PDA

View Full Version : பாவக்குறிப்பு



இளசு
24-04-2003, 07:30 AM
பாவக்குறிப்பு


நீ சிவன் சொத்தைத் தின்றாய்...
குலநாசம்!

நீ பெருமாள் சொத்தை தின்றாய்....
பரம்பரை அழியும்!

அடடா, ரெண்டு பக்க
வண்டவாளமும்
தண்டவாளத்தில்.....ஏறிக்......*******
0
0

சித்ரகுப்தன் குறிப்பா என்ன..?
அவைத்தலைவர்
அழித்துவிட்டார்
அவைக்குறிப்பில் இருந்து!

anushajasmin
24-04-2003, 08:17 AM
அட அருமையாக இருக்கிறது...... பாராட்டுகள் இளசு ஸார்.....?

இளசு
24-04-2003, 08:19 AM
அட அருமையாக இருக்கிறது...... பாராட்டுகள் இளசு ஸார்.....?

கேள்விக்குறி ஏன் ஆசிரியை அவர்களே??

Narathar
24-04-2003, 09:12 AM
அட அருமையாக இருக்கிறது...... பாராட்டுகள் இளசு ஸார்.....?

கேள்விக்குறி ஏன் ஆசிரியை அவர்களே??

டீச்சரை கேள்விகேட்க சந்தர்ப்பம் கிடைச்சா விட மாட்டீங்களே?????
அவர் ஏதோ தப்பித்தவரி போட்டிருப்பார்.......... இதையெல்லாம் பெருசு படுத்திக்கிட்டு
என்னைப்போல பெருந்தன்மையா இருக்கப்பழகுங்க...........நாராயனா எல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு!!!

தாசன்
24-04-2003, 10:28 AM
கேள்வி கேட்பதே ஆசிரியையின்
வேலை......
தன்மை....
இயல்பு....
பழக்கம்....
வழக்கம்....
வாழவின் குறிக்கோள் (கூட)
அட நாராயனா....நாரயனா....

rambal
24-04-2003, 12:37 PM
மொத்தத்தில் ஒரு கவிதையின் விமர்சனம் தடை புரண்ட ரயில் பெட்டியாகிவிட்டது.
கவிதையைப் பாராட்டுங்கள்.. நாராயணா!நாராயணா

poo
24-04-2003, 12:50 PM
வரிஞ்சி கட்டிக்கினு வராரே... தாசன்கூட வாத்தியாரோ நாராயணா?!!!

Narathar
25-04-2003, 05:22 AM
மொத்தத்தில் ஒரு கவிதையின் விமர்சணம் தடை புரண்ட ரயில் பெட்டியாகிவிட்டது.
கவிதையைப் பாராட்டுங்கள்.. நாராயணா!நாராயணா

தடம்புரட்டியது நானா? நாராயனா!!!!!
புரட்டிப்போட்டவர் நம்ம இளவல்!!..............
(எய்தவரிருக்க அம்புக்கு???? நாராயனா!!!)

gans5001
27-04-2003, 04:17 PM
அழித்துவிட்டார்
அவைக்குறிப்பில் இருந்து!

தற்போதைய சபாநாயகர் அடிக்கடி செய்வது அதைத்தானே

karikaalan
27-04-2003, 04:31 PM
குறிப்பேடு நல்லாவே இருக்குது. HR & CE பராமரிப்பதாகச் சொல்லிக்கொண்டு கொள்ளையடிப்பவர்கள் கதி இதுவானால் நன்றாக இருக்குமே!

===கரிகாலன்

gankrish
29-04-2003, 07:07 AM
சித்திரகுப்தன் பழைய கணக்கை அழித்து விட்டு புதிய கணக்கை ஆரம்பித்து இருப்பார் இந்த மாதம் 14 தேதியிலிருந்து. அதனால் இனிமேலாவது எவர் சொத்தும் நாசம் ஆகாமல் பார்த்துப்போம்.. நாராயணா... நாராயணா..

பாரதி
29-04-2003, 08:45 AM
அருமை அண்ணா..
நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள்.. என்று ம(�)க்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் செய்யும் தேசப்பணி என்ன என்று சூடு வைப்பது போல் சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

பாரதி

Hayath
29-04-2003, 01:29 PM
அருமையான கவிதை.இன்றைய அநாகரிகமான அரசியலை மிக நாகரிகமாக விளக்கியுள்ளீர்கள்.யார் செய்த கொலை,கொள்ளைகள் குறைவாக இருக்கிறதோ அவர்கள் நல்லவர்கள் என்பது போன்று இன்றைய உலகம் இருக்கிறது.உங்கள் கவிதைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

பூமகள்
02-06-2008, 04:30 PM
சைவ வைணவச் சண்டை...
அரசியலில்..
இருதலைகளின் சண்டை..

காணாமல் போன
குறிப்புகள்..
அடுத்த முறையும்
காணாமல் போக வைக்கும்..
ஆட்கள் தேடி...!!
------------------------------
இப்போதைய அரசியல் சூழலை அசத்தலாக "நறுக்" என்று கொடுத்து அசத்திட்டீங்க பெரியண்ணா..!!

சித்ர குப்தரின் புண்ணியக் கணக்கில் பாராட்டுகிறேன். ;) :)