PDA

View Full Version : 'யூனிகோட்' உமர் - திடீர் மறைவு...பாரதி
13-07-2006, 02:55 PM
'யூனிகோட்' உமர்தம்பி மரணமடைந்தார்கள்

எனக்கு வரப்பெற்ற மின்மடலை நண்பர்கள் அறியத்தருகிறேன். ஒருங்குறிக்கு பாடுபட்ட அரும் சாதனையாளர் திரு.உமர் அவர்களின் மறைவு குறித்து மிக்க வருத்தமும் வேதனையும் அடைகிறேன். அவர் இழப்பால் துன்புறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

http://www.adirai.com/modules.php?op=modload&name=News&file=article&sid=400085 (http://www.adirai.com/modules.php?op=modload&name=News&file=article&sid=400085)

அதிரை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர்களில் ஒருவரும்,
தமிழ் கணினியுலகில் யூனிகோட் எனும் தானியங்கி எழுத்துரு (Font)
மேம்பாட்டிலும் இன்னும் பல கணினி சாதனைகள் படைத்தவரும்,
கல்வியாளருமான உமர் தம்பி அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

உமர் தம்பி அவர்களின் சாதனைகள் தமிழிணையப் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், நுணுக்கமான யுக்திகளைக் கொண்டதாகவும் உள்ளன.

வலைப்பூக்கள் என்று அறியப்படும் Blogs இல் தமிழில் எழுதப்படும் பதிவுகள் உமர்தம்பி அவர்களின் இணைய மென்பொருள் உதவியுடன் மிகச்சிறப்பாக அனைத்து வகை கணினியிலும் தெரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதாகும்.

உலகத் தமிழர்களின் வலைப்பூக்களை திரட்டும் தமிழ்மணம்.காம்,
(www.thamizmanam.com (http://www.thamizmanam.com/)) உமர் தம்பி அவர்களின் செயலியைப் பயன்படுத்தும் முன்னணி தளமாகும்.

இவற்றுடன் தமிழ் இணைய அகராதி, யூனிகோட் உருமாற்றி, தமிழ் ஈமெயிலர், தேனிவகை எழுத்துறுக்கள் ஆகியவை உமர் தம்பி அவர்களின் இலாப நோக்கற்ற தனிப்பட்ட படைப்புகளாகும்.

இவை மட்டுமின்றி தமிழாயாஹூ குரூப், மரத்தடி டாட் காம், ஈ சங்கமம் ஆகிய தமிழர் குழுமங்களிலும் இணைய தளங்களிலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.

உமர் தம்பி அவர்களின் இணைய மென்பொருட்களை கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம்.

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip (http://www.geocities.com/csd_one/UniConMagz.zip)
http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp (http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp)
http://www.geocities.com/csd_one/fonts/ (http://www.geocities.com/csd_one/fonts/)

உமர் தம்பி அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்றால் மிகையில்லை.

இளம்வயதில் மறைந்த அன்னார் இழப்பு குடும்பத்தாருக்கும்,
தமிழ்கூறும் நல்கணி உலகுக்கும் ஈடுசெய்ய முடியாதது.

.

தாமரை
13-07-2006, 02:58 PM
யுனிகோட் மூலம் தமிழுக்கு தொண்டாற்றி கி.ஆ.பெ. விஸ்வநாதன் போன்ற சான்றோர் வரிசையில் இடம் பெறும் தகுதி பெற்ற உமர்தம்பி அவர்களின் இழப்பு தமிழர்களின் பேரிழப்பு.

அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்,

இனியவன்
13-07-2006, 04:24 PM
உமர் தம்பியின்
உயர்ந்த தமிழ்ப்பணி
இவ்வுலகம் உள்ளளவும்
அவர் பெருமையைச் சொல்லும்.
இறைவன் அவருக்கு மறுமைப் பேறுகளை
வழங்கப் போதுமானவன்.

இணைய நண்பன்
13-07-2006, 07:13 PM
உமர் தம்பி அவர்களின் இழப்பு பேரிழப்பாகும்.அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

இளசு
13-07-2006, 10:18 PM
தமிழுக்கு அரும்பணி ஆற்றியதால் சாகாநிலை பெற்றுவிட்ட
அமரர் உமர் தம்பி அவர்களின் நினைவை நன்றியுடன் போற்றுவோம்.

அறிஞர்
13-07-2006, 11:06 PM
வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழவேண்டும். அவ்வாறு தன் வாழ்நாளில் தனி முத்திரை படைத்த அன்னாரை இழந்து நிற்பது... வருத்தமே.... குடும்பத்தாருக்கு ஆறுதல் கிடைக்க வேண்டுகிறேன்.
----------
பாரதி அண்ணாவுக்கு ஒரு வேண்டுகோள்

உமர் தம்பி பற்றி நான் அவ்வளாவாக அறிந்ததில்லை. இப்பொழுது தான் (இறந்த பின்) அறிந்தேன். நன்றி...

இப்பொழுது... உயிரோடு இருந்து இணைய தளங்களில் சாதனைபடைக்கும் தமிழர்களை.... பற்றிய விவரங்களை சேர்த்து கொடுத்தால்... நன்றாக இருக்குமே.... நேரம் கிடைக்கும்பொழுது செய்யுங்கள்...

pradeepkt
14-07-2006, 06:05 AM
அவர் நம்மிடையே நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் மூலம் வலம் வந்து கொண்டுதான் இருப்பார்.
அவர்தம் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஓவியா
14-07-2006, 01:55 PM
உமர் தம்பி பற்றி நான் அவ்வளாவாக அறிந்ததில்லை. இருந்தாலும் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

இனியவன்
14-07-2006, 01:58 PM
உமர் தம்பி பற்றிய விரிவான தகவல்களை நண்பர்கள் யாராவது நம் மன்றத்தில் ஒட்டி வைக்கலாமே, முடிந்தால் படத்துடன் செய்தி தாருங்கள். அன்பர்களின் அன்பு வெல்லட்டும்.

பாரதி
14-07-2006, 02:48 PM
அன்பு நண்பர்களே,

அன்பு அறிஞரே - அரிய மனிதர்கள் பலரையும் நாம் அப்படித்தான் இழந்திருக்கிறோம். இருக்கும் வரைக்கும் அருமை தெரிவதில்லை. இழந்த பின்பு வருந்தம் தெரிவிப்பதோடு நமது கடமை முடிந்து விடுகிறது. தேனி எழுத்துருக்கள் பலவற்றையும் உருவாக்கியவரும், தனது பெயரைக்கூட எங்கும் வெளிப்படுத்த விரும்பாத, தமிழுக்கான தனது உழைப்பிற்காக எந்த லாப நோக்கமும் இன்றி அயராது பாடுபட்ட மனிதரை, தமிழும் இணையமும் எந்நாளும் மறக்கலாகாது.

மதிப்பிற்குரிய திரு.உமர் அவர்கள் குறித்த தனது பார்வையை திரு மாஹிர் அதிரை இணைய தளத்தில் தந்த விபரங்கள் உங்களுக்காக இங்கே தரப்படுகிறது.

உமர் தம்பி காக்கா - என் நினைவுகள்:

துயரமாய் இருக்கிறது, இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப்பிரிந்து விட்டார்களே எண்றெண்ணி, ஆனால் ஆதரவாய் இருக்கிறார்கள் தமிழ் இணைய உலகின் வல்லுநர்களும், எழுத்தாளர்களும் மற்றும் வாசகர்களும். தமிழ் வலைஞர் உலகில் மும்பை குண்டுவெடிப்பு செய்திகளை எல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டது "ஒருங்குறி உமர்" அவர்களின் மறைவுச் செய்திகளும் அநுதாபங்களும். மதங்களைத் தாண்டி மனிதர்களுக்கு சேவையாற்றியிருக்கிறார்கள் உமர் காக்கா அவர்கள்.

சமீபத்தில் திருக்குர்ஆனை ஒருங்குறியை பயன்படுத்தி நான் மின்னஞ்சலில் அனுப்பவேண்டி ஒரு ப்ராஜக்ட் தன்னார்வமாக எடுத்துக்கொண்டேன். (http://www.quran.tamilbookskadal.com) (http://www.quran.tamilbookskadal.com) /)அப்பொழுது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அதன் எழுத்துருவின் பெயர்கள். ஆம் அது இந்து பெயர்களில் இருந்தது தான்.

இப்பொழுதும் உணருகிறேன், உமர் அவர்களின் மரணம், மதம் எனும் மாயையை மாய்த்திருக்கிறது. மதம்பாராமல் ஒவ்வொருவரும் தான் கண்ணீர் விடுவதாகவும், துக்கப்படுவதாகவும் எழுதியிருக்கிறார்கள், பலர் சந்திக்க நினைத்து நிறைவேறாமல் போனதை எண்ணி வருந்துகிறார்கள். தமிழினத்திற்காக சப்தமில்லாமல் மதம் கடந்த சேவையாற்றியிருக்கிறது அவர்களின் தேனி எழுத்துரு.

அவர்கள் உயிரோடிருக்கும் காலத்திலேயே (சுமார் 2 மாதங்களுக்கு முன்) uniumar என்று பெயரிட்டு ஒரு ப்ளக்கின் (Plug-in) (அவர்களின் மூலக்குறிகளைக் கொண்டே) உருவாக்கினேன். அதன் செயல்பாடுகளை பார்வையிட்ட அவர்கள் என்னைப் பாராட்டினார்கள். (http://uniumar.tamilbookskadal.com (http://uniumar.tamilbookskadal.com/)). முன்பு சாதாரன பக்கத்திலேயே வைத்திருந்த நான், பின்னர் ஒரு யோசனை தோன்ற, என் எண்ணத்தை அவர்களிடம் வெளியிட்ட பின், சப்டொமைன் திறந்து அதன் FTP பாஸ்வேர்டையும் அவர்களிடம் தந்திருந்தேன். அது அவர்களுடைய ஆக்கங்களை தொகுக்க நான் எண்ணியதே. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அவர்களுக்கு மஞ்சட்காமாலை என்னும் கொடிய நோயும் பீடித்துக்கொண்டது.

பத்து வரிகளில் பல ஆயிரக்கணக்கான/இலட்சக்கணக்கான ரூபாய்களை கொடுக்கும் மென்பொருள் துறையில் சிறிதும் ஆதாயம் எதிர்பார்க்காமல் அவர்கள் வெளியிட்ட தமிழ் எழுத்துரு தேனி இன்று தமிழ் இணைய உபயோகிப்பாளர்களிடம் 90 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சமயம் அவர்கள் "ஆங்கிலம்-தமிழ் மாற்றி" வெளியிட்டார்கள். அதை பார்வையிட்ட நான் அவர்களின் பெயர் எங்கும் இல்லாததை கவணித்தபின் அவர்களின் கூறிய பின் உமர் என்று வெளியில் மட்டும் போட்டுக்கொண்டார்கள். மூலக்குறிகளில் (source code) அவர்கள் பெயரை இடவில்லை. http://uniumar.tamilbookskadal.com (http://uniumar.tamilbookskadal.com/) வெளிட்டு அவர்களிடம் தொலைபேசி வாயிலாக மூலக்குறியை என்கிரிப்ட் செய்ய விரும்பியதை தெரிவித்தேன். அதற்கவர்கள் தான் என்கிரிப்ட் செய்திருந்தால் நான் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று என்னை வினவியது சுருக்கென்றது. பின்னர் GNU காப்புரிமையின் கீழ் வெளியிட யோசனை சொன்னார்கள்.

எதிர்பார்ப்பு:
பல சமயம் அவர்களிடம் பேசுகையில், தமிழ் இணையப் பத்திரிக்கைகள் இன்னும் ஒருங்குறியை பயன்படுத்தாமையை குறைபட்டுக்கொண்டார்கள். அதேசமயம் அதற்கு பகரமாக வாசகர்கள் அந்த இணையதளங்களின் பக்கங்களை உடனடியாக ஒருங்குறிக்கு காப்பி செய்து கொள்ள வசதியாக ஒரு கருவியையும் வெளியிட்டார்கள். பல்வேறு எழுத்துருக்களிலிருந்து ஒருங்குறிக்கு மாற்றும் நுட்பத்தையும் நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார்கள்.

ஊருக்கு செல்லும்பொழுதெல்லாம் அவர்களிடம் சிறிது நேரம் சந்தித்து பேசுவேன். அவர்களுடைய மகன் எனக்கு நண்பர் ஆகையால் எனக்கு பல்வேறுசமயங்களில் ஆலோசனையும் அறிவுறைகளும் வழங்குவார்கள். சென்ற முறை நண்பருடைய திருமணத்திற்கு சென்றிருந்தபோது நான் ஏனோ பேசவில்லை, அவர்களின் உடல்நலம் மிகவும் பாதித்திருந்ததை எண்ணிய வருத்ததால் இருக்கலாம்.

சமுதாய ஆர்வலரான அவர்கள் இஸ்லாமிய சமுதாயம் இரண்டுபட்டு நிற்பதை பலமுறை வருந்தியிருக்கிறார்கள்.

கணிணித்துறை மட்டுமல்லாது பல்வேறு தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளை அறிந்து வைத்திருந்தார்கள். அதேசமயம் எல்லா நுட்பங்களையும் தன் பிள்ளைகளுக்கும் கற்றுத்தந்திருக்கிறார்கள். அவர்கள் நமக்கு தந்தவைகளின் (தேனி) பல்வேறு கட்டத்தில் அவர்களுடைய மூத்த மகன் மொய்னுதீனும் பக்கபலமாக இருந்திருக்கிறார்.

என் விருப்பம்:
சப்தமில்லாமல் தமிழினத்திற்காக மாபெரும் சேவையாற்றி, தனக்கிருந்த புற்றுநோய் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமலும், அநுதாபம் தேடிக்கொள்ளாமலும், தன்னுடைய சேவையை சிறிதும் விளம்பரம் செய்யாமலும் உலகை விட்டுச்சென்ற உமர்தம்பி அவர்களின் குடும்பத்தினை தமிழக அரசு கௌரவிப்பதுடன் அவருடைய எழுத்துருக்களை அங்கீகரிக்கவேண்டும், கணிப்பொறியில் சேவைசெய்பவர்களுக்கான விருதுகளில் "உமர் தம்பி" என்று பெயரிட்டு விருதுகள் வழங்க வேண்டும்.

விண்வெளித்துறையில் அதிக அறிவும் ஆர்வமும் உள்ள இளம் விஞ்ஞானிகளான அவர்களுடைய் பிள்ளைகளின் அறிவை இந்திய அரசு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

பல்வேறு காலகட்டங்களில் தமிழ் முஸ்லிம்கள் தமிழுக்காக ஆற்றிய தொண்டுகள் மறக்கடிக்கப்பட்டது போல் இதையும் உதாசீனப்படுத்தக் கூடாது.

நினைவுகளுடன்,
மாஹிர் (அதிரைவாசி)
சென்னை

இனியவன்
14-07-2006, 05:15 PM
பாரதி உங்கள் பதிவிற்கு மனமார்ந்த நன்றி.
உமர் காக்கா பிறந்த அதிராம்பட்டினத்தில் தான் என் கல்லூரிக் காலம்.
1994 முதல் 2000 வரையுள்ள கால என் மாணவப் பருவத்தில் அவர்கள் மீது என் கவனம் அதிகம் விழாமல் இருந்திருக்கலாம். இன்னும் அதிகமான தகவல்களை திரட்டித் தாருங்கள். நானும் முயற்சிக்கிறேன்.தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு இத் தரணி உள்ளவரை ஜீவித்திருக்கட்டும்.

mukilan
14-07-2006, 05:21 PM
இணையத்தில் கணிணித் தமிழில் பெரும்பாலானோர் தட்டச்ச காரணமான் உமர் தம்பி அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக. அவர் தம் குடும்பத்திற்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அறிஞர்
14-07-2006, 10:41 PM
அன்பு நண்பர்களே,

அன்பு அறிஞரே - அரிய மனிதர்கள் பலரையும் நாம் அப்படித்தான் இழந்திருக்கிறோம். இருக்கும் வரைக்கும் அருமை தெரிவதில்லை. இழந்த பின்பு வருந்தம் தெரிவிப்பதோடு நமது கடமை முடிந்து விடுகிறது. தேனி எழுத்துருக்கள் பலவற்றையும் உருவாக்கியவரும், தனது பெயரைக்கூட எங்கும் வெளிப்படுத்த விரும்பாத, தமிழுக்கான தனது உழைப்பிற்காக எந்த லாப நோக்கமும் இன்றி அயராது பாடுபட்ட மனிதரை, தமிழும் இணையமும் எந்நாளும் மறக்கலாகாது.

மதிப்பிற்குரிய திரு.உமர் அவர்கள் குறித்த தனது பார்வையை திரு மாஹிர் அதிரை இணைய தளத்தில் தந்த விபரங்கள் உங்களுக்காக இங்கே தரப்படுகிறது நன்றி பாரதி... உண்மையிலே நல்ல தகவல்கள்... தயாநிதி மாறன் மூலம் தமிழக முதல்வரை சந்தித்து.. உமர்தம்பியின் ஆராய்ச்சிகளை விளக்கினால்.. நன்றாக இருக்கும்...

இதை போன்றவர்கள்.. வெளிநாடுகளில் இருந்திருந்தால் பல வழிகளில் கவுரவிக்கப்பட்டிருப்பார்கள்.....

விரைவில் தமிழக அரசு நல்ல செய்தியை தரும் என நம்புகிறோம்

இளசு
14-07-2006, 10:48 PM
கூடுதல் தகவல்களுக்கு நன்றி பாரதி.

திரு. மாஹிர் அவர்களின் பதிவைப் படித்தால் ஒரு நெகிழ்ச்சியான பெருமிதம் தோன்றுகிறது.

உமர் தம்பி அவர்களுக்கு உரிய சிறப்பைச் செய்ய அரசுக்கு அவர் விடுக்கும் கோரிக்கைக்கு நாமும் ஆதரவளிப்போம்.

பாரதி
18-07-2006, 02:47 PM
"யுனிகோடு உமர்" அவர்களுடைய குடும்பத்தினர் அனுப்பியுள்ள நன்றி அறிவிப்பு செய்தி:


http://www.tamilbookskadal.com/uniumar/images/Umar_Screen_Version.jpg
"எங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய உமர்தம்பியின் மரணச்செய்தி அறிந்தவுடன் தங்களின் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொண்டதோடு எங்கள் குடும்பத்தார்க்கும் குழந்தைகளுக்கும் தொலைபேசி வாயிலாகவும், பல்வேறு தமிழ் இணையதளங்கள் வாயிலாகவும், மின்குழுமங்கள் வாயிலாகவும், மின்னஞ்சல்கள் மூலமாகவும் ஆறுதல் வழங்கிய அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் உமர் தம்பி அவர்களின் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களுடைய கட்டுரைகள், மடல்கள் கண்டபிறகுதான் உமர்தம்பி அவர்கள் இணையத்தில் தமிழுக்காக ஆற்றிய பணிகள் பற்றி எங்களுக்கே தெரியவந்தன. இறைவனுக்கே எல்லாப் புகழும்.!"

ஓவியா
18-07-2006, 04:27 PM
சான்றொர் உமர்தம்பி அவர்கள் தமிழுக்காக ஆற்றிய பணிகளை கண்டு நேகிழ்ந்தேன்...

தகவல்களுக்கு நன்றி பாரதி...

வட்டா
28-06-2007, 08:16 PM
உமர் தம்பியை பற்றி மேலும் பல விசயங்களை கீழ்கண்ட சுட்டியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்


உமர் தம்பி (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF)

அமரன்
28-06-2007, 08:25 PM
உமர் தம்பியை பற்றி மேலும் பல விசயங்களை கீழ்கண்ட சுட்டியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்


உமர் தம்பி (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF)

மேலும் அல தகவல்களை அறியத்தந்த வட்டாவுக்கு நன்றி.

இதயம்
04-07-2007, 06:18 AM
உமர் தம்பி அவர்களின் பணி உலகம் அறிந்ததே..! அவரை என் ஊர்க்காரர் (அதிரை என்கிற அதிராம்பட்டினம்) என்று சொல்லிக்கொள்வதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்.

ஆரம்பத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பழுது நீக்குபவராய் தன் வாழ்க்கையை தொடங்கி, தமிழுக்கு பெரும் தொண்டு செய்து இணைய உலகத்தில் மறக்கமுடியா மனிதராய் போனவர் அவர். இறைவன் அவரை சுவனத்தில் சேர்க்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

இராசகுமாரன்
04-07-2007, 06:36 AM
தனது எழுத்துருக்களாலும், செயலிகளினாலும் நமது தளம் போன்ற பல்லாயிரம் தளங்கள் இணையத்தில் உலாவ காரணமாக இருந்த ஒரு தமிழ் அறிஞரை இழந்ததை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் தமிழ் மொழிக்கு செய்த சேவைகள் எண்ணிலடங்காதது. அன்னாருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.

பெருந்துயரில் உள்ள அவருடைய குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.

சுகந்தப்ரீதன்
04-07-2007, 06:59 AM
தன்னலமற்ற தமிழரின் மறைவு தமிழுக்கு ஏற்பட்ட பேரிழப்பாய் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் உள்ளவரை உமர் தம்பி அவர்கள் வாழ்ந்து கொண்டுதானிருப்பார். அண்ணாரின் ஆத்மாவையும் அவர் குலத்தையும் கண்டிப்பாக நம் தமிழ்தாய் ஆசிர்வதிப்பாள்.

பல்வேறு காலகட்டங்களில் தமிழ் முஸ்லிம்கள் தமிழுக்காக ஆற்றிய தொண்டுகள் மறக்கடிக்கப்பட்டது போல் அண்ணாரின் சேவையை உதாசீனப்படுத்தாமல் தமிழக மக்களும் அதன் தலைவர்களும் அண்ணாருக்குரிய மரியாதையை செலுத்த வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கோள்கிறேன்.

விகடன்
04-08-2007, 08:36 PM
அன்னார் தமிழையும் இணையத்தையும் இலகுமுறைப் பாலம் ஒன்றை அமைத்து இணைத்திருக்கிறார் என்றால் மிகையாகது. அவரின் பிரிவால் துயருரும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

srimariselvam
22-08-2007, 02:52 PM
ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.

மனோஜ்
22-08-2007, 03:08 PM
வருத்தமான விடையம் அவர் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்