PDA

View Full Version : மலிவு விலை சமையல் எரிவாயு கண்டுபிடிப்பு *தாமரை
05-07-2006, 04:51 AM
மலிவு விலை சமையல் எரிவாயு கண்டுபிடிப்பு * சிலிண்டருக்கு ரூ.40 மட்டுமே செலவாகும்

லக்னோ: உ.பி.,யைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வேதிப்பொருட்களைக் கொண்டு மலிவு விலை சமையல் எரிவாயுவை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வகை மாற்று சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்ய சிலிண்டருக்கு ரூ. 40 மட்டுமே செலவாகிறது.
உ.பி., மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மாணவர்கள் பிரஜ்பன் சிங் யாதவ், நீரஜ் குமார், சந்தீப் குமார் ராஜ்புத். இன்டர்மீடியட் வகுப்பு படிக்கும் இந்த மாணவர்கள் சமையல் எரிவாயுவுக்கு பதிலாக மாற்று எரிவாயுவை கண்டு பிடித்துள்ளனர்.
ஜனாதிபதி அப்துல் கலாமை "ரோல் மாடலா'கக் கொண்டு செயல்பட்டதாக கூறும் இந்த மாணவர்கள், தங்களது புதிய கண்டு பிடிப்புக்கு காப்புரிமை (பேடன்ட் ரைட்) கோரி டில்லியில் உள்ள "பேடன்ட் அண்ட் டிசைன் கன்ட்ரோலருக்கு' கடந்த மாதம் 19ம் தேதியே விண்ணப்பித்து விட்டனர்.
இது குறித்து மாணவன் நீரஜ் கூறும்போது, ""காப்புரிமை வழங்கும் அதிகாரியான கன்ட்ரோலர் உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ளார்.
வரும் 10ம் தேதி அவர் இந்தியா திரும்பிய பின் எங்களது கண்டு பிடிப்பு குறித்து அவரிடம் விளக்குவோம்'' என்றார்.
மலிவுவிலை சமையல் எரிவாயு கண்டு பிடிப்பு குறித்து மாணவர்கள் மூவரும் கூறும்போது, ""எங்கள் பெற்றோர் தரும் "பாக்கெட் மணி' முழுவதையும் கெமிக்கல் வாங்க செலவிட்டு வந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்ட சோதனையில் வெற்றி பெற்று விட்டோம். நாங்கள் கண்டு பிடித்துள்ள இந்த மலிவு விலை சமையல் எரிவாயுவை சிலிண்டரிலும் நிரப்பிக் கொள்ளலாம். இதன் உற்பத்தி செலவு சிலிண்டருக்கு 40 ரூபாய் மட்டுமே. ஆனால், மொத்தமாக தயாரிக்கும்போது இந்த விலை மேலும் குறையும்'' என்றனர். எரிவாயு கண்டுபிடிக்க பயன்படுத்திய கெமிக்கல்கள் பெயர்களை தெரிவிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.
இதற்கிடையில், மாணவர்களின் மலிவு விலை சமையல் எரிவாயு தொடர்பாக, "மரபு சாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம்' விவாதித்து வருகிறது.
நாளுக்கு நாள் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த கண்டு பிடிப்பு உபயோகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


நன்றி : தினமலர்

இது இன்னொரு மூலிகைப் பெட்ரோலாய் மாறாமல் உண்மையாய் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

gragavan
05-07-2006, 09:25 AM
உங்கள் வேண்டுதல்தான் என்னுடையதும். நல்லதொரு எரிபொருள் இந்திய மூளையில் உருவாகி உலகிற்குப் பயனாகி அதனால் எல்லாரும் வளமானால் நன்றே. நன்றே.

pradeepkt
05-07-2006, 10:00 AM
ஆமா நம்ம பல நேரம் மரபுசாரா வழிகளில் வயித்தெரிய வைப்பதில் பல முன்னேற்றங்கள் கண்டு வருகிறோமே, இதை யாராச்சும் பாராட்டுறாங்களா? :D :D

சிரிப்புகள் பின்னர்! இன்றைய உலகு ஒரு நல்ல சீக்கிரம் தீர்ந்துவிடாத, உலக நன்மைக்குக் குந்தகம் விளைவிக்காத எரிபொருளுக்காகத் தவம் கிடக்கிறது.

அது இந்தியாவில் உதிக்குமானால் எவ்வளவு பெருமை! ஆண்டவனை வேண்டுகிறேன், இது நடப்பதற்கு!

aren
05-07-2006, 10:04 AM
இது ஒரு நல்ல செய்தி. இதன்மூலம் நம்முடைய அண்ணிய செலவாணி வீணாகாமல் இருந்தால் அதன்மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இளவிஞ்ஞானிகளுக்கு என் பாராட்டுக்கள்.

மயூ
05-07-2006, 10:14 AM
இராமர் புள்ள மாதிரி ஏமாத்திட மாட்டாங்களே........ மூலிகை கீலிகை என்டு சொல்லி....
அப்பிடி ஏதும் கிடைச்சா இலங்கைக்கும் ஏற்றுமதி செய்ய சொல்லுங்க.....

aren
05-07-2006, 10:27 AM
இராமர் மூலிகை பெட்ரால் கண்டுபிடிப்பு உண்மையாகக்கூட இருக்கலாம். அவர் மற்றவர்களுடன் ஒத்துழைக்காத்தால் அதை இப்படி ஆக்கிவிட்டார்களோ என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது.

இப்பொழுது ஜெட்ரோபா (காட்டாமணுக்கு) மூலம் டீசல் எடுக்கமுடியும் என்று தெரிந்துவிட்டது. இந்தியாவிலும் இந்த முயற்சியை சாட்டிஸ்கர் மாநிலத்தில் நன்றாகவே செய்கிறார்கள். தமிழ்நாட்டிலும் கூடியவிரைவில் இது வியாபார நோக்கத்தில் பயிரடப்படும்.

இதுதவிற இந்திய ரயில்வேயும் இந்த பயிரை வியாபார நோக்கில் பயிரிட யோசித்து வருகிறது. ரயில்வே லைன் இந்தியா முழுவதும் இருப்பதால், அந்த லைன் ஒரத்தில் இந்த பயிரை பியிரிடலாமா என்று ரயில்வே நிர்வாகம் யோசித்து வருகிறது. இது நடந்தால் அதிலிருந்து கிடைக்கும் டீசலை தன்னுடைய ரயில்களிலேயே உபயோகிப்படுத்துக்கொள்ள ரயில்வே நிர்வாகம் யோசித்துவருகிறது. இதன்மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு நிறைய சேமிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவன்
05-07-2006, 10:34 AM
பசங்கள்லாம் நல்ல முயற்சி பண்ணி இருக்காங்க.
அப்துல் கலாம் காலத்திலேயே அந்தக் கனவு நனவாயிடுச்சுன்னா ஓரளவு பலன் கிடைக்கும். ஏதோ நல்லது நடந்தா சரிதான்.

மயூ
05-07-2006, 10:34 AM
இராமர் மூலிகை பெட்ரால் கண்டுபிடிப்பு உண்மையாகக்கூட இருக்கலாம். அவர் மற்றவர்களுடன் ஒத்துழைக்காத்தால் அதை இப்படி ஆக்கிவிட்டார்களோ என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது.

இப்பொழுது ஜெட்ரோபா (காட்டாமணுக்கு) மூலம் டீசல் எடுக்கமுடியும் என்று தெரிந்துவிட்டது. இந்தியாவிலும் இந்த முயற்சியை சாட்டிஸ்கர் மாநிலத்தில் நன்றாகவே செய்கிறார்கள். தமிழ்நாட்டிலும் கூடியவிரைவில் இது வியாபார நோக்கத்தில் பயிரடப்படும்.

இதுதவிற இந்திய ரயில்வேயும் இந்த பயிரை வியாபார நோக்கில் பயிரிட யோசித்து வருகிறது. ரயில்வே லைன் இந்தியா முழுவதும் இருப்பதால், அந்த லைன் ஒரத்தில் இந்த பயிரை பியிரிடலாமா என்று ரயில்வே நிர்வாகம் யோசித்து வருகிறது. இது நடந்தால் அதிலிருந்து கிடைக்கும் டீசலை தன்னுடைய ரயில்களிலேயே உபயோகிப்படுத்துக்கொள்ள ரயில்வே நிர்வாகம் யோசித்துவருகிறது. இதன்மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு நிறைய சேமிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

பாடசாலையில் படிக்கும் போது இராமர் பிள்ளையைப் பற்றி ஆ வி வாசித்தது இப்பவும் ஞாபகம் இருக்கு....
இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறுவதைப் பார்த்தால் பெருமையாக இருக்கின்றது.
வாழ்க பாரதம்....

இளசு
05-07-2006, 10:43 PM
இளைஞர்களின் உழைப்பு விழலுக்கிரைத்த நீராகாமல்,
இராமர்பிள்ளையின் கானல் நீராகவும் ஆகாமல்..

நிஜமாக பயன் தரட்டும்.

அன்பின் ஆரென் சொல்லும் காட்டாமணக்கு செய்தி எனக்குப் புதிது.

நன்றி செல்வன் & அன்பின் ஆரென்.

aren
06-07-2006, 01:59 AM
அன்பின் ஆரென் சொல்லும் காட்டாமணக்கு செய்தி எனக்குப் புதிது.

நன்றி செல்வன் & அன்பின் ஆரென்.

இளசு அவர்களே,

கீழே கொடுத்துள்ள இணைப்பை தட்டிப்பாருங்கள். ஜெட்ரோபா செய்யப்போகும் அதிசயத்தை காணலாம்.

www.jatrophaworld.org (http://www.jatrophaworld.org)

சட்டிஸ்கர் மாநிலத்தின் முதல் அமைச்சரின் கார் ஜெட்ரோபா டீசலில்தான் ஓடுகிறது. அது தவிற மெர்சிடஸ் பென்ஸ் கார் இந்தியாவில் ஜெட்ரோபா டீசல் கொண்டு ஓடுவதற்கு வகை செய்ய சோதித்திக்கொண்டிருக்கிறது. அவர்கள் மூன்று கார்களை சமீபத்தில் ஜெட்ரோபா டீசல் கொண்டு இமய மலைக்கு சென்று வந்துள்ளனர். சோதனை வெற்றியடைந்துள்ளது. உலகின் அதி உயர ரோடில் வண்டியை ஓட்டி சாதனை செய்துள்ளனர். 3000 கிலோமீட்டர் தொடர்ந்து சென்று இந்த சாதனையை செய்துள்ளனர். கூடிய விரைவில் அவர்கள் வியாபார நோக்கத்தில் இந்த கார்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

என்னுடைய நண்பர் ஒருவர் மதுரை அக்ரி யூனிவர்சிடியுடன் கூட்டு சேர்ந்து 150 ஏக்கரில் ஜெட்ரோபாவை பயிரிட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். இது ஒரு முயற்சி. இதில் அவர்கள் வெற்றி பெற்றால் மேலும் இந்த முயற்சியை மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தாமரை
06-07-2006, 04:34 AM
பயோ டீசல்
எத்தனால்
...
...
கலாம்
இதுவே சரியான
காலம்

உம்மை தலைவனாக
ஏற்றோம்
எங்கள் தலைவழியை
தீர்ப்போம்..

ஆணையிடு..
அறிவியல் குழுவை
அமைத்து விடு..

எரிபொருள் விலையில்
எங்கள் இதயங்கள்
எரிகின்றன

வறண்ட நாடுகளின்
சுரண்டல் சாம்ராஜ்யத்தை
விரட்ட
திரண்டு நிற்கத் தயார்
உன் பின்னால்

mgandhi
27-08-2006, 07:15 PM
இளைகர்களின் கனவோட, இந்தியாவும் வளம் பெறட்டும்.