PDA

View Full Version : மு மேத்தா கவிதைகள்



இனியவன்
01-07-2006, 06:26 AM
சிறுகுறிப்பு வரைக

அமெரிக்கா

தலையில் எண்ணெய்
தடவுவார்கள் உலகில்

அமெரிக்காவோ
எண்ணெய்க்காகவே
வளைகுடா நாடுகளின்
தலையைத் தடவுகிறது.


ஈராக்

ஈராக் அழிந்து
சிதைந்த பிறகுதான்
தெரிந்தது
பேரழிவு ஆயுதங்கள்
எவர் கையில்
இருந்ததென்பது?
*
நன்றி மு.மேத்தா

தை கவிதைக் காலாண்டிதழ்

ஓவியன்
26-02-2007, 12:11 PM
நன்றி இனியவன்!

மேத்தாவின் ரசிகன் நான், ஆனால் இப்போதெல்லாம் அவரது கவிதைளைப் படிக்க வாய்ப்பு அமைவதில்லை. உங்களது இவாறான திரிகள் எனக்கு தீனியாக அமையும்.

வெற்றி
03-03-2007, 11:28 AM
இதோ அவரின் மற்றொரு கவிதை
(தொகுப்பின் பெயர் நினைவில்லை)
பலரிடம் வரும் ரூபாய்களுக்கு
எல்லாம் கால் ஒடிந்து
விடுகிறது..
ஆனால் என்னிடம் வரும் சில
சில்லரைகளுக்கு கூட
சிறகு முளைத்து விடுகிறது....

(ஒரு சில வார்த்தைகள் இடம் பெயர்ந்து இருக்கலாம் ..ஆனால் அதன் சாராம்சம் மாற வில்லை என நினைக்கிறேன்)