PDA

View Full Version : சிதறிய கனவுகள்!



ப்ரியன்
12-07-2006, 06:49 AM
மும்பையில் மூன்று வருடங்களுக்கு முன் "இந்தியா கேட்"டில் குண்டுவெடித்தப் பொழுது நான் மும்பையில் இருந்தேன்.அக்கணம்,அச்செய்தியை தொலைக்காட்சியில் கண்ட கணம் எழுதியது...இன்றும் மும்பையில் குண்டுவெடித்து இக்கவிதையோடு ஒத்துவருவது மனதினை என்னவோ செய்கிறது.இறைவா!இறந்த அப்பாவிகளுக்கு ஆன்மா சாந்தி தா!இனி இது போலொரு கொடுமை நிகழாமல் காத்திடு!

மும்பையில் குண்டுவெடிப்பு
ஐம்பது பேர் பலி
அவசரம் காட்டும் சேனல்கள்!

இல்லையில்லை பலி எண்ணிக்கை
வெறும் நாற்பத்தொன்பதே
மறுக்கும் அரசாங்கம்!

ஊரிலிருந்து உறவுகளின்
உயிர்களை விசாரிக்கும்
தொலைப்பேசி அழைப்புகள்!

அண்டை நாட்டை அவசர அவசரமாய்
நினைவிற்கு கொணரும்
அமைச்சர்கள்!

அடுத்த ஆபரேசனுக்கு
ஆனந்தமாய் ஆயுத்தமாகும்
தீவிரவாதிகள்!

தேர்தலில் ஆதாயம்
பெறமுடியுமா ஆராயும்
எதிர்க்கட்சிகள்!

என்று,
இங்கு யாருக்குத்தான்
கவலை!
என்னைப் போன்ற
இறந்துப் போனவர்களின்
சின்னச் சின்ன
சிதறிய கனவுகளைப் பற்றி!

- ப்ரியன்.

இளசு
12-07-2006, 09:55 PM
மூன்று ஆண்டுகளுக்குப்பின்னும்
ஓர் அவலம் பொருந்துவது
மனிதத்தின் அவமானம்..

மதங்களை வெறுக்க வைப்பதே
இந்த வெறித்தன மிருகச் செயல்கள்தான்..

தேர்வு முடிவு பார்த்து குறுஞ்செய்தி அனுப்பிய
மகனைத் தேடும் தந்தை..

பேச- கேட்க இயலாச் சிறுவன்
குடும்பம் தேடும் கோரம்..


அப்பாவிகளைக் கொன்று
இப்பாவிகள் சாதிக்க நினைப்பது என்ன?


உங்கள் வேதனையில் என் ரணங்களும் சங்கமம் ப்ரியன்..

இனியவன்
13-07-2006, 04:51 AM
அப்பாவிகளைக் கொன்று
இப்பாவிகள் சாதிக்க நினைப்பது என்ன?

உங்கள் வேதனையில் என் ரணங்களும் சங்கமம் ப்ரியன்..

உலக நாடுகள் ஆயுதம் வாங்குற காசுக்கெல்லாம் அரிசி வாங்கியிருந்தா பட்டினிச் சாவே வராதே.

இது தம்பி திரைப்பட வசனம்.

தீவிரவாதம் இருபுறமும் கூரான ஆயுதம். இன்னும் எத்தனை பேரை பலி வாங்கக் காத்திருக்கிறதோ? நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.

Mano.G.
13-07-2006, 05:49 AM
உயிர்களை கொன்றுதானா
சாதிக்க வேண்டும்
உனது வேண்டுகோள் தான் என்ன?
மறைந்திருந்து தாக்குவது வீரமல்ல
முடிந்தால் நேருக்கு நேர் வா பார்க்கலாம்
கோழைகளே

உன்னக்கும் இதே கதிதான்
நீ விதைத்ததை நீ தானே
அறுவடை செய்ய வேண்டும்
அனுபவிப்பாய்



மனோ.ஜி

பென்ஸ்
14-07-2006, 02:05 AM
கொன்று விடும் கோபம் வரும் எனக்கு...

தாயின் தலையை வெட்டி தாலியை பிடுங்கி அதை அடகு வைத்து சாப்பிட நினைக்கும் இந்த மனதுக்கு பெயர்தான் உங்கள் மொழியில் புரட்சி என்றால் அது எங்கள் மொழியில் பயங்கரவாதம்...

என்றேனும் ஒரு நான் உன்னை கண்டால்
இதயத்தை எறிந்தால்தான் நீ சாவாய் என்றால்
இங்கு 100 கோடி இதயங்கள் உள்ளன...
இதயமே இல்லாத உனக்கு
இனியும் மன்னிப்பு இல்லை....

இளசு... மனோஜி சொன்னது போல் இவர்கள் விதைத்த வினையை அறுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை...

இனியவன்.. கத்தியை எடுத்தவன் கத்தியால் மடிவான்... அவனை கொல்லும் கத்தி நம்முடையதாய் இருக்கட்டுமே...

Mano.G.
14-07-2006, 07:23 AM
மும்பையில் குண்டுவெடிப்பு
ஐம்பது பேர் பலி
அவசரம் காட்டும் சேனல்கள்!
இல்லையில்லை பலி எண்ணிக்கை
வெறும் நாற்பத்தொன்பதே
மறுக்கும் அரசாங்கம்!
ஊரிலிருந்து உறவுகளின்
உயிர்களை விசாரிக்கும்
தொலைப்பேசி அழைப்புகள்!
அண்டை நாட்டை அவசர அவசரமாய்
நினைவிற்கு கொணரும்
அமைச்சர்கள்!
அடுத்த ஆபரேசனுக்கு
ஆனந்தமாய் ஆயுத்தமாகும்
தீவிரவாதிகள்!
தேர்தலில் ஆதாயம்
பெறமுடியுமா ஆராயும்
எதிர்க்கட்சிகள்!
என்று,
இங்கு யாருக்குத்தான்
கவலை!
என்னைப் போன்ற
இறந்துப் போனவர்களின்
சின்னச் சின்ன
சிதறிய கனவுகளைப் பற்றி!

மூன்று ஆண்டுகளுக்குப்பின்னும்
ஓர் அவலம் பொருந்துவது
மனிதத்தின் அவமானம்..
மதங்களை வெறுக்க வைப்பதே
இந்த வெறித்தன மிருகச் செயல்கள்தான்..
தேர்வு முடிவு பார்த்து குறுஞ்செய்தி அனுப்பிய
மகனைத் தேடும் தந்தை..
பேச- கேட்க இயலாச் சிறுவன்
குடும்பம் தேடும் கோரம்..

அப்பாவிகளைக் கொன்று
இப்பாவிகள் சாதிக்க நினைப்பது என்ன?
உயிர்களை கொன்றுதானா
சாதிக்க வேண்டும்
உனது வேண்டுகோள் தான் என்ன?
மறைந்திருந்து தாக்குவது வீரமல்ல
முடிந்தால் நேருக்கு நேர் வா பார்க்கலாம்
கோழைகளே
உன்னக்கும் இதே கதிதான்
நீ விதைத்ததை நீ தானே
அறுவடை செய்ய வேண்டும்
அனுபவிப்பாய்

என்றேனும் ஒரு நான் உன்னை கண்டால்
இதயத்தை எறிந்தால்தான் நீ சாவாய் என்றால்
இங்கு 100 கோடி இதயங்கள் உள்ளன...
இதயமே இல்லாத உனக்கு
இனியும் மன்னிப்பு இல்லை....


இதுதான் எங்களின் கோபம்
தாங்கமாட்டாய்


மனோ.ஜி

றெனிநிமல்
15-07-2006, 06:43 PM
அங்கே மரணித்த அப்பாவி மக்களின் ஆத்மா சந்தி பெறட்டும்.
கவிதை படைத்த ப்ரியனுக்கு நன்றி.