PDA

View Full Version : அம்மாஆஆஆ!

மதி
14-07-2006, 07:12 AM
நேத்து மாலை சுமார் 7:30 மணியளவில் ஆபிஸில் மீட்டிங்கில் இருந்தபோது (அப்பப்போ கொஞ்சம் வேலையும் செய்வேணுங்கோ..!) AMMA calling. செல்போனை கட் பண்ணிட்டேன். மீட்டிங் முடிஞ்சப்புறம் அம்மா செல்போன்ல (எங்க வீட்டில நாலு பேருக்கும் ஆளுக்கொரு செல்போன். வீடு கட்டும் போது தேவைப்பட்டதால் வாங்கியது. வேற பந்தா ஒன்னுமில்ல) கூப்பிட்டேன்.

மதி: ஹலோ.
அம்மா : ம்.. சொல்லுப்பா.
மதி: நீங்க தான் கூப்பிட்டீங்க. என்ன விஷயம்?
அம்மா : ஒன்னுமில்ல. நீ பேசி நாலு நாளைக்கு மேலாச்சு. அதான் பேசலாமேன்னு. அங்க என்ன விசேஷம்.
மதி : அதெல்லாம் ஒன்னுமில்ல. வாழ்கையே வெறுக்குது. அதான் இமயமலைக்கு போலாமானு யோசிச்சுட்டிருக்கேன்.
அம்மா: நானும் வர்றேன். என்னையும் கூட்டிட்டு போ.
மதி : உலக பந்தங்கள விட்டுட்டு போலாம்னு பாக்குறேன். நீங்களும் வர்றேங்கறீங்களே..

(எப்பவும் எங்க உரையாடல் இப்படி தான் ஆரம்பிக்கும்)

அம்மா :நானும் தான் விட போறேன். அதான் கூட்டிட்டு போங்கறேன். சரி. என்ன ரொம்ப வேலையா?
மதி : (பந்தாவா) ஆமாம்மா. இப்பல்லாம் எப்பவும் டெலிகான், மீட்டிங்.வேலை பாக்க சொல்றாங்க..ஹ்ம்ம். அதான் உங்க ஞாபகமே வர்றதில்ல.
அம்மா : என் ஞாபகம் இல்லாம வேற யார் ஞாபகம் வருது. சொல்லு.
மதி : ஹ்ம்ம்.. ஒன்னுமில்ல. யாரும் ஞாபகத்துக்கு வர்றதில்ல. அதான் உங்களுக்கு போன் பண்றதில்ல.
அம்மா : சரிடா.. நான் கூட இப்பல்லாம் ரொம்பவே பிஸி.
மதி : என்னாது?
அம்மா :ஆமாம்டா. இங்க நம்ம ஏரியால மகளிர் மன்றம் ஆரம்பிச்சிருக்கோம். போன வெள்ளிக்கிழம மீட்டிங் வச்சு ஒருத்தங்கள தலைவியா தேர்ந்தெடுத்தோம். என்ன செயலாளரா தெர்ந்தெடுத்தாங்க.
மதி : (ஆச்சர்யதுடன்) அப்படியா..ஹ்ம்ம்..அப்புறம்.
அம்மா :அப்புறம். ஞாயித்துக்கிழம கவுன்சிலர், ஆபிஸருங்க எல்லார் வீட்டுக்கும் போய் நம்ம ஏரியாக்கு தண்ணித் தொட்டியும், ரோடும், தெருவிளக்கும் சீக்கிரம் கொண்டு வரணும்னு மனுகொடுத்தோம்.
மதி : (விலகாத ஆச்சர்யத்துடன்) அம்மா..கலக்குறியேம்மா..
அம்மா :அப்படியே மேயர் வீட்டுக்கும் போய் மனு கொடுத்தோம். செவ்வாக்கிழமையிலேர்ந்து லாரியில தண்ணி கொண்டு வந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம வீட்டுக்கு பக்கத்துலேயே வருது.
மதி :பின்ன. செயலாளர்னா சும்மாவா.?அது சரி. அடுத்த வாரம் ஊருக்கு வரலாம்னு இருக்கேன். வரலாமா..?அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா.
அம்மா :வர்றதுன்னா வா. வீடு தான் இருக்குல்ல இருந்துட்டு போ.
மதி : என்னா.இருந்துட்டு போவா. அப்படின்னா..?
அம்மா :கோவிச்சுக்காதடா..இது உன் வீடு.எப்ப வேணும்னாலும் வா. நான் இங்க தான் இருப்பேன்.
மதி :ம்ம்..வர்றேன்.

இவ்வளவு தான் நடந்தது. ரொம்பவே சுவாரஸ்யமா இல்லாட்டியும். அம்மாகிட்ட ஏற்பட்டிருந்த முன்னேற்றத்த பாத்து எனக்கு ஆச்சர்யம். ஒரு காலத்துல பக்கத்து ஊருக்கு கூட போக எங்க துணையில்லாம போக மாட்டாங்க. அப்பா எவ்ளவோ திட்டுவார். எதையும் தனியா செய்ய கத்துக்கணும், பழகிக்கணும்னு. அப்பல்லாம் அம்மா மாறவேயில்ல. நானும் தம்பியும் வீட்ட விட்டு வந்தப்புறம் தான் மாற ஆரம்பிச்சாங்க.

போன வருஷம் வீடு கட்ட ஆரம்பிச்சப்போ, தம்பி கூட சேர்ந்து அம்மா தான் மேற்பார்வை பாக்க ஆரம்பிச்சாங்க. அப்பா ஆபிசுக்கு போயிடுவார் தம்பியும் வேலைக்கு போனதுக்கப்புறம் வேற வழியில்லாம மணலாகட்டும், சிமெண்டாகட்டும் எல்லாத்துக்கும் அம்மாவே போய் பேச ஆரம்பிச்சாங்க. பணம் பட்டுவாடா பண்ணினது அம்மா தான். வீட்டுக்கு செஞ்சது போய் இப்ப ஏரியா லெவலுக்கு போயாச்சு.

அடடா..ஒரு காலத்துல எப்படி இருந்த அம்மா இப்போ இப்படி ஆயிட்டாங்க. உண்மையாவே ஒரு மகனா நான் பெருமபடுறேன். ஆனா, வீட்டுக்குள்ளே இருந்த இருக்க ஆசப்பட்ட அம்மாவ இப்படி வெளியுலக பாக்க வச்சு, தன்னம்பிக்க கொடுத்து பேச வச்ச பெருமை அப்பாவையே சேரும்.

அம்மா, அப்பா உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட்..:cool: :cool:

இனியவன்
14-07-2006, 07:55 AM
ராஜேஷ் நீங்க கொடுத்து வச்சவருங்க.
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்,தழைக்கட்டும் உங்கள் அன்பு உறவு.

pradeepkt
14-07-2006, 08:07 AM
குடும்பத் தலைவிக்கான அத்தனை அதிகாரங்களையும் சிறப்பாகப் பயன்படுத்தியமைக்காக அம்மாவுக்கு ஒரு சபாஷ். ஊக்கப் படுத்தியமைக்காக (ஆபீசுக்குப் போய்) அப்பாவுக்கும் ஒரு சபாஷ்.

திருச்சிக்கு வரும்போது கண்டிப்பா வரேன். ஆகஸ்ட் 11-21 எங்கே இருப்ப நீ?

தாமரை
14-07-2006, 08:09 AM
அடடா..ஒரு காலத்துல எப்படி இருந்த அம்மா இப்போ இப்படி ஆயிட்டாங்க. உண்மையாவே ஒரு மகனா நான் பெருமபடுறேன். ஆனா, வீட்டுக்குள்ளே இருந்த இருக்க ஆசப்பட்ட அம்மாவ இப்படி வெளியுலக பாக்க வச்சு, தன்னம்பிக்க கொடுத்து பேச வச்ச பெருமை அப்பாவையே சேரும்.

அம்மா, அப்பா உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட்..:cool: :cool:

அப்படியே மன்றத்து சார்பா இன்னொரு சல்யூட்டையும் அடிச்சுருங்க.

மதி
14-07-2006, 08:34 AM
குடும்பத் தலைவிக்கான அத்தனை அதிகாரங்களையும் சிறப்பாகப் பயன்படுத்தியமைக்காக அம்மாவுக்கு ஒரு சபாஷ். ஊக்கப் படுத்தியமைக்காக (ஆபீசுக்குப் போய்) அப்பாவுக்கும் ஒரு சபாஷ்.

திருச்சிக்கு வரும்போது கண்டிப்பா வரேன். ஆகஸ்ட் 11-21 எங்கே இருப்ப நீ?
ஆகஸ்ட் 12-15ம், 19,20ம் திருச்சியில தான் இருப்பேன். கண்டிப்பா வீட்டுக்கு வாங்க.

pradeepkt
14-07-2006, 08:44 AM
அனேகமா 14-15 தேதிகளில் திருச்சியில்தான் இருப்பேன். உன் செல் திருச்சியில் வேலை செய்யும்தானே?

மதி
14-07-2006, 08:51 AM
அனேகமா 14-15 தேதிகளில் திருச்சியில்தான் இருப்பேன். உன் செல் திருச்சியில் வேலை செய்யும்தானே?
தனிமடலில் அனுப்பறேன்.

இளசு
14-07-2006, 09:58 PM
ஊட்டி விட்ட குஞ்சுகள்
கூட்டை விட்டு பறந்தபின்
வீட்டை, நாட்டை நிர்வகிக்க
சாட்டை சுழற்றும் அம்மா....

ஆதியிலும் சக்தி இருந்தாலும்
பாதிக்குப் பின் பயன்படுத்தும் பராசக்தி..

அம்மாவுக்கு என் வந்தனங்கள்..

நல்ல பதிவுக்கு நன்றி மதி..

அறிஞர்
14-07-2006, 10:11 PM
அருமை அன்பரே.. அம்மாவின் பெருமைகள்... இன்னும் வரட்டும்...

அவசியம் ஏற்படாத வரையில் கூண்டுகிளிகளாய்... பல குடும்ப தலைவிகள் இருக்கிறார்கள். ஆனால் அவசியம் ஏற்படும் போது பட்டாம்பூச்சியாய் பறந்து கலக்குகிறார்கள்....

ஓவியா
19-07-2006, 04:08 PM
மதி
உங்கள் அம்மவிடம்
என் பாராட்டை தெரிவிக்கவும்....:)

ஆன்ட்டீ
பின்னாடி அமைச்சரா ஆனாலும் ஆகலாம்...:D

மயூ
20-07-2006, 05:52 AM
அடேங்கப்பா! பலே பலே அம்மாக்கு எங்க பாராட்ட தெரிவிச்சுடுங்க.

எங்க அம்மா அப்பாவ விட ஓவர் சிமார்ட் அதனால் நான் பட்ட கஷ்டங்கள்...... சொல்லிலடங்காது....:D :D :D :D

sarcharan
20-07-2006, 06:27 AM
அடேங்கப்பா! பலே பலே அம்மாக்கு எங்க பாராட்ட தெரிவிச்சுடுங்க.

எங்க அம்மா அப்பாவ விட ஓவர் சிமார்ட் அதனால் நான் பட்ட கஷ்டங்கள்...... சொல்லிலடங்காது....:D :D :D :D

அப்ப சொற்றொடர்களில் அடங்குறது மாதிரி சொல்லலாமே தம்பி...

மயூ
20-07-2006, 06:49 AM
அப்ப சொற்றொடர்களில் அடங்குறது மாதிரி சொல்லலாமே தம்பி...

என்ன சொன்னாலும் பின்னி பெனலெடுக்கிறது என்டு முடிவு பண்ணிட்டீங்க....
கலியாணம் பண்ணி ஒரு முறையான பொண்ணுக்கிட்ட மாட்டிறப்போ தெரியும் எப்பிடி சொல்லில் அடக்கி சொல்றது என்டு ;) :D :D

மதி
20-07-2006, 07:11 AM
மதி
உங்கள் அம்மவிடம்
என் பாராட்டை தெரிவிக்கவும்....:)

ஆன்ட்டீ
பின்னாடி அமைச்சரா ஆனாலும் ஆகலாம்...:D
பின்ன அமைச்சர் புள்ளையினா சும்மாவா...?

ஓவியா
20-07-2006, 02:10 PM
பின்ன அமைச்சர் புள்ளையினா சும்மாவா...?

சும்மாவே தாங்களை (மதி அடிக்கிற லூட்டி)

அமைச்சர் புள்ளையினா...:eek: :eek:
அய்யோடி சொல்லவே வேண்டாம்... :D :D

தாமரை
20-07-2006, 02:20 PM
சும்மாவே தாங்களை (மதி அடிக்கிற லூட்டி)

அமைச்சர் புள்ளையினா...:eek: :eek:
அய்யோடி சொல்லவே வேண்டாம்... :D :D

ஒரு மாதிரிப் புள்ளை மந்திரிப் புள்ளையாகிறார்..

இதைச் சேத்துப் படிக்கிறதும் பிரித்துப் படிப்பதும் அவரவர் எண்ணங்களே

மதி
20-07-2006, 02:22 PM
சும்மாவே தாங்களை (மதி அடிக்கிற லூட்டி)

அமைச்சர் புள்ளையினா...:eek: :eek:
அய்யோடி சொல்லவே வேண்டாம்... :D :D
நான் லூட்டி எல்லாம் அடிக்கறதே இல்லீங்க. வேணும்னா பெங்களூர் மன்ற நண்பர்கள்கிட்ட கேளுங்க..இல்ல மன்ற சந்திப்பு விவரங்கள படிங்க. மன்ற சந்திப்புகள்ல நான் எப்பவுமே ரொம்ப அமைதியா தான் இருந்திருக்கேன்..:D :D :D

sarcharan
20-07-2006, 03:35 PM
நான் லூட்டி எல்லாம் அடிக்கறதே இல்லீங்க. வேணும்னா பெங்களூர் மன்ற நண்பர்கள்கிட்ட கேளுங்க..இல்ல மன்ற சந்திப்பு விவரங்கள படிங்க. மன்ற சந்திப்புகள்ல நான் எப்பவுமே ரொம்ப அமைதியா தான் இருந்திருக்கேன்..:D :D :D

ஆமா ஆமா அமைதியா உக்காந்து ( ) பாத்துக்கிட்டு இருந்தாரு. இல்ல தாமரை...:p

பி.கு: விரும்பியவர்கள் அந்த bracket ஐ தங்கள் இஷ்டம் போல் நிரப்பிக்கொள்ளலாம்.

மதி
21-07-2006, 03:56 AM
ஆமா ஆமா அமைதியா உக்காந்து ( ) பாத்துக்கிட்டு இருந்தாரு. இல்ல தாமரை...:p

பி.கு: விரும்பியவர்கள் அந்த bracket ஐ தங்கள் இஷ்டம் போல் நிரப்பிக்கொள்ளலாம்.
அது இருக்கட்டும்..நீங்க மட்டும் ஏன்..தலை குனிஞ்சே உக்கார்ந்திருந்தீங்க..?:eek: :eek: :eek: :eek:

மயூ
21-07-2006, 04:14 AM
ஆமா ஆமா அமைதியா உக்காந்து ( ) பாத்துக்கிட்டு இருந்தாரு. இல்ல தாமரை...:p

பி.கு: விரும்பியவர்கள் அந்த bracket ஐ தங்கள் இஷ்டம் போல் நிரப்பிக்கொள்ளலாம்.

சத்தியமா இது கணணி நிரல் எழுதுவதன் விழைவுதான். உதாரணத்திற்கு ஒரு பங்சன் பாருங்க

உக்கார்ந்து (பில், அலுப்பு ஜோக்ஸ், நடிப்பு)
{
பில்லை ஏற்றுதல்;
மற்றவர்களைக் கடித்தல்;
அமைதியாக இருப்பது போலக் காட்டுதல்;
}

மதி
21-07-2006, 04:17 AM
சும்மா சொல்லக் கூடாது..
நல்லாவே புரோகிராம் எழுதறீங்க..

மயூ
21-07-2006, 04:19 AM
சும்மா சொல்லக் கூடாது..
நல்லாவே புரோகிராம் எழுதறீங்க..
என்னத்த எழுதி என்ன பிரையேஜனம்.
ஜாவா பரீட்சையில சீ தான் கிடைச்சுது.....:confused: :confused:

தாமரை
21-07-2006, 04:28 AM
ஆமா ஆமா அமைதியா உக்காந்து ( ) பாத்துக்கிட்டு இருந்தாரு. இல்ல தாமரை...:p

பி.கு: விரும்பியவர்கள் அந்த bracket ஐ தங்கள் இஷ்டம் போல் நிரப்பிக்கொள்ளலாம்.

ஓட்டையான் பக்கெட்டை நிரப்பிவிடலாம்..

அமைதியான இந்த பிராக்கட்டை நிரப்புவது கடினத்திலும் கடினம்..:D :D

தாமரை
21-07-2006, 04:29 AM
என்னத்த எழுதி என்ன பிரையேஜனம்.
ஜாவா பரீட்சையில சீ தான் கிடைச்சுது.....:confused: :confused:

சீ யா ச்ச்சீஈஈஈஈ

தாமரை
21-07-2006, 08:31 AM
சத்தியமா இது கணணி நிரல் எழுதுவதன் விழைவுதான். உதாரணத்திற்கு ஒரு பங்சன் பாருங்க

உக்கார்ந்து (பில், அலுப்பு ஜோக்ஸ், நடிப்பு)
{
பில்லை ஏற்றுதல்;
மற்றவர்களைக் கடித்தல்;
அமைதியாக இருப்பது போலக் காட்டுதல்;
}

ராஜேஸின் பார்வை function - ல் பல sighned long integer மற்றும் funtion pointer இருந்தாலும் return value null தான்.

அதனால அவர் void function ஆவே இருக்கிறார்...

மதி
21-07-2006, 08:57 AM
ராஜேஸின் பார்வை function - ல் பல sighned long integer மற்றும் funtion pointer இருந்தாலும் return value null தான்.

அதனால அவர் void function ஆவே இருக்கிறார்...
அது என்னவோ உண்மை தான்..
எவ்ளோ நாளைக்குன்னு பாப்போம்..:confused: :confused: :confused:

ஓவியன்
27-02-2008, 11:43 AM
அன்பு மதி, மனைவி மட்டுமல்ல குடும்பம் அமைவது கூட இறைவன் கொடுத்த வரம் தான்...!!

மனதார வாழ்த்துகிறேன், நல்லா இருங்க.....!! :)

மதி
27-02-2008, 11:45 AM
அன்பு மதி, மனைவி மட்டுமல்ல குடும்பம் அமைவது கூட இறைவன் கொடுத்த வரம் தான்...!!

மனதார வாழ்த்துகிறேன், நல்லா இருங்க.....!! :)

அடடா...
என்றைக்கோ எழுதியது இன்னிக்கு பின்னூட்டமா?
வாழ்த்துக்கு நன்றி ஓவியன்..

சிவா.ஜி
27-02-2008, 11:53 AM
என்னைக்கு எழுதினா என்னப்பா....ஒரு ஹோம் மேக்கர்...வளர்ந்து சோஷியல் வொர்க்கர் ஆகி கலக்குறாங்கன்னா...என்னைக்கும் நினைச்சுப் பெருமைப்படலாம்.அவங்களுக்கு என்னுடைய சல்யூட்டையும் சொல்லிடுங்க...கலக்கல் பதிவு மதி.இன்னும் நிறைய எழுதுங்க.

ஓவியன்
27-02-2008, 11:59 AM
அடடா...
என்றைக்கோ எழுதியது இன்னிக்கு பின்னூட்டமா?..

என்ன பண்ண மதி...??
எனக்கொரு கெட்ட பழக்கம், எப்பவாவது கொஞ்சம் ப்ரீயா இருந்தா யாராவது ஒருவரின் பழைய பதிவுகளைக் கிளறிட்டே இருப்பேன். இன்னிக்கு அகப்பட்டது நீங்க........!!!

ஹீ,ஹீ.......!!! :D:D:D

மதி
27-02-2008, 12:00 PM
என்னைக்கு எழுதினா என்னப்பா....ஒரு ஹோம் மேக்கர்...வளர்ந்து சோஷியல் வொர்க்கர் ஆகி கலக்குறாங்கன்னா...என்னைக்கும் நினைச்சுப் பெருமைப்படலாம்.அவங்களுக்கு என்னுடைய சல்யூட்டையும் சொல்லிடுங்க...கலக்கல் பதிவு மதி.இன்னும் நிறைய எழுதுங்க.

கண்டிப்பா சொல்றேன் அண்ணா.. :)

யவனிகா
27-02-2008, 12:13 PM
என்ன மதி அம்மாக்களைப் பத்தி இவ்வளவோ
லேட்டா புரிஞ்சிருக்கீங்க...
எப்ப வேணும்னாலும்..எத்தனை அவதாரம் வேணும்னாலும் எடுப்போம்...
அம்மாக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க மதி.

மதி
27-02-2008, 12:22 PM
அதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சது தான் அக்கா..
கண்டிப்பா அம்மாகிட்ட சொல்றேன்..

பூமகள்
27-02-2008, 01:23 PM
அம்மா மெச்சும் பிள்ளையாகவும்.. அம்மாவை மெச்சும் பிள்ளையாகவும் இருக்கும் மதியை நினைத்து பெருமை படுகிறோம்..! :smartass:

இப்படி ஒரு பிள்ளை பெற அம்மா என்ன தவம் செய்தாங்களோ.. அல்லது இப்படி ஒரு அம்மா பெற மதி என்ன தவம் செய்தாரோ..!!:huepfen024::grin:

ஆக மொத்தம் இருவருமே தவம் செய்தவங்க தான்..!! :icon_good:

நல்லதொரு பதிவு. மனம் மகிழ்ந்து நெஞ்சம் நெகிழச் செய்தமைக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுகள் மதி.:4_1_8:

அம்மாவுக்கு என் அன்பு :icon_03::smilie_flags_kl::icon_clap:தெரிவித்து விடுங்கள்..!! :icon_give_rose:

சாலைஜெயராமன்
27-02-2008, 03:55 PM
பழைய பதிவுகளுக்கு பதில் போடற சீசன் போல. நாரதர் புண்ணியத்தாலே அறிஞர்லே ஆரம்பிச்சது.

தாய்மைக்கு ஒரு பெரிய வலிமை இருக்கு. பொறுப்புக்களை நம்பி ஒப்படைத்து ஊக்கமளிக்கும் விமர்சனங்களால் பெருமைப்படுத்தினால் மகளிர் மன்றப் பணிகள் மட்டும் என்ன. நாட்டையே திறம்பட நிர்வகிப்பார்கள் நமது தாய்மார்கள். குறிப்பாக ஊழல்கள் இல்லாமல்.

வாழ்க தாய்மை. மதி எங்களையும் உங்கள் குடும்பத்தோடு இணைத்துக் கொண்டு இதைப் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

மதி
28-02-2008, 01:25 AM
நன்றி பூமகள் மற்றும் ஜெயராமன் ஐயா..

பாரதி
28-02-2008, 02:40 AM
அவர்தான் அம்மா...!
மகிழ்ச்சியாலும் நெகிழ்கிறேன் மதி.
வாழ்த்துக்கள்.