடனே 7ஓ கிளாக்கா என்று கேக்க கூடாது) டைம் கேய்னிங் பற்றி
சொல்லி இருக்கிறார்...

ஐன்ஸ்டீனின் டைம் கெய்னிங் கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு கிடையாது பெஞ்சமின் அவர்களே..

டைம் ஒரு மிக நல்ல மாணவன். அது ஃபெயில் ஆனதே கிடையாது.(டைம் பாஸ்தான்.. டைம் ஃபெயில் கிடையாது) காலம் படித்தது வரலாறு..

அவள் பிரிந்து போகையில் கற்கள் ஏன் கைவிட்டு கற்கள் போயின? அதாவது அவள் இருக்கையில் கையில் கற்கள்.. அதாவது அவளைக் கண்டால் கையில் கல் அதாவது கல்லைக் கண்டால்....

பென்ஸ்
25-07-2006, 10:38 AM
:-)... அடடே.. அடடே...

ஓவியா
25-07-2006, 11:09 AM
திருப்தி என்னும் கானலை
திருப்தி இல்லாமல் தேட
(இது விளங்கவில்லை)

கவிதையின் தக்துவங்கள் அழகு....
நன்றி இளசு

பெஞ்சு இப்படி சொல்லியிருக்கலாம்...

அவள் பிரிந்து போகையில்
கைவிட்டு போன நவரத்தின கற்களை போல்..:D :D

அதாவது கல்லைக் கண்டால்....:eek: :eek:
(பெஞ்சு, அவையில் புலவர்களின் எண்னிக்கை அதிகம்...;)
அடுத்த முறை உஷார்....:D :D :D )

gragavan
25-07-2006, 11:22 AM
காலம்
நிற்காது போடப்படும் கோலம்
யாரும் அறியார்
அது கடந்திட்ட ஆழம்
முறையாகப் பயன்படுத்தாவிட்டால்
வாழ்க்கை ஆகிவிடும் கூளம்!

தாமரை
25-07-2006, 12:12 PM
காலம்
நிற்காது போடப்படும் கோலம்
யாரும் அறியார்
அது கடந்திட்ட ஆழம்
முறையாகப் பயன்படுத்தாவிட்டால்
வாழ்க்கை ஆகிவிடும் கூளம்!

சில கூளங்கள்
மக்கி மண்ணுக்கு உரமாய்
சில பிளாஸ்டிக்காய்
சமுதாயத்தை சீரழித்து..

இளசு
26-07-2006, 10:35 PM
[quote=benjaminv]
காத்திருக்கையில் குளத்தை
கல்லால் கலைத்து..

புகைவண்டி வர தாமதித்தால்
வெண்குழல் புகைத்து..

பலவந்தமாய் தூங்கி..

ஒன்றாம் வகுப்பில் படித்த
ஒன்று இரண்டு மூன்றை
நூறில்லிருந்து தலைகீழாக சொல்லி...

தொலைத்த நேரம்...

அவள் பிரிந்து போகையில்
கைவிட்டு போன கற்களை போல்..

-----------------------------------------
இனிய பென்ஸ்,

இந்தப் பதில் கவிதையால்
இந்தப் பதிவின் கனமும் அழகும்
பல மடங்கு கூடிவிட்டது..


நேரங்கள் கழியும் விதங்களை
நீங்கள் சொன்ன விதம்
எனக்கும், எவர்க்கும் பொருந்தும்.

பலமுறை படித்தேன்..
பாராட்டும் நன்றியும்..

இளசு
26-07-2006, 10:38 PM
திருப்தி என்னும் கானலை
திருப்தி இல்லாமல் தேட
(இது விளங்கவில்லை)

கவிதையின் தக்துவங்கள் அழகு....
நன்றி இளசு



நன்றி ஓவியா..

கானல் நீரைத் தேடி ஓடினால்
தாகம் இன்னும் அதிகமாகும்.

வாழ்வில் திருப்தி என்பது கானல்..
தேடத் தேட இன்னும் ஏமாற்றமே எஞ்சும்....

இளசு
26-07-2006, 10:40 PM
காலம்
நிற்காது போடப்படும் கோலம்
யாரும் அறியார்
அது கடந்திட்ட ஆழம்
முறையாகப் பயன்படுத்தாவிட்டால்
வாழ்க்கை ஆகிவிடும் கூளம்!

காலப்பானை - இதைவிட
காலம்.. நில்லாத ஒரு கோலம்..

இந்த உருவகம் இன்னும் பொருத்தம்.

பாராட்டும் நன்றியும் இராகவன்..

பாரதி
27-07-2006, 02:35 PM
அகழ்வில் கிட்டுவது காலிப்பானை மட்டும்
கலப்பனை இல்லாத காலப்பானை
காலிப்பானை அல்ல.
காலமும் நிற்கும் கல் பனை.

இனியவன்
27-07-2006, 03:09 PM
கால காலமாய் வாழும் காலப்பானை,
நன்றி இளசு.