PDA

View Full Version : டெங்குவின் தம்பி... மலேரியாவின் அண்ணன்!!!



தாமரை
29-06-2006, 02:34 PM
டெங்குவின் தம்பி... மலேரியாவின் அண்ணன்!

இது பறவைக் காய்ச்சலின் இன்னொரு வகை இல்லை. சிக்கன் சாப்பிடுவதாலும் ஏற்படுவது இல்லை. சரி, பின் ஏன் சிக்கன் சூன்யா என்று பெயர் வைத்தார்களாம்? சிக்கன் குன்யா என்பது தான்சானியாவில் பேச்சு வழக்கிலிருக்கும் ஸ்வாகிலி மொழி வார்த்தை.

இதற்கு அப்படியே ஆளை முடக்கிப் போடுவது என்று அர்த்தம். சிக்கன் குன்யா வைரஸ் ஜுரம் வந்த ஒருவர், அன்றாடப் பணி எதுவும் செய்ய முடியாமல் முடங்கி விடுவார் என்பதைக் குறிக்கத்தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

சிக்கன் குன்யா சரிதம்!

டெங்குவின் தம்பியும் மலேரியாவின் அண்ணனுமான இந்த சிக்கன் குன்யாவும் கொசு மூலம் தான் பரவுகிறது. ஏடிஎஸ்ஈடிபஸ் இதுதான் இந்த வைரஸ் காய்ச்சலைப் பரப்பும் கொசுவின் பெயர். ஆப்பிரிக்காதான் இந்த நோயின் மூலம் அங்கு சென்று வந்த சுற்றுலாப் பயணிகள் வழியாகத்தான் இந்த நோய் ஆசிய நாடுகளில் பரவியதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவுக்கும்கூட இது புதிதல்ல. 1963 மற்றும் 1971ம் ஆண்டுகளில் வட மாநிலங்களில் இந்நோய் இருந்து மறைந்திருக்கிறது. இப்போது தமிழகத்துக்கு வந்தது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திராவுக்குச் சென்று வந்தவர்கள் மூலம்தான். திருச்சி, சென்னை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது இந்நோயின் தாக்குதல் காணப்படுகிறத.

சிக்கன் குன்யா நோய் பாதித்த ஒருவரைக் கடிக்கும் கொசு, ஆரோக்கியமான மனிதனைக் கடிக்கும்போது நோய் அடுத்தவருக்குப் பறவுகிறது. பெண் ஏ.டி.எஸ்ஈடிபஸ் கொசு மட்டும்தான் மனிதனைக் கடிக்கும். கடிப்பதற்கு நேரமெல்லாம் கூட உண்டு. காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரைதான் கடிக்கும்.

அறிகுறிகளும் சிகிச்சையும்...

சிக்கன் குன்யா ஒருவருக்கு வந்தால் தலைவலி, அடித்தப்போட்டது போன்ற உடல்வலி, கடுமையான ஜுரம் (102 டிகிரிக்கு மேல்), கை கால் மூட்டுகளில் பெரும் அவஸ்தை போன்றவை ஏற்படும் உடனே தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது சாலச்சிறந்தத. இந்த விஷ காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து இல்லை எனினும் கவனிக்காமல் விட்டால் மிகுந்த பிரச்னையைத் தரக்கூடியது. ஒர வார கால தகுந்த மருத்துவ சிகிச்சையில் ஜுரம் கட்டுக்குள் வந்தாலும் மூட்டு வலி மட்டும் கொஞ்ச நாளைக்குத் தொடர்ந்து இருக்கும். ஒரு சிலருக்க மூட்டு வலி மட்டும் குணமாக ஆண்டுக்கணக்கில் ஆவதும் உண்டு.

எப்படித் தவிர்க்கலாம்?

வலியைக் குறைக்க சுயமருத்துவம் செய்வது மிகவும் தவறானது. இது ஆபத்தில் கொண்டுபோய் விட்டு விடக்கூடும். குழந்தைகளைவிட பெரியவர்களைத்தான் இந்நோய் அதிகம் தாக்கும். இதுவராமல் தடுக்க தடுப்பூசி எதுவும் இல்லை. அதேபோல் இதற்கென்று தனிப்பட்ட மருந்துகளும் கிடையாது. பாரசிட்டமால் போன்ற மருந்துகளை உட்கொண்டு கட்டுக்குள் கொண்டு வரலாம்.

கொசுக்களை அண்டவிடாமல் செய்வதுதான் சிக்கன் குன்யாவைத் தடுப்பதற்கான சிறந்த வழி. குப்பை சேரவிடாமல், தண்ணீர் தேங்க விடாமல் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக் கொண்டாலே போதும்... கொசுக்கள் அண்டாது. அதேபோல் இந்த நோய் சீசன் முடியும் வரையிலாவது கொசு வலை, கொசு ஒழிப்பு மருந்துகள், க்ரீம்களைப் பயன்படுத்தலாம். இந்நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, பயத்தைப் போக்கினாலே காய்ச்சலை விட வேகமாகப் பரவும் வதந்திகளைத் தடுக்கலாம்.

நன்றி: கல்கி 02.07.06 இதழ்

சட்டபூர்வமான அறிவிப்பு :

நாட்டில் பரவி வரும் காய்ச்சலுமக்கும் பெங்களூர் தமிழ் மன்ற உறுப்பினர்கள் சந்திப்பும் ஒரே சமயத்தில் நடந்த இருவேறு நிகழ்ச்சிகளேயன்றி இவற்றிற்கு யாதொரு சம்பந்தமும் இல்லை

இனியவன்
29-06-2006, 04:53 PM
சட்டபூர்வமான அறிவிப்பு :

நாட்டில் பரவி வரும் காய்ச்சலுமக்கும் பெங்களூர் தமிழ் மன்ற உறுப்பினர்கள் சந்திப்பும் ஒரே சமயத்தில் நடந்த இருவேறு நிகழ்ச்சிகளேயன்றி இவற்றிற்கு யாதொரு சம்பந்தமும் இல்லை[/QUOTE]

இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலைப்பா,,,,,,,

இளசு
29-06-2006, 09:12 PM
சரியான நேரத்தில் தேவையான கட்டுரை.

நன்றி கல்கிக்கும், இங்கே நல்கிய செல்வனுக்கும்.

சிக்குன்குன்யா - Chikungunya தானே இதன் பெயர்.
சிக்கன் எங்கே வந்தது?

http://en.wikipedia.org/wiki/Chikungunya

ஓவியா
30-06-2006, 04:03 PM
அருமையான பதிவு.
நன்றி

காய்ச்சல் கண்டால் உடனே மருத்துவரை சென்று காண்கிறேன்.
(லன்டனில் ஒவ்வொரு கொசுவும் நல்லா குண்டு குண்டா இருக்குப்பா)

pradeepkt
03-07-2006, 05:31 AM
ஹைதராபாதை பயங்கரமாகத் தாக்கி இருக்கிறது சிக்குங்குன்யா. பொதுவாகப் பகலில் கடிக்கும் கொசுக்களால் மட்டுமே இந்நோய் பரவுகிறது.

ஹோமியோபதியில் இதைத் தடுக்கும் மருந்து இருப்பதாக இங்கே ஊரே "ஹே" என்று கிடக்கிறது. என் அலுவலக நண்பர்கள் இருவர் உபயோகித்து விட்டு நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் சிக்குங்குன்யா வந்த பிறகு ஹோமியோ மருந்து வேலை செய்யுமா என்று தெரியவில்லை.

முக்கியமாக உடலின் அனைத்து மூட்டுகளிலும் வலி இருப்பதால் நிற்க, நடக்க, படுக்க என்று எதுவும் செய்ய முடியாது. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு வந்து விட்டது. உடனடியாக ஒரு மாதம் சம்பள விடுப்பு கொடுத்து அவர் கிராமத்துக்கு அனுப்பி விட்டோம்.

தாமரை
03-07-2006, 05:35 AM
சட்டபூர்வமான அறிவிப்பு :

நாட்டில் பரவி வரும் காய்ச்சலுக்கும் பெங்களூர் தமிழ் மன்ற உறுப்பினர்கள் சந்திப்பும் ஒரே சமயத்தில் நடந்த இருவேறு நிகழ்ச்சிகளேயன்றி இவற்றிற்கு யாதொரு சம்பந்தமும் இல்லை

இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலைப்பா,,,,,,,[/QUOTE]
ஆமாமப்பா! இது வரை நடந்த ஒவ்வொரு சந்திப்பு முடிவிலும்( பறவைக்கய்ச்சல் போல) எதாவது ஒரு வியாதி தலப்புச் செய்திகளைப் பிடித்து விடுகிறது.. என்ன செய்ய??? பெங்களூரில் ஒரு சந்திப்பு படித்துப் பாருங்கள்