PDA

View Full Version : கலைஞரின் 'போர் எழுத்து'இளசு
04-07-2006, 09:55 PM
கலைஞரின் 'போர் எழுத்து'


'நீர்க்குடும்பம் ' என்பது கவியரங்கத் தலைப்பு.

தலைமை - கலைஞர்.

கடல், மழை, ஆறு, கிணறு, குளம், கண்ணீர், வியர்வை
என ஏழு தலைப்புகளில் ஏழு கவிஞர்கள் கவி பாடினர்.

கலைஞர் இந்த ஏழையும் இணைத்து
சொல்லழகும் பொருளழகும் கொஞ்சும்
இந்தக் கவிதையை அங்கே வாசித்தார்:

நீர் எழுத்துக் கவியெழுதும் எனைப் பிடித்து - அணி
சீர் எழுத்துப் புலவரிடை நிறுத்தி விட்டார்
கார் எழுத்து மழையாகும் - மழையின்
பார் எழுத்து ஆறாகும் - ஆற்றின்
நேர் எழுத்தே குளமென்போம்; கிணறென்போம் - இதற்கெல்லாம்
வேர் எழுத்து கடலென்பார்; தலையில்
யார் எழுத்து என நைவார் விடுவார் கண்ணீர்
பார், எழுத்தை மாற்றுகிறேன் எனச் சொல்வார் வியர்வைப்
போர் எழுத்தால் விதியை வெல்வார்.

இந்தக்கவிதையை கவிக்கோ அவர்கள் 'இது சிறகுகளின் நேரம்' தொடரில்
ரசித்து எழுதிய விதம் இருக்கிறதே...

இரட்டிப்புச்சுவை..

சீர் எதுகை சந்த நயம் என்ன..

நீர் மேல் எழுதும் எழுத்தைப்போல் அழியக்கூடியது என் கவிதை
என அணி அறிந்த புலவர் அவையில் அடக்கம் ...
மழை என்பது மேகம் எழுதும் எழுத்து...
மழை உலகின் மேல் எழுதும் எழுத்து ஆறு..
நிலத்தடி ஆற்று நீரால் நேர்வது குளமும் கிணறும்..
கடல் வேரில் முளைத்த மரம் மேகம்...
கண்ணீரால் வெல்ல முடியாத விதியை
வியர்வைச் செந்நீரால் வெல்லலாம்...

- அழகான கவிதையை இப்படி அணு அணுவாய் ரசிக்க
இன்னொரு அற்புதப் படைப்பாளிக்கே சாத்தியம்..

இருவரின் மேலும் பெருமிதம் பொங்கியது இதைப்படித்த போது....

இனியவன்
05-07-2006, 05:49 AM
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது இது தானே அண்ணா,,,,,,,

கலைஞரிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார் நீங்கள் ஆத்திகரா? நாத்திகரா?
அவர் இப்படிப் பதில் தந்தார் நானாத்திகன்.

gragavan
05-07-2006, 08:50 AM
தமிழ்ச் சொல்லாடல் விஷயத்தில் கலைஞர் மிகுந்த கெட்டிக்காரர்.

pradeepkt
05-07-2006, 09:57 AM
அட... நானாத்திகன்!!!
என்னமா ஒரு சிலம்பம்!!! வாலியின் பேனா மெட்டுச் சிறைக்குள் இல்லாத நேரத்தில் சும்மா இப்படித்தான் விளையாடும்.

ஒரு வரி சொல்றேன் கேளுங்க
காதலன் காதலியிடம் தர வேண்டிய முத்தக் கணக்கைப் பற்றிச் சொல்கிறான்.
"என்றும் மொத்தத்தை வைத்தாலும் மிச்சத்தை வைத்தாலும் சரிசமம்!"
கவியரசருக்குப் பிறகு சினிமா உலகுக்குக் கிடைத்த வரம்தான் வாலி!

இனியவன்
05-07-2006, 10:40 AM
அண்மைய சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டம்.
பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கலைஞர்.
உங்களுடைய அறிவிப்புகளை அம்மா காப்பியடிக்கிறாரே. இன்னும் என்ன இலவசமாகத் தருவீர்கள் என்று வினா வருகிறது.
சட்டெனச் சொன்னார் கலைஞர் என்னையே தமிழக மக்களுக்குத் தந்து விட்டேன்.இனி என்ன?
இதுவரை சைவம்.
அதற்கு ஜெ பதில் சொன்னால் அது அசைவம்.

(அ)சைவம் வகை பிரித்தது இயக்குநர் பாக்யராஜ்

இளசு
05-07-2006, 10:37 PM
சுவையான பின்னூட்டங்கள் தந்தார்கள் இனியவன், பிரதீப் - அருமை.

தாமரை
06-07-2006, 04:39 AM
அவர் ஒரு தமிழறிஞர்..
அவரின் இறுதிக்காலம்..
மரணப்படுக்கை..
திட உணவு உட்கொள்ள இயலவில்லை..
பால்தான்..
அதுவும்
ஒரு துணியில் வடிகட்டப்பட்டு..
சொட்டு சொட்டாய்..
ஓர் நாள்
அன்பின் மருமகள் பாலூட்ட..
அவரின் முகத்தில்
சுருக்கங்கள் மேலும் சுருங்கின..
என்ன மாமா
பால் கசக்கிறதா?

சிரித்தபடி சொன்னார்
பாலும் கசக்கல
துணியும் கசக்கல..(துவைக்கவில்லை)

என்றோ ஆனந்த விகடனில் படித்தது....

gragavan
06-07-2006, 04:56 AM
அட... நானாத்திகன்!!!
என்னமா ஒரு சிலம்பம்!!! வாலியின் பேனா மெட்டுச் சிறைக்குள் இல்லாத நேரத்தில் சும்மா இப்படித்தான் விளையாடும்.

ஒரு வரி சொல்றேன் கேளுங்க
காதலன் காதலியிடம் தர வேண்டிய முத்தக் கணக்கைப் பற்றிச் சொல்கிறான்.
"என்றும் மொத்தத்தை வைத்தாலும் மிச்சத்தை வைத்தாலும் சரிசமம்!"
கவியரசருக்குப் பிறகு சினிமா உலகுக்குக் கிடைத்த வரம்தான் வாலி!நானாத்திகனில் என்ன சொற்சிலம்பம்? என்னதான் சொல்ல வருகிறார்? அவர் ஆத்திகர் என்கிறாரா? இல்லை அவர் நா நாத்திகன் என்கிறாரா? தன்னுடைய நிலையை வெளிப்படையாகச் சொல்லாமல் என்ன மழுப்பல். அந்த மழுப்பலில் என்ன பாராட்டு?

தாமரை
06-07-2006, 05:00 AM
நானாத்திகனில் என்ன சொற்சிலம்பம்? என்னதான் சொல்ல வருகிறார்? அவர் ஆத்திகர் என்கிறாரா? இல்லை அவர் நா நாத்திகன் என்கிறாரா? தன்னுடைய நிலையை வெளிப்படையாகச் சொல்லாமல் என்ன மழுப்பல். அந்த மழுப்பலில் என்ன பாராட்டு?

Non - ஆதிக்கன் என்று தமது ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தி இருக்கிறார்..

ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமே...

gragavan
06-07-2006, 06:21 AM
Non - ஆதிக்கன் என்று தமது ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தி இருக்கிறார்..

ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமே...அதை நாத்திகன் என்றே சொல்லலாமே. தன்னுடைய நிலையில் குழப்பம் உள்ளவர்கள்தான் நேரடியாக விடை சொல்லாமல் இப்படிச் சொல்வார்கள். என்னவோ போங்கள்....

இனியவன்
06-07-2006, 06:25 AM
நான் + நாத்திகன்
நான் + நாத்திகன்
இரண்டுமே நானாத்திகனாகத்தான் வரும்.
வாத்தைச் சிலம்பத்தை மட்டும் ரசிக்கலாம்.
அதன் பின்னுள்ள அரசியல் தேவையா?

ஓவியன்
02-07-2007, 07:32 PM
அழகான வார்த்தையாடல், இருவரதும் புலமை மெய்மறக்க வைத்தது!.

அண்ணா!

இதுவரை இந்த படைப்பு என் கண்ணில் படவில்லையே, இன்றுதான் கண்டேன் அதுவும் உங்கள் தயவாலே மிக்க நன்றிகள்!.

அமரன்
02-07-2007, 07:37 PM
எனக்குப் பிடித்த சொற்சிலம்பம் தந்த அண்ணனுக்கு நன்றி.
ஓவியன் நமக்கு வேலை வந்துவிட்டது. இந்தமாதிரியான திரிகளை தோண்டவேண்டியதுதான்.

ஓவியன்
02-07-2007, 07:41 PM
நிச்சயமாக அமர்!

நான் நினைத்துக் கொண்டிருந்தேன், நீங்கள் சொல்லி விட்டீர்கள்!

பிறகென்ன செய்தே விடலாம்.

அமரன்
02-07-2007, 07:42 PM
Currently Active Users Viewing This Thread: 2 (2 members and 0 guests)
அமரன், அக்னி+

அடுத்த பெருஞ்சாலியும் வந்துவிட்டது ஓவியன்.

ஓவியன்
02-07-2007, 07:44 PM
Currently Active Users Viewing This Thread: 2 (2 members and 0 guests)
அமரன், அக்னி+

அடுத்த பெருஞ்சாலியும் வந்துவிட்டது ஓவியன்.

ஹீ!

நீண்ட நேரம் செலவிடுகிறார்!

ஆழமான ஒரு பின்னூட்டத்தை எதிர்பார்க்கலாம்!.

இனியவள்
02-07-2007, 07:45 PM
நன்றி நன்றி இளசு அண்ணா அருமையான பதிவு தந்தமைக்கு நானும் இன்றே கண்டேன்...அமர் & ஒவி நானும் வருகின்றேன் இப்படியான புதையலை தேடுவதற்க்கு

அமரன்
02-07-2007, 07:48 PM
நன்றி நன்றி இளசு அண்ணா அருமையான பதிவு தந்தமைக்கு நானும் இன்றே கண்டேன்...அமர் & ஒவி நானும் வருகின்றேன் இப்படியான புதையலை தேடுவதற்க்கு

வாம்மா மின்னலு. தேடுவோம். தேடியது சில இருக்கு. தருகின்றேன்.

அக்னி
02-07-2007, 07:53 PM
வார்த்தைகளுக்குள் தையல் மனம்போன்ற ஆழம்...
கார்காலம் வந்தால் மட்டுமே மழைமுகில் கருக்கொள்ளூம்...
போர்க்காலம் வந்தால் மட்டுமே பறைமுரசு ஒலி கொள்ளும்...
பார்முழுதும் பார்த்தாலும் என்றும் எப்போதும் தமிழ் இனிமையில் மேன்மையே...

இளசு
02-07-2007, 07:55 PM
வார்த்தைகளுக்குள் தையல் மனம்போன்ற ஆழம்...
கார்காலம் வந்தால் மட்டுமே மழைமுகில் கருக்கொள்ளூம்...
போர்க்காலம் வந்தால் மட்டுமே பறைமுரசு ஒலி கொள்ளூம்...
பார்முழுதும் பார்த்தாலும் என்றும் எப்போதும் தமிழ் இனிமையில் மேன்மையே...


சந்தம் சிந்தும் இந்தக்கவி
முந்தைய சிந்தை முந்தும்..

வாழ்த்துகள் அக்னி!

அக்னி
02-07-2007, 08:00 PM
சந்தம் சிந்தும் இந்தக்கவி
முந்தைய சிந்தை முந்தும்..

வாழ்த்துகள் அக்னி!

தமிழ் மன்றத்திற்கே எல்லாப் புகழும்...
என்னைப் புடம்போடும் உறவுகளின் தீச்சுவாலைக்குள்,
நடுவே சேர்ந்து பிரகாசிக்கும் இருளாக அக்னி...

ஓவியன்
02-07-2007, 08:00 PM
வார்த்தைகளுக்குள் தையல் மனம்போன்ற ஆழம்...
கார்காலம் வந்தால் மட்டுமே மழைமுகில் கருக்கொள்ளூம்...
போர்க்காலம் வந்தால் மட்டுமே பறைமுரசு ஒலி கொள்ளூம்...
பார்முழுதும் பார்த்தாலும் என்றும் எப்போதும் தமிழ் இனிமையில் மேன்மையே...

என்றுமே, எப்போதுமே,எங்ஙனமுமே தமிழ் இனிமை!!!

அழகான அருமையான வரிகள் அக்னி!−பாராட்டுக்கள்!.

ராஜா
03-07-2007, 01:26 PM
நான் + நாத்திகன்
நான் + நாத்திகன்
இரண்டுமே நானாத்திகனாகத்தான் வரும்.
வாத்தைச் சிலம்பத்தை மட்டும் ரசிக்கலாம்.
அதன் பின்னுள்ள அரசியல் தேவையா?

இனியவனை நானும் வழிமொழிகிறேன்..!

அக்னி
03-07-2007, 02:39 PM
இனியவளை நானும் வழிமொழிகிறேன்..!

இனியவன் ஐ இனியவள் ஆக்கிவிட்டீர்களே... ராஜா அண்ணா..

ராஜா
03-07-2007, 05:50 PM
இனியவன் ஐ இனியவள் ஆக்கிவிட்டீர்களே... ராஜா அண்ணா..

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தம்பி..!

இப்போது திருத்தி அமைத்துவிட்டேன்..!