PDA

View Full Version : மும்பை குண்டுவெடிப்பு



அறிஞர்
11-07-2006, 08:26 PM
மும்பையில் 30 நிமிட தொடர் குண்டுவெடிப்பில்.. 140 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். 400க்கு மேற்பட்டோர் காயம்.

என்றுதான் இந்த தீவிரவாதம் ஒழியுமோ...

http://i13.photobucket.com/albums/a282/aringar/1_4.jpg

இளசு
11-07-2006, 09:42 PM
மனம் துடிக்க வைக்கும் காட்சிகள்.

பொதுமக்கள் புழங்கும் மாலை நேர ரயிலில் குண்டு வைத்த தீவிரவாதிகளுக்கு எத்தனை தண்டனை தந்தாலும் போதாது.


ஆனால் அவர்களுக்கும் வக்கீல்கள்.. பொய்சாட்சிகள்... ஜாமீன்...

வெட்கம்.. வேதனை...

(பகலில் ஜம்முவில் ஆரம்பித்த கொடுமை....

பல ஆண்டுகளாய் தொடரும் கொடுமை...)


என்று முடியும்?

Mano.G.
12-07-2006, 02:57 AM
உண்மையில் கொடுமையிலும் கொடுமை
அப்பாவி மக்களை இப்படி கொல்வது
ஏன் தான் இந்த வன்முறையை நாடுகிறார்களோ


மனோ.ஜி

bioalgae
12-07-2006, 03:38 AM
மும்பையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு கொடுமையான செயல் நாம் பொறுமை தீவிரவாதிகளுக்கு பலம், அவர்களையும் அவர்களின் இடங்களையும் அழிக்க வேண்டும், அப்பாவி மக்களை அழிக்க அவர்களுக்கு என்ன உரிமையுள்ளது
வன்முறையில் உயிர் இழந்த மக்களுக்கு கண்ணிர் அஞ்சலி

மதி
12-07-2006, 04:02 AM
நேற்று மட்டும் 12 குண்டு வெடிப்புகள்...! நாட்டுத் தலைவர்களை குறிவைத்த காலம் போய் அப்பாவி நடுத்தர வர்க்கத்தினரை குறி வைக்கும் செயல் படு பாதகமானது..கண்டிக்கத்தக்கது.

இணைய நண்பன்
12-07-2006, 05:42 AM
உலகில் எப்போதுதான் அமைதி ஏற்படுமோ? தீவிரவாதிகளின் ஈவிரக்கமற்ற செயலால் அப்பாவி மக்கள் உயிர் இழப்பது தாங்க முடியாத சோக நிகழ்வு.

தாமரை
12-07-2006, 06:09 AM
மும்பை! 1993, மார்ச் 12, 13 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்த அந்த நாட்களில் நான் தானே வில் இருந்தேன்.

அந்த நாட்களில் மஸ்ஜித் (போரிபந்தர்) பகுதியில் குடியிருந்த என் நண்பரின் குடும்பம், நடந்தே என் வீட்டிற்கு வந்ததும், அந்தச் சிறுவனின் கண்களில் உறைந்து நின்ற பீதியும் இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை..

டிசம்பர் 6, ஜனவரி 6 எனத் தொடர்ந்த கலவரங்கள், மார்ச் குண்டுவெடிப்பு இவற்றினூடே நெஞ்சை நிமிர்த்தி மும்பை மக்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

வன்முறையால் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி

விழிப்போடு இருப்போம்.

pradeepkt
12-07-2006, 06:19 AM
கோழைகளின் செயல் கண்டிக்கத்தக்கது.
மும்பை மக்களுக்கு எம் அனுதாபங்கள். மீண்டு வழமை போலெழுந்து வர வாழ்த்துகள்.

ஓவியா
12-07-2006, 10:55 AM
அப்பாவி மக்களை கொன்று குவித்து
புண்ணிய பூமியை சுடுகாடாக்கும்
தீவிரவாதிகளின் மிருக குணத்திற்க்கு
காலம் பதில் சொல்லும் பொழுது
சமாதிகலே மிஞ்சும்.....

வன்முறையால் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி

mgandhi
10-08-2006, 06:58 PM
இத்துடன் அந்த இரத்த பசிதிரட்டும், மின்டும்
மக்கள் இரத்தம் சிந்தாமல நிரூத்தட்டும்