PDA

View Full Version : புதுக் கவிதை என்ற பெயரில் நடக்கும் அபத்தī



தங்கவேல்
07-07-2006, 08:24 AM
புதுக் கவிதை என்ற பெயரில் நடக்கும் அபத்தம்


தமிழ் இலக்கணத்தில் சில விதிகளை உருவாக்கி இருக்கின்றார்கள் நமது முன்னோர்கள். அதை எல்லாம் மறந்து விட்டு,நேரடி அர்த்தம் வரும் வார்த்தைகளை கொண்டு எழுதும் வாக்கியங்களை மடித்து மடித்து எழுதி விட்டு, அதை புதுக்கவிதை என சொல்லி வெறுப்பேத்துகிறார்கள் சில பேர். இது கலி காலம் தான். ஒப்புக்கொள்கிறேன். அதுக்காக இப்படியா ??? விதி மீறலுக்கு பெயர் புதுக் கவிதையா ?
தமிழ் இலக்கணத்தில் எங்காவது புதுக்கவிதை பற்றி எழுத பட்டு இருக்கிறதா ?

விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
தங்கவேல்.

pradeepkt
07-07-2006, 08:37 AM
தமிழ் இலக்கணத்தில் எதற்குப் புதுக்கவிதை பற்றி எழுதப் பட வேண்டும்??? மரபு மாறாக் கவிதைகள்தாம் எனக்கும் பிடித்தமானவை. ஆனால் புதுக்கவிதைகளை அப்படியே ஒதுக்கிவிட வேண்டும் என்று சொல்வது தவறு.

நண்பர்கள் பதில் பார்த்து மேலும் சொல்கிறேன்.

தாமரை
07-07-2006, 08:43 AM
புதுக்கவிதை என்ற வடிவத்தை எனக்குத்தெரிந்து முதலில் உபயோகப் படுத்தியவர்....
...
...
...
...
பாரதியார்.

அபத்தங்களை இலக்கணத்தோடும் எழுதலாம் இலக்கணமில்லாமலும் எழுதலாம்..

தமிழ் இலக்கணத்தில் தமிழை தட்டச்சு செய்யலாம் என்று இல்லவே இல்லையே! ஏன் தட்டச்சு செய்கிறீர்?:confused: :confused: :confused: :confused:

இனியவன்
07-07-2006, 09:46 AM
புதுக்கவிதை
மரபுக் கவுதையின் நவீன வடிவம்.
அது இன்று பின் நவீனத்துவத்தில் இருப்பதாய் ஞாபகம்.
பக்கம் பக்கமாய் சொல்ல வேண்டிய விஷயங்களை பட்டெனச் சொல்லி முடிக்க உதவுவது தான் புதுக்கவிதை.

அதை பொழுதுபோக்காய் எண்ணுபவர்கள் விதிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கவிதையின் வடிவங்களை ஆராய்வதை விட அதன் கருத்துக்கள் தான் படிப்பவரை பரவசப்படுத்தும்.

நடுவெயில்
சுடு மணல்
பாவம்
உன் பாதச்சுவடுகள்,

இது அறிவுமதியின் ஹைக்கூ.

படித்தது ஒரு முறை தான்
ஆனால் ஆயுளின் அந்தி வரை மறக்காது.
இப்படி அனேகம் உண்டு.

வேண்டுமானால் தொடருவோம் விவாதத்தை... ... .... ....

தங்கவேல்
07-07-2006, 11:04 AM
செல்வன் அய்யா அவர்களே, கோபம் வேண்டவே வேண்டாம். தமிழ் இலக்கணம் என்பது தமிழை பயன் படுத்துவதற்கான விதி முறைகளை கொண்டது. அதில் தமிழை ஊசியால் எழுத வேண்டும், பேனாவினால் எழுத கூடாது எண்று சொல்லவில்லை. உங்களின் மனது புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்
தங்கவேல்

தாமரை
07-07-2006, 11:29 AM
கவிதை..
க+விதை
கருத்துள்ள விதை

கவி+தை
அழகு+தை
அழகுகளைத் தை

மொத்தத்தில்
வளைத்துப் போடப்பட்ட
வார்த்தைகளில்
நிமிர்ந்து நிற்கும் கருத்து...


சில கவிதைகளில் கருத்து மேலோங்கி நிற்கிறது..

பேருந்தில் பயணம் செய்யும்
பெண்ணும்
பாபர் மசூதி போலத்தான்
இடிக்க ஆளுண்டு
கட்டத்தான் ஆளில்லை..

சில கவிதைகளில் அழகு மேலோங்கி நிற்கும்

உள்ளிறங்கி நுழைகிறது வானம்!

வானம்
நெற்றியில் பட்டு
தெறிக்கிறது மழைத்துளி!
உள்ளிறங்கி
நுழைகிறது வானம்!

- ப்ரியன்.
__________________
இதுவும் ஒருவகை...

கவி+தை
குரங்கு+ஆட்டம்
குரங்காட்டம்..

சில கவிதைகள் குரங்காட்டம் போலத்தான்..

அப்படிப்போடு இப்படிப்போடு போன்ற பல திரைப்பாடல்கள் இந்த வகையில் சேரும்..

உலகத்தில் நல்லவையும் கெட்டவையும் கலந்தே இருக்கின்றன. கெட்டதே இல்லாவிட்டால் நல்லதுக்கு மதிப்பில்லை..

இலக்கண ரீதியாக உள்ள அனைத்து கவிதைகளும் நல்ல பாடல்கள் என்பதும் தவறு..

இலக்கணம் மீறிய கவிதைகள் நல்ல பாடல்கள் அல்ல என்பதும் தவறு..

இலக்கணத்திற்கு நல்லது கெட்டது தெரியாது..

புதுக்கவிதையை ஆரம்பித்தவர் பாரதியார். இரு கயிறுகளைப் பற்றிய கவிதை அது.

கருத்துக்கள் எளியவர்களைச் சென்று சேர்ந்தால்தான் கற்கும் ஆர்வம் வரும். பாரதியாரின் விடுதலைப் பாடல்களைப் பாருங்கள். எளிமையான மொழி. இயல்பான நடை. கருத்துக்களில் வலிமை.

எதையும் தேவை இல்லாமல் எதிர்க்கக் கூடாது என்பதுதான் என் கருத்து.

ஒரு மொழி வாழவேண்டுமானால் அதை பயன்படுத்துபவர்கள் ரசித்து அனுபவித்து மகிழ்ந்து பேச / கேட்க வேண்டும்..

அது பல புதுக்கவிதைகள் மூலம் ஏற்படுகிறது.. அதனால் மொழிக்கு கேட்டை விட நன்மையே அதிகம்..

நான் கோபம் கொள்வதில்லை...

gragavan
07-07-2006, 11:41 AM
முன்னைப் பழமையும் வேண்டும். பின்னைப் புதுமையும் வேண்டும். இரண்டும் சிறக்க அதில் நயமும் வேண்டும். அவ்வளவுதான் விவாதம்.

அறிஞர்
07-07-2006, 02:14 PM
தமிழ் இலக்கணத்தை சரியாக கையாளத்தெரியாதவர்கள் தோற்றுவித்தது தான் புதுக்கவிதை எனத்தோன்றுகிறது.

இன்று மிகவும் கொச்சையாக மாறிவிட்டது.

ஆனால் சில நல்ல புதுக்கவிதைகளும்....... வருகின்றன... பல நல்ல கருத்துக்களை தாங்கி...

இனியவன்
07-07-2006, 02:34 PM
தமிழ் இலக்கணத்தை சரியாக கையாளத்தெரியாதவர்கள் தோற்றுவித்தது தான் புதுக்கவிதை எனத்தோன்றுகிறது.


உங்கள் கருத்தில் ஓரளவு உண்மை உண்டு.

சந்தங்களை மறந்து சத்தங்களை மட்டுமே பார்த்தால் கவிதை விளைவைத் தராது என்பது என் எண்ணம்.

இளசு
08-07-2006, 11:43 PM
மரபிலும் குப்பைகள் உண்டு
புதுசிலும் மாணிக்கங்கள் உண்டு..


தாகம், நோக்கம் வேண்டும்.
செதுக்க மொழி உளி வேண்டும்.


படைப்புகள் சிறந்தால் (மட்டுமே) நிலைக்கும்.

ஒட்டு மொத்தமாய் - ஒரு வழி மட்டுமே சரி என்பது சரி ஆகாது.

pradeepkt
10-07-2006, 05:31 AM
எல்லாவற்றிற்கும் மேல் அது யாரைச் சென்று சேர வேண்டுமோ அவர்களைச் சேர வேண்டும்.

ஒரு முறை எங்கள் பள்ளியில் போலீஸ் பொதுமக்கள் கூட்டமைப்புக் கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்ட கவிஞர் வாலி சாலைப் பாதுகாப்பு பற்றித் தான் எப்போதும் சொல்லும் இரண்டு வரிகள் சொன்னார்.

"பஸ்ல நாம ஏறினா
பிரயாணி
பஸ்ஸு நம்ம மேல ஏறினா
பிரியாணி"

இன்றைக்கும் நண்பர்கள் வெளியே செல்லும்போது ரோட்டில் கூத்தடித்தால் இதைச் சொல்லி எச்சரித்துக் கொள்வோம்!