PDA

View Full Version : ஜுலை 03



இனியவன்
03-07-2006, 01:11 PM
1) புத்தளம் கற்பிட்டி மற்றும் சிலாபம் கடற் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மப் படகுகளின் போக்குவரத்து இருக்கிறது. அது பற்றி
அப்பகுதி மீனவர்கள் பாதுகாப்புப் படையிடம் புகார் செய்தனர். கற்பிட்டிக்கு வடக்கேயுள்ள ஒரபே தீவில் 4 படகுகள் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்தன. விமானப்படை உடனே அங்கு விரைந்து சென்ற போதும் அநதப் படகுகளைப் பிடிக்க முடியவில்லை.
கொழும்பிலிருந்து கற்பிட்டி வரையிலான கடற்பிரதேசத்தில் சோதனையிட தங்களுக்கு அனுமதியில்லை என்று சிலாபம் காவல் நிலைய
அதிகாரிகள் தெரிவித்தனர்.

2) முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க நீண்டகாலத்திற்கு இலங்கைக்குத் திரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது.

தற்போது அவர் வெளிநாட்டில் தங்கி இருக்கிறார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன் அவர் நாடு திரும்புவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது சந்திரிகா அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாக அவருடைய செயலாளர் பியதாச திசநாயக்க தெரிவித்தார்.

நாடு திரும்பும் வரை சுதந்திரக் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று சந்திரிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்திரிகாவின் உயிருக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருக்கிறது. அது பற்றிய பாதுகாப்புத் தறையின் அறிக்கை பிரித்தானியத்

தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதி சந்திரிகாவுக்கும் கிடைத்துள்ளது. எனவே அவர் நீண்ட நாட்களுக்கு நாடு திரும்ப
மாட்டாரென்று திசநாயக்க கூறினார்.

3) வட அயர்லாந்து விடுதலை அமைப்பு ஐ.ஆர்.ஏயின் முன்னாள் தலைவர் மார்ட்டின் மக்கன்னஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின்

பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். கிளிநொச்சியில் உள்ள புலிகளின் சமாதான செயலகத்தில் அச் சந்திப்பு நிகழ்ந்தது.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான
செயலகப்பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகியோர் அதில் கலந்து கொண்டனர்.

4) மட்டக்களப்பில் திங்கட்கிழமை காலை கிளைமோர்த் தாக்குதல் நடந்தது. அதில் சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் காயமடைந்தனர்.
குருக்கள் மடத்தில் அதிரடிப்படையினர் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதை மேற்கொண்டவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதனிடையே திருகோணமலையில் நடந்த கிளைமோர்த் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட, பதினான்கு பேர் காயமடைந்தனர். அனுராதபுரம் சந்தியில் இராணுவம் முச்சக்கர வாகனங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர்க்குண்டு வெடித்தது.

5) கொழும்பு தெகிவளையில் இரண்டு தொலைத்தொடர்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. சந்தேகத்துக்குரிய பொதியைக் கண்ட பெண் அது பற்றி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் கருவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அந்தப் பொதியிலிருந்து தொலைத் தொடர்பு கருவிகள் இரண்டு கைப்பற்றப்பட்டன.