PDA

View Full Version : ரத்தம் போடும் சத்தம்



இனியவன்
07-07-2006, 03:04 PM
நம் உடலில் உள்ள செல்கள் வேலை செய்வதற்கும், வளர்வதற்கும் தேவைப்படும் சத்தையும், பிராண வாயுவையும் எடுத்துச் சென்று வழங்கும் திரவமே ரத்தம்.

எலும்பு மஜ்ஜைகளிலிருந்து ரத்தம் உருவாகிறது. "ஹிமோகுளோபின்' என்ற பொருளின் காரணமாகவே ரத்தம் சிவப்பு நிறமாக உள்ளது.

உடலின் மொத்த ரத்தம், உடல் எடையில் 8 சதவீதமே.

வில்லியம் ஹார்வியால் 1616ல் மனித ரத்த ஓட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு பின் ரத்த இழப்பை சரிசெய்யும் முயற்சியாக ஒரு நாயிடமிருந்து, மற்றொரு நாய்க்கு ரத்தம் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர்.

ஆனால், ரத்தம் பற்றி ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று 1678ல் தடை விதித்தார் போப் ஆண்டவர். அதன் பின் 150 ஆண்டுகள் யாரும் ரத்தம் பற்றி தீவிரமாக ஆராயவில்லை. 1818ல் பிரசவித்த ஒரு தாய்க்கு ரத்தம் தேவைப்பட்டது. அப்போது தான் உலகில் முதன், முதலாக ஒருவர் ரத்த தானம் செய்தார்.

எல்லாருக்கும் ரத்தம் சிவப்பு நிறமாக இருந்தாலும், அதிலும் பல்வேறு வகைகள் உள்ளன என்பதை உலகிற்கு அறிமுகம் செய்தவர், ஆஸ்திரியாவைச் சேர்ந்த கார்ல்லேம்ஸ் டெய்னர்.

அமெரிக்காவில் குடியேறிய அந்த மருத்துவ விஞ்ஞானி தான், 1901ல், "ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களில் "ஆன்டிஜன்' எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப, ரத்தம் நான்கு வகைப்படுத்தப்படுகிறது!' என்றார்.

ரத்தத்தில் "ஏ' ஆன்டிஜன் இருப்பின் அது "ஏ' பிரிவு;
"பி' ஆன்டிஜன் இருப்பின், அது "பி' பிரிவு;
"ஏ.பி.' என்ற இரண்டு ஆன்டிஜன்கள் இருந்தால்,
ஏ.பி., பிரிவு என்றும், எந்த விதமான ஆன்டிஜனும் இல்லையெனில், அது "ஒ' குருப் எனவும் பிரிக்கப்படுகிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்தினார்.

ரத்த வகையைக் கண்டறிந்த கார்ல்லேம்ஸ் டெய்னரின் பிறந்த தினமான, ஜூன் 14ம் தேதியை ரத்த தானம் செய்வோர் தினமாக ஐ.நா., அறிவித்து, நன்றி செலுத்தியது.

ரசல்ஸ் நகரில் பெல்ஜிய நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஹஸ்டின் என்பவர் முதல் முறையாக 1914ல் ரத்த மாற்று சிகிச்சையை அளித்தார்.

ரத்தத்தில் ரசாயன சோடியம் சிட்ரேட் கலந்து ஆபரேஷன் செய்தார். ரத்தத்தில் இதை கலந்தால் ரத்தம் உறையாது. எனவே, ஆபரேஷன் செய்யும் போது ரத்தம் தானமாக கொடுப்பவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையை உருவாக்கினார். அது தான் ரத்த சேமிப்பு வங்கிகள் உருவாக காரணமாயின.

லெனின் கிராட்டில் உலகின் முதல் ரத்த வங்கி தொடங்கப்பட்டது. 1939ல் ரத்தப்பிரிவில் ஆர்.எச்., பிரிவுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான எல்லாரும் ஆண் பெண் என்ற வேறுபாடில்லாமல் ரத்த தானம் செய்யலாம். 18 முதல் 60 வயது வரை ரத்த தானம் செய்யலாம்.

ரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ, ஹீமோ குளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்; ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.

ரத்த தானம் செய்யும்போது ஒருவரது உடலிலிருந்து 300 மி.லி., ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. இந்தளவு ரத்தம் 10 முதல் 21 நாட்களில் உடலில் புதிதாக உற்பத்தியாகி விடும். அதனால், ரத்த தானம் செய்தால் எந்த பின் விளைவும் ஏற்படாது.

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்யலாம்.

ரத்ததானம் செய்ய 20 நிமிடங்கள் போதுமானது. தானம் செய்த 30 நிமிடங்களுக்கு பின் வழக்கமான பணிகளை செய்யலாம்.

ரத்ததானம் செய்ததில் கின்னஸ் சாதனை படைத்தவர். தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த மவுரிஸ் கிரெஸ்விக். 1944ல் தன் 18வது பிறந்த நாளில் ரத்த தானம் செய்ய ஆரம்பித்தவர், அது முதல் ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்து இதுவரை 350 முறை ரத்ததானம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இப்போது அவரின் வயது 79. இதுவரை 195 லிட்டர் ரத்தம் தானமாக வழங்கியுள்ளார்.

(மகராசனா வாழட்டும், வாழ்த்துவோம்)

இளசு
08-07-2006, 11:20 PM
பல பொது அறிவுக்கேள்விகளுக்கு விடைகள் இந்த அருமையான கட்டுரையில் பொதிந்து கிடக்கின்றன.

நன்றி இனியன்.


வில்லியம் ஹார்வே பற்றி இன்னும் அறிய :

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6626