PDA

View Full Version : நுழைவு சொல் - திருட்டு

அறிஞர்
10-07-2006, 04:46 PM
சில மாதங்களாக.... நன்றாக செயல்படும் அன்பர்களின் பாஸ்வேர்ட் (நுழைவு சொல்) திருடப்படுகிறது.

ஒரு நச்சு மென்பொருள் கொண்டு எந்தெந்த உருப்பினர்கள் தங்கள் username-ம் & password-ம் ஒரே மாதிரியாக வைத்துள்ளார்கள், அல்லது 12345, abcdef போன்ற எளியதாக வைத்திருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க முடிகிறது. இதை வைத்து ஒரு கும்பல் இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறது.

அப்படிப் பட்டவர்களுடைய கணக்கை கைப்பற்றியவுடன் ஈமெயில் முகவரியை மாற்றிவிடுகிறார்கள்.

எனவே எளிதான் பாஸ்வேர்டை தேர்வு செய்யாதீர்கள். உங்கள் பெயர், 12345, 111, இது போல் எளிதான பாஸ்வேர்டுகளை தவிருங்கள்....

வித்தியாசமான.. பெயர்கள்.. !@%^% இது போல சில எழுத்துக்களை பாஸ்வேர்ட் உருவாக்கி உபயோகியுங்கள்

இணைய நண்பன்
10-07-2006, 08:53 PM
அறிவுரைக்கு நன்றி அறிஞர் அவர்களே. தொடர்ந்து 5 நாட்களாக என்னால் மன்றத்திற்குள் நுழைய முடியாமல் இருந்தேன்.மன்றத்தில் நுழைய கடவுச்சொல்லைத் தட்டினால் எனது பெயரை மன்றத்தில் காட்டும் (ஒன்லைன் இருப்போர் நிறலில்).ஆனால் உள்ளே நுழைய முடியாது.பல முறை முயற்சித்தேன் முடியவில்லை.இன்று கடவுச்சொல்லை மாற்றிப்பார்த்தேன்.வந்துவிட முடிந்தது.தாங்களின் தகவலுக்கு நன்றி.

ஓவியா
11-07-2006, 12:05 AM
எனக்கும் இந்த அனுபவம் உண்டு

நிர்வாகியின் உதவியோடு மீண்டு மீண்டும் மன்றம் வந்தேன்

கவனம் நன்பர்களே

மதி
11-07-2006, 05:22 AM
அடடா இது போலெல்லாம் நடக்கிறதா..ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..ஹ்ம்

மயூ
11-07-2006, 10:47 AM
ஆகா!
கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்கையா!

svenkat
02-08-2006, 04:20 PM
உண்மைதான் நண்பர்களே, எத்தனைமுறைதான் கடவுச் சொல்லை மாற்றுவதோ

அறிஞர்
02-08-2006, 04:26 PM
உண்மைதான் நண்பர்களே, எத்தனைமுறைதான் கடவுச் சொல்லை மாற்றுவதோ வாருங்கள் வெங்கட். தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் சொல்லுங்களேன்.

கடினமான கடவு சொல்லை வைத்தால்... தொல்லை இல்லையே...

svenkat
02-08-2006, 05:04 PM
நன்றி அறிஞர்,
அறிமுகம் பகுதியில் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டுள்ளேன்

vckannan
03-08-2006, 05:11 AM
நன்றி அறிஞரே மிக அவசியமான திரி இது.

நண்பர்களே,

நம்மில் பலருக்கு இந்த அனுபவம் இருக்கும்.
கடினமான கடவுசொல் வைத்தால் மறந்தும் போய்விடுகின்றது.
என்ன செய்யலாம்?
எவ்வளவு கால இடைவெளியில் கடவு சொல் மாற்றலாம் ?

எனது சிறு யோசனைகள்:
1. கடவு சொல் மாற்றுவதை குறைந்தது வாரம் ஒரு முறையாவது செய்யலாம்
2 கடினமான கடவு சொல்லை நினைவில் வைக்க :.

அ). உங்களுக்கு நினைவிற் வரும் சொல்லில் இருந்து 3 அ 4 எழுத்து உ-ம் எழுத்து
chandran முதல் 4 எழுத்து : chan ( dran ம் எடுக்கலாம் )

ஆ) உங்களுக்கு பிடித்த எண் (பிறந்த தேதி போன்ற எண்கள் )
12-10-78 இருந்து 1210

இ)குறைந்தது ஒரு குறி(symbol) !,@.#,$,% : உ-ம் - # (இது போல #&^-ம் எடுக்கலாம் )மறதி அதிகம் என்றல் விசை பலகையில்(Keyboard) பக்கதில் உள்ள குறி ~!, !@, @#, #$, %^ போல எடுக்கலாம்.

சேர்த்தல் = (ஓரளவிற்க்கு?) கடினமான கடவு சொல் : 1210#chan ( chan121#0, #%121dran )

பயன்படும் என்று நினைக்கிறேன்

முயன்று சொல்லுங்கள்
மேன்படுத்துங்கள்

pradeepkt
03-08-2006, 06:11 AM
நான் பல சமயங்களில் சில சமன்பாடுகளைக் கூடப் பயன்படுத்துவதுண்டு....

E=m*c^2 :D :D :D

பரஞ்சோதி
03-08-2006, 06:34 AM
நான் பல சமயங்களில் சில சமன்பாடுகளைக் கூடப் பயன்படுத்துவதுண்டு....

E=m*c^2 :D :D :D

தவளை தன் வாயால் கெடும் :):D

மயூ
03-08-2006, 08:09 AM
நான் பல சமயங்களில் சில சமன்பாடுகளைக் கூடப் பயன்படுத்துவதுண்டு....

E=m*c^2 :D :D :D

அடேங்கப்பா நம்ம அண்ணாவுக்கு ஐன்டீனோட ஆவி பூந்திட்டிதோ? :D :D :D

gragavan
03-08-2006, 08:51 AM
நான் பல சமயங்களில் சில சமன்பாடுகளைக் கூடப் பயன்படுத்துவதுண்டு....

E=m*c^2 :D :D :Dஅத இப்பிடி வெளிப்படையாவாச் சொல்றது? ஹி ஹி:D :D

நகைச்சுவை இருக்க, இது போன்ற முயற்சிகள் மிகவும் தவறானவை. இப்படிச் செய்யாதீர்கள் என்று செய்கிறவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

vckannan
03-08-2006, 09:16 AM
நான் பல சமயங்களில் சில சமன்பாடுகளைக் கூடப் பயன்படுத்துவதுண்டு....

E=m*c^2 :D :D :D
படிக்க வேடிக்கையா இருந்தாலும் சமன்பாடு நல்ல யோசனை.:)

pradeepkt
03-08-2006, 10:49 AM
என்ன எல்லாரும் என்னை வாருறீங்க...
உலகத்தில இது ஒண்ணுதான் சமன்பாடா???
நான் ஏதோ உதாரணத்துக்குச் சொன்னேன்... :D :D :D

ராகவா, யாரை என்ன செய்ய வேணான்னு சொல்றீங்க????

mgandhi
12-08-2006, 05:57 PM
தகவலுக்கு நன்றி

மயூ
18-12-2006, 09:58 AM
என்ன எல்லாரும் என்னை வாருறீங்க...
உலகத்தில இது ஒண்ணுதான் சமன்பாடா???
நான் ஏதோ உதாரணத்துக்குச் சொன்னேன்... :D :D :D

ராகவா, யாரை என்ன செய்ய வேணான்னு சொல்றீங்க????
பட்ட காலே படும் :D

பிரசாத்
26-03-2007, 05:49 AM
அறிவுரைக்கு நன்றி,

நானும் என் கடவுச்சொல்லை கடினமான கடவுச்சொல்லாக மாற்றிக் கொள்கிறேன்.

எங்கே சென்றாலும் இது போன்ற திருடர்களின் தொல்லைகளை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

நன்றி
பிரசாத்

மனோஜ்
26-03-2007, 08:29 AM
இதிலும் திருட்டா அறிவுரைக்கு நன்றி அறிஞரே

leomohan
26-03-2007, 09:38 AM
சில மாதங்களாக.... நன்றாக செயல்படும் அன்பர்களின் பாஸ்வேர்ட் (நுழைவு சொல்) திருடப்படுகிறது.

ஒரு நச்சு மென்பொருள் கொண்டு எந்தெந்த உருப்பினர்கள் தங்கள் username-ம் & password-ம் ஒரே மாதிரியாக வைத்துள்ளார்கள், அல்லது 12345, abcdef போன்ற எளியதாக வைத்திருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க முடிகிறது. இதை வைத்து ஒரு கும்பல் இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறது.

அப்படிப் பட்டவர்களுடைய கணக்கை கைப்பற்றியவுடன் ஈமெயில் முகவரியை மாற்றிவிடுகிறார்கள்.

எனவே எளிதான் பாஸ்வேர்டை தேர்வு செய்யாதீர்கள். உங்கள் பெயர், 12345, 111, இது போல் எளிதான பாஸ்வேர்டுகளை தவிருங்கள்....

வித்தியாசமான.. பெயர்கள்.. !@%^% இது போல சில எழுத்துக்களை பாஸ்வேர்ட் உருவாக்கி உபயோகியுங்கள்

ஐயோ இங்கேயுமா. நான் சுலபமான கடவுச்சொல் வைத்திருந்தேன். உடனே மாற்றிவிடுகிறேன். நன்றி.

ஓவியன்
22-04-2007, 06:21 AM
தகவலுக்கு நன்றி!

கவனமாக இருப்போம், தவறுகள் நடக்காமல் தவிர்ப்போம்.

பி.கு-பல வேளைகளில் நானே எனது நுளைவுச் சொல்லை மறந்து தவிப்பதுண்டு, இது இப்படி இருக்க மற்றவர் எப்படிக் கண்டு பிடிப்பதாம்??:nature-smiley-007:

அக்னி
24-04-2007, 02:59 AM
அறிஞர் அவர்களின் அறிவுரை, என் போன்ற புதியவர்களுக்கு மிகவும் முக்கியமானது.

எனக்கும் இந்த அனுபவம் உண்டு

நிர்வாகியின் உதவியோடு மீண்டு மீண்டும் மன்றம் வந்தேன்

கவனம் நன்பர்களே

மேலும், ஓவியா அவர்களே, எவ்வாறு நீங்கள் இந்த சிக்கலிலிருந்து மீண்டு வந்தீர்கள்? அதாவது எவ்வாறு நிர்வாகியின் உதவியைப் பெற்றீர்கள்?

poo
24-04-2007, 05:57 AM
என் நுழைவுச்சொல் வேறு யாருக்காவது தெரிந்திருக்குமா என எனக்குக்கூட சந்தேகமாக இருக்கிறது...

(அதற்கு வாய்ப்பில்லை.. ஏனெனில் ஒரு சிறுகுறிப்பு வரைக என்னும் அளவில்.. நீளத்தில் எண், எழுத்து, கண் என கண்டதையும்போட்டு என் நுழைவுச்சொல்லை அமைத்திருக்கிறேன்.. ஆனால் நான் கணனியில் இல்லாதபோது மன்றத்தில் நான் ஆன் -லைனில் இருப்பதாகக் காட்டுவதாக கேள்விப்பட்டேன்... எப்படி என புரியவில்லை?!!)

நான் அலுவலகத்தில் இருந்துதான் மன்றம் வருகிறேன். வீட்டில் கணனி இல்லை. அதனால் இந்திய நேரப்படி காலை 9 முதல் மாலை 5 வரை இருப்பேன். தயவுசெய்து நண்பர்கள் கவனிக்க முடிந்தால்
நான் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு பிறகு என் பெயர் லைனில் இருப்பதாக காட்டினால் சொல்லுங்களேன்..
வேலை செய்யும்போதே அடிக்கடி லாக்- அவுட் ஆகிவிடும் என் பெயர்.. எப்படி நான் இல்லாதபோது லைனில் வருகிறதோ?!..

ஓவியா
24-04-2007, 06:20 PM
மேலும், ஓவியா அவர்களே, எவ்வாறு நீங்கள் இந்த சிக்கலிலிருந்து மீண்டு வந்தீர்கள்? அதாவது எவ்வாறு நிர்வாகியின் உதவியைப் பெற்றீர்கள்?

வணக்கம் அக்கினியாரே,

நான் அறிஞர் சாருக்கு இ-மேய்லில் சிக்கலை விளக்கினேன், பின் 2 நாட்கள் கழித்து புது கடவு சொல் அனுப்பி வைத்தார்கள்.

இதயம்
25-04-2007, 07:07 AM
என்ன எல்லாரும் என்னை வாருறீங்க...
உலகத்தில இது ஒண்ணுதான் சமன்பாடா???
நான் ஏதோ உதாரணத்துக்குச் சொன்னேன்... :D :D :D

ராகவா, யாரை என்ன செய்ய வேணான்னு சொல்றீங்க????

அதானே பார்த்தேன்..!! இதை முன்பே சொல்லியிருக்கலாமே..! உங்கள் சமன்பாட்டு கடவுச்சொல்லை முயற்சி செய்து எத்தனை பேர் ஏமாந்தார்களோ தெரியவில்லை..!!:D

என்னுடைய அறிவுக்கு எட்டியவரையில் அனைவரும் * * * * * * -ஐ தான் கடவுச் சொல்லாக உபயோகிக்கிறார்கள். இதை நான் சொன்னதாக யாரிடமும் சொல்ல வேண்டாம்..!!:D:D:D:D:D:D