PDA

View Full Version : ஜுன் 30 செய்திகள்இனியவன்
30-06-2006, 02:36 PM
1) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் முதலாவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

"தென் ஆசியாவில் மக்கள் உரிமை" என்ற பொருளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை நிலை பற்றி

ஆராயப்பட்டது. பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மைய பொதுச் செயலர் கிருபாகரன் உரையாற்றினார்.

இலங்கை அரசின் சுவிஸ் தூதரகப் பிரதிநிதி, கொழும்பு சட்ட மா அதிபர் அலுவலகப் பிரதிநிதி, இலங்கை மனித உரிமை அமைச்சின்

பிரதிநிதிகளும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அவர்கள் நியாயபடுத்த முனைந்தனர். அப்போது அவர்களுக்கும்

கிருபாகரனுக்கும் இடையில் கடும் விவாதம் நடந்தது.

அரச தரப்பினர் ஆனந்த சங்கரியைக் குறிப்பிட்டு கருத்துரைத்தனர். அதற்குப் பதிலளித்த கிருபாகரன், 2002 தேர்தலில் தமிழீழ விடுதலைப்

புலிகளை ஆதரித்ததால் தான் ஆனந்தசங்கரி வெற்றி பெற்றார். அதற்கு மாறாக 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலை

புலிகளை ஆதரிக்காத காரணத்தால் அவர் படுதோல்வி அடைந்ததாகக் கூறினார்.

2) பொலநறுவ வெலிக்கந்தையில் கணவனும் மனைவியும் துணை இராணுவக் குழுவால் கடத்திக் கொலை செய்யப்பட்டனர். அவர்களின்

சடலங்கள் மீட்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் அருளையா மதி அவர் மனைவி சுதா என்று அடையாளம் காணப்பட்டது.

திருமலை சாம்பல்தீவில் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். உந்துருளியில் சென்ற அவர் தலைக்கவசம்

அணியவில்லை. விசாரணைக்காகத் தடுக்க முயற்சித்த போது அவர் நிற்கவில்லை. எனவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவம்

தெரிவித்தது.

இதனிடையே அம்பாறை பனங்காடு கோலாவில் துணை இராணுவக் குழுவி தமிழ் இளைஞர்கள் நால்வரைக் கடத்திச் சென்றது. கிராம

மக்கள் சிலரிடம் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

3) மன்னாரில் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி திசந்த டி கோஸ்தா சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பான

நபர் ராணுவத்தின் பதில் தாக்குதலில் பலியானார். அதிகாரி மன்னார் சந்தைக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற போது அச்சம்பவம்

நடந்தது.

மன்னார் மாவட்ட நீதிபதி என்.எம்.எம். அப்துல்லா சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல

உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து மன்னாரில் ராணுவம் பெரிய அளவில் தேடுதல் வேட்டையை நடத்தியது.

4) சிறிலங்கா அரச நிர்வாகங்களில் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் யாப்பு

விவகார அமைச்சர் டி.ஈ.டபிள்யூ. குணசேகர தெரிவித்தார்.

அரச நிர்வாகங்களில் ஏற்கனவே பணியில் இருப்போர் பிறமொழியைக் கற்க வலியுறுத்த மாட்டோம். ஆனால் கற்றுக் கொள்வதற்கான

வாய்ப்புகளை உருவாக்குவது பற்றிப் பரிசீலிப்போம் என்றார் அவர். தமிழ் அல்லது சிங்களத்தில் புலமை பெறுவோருக்கு ஊக்கத் தொகை,

ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


5) வங்கதேச கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஹசன் அலிகான் யூலை 2 ஆம் நாள் சிறிலங்கா வருகிறார். அவர் சுமார் ஒரு வாரம்

அங்கு தங்கியிருப்பார். இது அவருடைய உத்தியோகப் பூர்வ பயணம் என தெரிய வந்துள்ளது.

இருதரப்பு கடற்படை உறவுகளை வலுப்படுத்துவது பற்றி ராணுவத்துடன் அவர் பேச்சு நடத்துவார். அதிபர் மகிந்த ராஜபக்ச, முப்படைத்

தளபதி டொனால்ட் பெரேரா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட ஆகியோரையும் ரியர் அட்மிரல் கான் சந்தித்துப் பேசுவார்.

6) தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசி இணக்கத்துக்கு வர அதிபர் ராஜபக்க்ஷ முயற்சித்தார். அதற்குரிய பதிலை உதயன்,

சுடர்ஒளி நாளேடுகளின் ஆசிரியர் வித்தியாதரன் மூலம் அனுப்பி வைத்தனர்.

நோர்வேயின் மத்தியஸ்தம் இல்லாமல் நேரடிப் பேச்சுக்கு புலிகளை அதிபர் அழைத்திருந்தார். அவ்வாறான ஒரு நிலையை

வெளிப்படையாக அறிவித்து திறந்த மனதோடு பேச்சு நடத்த அவர் முன்வரலாம் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

ஓவியா
30-06-2006, 04:18 PM
அதிபர்ரும் புலிகலும் சமரசம் அடைய இறைவன் துணை இருக்கட்டும்

மன்றத்தின் சி-என்-என் இனியவனுக்கு நன்றி

இனியவன்
30-06-2006, 06:09 PM
நன்றி
ஓவியா,