PDA

View Full Version : ஜுன் 29இனியவன்
29-06-2006, 04:46 PM
1) இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழர்கள் தன்னாட்சியுடன் வாழ்வதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்று
"போஸ்டன் குளோப்" தெரிவித்துள்ளது. அப்பத்திரிகை அமெரிக்காவிலிருந்து தான் வெளியாகிறது.

"தமிழ் புலிகள் பயன்படுத்துகிற வழிமுறைகளை நிராகரித்த போதும், தமிழ் மக்களால் எழுப்பப்படுகிற கோரிக்கைகள் நியாயமானவை
அமெரிக்காவின் மூத்த அமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர் கூறினார்.

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் தன்னாட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும். அதற்கு ஏதுவான கூட்டமைப்பை உருவாக்கும் விதத்தில்
நோர்வே பேச்சு அமைய வேண்டும் என்று போஸ்டன் குளோப் குறிப்பிட்டுள்ளது.

2) தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்குரிய திட்டங்கள் அரசிடம் உள்ளதாக சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர்
பாலித கோகென்ன கூறினார். வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலிலும் பேச்சுக்கான திட்டங்களை முன்வைத்துள்ளோம் என்றார் அவர்.

இருப்பினும் அவை பழைய திட்டமா அல்லது நோர்வே அனுசரணையை வெளியேற்றும் திட்டமா என்பது பற்றி கோகென்ன விளக்கவில்லை.

கண்காணிப்புக் குழுவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் வெளியேற வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் கோரினர்.அந்த
முடிவை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் பாலித கோகென்ன தெரிவித்தார்.


3) இலங்கையிலிருந்து சுமார் ஆறரை லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை Amnesty International
தெரிவித்தது.

"பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களில் அவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறி விட்டது. ஆதலால் அம்மக்கள் அச்சமடைந்துள்ளனர்" என்று சர்வதேச மன்னிப்புச் சபை ஆசிய இயக்குநர் பூர்னா சென் கூறினார்.

அதிகரித்து வரும் வன்முறையால் இந்த ஆண்டு மட்டும் 2,800 பேர் இந்தியாவுக்குச் சென்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள்
அமைப்பு தெரிவித்தது.

4) யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் கணேசன் சிவநேசனைக் காணவில்லை. இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

சிவநேசனை விடுவிக்க 5 இலட்சம் ரூபாய் பிணைத் தொகை தர வேண்டும் என்று மர்ம நபர்கள் அவரது உறவினர்களைத் தொலைபேசியில் மிரட்டினர்.

திருகோணமலை பிரதேசச் செலயக ஊழியரை இராணுவம் கொலை செய்தது. கொலையுண்டவர் சம்பூர் கட்டைப்பறிச்சான் பிரதேச
செயலக ஊழியர் செல்லையா வர்ணகுலசிங்கம் என்று தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு கல்முனையில் இளம் குடும்பஸ்தர் தயாநிதி கேதீஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்முனை பாண்டிருப்பு அரசுனர் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் அச்சம்பவம் நடந்தது. கொலைக்கான காரணம் தெரியவில்லை.

5) தமிழர் தாயகத்தில் தற்போதுள்ள அறிவிக்கப்படாத போரை பிரகடனப்படுத்துவது எப்போது என்பதுதான் எதிரிகளுக்கு உள்ள பிரச்சனை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ஈழநாதம் நாளிதழின் முதலாவது பொறுப்பாளர் மேஜர் அழகன் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் அவ்வாறு கூறினார்.

தினம் தினம் மக்கள் கொல்லப்படுவதும், ஆழ ஊடுருவும் தாக்குதல்களை நடத்துவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதற்கான விளைவுகளை எதிரிகள் சந்தித்த வண்ணமே உள்ளனர் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.