PDA

View Full Version : காற்றழுத்தம் - அ.மை. 22



இளசு
13-07-2006, 10:59 PM
காற்றழுத்தம்

அறிவியல் மைல்கற்கள் - 22

ப்ளெய்ஸ் பாஸ்கல் ( Blaise Pascal ) 1623-62

----------------------------------------------------

21ம் பாகம் - குருதிச்சுழல் இங்கே..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6626
________________________________________________________-


ஆதிகாலப் பொறியலாளர்களுக்கு ஒரு விஷயம் புரியாத புதிராய் இருந்தது.
அதாவது நிலத்தடி நீரை பம்ப் செய்தால் தரையில் இருந்து சுமார் பத்து மீட்டர்
உயரத்துக்கு மட்டுமே பீய்ச்ச செய்ய முடிந்தது.

காற்றுமண்டலம் மேலிருந்து அழுத்துவதாலேயே தண்ணீர் அந்த உயரத்துக்கு மேல்
தாவிப்பாய முடியவில்லை என்று 1640-களில் அவர்கள் ஊகிக்கலானார்கள்.

இந்த ஊகத்தை உறுதி செய்து, காற்றுமண்டலத்தின் அழுத்தத்தை அளந்து சொன்னவர்
நம் பாஸ்கல்.
பிரான்சில் பிறந்த பாஸ்கல் சிறுவயதிலேயே மேதையாய்த் திகழ்ந்த பெருமைக்குரியவர்.

12 வயதில் அவர் எழுதிய கணித ஜியோமெட்ரி கட்டுரைகளை அவர் எழுதினாரா அல்லது
அவர் அப்பா எழுதினாரா என்று பெரியவர்கள் சந்தேகப்படும் அளவுக்கு அறிவாளர்.

1647 -48 - இந்த இரு ஆண்டுகளில் பல ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்தார் பாஸ்கல்.

ஒரு மீட்டர் நீளமுள்ள கண்ணாடிக்குழாயின் ஒரு பக்கத்தை அடைத்தார். அதில் மெர்க்குரியை
நிரப்பி கவிழ்த்தார். பாரமானி ( Barometer) தயார்.

கவிழ்க்கப்பட்ட குழாயில் உள்ள எல்லா பாதரசமும் கீழே வழிந்து ஓடிவிடவில்லை.
வழிந்த பாதரசம் போக குழாயின் மேல்பக்கம் மூடி வரை ஒரு இடைவெளி இருந்தது.
இந்த இடைவெளியை ஒன்றும் இல்லாத வெற்றிடம் என பாஸ்கல் சரியாகக் கணித்தார்.

'ஒன்றுமே இல்லாத வெற்றிடம் ' என்பதே அன்றைக்கு ஒரு புதுக்கோட்பாடு.

குழாய்க்கு மேலே உள்ள வளிமண்டலத்தின் எடையும் , குழாயில் மீதி இருக்கும் பாதரச எடையும்
சமன் செய்யும் சக்திகள் என பாஸ்கல் நிறுவினார்.
எடை குறைந்த சிவப்பு ஒயின் மூலம் இந்தச் சோதனையை அவர் செய்தபோது
பத்து மீட்டர் நீள குழாய் தேவைப்பட்டது.
(சோதனை முடிந்தபிறகு அந்த ஒயின் என்ன ஆனது என்பது பற்றி நமக்குத் தகவல் இல்லை.)

கடல் மட்டத்தில், பாரமானியில் தங்கும் மெர்க்குரியின் நீளம் 760 மிமீ.
அதையே தண்ணீரால் அளந்தால், அதன் நீளம் - அட 10 மீட்டர்.
இப்போது புரிந்தது அனைவருக்கும் - தண்ணீர் பீய்ச்சலின் உயரம் ஏன் 10 மீட்டர் என்று..

ஆராய்ந்தறிதல் என்பது பாஸ்கலின் உயிரான கொள்கை.
ஆனால் ஆராய அலைய முடியாத படி வாழ்நாள் முழுவதும் நோயால் பாதிப்பு.

பலசாலியான மைத்துனரை மலை உச்சிக்கு அனுப்பி, அங்கே பாரமானியால்
காற்றழுத்தம் அளந்துவரச் செய்தார்.

உயரே போகப்போக அழுத்தம் குறையக் கண்டார். சிந்தித்தார்.
காற்று மண்டல விளிம்பைத் தாண்டினால், அழுத்தம் பூச்சியமாகும்.
அதைத்தாண்டி, ' வெற்றிடம்' மட்டுமே இருக்கும் என அழகாய் கோட்பாடு தந்தார்.

அந்த மாமேதையைக் கவுரவிக்கும் பொருட்டு, அழுத்தத்தின் சர்வதேச அளவு
'பாஸ்கல்' அலகுகளால் அழைக்கப்படுகிறது.
கடல்மட்டத்தில் காற்றின் அழுத்தம் =101,325 பாஸ்கல்கள் (Pa). = 1 atmosphere
1 Pa =1 Newton per square metre.
இயற்பியல், கணிதம், பின்னாளில் இறைத்தத்துவம் என பன்முகத்திறமை கொண்ட
இந்த சுடரை 39 வது வயதிலேயே நாள்பட்ட நோய் என்னும் காற்று அணைத்துவிட்டது..

http://en.wikipedia.org/wiki/Blaise_Pascal

பென்ஸ்
14-07-2006, 03:56 AM
அலுவலகத்தில் நான் ஒரு நாளைக்கு 10 முறையாவது உபயோகிக்கும் வார்த்தை... பாஸ்கல்...

அழுத்ததின் "யூனிட்டாக" மட்டுமே நான் பார்த்த பாஸ்கல்...
இன்று மனதுல் அழுத்தமாக பதிந்து போன ஒரு சுவியிட் ராஸ்கல்...

இளசு... "Brighter burns faster" என்று சொல்லுவார்கள்... அது ஏனோ????

pradeepkt
14-07-2006, 05:13 AM
இளசு அண்ணா,
அருமையான விளக்கங்கள். நம்ம பள்ளிக்கூடங்களில் புத்தகத்தில் இருப்பதை மட்டும் திணிக்காமல் இது போல் சுவையான விளக்கங்களால் பாடம் நடத்தினால் சட்டென்று மனதில் பதியுமோ?

தாமரை
14-07-2006, 05:38 AM
அழுத்தமான மனுசந்தான் இந்தப் பாஸ்கல்.. ஆமாம் ரத்த அழுத்தம் இருக்கே அதை அளக்கும் நுட்பம் எப்படி? அதை யார் கண்டுபிடித்தது?

பாரதி
14-07-2006, 02:04 PM
அருமை அண்ணா. பாஸ்கல் குறித்த அரிய விபரங்களை அறியத்தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா.

aren
16-07-2006, 02:08 AM
நன்றி இளசு அவர்களே. உங்கள் மூலம் பல சிறப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

தொடருங்கள். தொடர்ந்து எங்களுக்கு பல தெரியாத விஷயங்களை தெரியப்படுத்துங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
31-07-2006, 08:52 PM
இனிய பென்ஸ், தம்பிகள் பிரதீப், பாரதி, அன்பு செல்வன், அன்பின் ஆரென்..

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

பாஸ்கல் வழங்கிய இன்னொரு கொடை:
Rules of chance.
சாதாரண தாயம் சீட்டு முதல் ஆயுள் காப்பீடு வரை
புள்ளியியலில் பயன்படும் Probabilityயின் ஆதார
தத்துவங்களை முறையாக அறிமுகப்படுத்திய பெருமையும்
பாஸ்கலுக்கே

அறிஞர்
02-08-2006, 04:25 PM
காலம் கடந்து படித்தாலும்... நல்ல பயனுள்ள தகவலை படித்ததில் சந்தோசம்.

39 வயதில் சுடர் அணைந்தது... வருத்தமே.... இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால்.. இன்னொரு ஐன்ஸ்டினாக உருவெடுத்திருப்பார்.

ஓவியா
03-08-2006, 02:43 PM
அருமையான, சுருக்கமான பதிப்பு

சுட்டியை தட்டி இன்னும் விரிவாக படித்தேன்.....
மேதை பாஸ்கல் இன்னும் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால்....பல சாதனை மாலைகலை சூடிருக்கலாம்....


நன்றி இளசு

இளசு
04-08-2006, 10:34 PM
அன்பு அறிஞர், இனிய ஓவியா

உங்கள் கருத்துகளும் ஊக்கமும் உற்சாகம் அளிக்கின்றன.

நன்றி..

பரஞ்சோதி
05-08-2006, 11:22 AM
அண்ணா, அருமையான தகவல்கள். இடையில் படிக்காமல் விட்டுவிட்டேன். உங்க தொகுப்பினை முழுவதும் கொடுத்த பின்னர் பிடிஎப் கோப்பாக மாற்றி மன்ற புத்தகங்கள் பகுதியில் சேமியுங்கள். வருங்கால சந்ததியினர் பயன்படுத்துவார்கள்.

ஆதவா
06-02-2008, 02:30 AM
மாமேதைகள் பலர் சிறுவயதிலேயே இறைவனனக் காணச் சென்றுவிடுகிறார்கள்.. பாஸ்கலும் விதிவிலக்கல்ல... தெளிவான உதாரணம் கூறி பல விசயங்களளப் புரிய வைத்தீர்கள்...

இன்றைக்குக் காற்றழுத்தம் பற்றீய ஆய்வுகளுக்கு அடிக்கோலிட்டவர் இவர்தானே!!

நன்றி அண்ணா...