PDA

View Full Version : எக்ஸ்-பி இயங்குதளத்தை தானாக நிறுவ வழி



பாரதி
09-07-2006, 05:43 PM
விண்டோஸ் எக்ஸ்-பி இயங்குதளத்தை தானாக நிறுவ வழி.


Automate the Installation of Windows XP

நம்மில் பலரும் விண்டோஸ் எக்ஸ்-பியை உபயோகிக்கிறோம். கணினியில் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் விண்டோஸ் எக்ஸ்-பியை கணினியில் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும் அல்லது ஏற்பட்டு இருக்கும். அப்படி நிறுவும் போது, அடிக்கடி நம்மைப் பற்றியோ அல்லது நமது விருப்பத்தேர்வு, நிறுவும் இடம், விண்டோஸ் எக்ஸ்-பியின் தயாரிப்பு எண் போன்றவற்றை கொடுக்க வேண்டியதிருக்கும். அதை தவிர்த்து, தானாக விண்டோஸ் எக்ஸ்-பி கணினியில் நிறுவப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா...? உங்களுக்குத் தேவையான வழிமுறைகள் இதோ.

1. உங்களிடம் இருக்கும் விண்டோஸ் எக்ஸ்-பி குறுவட்டை கணினியில் இட்டு, கணினியின் வன் தகட்டில் ஒரு ஃபோல்டரை உருவாக்கி (உதாரணமாக C:\auto_xp என்று வைத்துக்கொள்வோம்), குறுவட்டில் இருக்கும் கோப்புகள் எல்லாவற்றையும் அந்த ஃபோல்டருக்கு காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்த பின்னர் குறுவட்டை எடுத்து விடவும்.

2. குறுவட்டில் இருக்கும் Support > Tools ஃபோல்டருக்கு சென்று அங்கிருக்கும் Deploy.cab என்ற கோப்பை இருமுறை 'கிளிக்' செய்யவும். அதில் இருக்கும் கோப்புகள் அனைத்தையும் கணினியில் உள்ள வன் தகட்டில் மேலும் ஒரு ஃபோல்டரை உருவாக்கி(உதாரணமாக C:\deploy என்று வைத்துக்கொள்வோம்) காப்பி செய்து கொள்ளவும்.

3. அவ்வாறு காப்பி செய்ததில் இருக்கும் setupmgr.exe என்ற கோப்பை இருமுறை 'கிளிக்' செய்யுங்கள்.

4. அதன் பின்னர் வருபவற்றில் பெரும்பாலானவை அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில்தான் இருக்கும். அப்படி வரும் wizard-ல் கீழ்க்கண்ட முறைப்படி விருப்பங்களை தேர்வு செய்யவும்.
Create a new answer file;
Windows unattended installation; (இங்கு உங்களது விண்டோஸ் என்ன பதிப்பு என்பதை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.)
Fully automated;
No, this answer file will be used to install from CD;
கடைசியாக விண்டோஸ் உரிமத்தை கடைப்பிடிப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

5. General Settings என்பதில் நீங்கள் உங்களது பெயர், நிறுவனம், கணினித்திரையில் காண்பிக்கப்பட வேண்டிய அளவுகள், எந்த நாட்டின் நேரம், விண்டோஸின் தயாரிப்பு எண் போன்றவற்றை தர வேண்டியதிருக்கும். Dropdown பட்டியலில் நீங்கள் எதையேனும் தேர்வு செய்யாமல் போனால் default மதிப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

6. Network settings என்பதில் கணினியின் பெயர், நிர்வாகியின் கடவுச்சொல், networking components, workgroup போன்றவற்றை தரவேண்டியதிருக்கும். கடவுச்சொல் தருகிறீர்கள் எனில் 'encrypt the password' என்ற விருப்பத்தேர்வை தேர்வு செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

7. Advanced settings பகுதியில், உங்கள் தொலைபேசி - இணைய இணைப்பிற்கான விபரங்கள், இண்டர்நெட் எக்ஸ்புளொரரில் தேவைப்படும் விருப்பத்தேர்வு குறித்து நீங்கள் விரும்பினால் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

8. மேற்கூறியவற்றை முடித்த பின்னர் 'Finish' என்பதை அமுக்கி, அந்த கோப்பை "winnt.sif" என்ற பெயரில் சேமித்துக்கொள்ளவும்.

9. அப்படி சேமித்த winnt.sif கோப்பை நாம் முதலில் உருவாக்கிய c:\auto_xp ஃபோல்டரில் இருக்கும் C:\auto_xp\i386 என்ற ஃபோல்டருக்கு காப்பி செய்யவும்.

10. இணையத்தில் இருந்து www.tacktech.com/pub/microsoft/bootfiles/bootfiles.zip (http://www.tacktech.com/pub/microsoft/bootfiles/bootfiles.zip) என்ற கோப்பை பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த கோப்பில் இருப்பவற்றை ஏதேனும் ஒரு புதிய ஃபோல்டருக்கு (உதாரணமாக C:\boot) extract செய்து கொள்ளவும்.

11. இப்போது புதிய குறுவட்டில் எல்லாவற்றையும் காப்பி செய்ய 'நீரோ' மென்பொருளை இயக்கவும். திரையில் CD-ROM(Boot) என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
'Boot' என்பதில் C:\boot என்ற விபரத்தை தரவும்.
'Kind of emulation' என்பதில் "No emulation' என்பதை தேர்வு செய்யவும்.
'Boot message' என்பதை வெறுமனே வைத்திருக்கவும்.
'Number of loaded sectors' என்பதில் 4 என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

12. 'Burn' என்பதில் 'Write at once' என்பதை தேர்வு செய்யவும்.

13. தற்போது 'New' பொத்தானை அமுக்கவும். C:\auto_xp ஃபோல்டரில் இருப்பவற்றை add செய்யவும்.

14. ஒரு புதிய வெற்று குறுவட்டை கணினியில் இடவும். தற்போது நீரோ-வில் இருக்கும் 'Burn' பொத்தானை அழுத்தவும்.

சில பல நிமிடங்களில் உங்களுக்கு தேவையான தானாக நிறுவக்கூடிய குறுவட்டு தயார்!

குறிப்பு:
1. ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்.
2. உங்களிடம் உங்களுக்கு சொந்தமான விண்டோஸ் எக்ஸ்-பி குறுவட்டு இருந்தால் இதை கையாளவும். விண்டோஸ் எக்ஸ்-பி மென்பொருள் காப்புரிமை பெற்றது என்பதையும், அனுமதியின்றி காப்பி எடுப்பது குற்றம் என்பதையும் அறியவும்.

நன்றி: டிஜிட் மாத இதழ்.

pradeepkt
10-07-2006, 05:36 AM
2. உங்களிடம் உங்களுக்கு சொந்தமான விண்டோஸ் எக்ஸ்-பி குறுவட்டு இருந்தால் இதை கையாளவும். விண்டோஸ் எக்ஸ்-பி மென்பொருள் காப்புரிமை பெற்றது என்பதையும், அனுமதியின்றி காப்பி எடுப்பது குற்றம் என்பதையும் அறியவும்.

நன்றி: டிஜிட் மாத இதழ்.
அண்ணா, சூப்பர்!

mukilan
10-07-2006, 03:07 PM
என்ன இருந்தாலும் மைக்ரோஸாஃப்ட் ஆளாச்சே. அதான் தானாடாவிட்டாலும் தன் விரல் ஆடுகிறது

இளசு
10-07-2006, 11:22 PM
பயனுள்ள கட்டுரை. நன்றி பாரதி.

ஓவியா
11-07-2006, 12:02 AM
காலத்திர்க்கு ஏற்ற அருமையான தகவல்

நன்றி பாரதி சார்

பாரதி
12-07-2006, 01:55 PM
அன்புள்ள பிரதீப் - நான் கேட்பதற்குள் முகில் முந்திக்கொண்டார். மைக்ரோசாஃப்ட்டில் பணி செய்கிறீர்கள் என்பதை எல்லோருக்கும் சொல்ல வேண்டுமா...? ஆமாம்... விஸ்டா எப்படி இருக்கிறதாம்..?

முகிலனுக்கும் அண்ணனுக்கும் நன்றிகள்.

அன்பு ஓவியா... இது காலத்திற்கு ஏற்றதா...?ம்ம்.. இந்த விபரங்கள் ஓரிரு வருடங்கள் முன்பே தெரிந்திருந்தால் பலருக்கும் உதவியாக இருந்திருக்கும். இப்போது பலரும் விஸ்டாவை எதிர்நோக்கியும்,லினக்ஸுக்கு மாறிக்கொண்டும் இருக்கிறார்கள்..! கருத்திற்கு மிக்க நன்றி.

pradeepkt
12-07-2006, 03:18 PM
அன்புள்ள பிரதீப் - நான் கேட்பதற்குள் முகில் முந்திக்கொண்டார். மைக்ரோசாஃப்ட்டில் பணி செய்கிறீர்கள் என்பதை எல்லோருக்கும் சொல்ல வேண்டுமா...? ஆமாம்... விஸ்டா எப்படி இருக்கிறதாம்..?

முகிலனுக்கும் அண்ணனுக்கும் நன்றிகள்.

அன்பு ஓவியா... இது காலத்திற்கு ஏற்றதா...?ம்ம்.. இந்த விபரங்கள் ஓரிரு வருடங்கள் முன்பே தெரிந்திருந்தால் பலருக்கும் உதவியாக இருந்திருக்கும். இப்போது பலரும் விஸ்டாவை எதிர்நோக்கியும்,லினக்ஸுக்கு மாறிக்கொண்டும் இருக்கிறார்கள்..! கருத்திற்கு மிக்க நன்றி.
அண்ணா முகில்ஸூதான் ரொம்பப் பேசுறாப்பலைன்னா நீங்களுமா?
விஸ்டா அப்படியேதான் இருக்கு. எங்கள் கணினிகளில் கண்டிப்பாக பீட்டா டெஸ்டிங் செய்யச் சொல்லிவிட்டார்கள். வேற வழியில்லாம அப்கிரேடு பண்ணேன். முதல்ல கொஞ்சம் பிரச்சினைகள் இருந்தது. இப்போ பரவாயில்லை.

விஸ்டாவை விட எல்லாரும் மைக்ரோசாஃப்டு ஆபீஸ் 2007-ஐத்தான் வெகு ஆவலாக எதிர் நோக்கி இருக்கிறார்கள். அது விஸ்டாவை விட நன்றாகவே இருக்கிறது. :D

ஆமா, எப்போ அடுத்த இந்தியப் பயணம்?

sarcharan
13-07-2006, 10:31 AM
அருமையான தகவல்

பயனுள்ள கட்டுரை. நன்றி பாரதி அவர்களே....:)

sujan1234
17-12-2008, 04:10 PM
நல்ல வழி இதனை பின்பு எப்படி இயக்குவது என்று கூறவில்லையே

பாரதி
18-12-2008, 12:55 PM
நல்ல வழி இதனை பின்பு எப்படி இயக்குவது என்று கூறவில்லையே

நண்பரே, இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயங்குதளமான விண்டோஸ் எக்ஸ்-பியை நிறுவும் போது குறுக்கீடு ஏதுமின்றி தொடர்ந்து தானே நிறுவும் வகையில் குறுவட்டை தயாரிப்பதைக் குறித்த தகவல்.

இதை இயக்குவது எப்படி எனக் கேட்டால்.....??!!!

sujan1234
20-12-2008, 05:50 PM
ஆனால் என்னால் இதனை குறுவட்டில் பதிய முடியவில்லை தயவுசெய்து உதவவும்
நீரோ என்ன பதிப்பு என்பதையும் முடிந்தால் Screen Shot உடன் விளக்கவும்

anna
21-12-2008, 03:20 AM
ஆனால் என்னால் இதனை குறுவட்டில் பதிய முடியவில்லை தயவுசெய்து உதவவும்
நீரோ என்ன பதிப்பு என்பதையும் முடிந்தால் Screen Shot உடன் விளக்கவும்

நீரோ என்பது ரைட்டிங் சாப்ட்வேர் உங்களிடம் சி.டி அல்லது டி.வி.டி ரைட்டர் உள்ளதா? இருந்தால் கண்டிப்பாக தெரியுமே.

anna
21-12-2008, 03:24 AM
நல்ல வழி இதனை பின்பு எப்படி இயக்குவது என்று கூறவில்லையே

நண்பரே அவர் எப்படி சி.டி தயாரிப்பது என்பது பற்றி கூறினரே தவிர எப்படி இயக்குவது என சொல்லவில்லை. இயக்குவது எப்பவும் போல் இயக்குவது தான்.

poornima
21-12-2008, 04:51 AM
நல்ல உபயோகமான தகவல். பாரதி நன்றி

விஸ்டாவுக்கு மாற யாருக்குமே விருப்பமில்லை என்றுதான் தோணுகிறது..எக்பி தரும்
சவுகரியத்துக்கு எல்லாருமே பழகிவிட்டார்கள். தவிர விஸ்டா கொஞ்சம் முரட்டு குதிரையாகவும் தோன்றுகிறது..

அன்புரசிகன்
21-12-2008, 05:42 AM
நல்ல உபயோகமான தகவல். பாரதி நன்றி

விஸ்டாவுக்கு மாற யாருக்குமே விருப்பமில்லை என்றுதான் தோணுகிறது..எக்பி தரும்
சவுகரியத்துக்கு எல்லாருமே பழகிவிட்டார்கள். தவிர விஸ்டா கொஞ்சம் முரட்டு குதிரையாகவும் தோன்றுகிறது..


ஆரம்பத்தில் அப்படித்தான் தோன்றினாலும் பின்னர் சரியாகிவிட்டது. ஆனால் விஸ்டா என்றால் உங்கள் கணினியின் RAM குறைந்தது 2GB ஆக ஆவது இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது ஆமை வேகமாகத்தான் இருக்கும்....

மாற்றங்கள் தானே மாறாதது...