PDA

View Full Version : ஆ! தங்கம்!!!இனியன்
10-07-2006, 02:59 PM
கவிஞர் வாலி

ஏறுகிறேன்;
ஏறிய கையோடு இறங்குகிறேன்;
இறங்குகிறேன்;
இறங்கிய கையோடு ஏறுகிறேன்;
நான்
நாளும் பொழுதும்
இப்படி மாறுகிறேன்;
இதை நாணமின்றிக் கூறுகிறேன்!



ஏனெனில்
ஏற்ற இறக்கங்களில் _
எனக்கு
ஏதுமில்லை விவஸ்தை;
என்பால்
ஏகப் பிரியம்
எவர்க்குளதோ
அவர்க்கெலாம்தான் அவஸ்தை!


எழுவதும் விழுவதும்
எனக்கு மட்டுமா வாடிக்கை?
கதிரவனும்
கடலலையும்
வைகலும் காட்டவில்லையா _ அவ் வேடிக்கை?



எல்லாப் பெண்களுக்கும்
என் மீது கண்; ஆனால்
எல்லோரையும் போல
என்னைப்
பெற்றெடுத்ததோ
பெண் அல்ல; மண்!


ஒரே
ஒருத்தியோடு _
ஓர்
ஒற்றுமை ....
எனக்கு உண்டு: அதை
எடுத்துரைப்பேன் விண்டு!



சீதைபோல் _ தீக்குளிக்கும்
பேதை நான்;
அவள் _
அனல் குளித்தது....
கற்புக்கு அணிகலனாக; நானோ
கண்டவர்க்கு அணிகலனாக!



காசுடையார்
கண்ணுக்கு நான் ஆ! தங்கம்!;
காசற்றார்
கண்ணுக்கு நான் ஆதங்கம்!



நன்றி குமுதம்

இளசு
10-07-2006, 11:46 PM
சூடு மீட்டரையும் மிஞ்சும் வேகம் விலையில் காட்டும் தங்கத்துக்கு
சரியான சூடு .. வாலியின் வார்த்தை விளையாட்டு அருமை.

நன்றி இனியவன்..

தாமரை
11-07-2006, 04:15 AM
கவிஞர் வாலி

எல்லாப் பெண்களுக்கும்
என் மீது கண்; ஆனால்
எல்லோரையும் போல
என்னைப்
பெற்றெடுத்ததோ
பெண் அல்ல; மண்!


ஒரே
ஒருத்தியோடு _
ஓர்
ஒற்றுமை ....
எனக்கு உண்டு: அதை
எடுத்துரைப்பேன் விண்டு!



சீதைபோல் _ தீக்குளிக்கும்
பேதை நான்;
அவள் _
அனல் குளித்தது....
கற்புக்கு அணிகலனாக; நானோ
கண்டவர்க்கு அணிகலனாக!




நன்றி குமுதம்

மண் பெற்ற
பொன்தானே
சீதையும்

பொன்மானை
சீதை
பிரியப்பட்டது
சகோதர பாசமோ!!

ஓவியா
11-07-2006, 04:42 AM
மண் பெற்ற
பொன்தானே
சீதையும்

பொன்மானை
சீதை
பிரியப்பட்டது
சகோதர பாசமோ!!

எங்கிருந்துதான் இப்படி விதியாசமா சிந்தனை வருதோ
நல்லாதான் இருக்கு...:)

தாமரை
11-07-2006, 04:50 AM
எங்கிருந்துதான் இப்படி விதியாசமா சிந்தனை வருதோ
நல்லாதான் இருக்கு...:)

இன்னும் வருமே!!!

மண் தந்த
மகள்கள் இரண்டு.

ஒருத்தி
கற்பிற்கு எடுத்துக்காட்டாய்
இன்னொருத்தி
கருப்பிற்கு எடுத்துக்காட்டாய் (பதுக்கல் தங்கம்)

மயூ
11-07-2006, 10:53 AM
இன்னும் வருமே!!!

மண் தந்த
மகள்கள் இரண்டு.

ஒருத்தி
கற்பிற்கு எடுத்துக்காட்டாய்
இன்னொருத்தி
கருப்பிற்கு எடுத்துக்காட்டாய் (பதுக்கல் தங்கம்)
பேஷ் பேஷ் அருமை.... அருமை....
நல்ல தங்கம் கெட்டதங்கம் பற்றி சொன்ன நீங்க நல்ல தங்காள் பற்றி சொல்ல மாட்டீங்களா???

தாமரை
11-07-2006, 11:01 AM
பேஷ் பேஷ் அருமை.... அருமை....
நல்ல தங்கம் கெட்டதங்கம் பற்றி சொன்ன நீங்க நல்ல தங்காள் பற்றி சொல்ல மாட்டீங்களா???

நல்ல தங்காள்..
வறுமை தாங்காள்
வறுமை தாங்காள்
வன்சொல் தாங்காள்
வன்சொல் தாங்காள்
வையத்தில் தங்காள்
வையத்தில் தங்காள்
வம்சத்தை மிதித்தது தன்கால்.

:D :D :D

மயூ
11-07-2006, 11:06 AM
நல்ல தங்காள்..
வறுமை தாங்காள்
வறுமை தாங்காள்
வன்சொல் தாங்காள்
வன்சொல் தாங்காள்
வையத்தில் தங்காள்
வையத்தில் தங்காள்
வம்சத்தை மிதித்தது தன்கால்.

:D :D :D
அருமை அண்ணா அருமை

pradeepkt
11-07-2006, 12:52 PM
நல்ல தங்காள்..
வறுமை தாங்காள்
வறுமை தாங்காள்
வன்சொல் தாங்காள்
வன்சொல் தாங்காள்
வையத்தில் தங்காள்
வையத்தில் தங்காள்
வம்சத்தை மிதித்தது தன்கால்.

:D :D :D
சபாஷ்!

செல்வன், கனமா ஒரு கவிதை எழுதிட்டு எதுக்குங்க ஸ்மைலி போட்டிருக்கீங்க? நல்லதங்காள் கதை பலருக்குப் படிப்பினை - எப்படி வாழலாம் என்பதற்கு அல்ல, ஏன் சாகக் கூடாது என்பதற்கு!

சின்ன வயதில் சித்திரைத் திருவிழா சமயத்தில் தல்லாகுளம் பொட்டலில் நாடகம் போடுவார்கள். ராத்திரி சீக்கிரமே போயி முன்னாடி உட்கார்ந்து கொண்டால் சின்னப் பயல்களுக்குக் கொட்டடிக்க, ஜிஞ்சா தட்ட, பீப்பீ ஊத என்று சில வாய்ப்புகள் கிடைக்கும். இதுக்காகவே அப்படி ஒரு நாள் போயிப் பாத்த நாடகம்தான் நல்லதங்காள்!

அன்னைக்கு நடிச்ச அம்மாவுக்கு உண்மையிலயே என்ன சோகமோ, புள்ளைகளைக் கெணத்துல தள்ளி விட்டு கெணத்துல குதிக்கிற காட்சியில அப்படியே பொங்கி எழுந்து முதல் வரிசையிலயே குதிச்சிட்டாங்க... இந்தக் கூத்தெல்லாம் மீறியும் அன்னைக்கு ராத்திரி முழுக்க சோகத்துல தூக்கம் வரலை! அதிகாலைல அழகர்கிட்ட இனிமேல் உலகத்துல ஒரு நல்லதங்காள் வரக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன். அப்புறம் நிறைய யோசனை செஞ்சிருக்கேன். இதில யாரு பேர்ல தப்புன்னு?

இனியன்
11-07-2006, 02:05 PM
அருமையான பின்னூட்டங்கள்.
மன்ற உறவுகளுக்கு நன்றி.

தாமரை
12-07-2006, 11:41 AM
சபாஷ்!

செல்வன், கனமா ஒரு கவிதை எழுதிட்டு எதுக்குங்க ஸ்மைலி போட்டிருக்கீங்க? ?

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க..

:D :D :D

pradeepkt
12-07-2006, 12:07 PM
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க..

:D :D :D
நம்பிக்கையின்மையப் பிரிங்க
சோகத்தை எறிங்க
மகிழ்ச்சியாத் திரிங்க
எதுத்தவன் தோலை உரிங்க
:D :D :D

என்னமோ போங்க !!!

sarcharan
13-07-2006, 10:38 AM
நம்பிக்கையின்மையப் பிரிங்க
சோகத்தை எறிங்க
மகிழ்ச்சியாத் திரிங்க
எதுத்தவன் தோலை உரிங்க:D :D :D

என்னமோ போங்க !!!


அசீத் மாதிரியே பேசுற .. ஹ்ம்ம்ம்

pradeepkt
13-07-2006, 12:47 PM
அசீத் பாதிரியே பேசுற .. ஹ்ம்ம்ம்
அசீத்து அந்த ஃபாதர் ஆகலை, காட் ஃபாதர் ஆகப் போறாப்புல...
அடுத்து அனேகமா உன் தோலைத்தான் உரிக்கணும் :D :D

தாமரை
13-07-2006, 12:51 PM
அசீத்து அந்த ஃபாதர் ஆகலை, காட் ஃபாதர் ஆகப் போறாப்புல...
அடுத்து அனேகமா உன் தோலைத்தான் உரிக்கணும் :D :D

வாழைப்பழத் தோலை உரிச்சுகிட்டிருந்த ஞானப்பழம் இப்போ ஆளைப் பழம் போல் உரிக்கறேன்னு திரிகிறாரே!!

என்ன பிரதீப்பு! நீங்க பென்ஸ் - ஒரு கதைப் பார்வைன்னு திரி ஆரம்பிக்கலாமே!

ஆதவா
14-05-2007, 09:19 PM
Originally Posted by stselvan
நல்ல தங்காள்..
வறுமை தாங்காள்
வறுமை தாங்காள்
வன்சொல் தாங்காள்
வன்சொல் தாங்காள்
வையத்தில் தங்காள்
வையத்தில் தங்காள்
வம்சத்தை மிதித்தது தன்கால்.

:D :D :D


கணநேரத்தில் இப்படியெல்லாம் கவிதை எழுத என்னால் முடியாதப்பா!! செல்வன் அண்ணா... வாலியை மிஞ்சும் வரிகள் இவை....