PDA

View Full Version : ஹலோ நான் கடவுள் பேசுறேன்.....



இனியவன்
29-06-2006, 05:14 PM
வாலிபக் கவிஞர்

மனிதா ! ஓ !
மனிதா !
காது கொடு ;
கடவுள் பேசுகிறேன் ; உன்
மூளைக்கு ஞான
முலாம் பூசுகிறேன் !

********

அருள்மிகு என்
ஆலயத்தில்...

வேதியர் நீறு கொடுக்க வேறு
சாதியர் நீட்டினார் கை ; வேறு
சாதியர் நீறு கொடுக்க இனி
வேதியர் நீட்டினாலென்ன கை?
பேதங்கள்
பேணாத கை _
திருக்கை ; அதுதான் என்
இருக்கை !

********

நான்
நாலாபுறமும்...

விரிந்து கிடக்கும்
வானம் ;
எனக்குப் பிடிக்கும்
எல்லாப் பறவைகளின் கானம் !

********

நீராட்டவும் ; எனக்கு
நீராஞ்சனம் காட்டவும் ;
இவர்தான் அர்ச்சகர் _ என நான்
இனம் காட்டவில்லை ஒருவரை ;
அனைவர்க்கும்
அம்மையும் அப்பனும் ஆகிய என்
ஆலயத்தில்
அதற்கில்லை ஒரு வரை!

********

ஒரு தேவாரம் ;
ஒரு பூவாரம் ;
இவ்
இரண்டை...
எவர் தரினும் _ நான்
ஏற்பேன்; திருத்
தொண்டர் தம்மிடம்_நான்
தோற்பேன்!

********
ஆயிரம் இருக்கலாம்
ஆகம விதி ; அதனை
ஆரும் கற்கலாம் _ என
ஆகட்டுமே விதி !

மனிதா ! ஓ !
மனிதா !
ஏனயோர்க்கும் _ நீ
எடுத்துச் சொல் :
என் சபையில் _
ஏகலைவனும் ஏந்தலாம் வில் !

நன்றி குமுதம்

இளசு
29-06-2006, 09:20 PM
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..

பொய்யாமொழிப் புலவனின் சொல் மெய்யாகட்டும்.

வாலியின் வரிகள்.. சந்தச்சுவையுடன்... சமத்துவப் பொருளுடன்..

நன்றி இனியன்..

ஓவியா
30-06-2006, 04:12 PM
அடடா
கடவுளே இப்படி குழப்பினா நான் எனத்த சொல்ல...ஒன்னுமே புரியலையே

அவையின் சான்றோர்களே
ஒரு தழ்மையான வேன்டுகோள்
தயவு செய்து யாராவது வாலிப கவிஞரின் கவிதைக்கு கொஞ்சம் விளக்கம் எழுத முடியுமா?

நன்றி

இனியவன்
30-06-2006, 06:35 PM
ஓவியா,
தமிழகத்தில் உள்ள கோயில்களில் மேல் சாதியினர் மட்டும் தான் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலை நீடித்தது. புதிய அரசு அமைந்த பிறகு எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து பெண்களையும் அர்ச்சகர்களாக அனுமதிக்க வேண்டும் என்ற குரலும் ஒலிக்கிறது. இந்தத் தகவல்களின் பின்னணியில் கவிதையை வாசித்துப் பாருங்கள். நன்றி.

ஓவியா
05-07-2006, 04:44 PM
அப்படியே ஆகட்டும்,
அருமையாக வரைந்துள்ளார் வாலிபர்

ஓவியன்
26-02-2007, 12:07 PM
அருமையான வரிகள்!

ஆனால்!

ஆனால் கடவுள் தன்னைப் பற்றி விளக்கம் கொடுக்க வேண்டி வந்தமை கொடுமையானது!

மனோஜ்
26-02-2007, 12:30 PM
மனிதா ! ஓ !
மனிதா !

காது கொடு ;
கடவுள் பேசுகிறேன் ; உன்
மூளைக்கு ஞான
முலாம் பூசுகிறேன் !
அப்படியே ஆகட்டும் நன்றி இனியன்..

வெற்றி
05-03-2007, 11:20 AM
வாலிபக் கவிஞர்

மனிதா ! ஓ !
மனிதா !
காது கொடு ;
கடவுள் பேசுகிறேன் ; உன்
மூளைக்கு ஞான
முலாம் பூசுகிறேன் !

********

நன்றி குமுதம்

ஹாலோ கடவுளே இங்கே டவர் எடுக்க வில்லை
ப்ளிஸ் கால் மீ லேட்டர்