PDA

View Full Version : REMIX கதை சொல்லுவோம்

இணைய நண்பன்
29-06-2006, 11:55 AM
அன்பர்களே..
நாம் சிறுபிள்ளைகளாக இருக்கும் போது நிறைய குட்டிக்கதைகள் கேட்டிருப்போம் அல்லவா? பாட்டன் பாட்டி... சொல்லித்தந்த கதைகள் மற்றும் பாடசாலைகளில் கூட நிறைய கதை படித்திருக்கிறோம்.உதாரணமாக..
காகமும் வடையும் --- அந்தப்பழம்..புளிக்கும். இப்படி நிறைய ....
இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒருவர் பழைய கதை ஒன்றை தொடக்கி வைக்கட்டும்...மற்றவர்கள் தத்தமது கற்பனையில் கதையை புது வடிவில் மாற்றி அமைக்கலாம் அல்லவா?

இளசு
03-07-2006, 11:10 PM
நீங்கள் தொடங்குங்கள் விஸ்டா... நண்பர்கள் நிச்சயம் தொடர்வார்கள்..

இணைய நண்பன்
04-07-2006, 05:54 AM
சரி...இளசு அவர்களே.. நான் கதை ஒன்றை தொடக்கி வைக்கிறேன்.
இதை ஒவ்வொருத்தரும் கற்பனையில் உதித்தவாறு மாற்றி அமையுங்கள்.
பழைய கதை
ஆமையும் கொக்கும்
---------------
ஒரு ஊரில்
ஒரு குளம்.அதில் நீண்ட காலமாக ஓர் ஆமை வசித்து வந்தது.அக்குளத்திற்கு நிறைய கொக்குகளும் தினம் தோறும் வந்து போகும்.இதனால் கொக்குகளுக்கும் ஆமைக்குமிடையே நல்ல நட்பு ஏற்பட்டது.
சில வருடங்களுக்கு பின் வரட்சி தலைதூக்கத்துங்கியது.குளத்தில் தண்ணீர் மெல்ல துவங்கியது.கடைசியில் ஒரு துளி நீர்கூட இல்லாமல் குளம் வரட்சி நிலமாக மாறியது.
கொக்குகள் ஒவ்வொன்றாக சிறிது தொலைவில் உள்ள குளத்திற்கு இடம் பெயரத்துவங்கின.
ஆமையும் அங்கு போவதென தீர்மானித்தது.ஆனாலும் அக்குளம் சற்றுத்தூரத்தில் இருந்தது.ஆமை வேகத்தில் அங்கு போகத்துவங்கினால்..?? போய்ச்சேருவதற்குள் இக்குளம் நிறைந்துவிடும்.இது ஆமைக்கு நன்றாகத் தெரியும்.அதனால் எப்படியாவது கொக்குகளின் உதவியை நாடவேண்டும் என்று தீர்மானித்தது.
ஒரு நாள் இரண்டு கொக்கு நண்பர்களைச் சந்தித்து.தன்னை எப்படியாவது அடுத்த குளத்திற்கு அழைத்துச்செல்லும் படி கேட்டுக்கொண்டது.
ஆமை நண்பன் அல்லவா? அதனால் கொக்குகளும் ஆமையை கூட்டிப்போவதாக தீர்மானித்தன.
அதன்படி ஒருநாள் இரண்டு கொக்குகள் ஆமையின் இருப்பிடம் வந்து ஒரு கம்புத் தடியினை தமது அலகினால் இருபக்கமும் கவ்விப்பிடித்துக்கொண்டன.ஆமை கம்பின் மத்திய பகுதியை இருக்க கவ்விப்பிடித்துக்கொண்டது.போவதற்கு முதலில் இடையே எக்காரணமும் கொண்டு வாயைத்திறக்கக்கூடது என்று ஆமையிடம் கொக்குகள் அன்புக்கட்டளை இட்டன.ஆமையும் அதை ஏற்ற்க்கொண்டது.
ஆமையத்தாங்கிய படி கொக்குகள் இரண்டும் அடுத்த குளத்தை நோக்கி வானில் பரக்கத்துவங்கின.கொஞ்சதூரம் போய்க்கொண்டிருக்கும் போது அங்கே சிறுவர்கள் கூட்டம் பாடசாலை விட்டு பாதையில் வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஆமை கொக்குகளுடன் பறப்பதைக்கண்டார்கள்.
"அதோ ஆமை பறக்குது....கு......" என்று ஆமையை ஏளனப்படுதிக்கத்தத்துங்கினார்கள்.ஆமையால் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை.சிறுவர்களுக்கு ஏசுவதற்காக வாயைத்திறந்தது.மறு நிமிடம்...
தொப்பெனக் கீழே விழுந்தது.

(இது மூலக் கதை.இனி உங்கள் கற்பனையை தட்டிவிடுங்கள்)

ஓவியா
07-07-2006, 11:10 PM
காக்காவும் வடையும்,
குரங்கும் வடையும்,
பாட்டியும் வடையும்னு கூட
கதையெல்லாம் இருக்கு.......

மயூ
08-07-2006, 06:42 AM
காக்காவும் வடையும்,
குரங்கும் வடையும்,
பாட்டியும் வடையும்னு கூட
கதையெல்லாம் இருக்கு.......
அக்கா! உங்கட வேண்டுகோள் நிறைவேற்றப் படுகின்றது.....:)

மயூ
08-07-2006, 06:44 AM
ஒரு அழகான காலை நேரம். கிழ் வானிலே சூரியன் உதிக்கத் தொடங்கினான். அடுத்த சில மணித்துளிகளில் பூமி தனது ஆதிக்கத்தில் வரப்போவதை அறிந்த கதிரவன் சற்று ஆணவமாகவே வெப்பக் கதிர்களைப் பரப்பினான். எங்கோ தூரத்திலே தடக் தடக் தடக் தடக். என இரயில் வண்டி சென்றுகொண்டு இருந்தது. அனைவரும் காலை நேரத்தில் சுறு சுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டனர். வண்டுகள் ரீங்காரமிடத் தொடங்கிவிட்டன. குயில்கள் பாடத் தொடங்கிவிட்டன. மொட்டுக்கள் மலர்ந்து பூவாக புணர் ஜென்மம் எடுத்துவிட்டன. புல்லின நுனியில் இருந்த பனித்துளிகள் கூட தம்மை சிலிர்த்துக்கொண்டன.

இத்தனைக்கும் மத்தியில் இராஜ பாட்டை வீதியால் செல்பவர்களிற்கு 4 ம் இலக்க வீட்டிலிருந்து வரும் வடைவாசனையை நுகராமல் செல்லவே முடியவில்லை. என்ன உங்களிற்கும் மணக்கிறதா அந்த உழுந்து வடை?. வாங்கோ உள்ளுக்க போவம்.

அங்கே ஒரு காக்கா வடை சுட்டுக்கொண்டு இருந்தது. அந்த காக்கா வடைசுடும் விதமோ அப்பப்பா என்ன ஒரு அலாதி......

உழுந்து கலவையை கையில் எடுத்து அதில் இலாவகமாக ஒரு ஓட்டைபோட்டு எண்ணெயில் விட்டு எறிந்தார்.

சு..... வடை பொரியும் சத்தம் சுண்டியிழுத்தது எம்மை மட்டுமல்ல அப்பப்ப காக்காவின் வடையை சூறையாடும் ஒருவருக்கும் தான்.

4 ம் இலக்க வீட்டு கூரையிலே அப்போது ஒரு சத்தம் தொம்.......... காக்காவிற்கு புரிந்து விட்டது வந்திருப்து யாரென்று. தனகு கரிய சிறகுகளை பட பட என அடித்தவாறு கரையத் தொடங்கியது.

கூரை மேல் இருந்தது யார் எனத் தெரியுமா அதுதாங்க கள்ளப் பாட்டி. அப்போது கூரை மேலிருந்த பாட்டி சடார் எனப் பாய்ந்து போய் 5 ம் இலக்க வீட்டு கூரையின் மேல் அமர்ந்து கொண்டார்.

பாட்டி சென்று விட்டதாக நினைத்த காக்காவும் சந்தோசமாக கவலையில்லாமல் நீராடச் சென்றுவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய பாட்டி குய்................ எனப் பாய்ந்து வந்து காக்காவின் வடையை திருடிக் கொண்டு போய்விட்டா.

நீண்ட நேரம் பாய்ந்து பாய்ந்து போன பாட்டி களைப்படைந்து விடவே தன் வாயிலிருக்கும் வடையை சாப்பிட எண்ணினார். அப்போதுதான் பாட்டியுடன் சனி விளையாடத் தொடங்கியது.

அந்த வழியால் ஒரு கழுதை வந்தது. பத்து நாளாக சாப்பிடாமல் பஞ்சத்தில் அடிபட்டிருந்த குள்ளக் கழுதை அது. பாட்டியின வாயிலிருக்கும் வடையை எப்படியாவது கவருவது என்று தீர்மாணித்துக் கொண்டது.

பாட்டி பாட்டி எங்க ஒரு பாட்டு ஒண்டு பாடு பாக்கலாம் கழுதை கேட்டது

நீண்ட நேர யோசனையின் பின்பு பாட்டி தனது பொக்கை வாயினுள் வடையை அடைந்து சாப்பிடத் தொடங்கினார். பின்பு ஒரு ஏப்பம் விட்டவாறே பாடத்தொடங்கினார்..........

கண்ணும் கண்ணும் நோக்கியா!
நீ கொள்ளை கொள்ளும் மாபியா
உனக்கு தேவை வடையா
போடாங் கொய்யா....

வடையை பெற்றுக் கொள்ள முடியாமல் போன கழுதை அசடு வழிந்தவாறே நம்ம வடிவேல் பாணியில் கூறியது.
இந்த வயசிலயும் இப்பிடி சிமாட்டா பதில் சொல்லுறியே நீயு
உண்மையிலேயே சுப்பர் கிரானிதான்
வாடிய முகத்துடன் அந்த இடத்தைவிட்டு கழுதை நகர்ந்தது. பாட்டி சந்தோசத்துடன் காதல் யானை வருகுது ரெமோ பாடலை வாயினுள முணு முணுத்தவாறே மீண்டும் பாய்ந்து பாய்ந்து சென்றார்.

கதை சொல்லும் தத்துவம் : அந்நியன் திரைப்படம் பார்த்தால் வடையை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றலாம்.

இணைய நண்பன்
09-07-2006, 10:29 AM
காக்காவும் வடையும்,
குரங்கும் வடையும்,
பாட்டியும் வடையும்னு கூட
கதையெல்லாம் இருக்கு.......

நிறையக்கதை இருக்குது தான் அன்பின் நான் கண்ட புதுமைப்பெண் ஓவியா அவ்ர்களே....புதிய கதை ஒன்று சொல்லுங்களே..கேட்க ஆசையாக் இருக்கிறது.

இணைய நண்பன்
09-07-2006, 10:30 AM
மயூரேசன் அவர்களே நல்ல கற்பனை.இன்னும் வளரட்டும்.வாழ்த்துக்கள்.

ஓவியா
09-07-2006, 12:48 PM
நிறையக்கதை இருக்குது தான் அன்பின் நான் கண்ட புதுமைப்பெண் ஓவியா அவ்ர்களே....
புதிய கதை ஒன்று சொல்லுங்களே..
கேட்க ஆசையாக் இருக்கிறது.
:D :D :D

புதிய கதையா?

தம்பி மயூரேசன் சொன்னதே ஒரு புதுக்கதைதான்.

படித்து, இன்னும் எனக்கும் சிரிப்பு அடங்கவில்லை....:D :D :D

பாட்டி பாட்டி எங்க ஒரு பாட்டு ஒண்டு பாடு பாக்கலாம் கழுதை கேட்டது. நீண்ட நேர யோசனையின் பின்பு பாட்டி தனது பொக்கை வாயினுள் வடையை அடைந்து சாப்பிடத் தொடங்கினார். பின்பு ஒரு ஏப்பம் விட்டவாறே பாடத்தொடங்கினார்..........

:D :D :D :D :D

pradeepkt
10-07-2006, 05:34 AM
அதெல்லாம் சரி ராஜா...
இந்தக் கதையின் தொடக்கத்திலயும் பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுத்திருக்க பாரு! அதான் சூப்பரு! :D :D

rojakootam
10-07-2006, 09:29 AM
மயூரேசென் அவர்கள் சொன்னது புதுக்கதை தான். இப்போ ஓவியா அக்கா ஒரு புதுக் கதை சொல்லுங்க!!

pradeepkt
10-07-2006, 10:20 AM
வாங்க ரோஜாக்கூட்டம்
உங்களைப் பத்தி ஒரு சிறு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்கள்.

மயூ
10-07-2006, 12:26 PM
அதெல்லாம் சரி ராஜா...
இந்தக் கதையின் தொடக்கத்திலயும் பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுத்திருக்க பாரு! அதான் சூப்பரு! :D :D

எல்லாம் நம்ம பசங்களை நம்ப வைச்சு கவுக்கத்தான்....
பிரதீப் அண்ணாவும் கவுண்டுட்டாங்களா?????:D :D :D

தாமரை
10-07-2006, 12:33 PM
மயூரேசென் அவர்கள் சொன்னது புதுக்கதை தான். இப்போ ஓவியா அக்கா ஒரு புதுக் கதை சொல்லுங்க!!

மயூரே சென், நீங்க ரீமா சென் னின் தம்பியா இல்லை அந்த நோபல் பரிசு வாங்கினாரே அமர்தியா சென் அவரோட உறவினரா? மிருணாள் சென் பரம்பரையா?

pradeepkt
11-07-2006, 05:08 AM
நானும் ரொம்ப நாளா எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களும் எம் எஸ் விசுவநாதனும் அக்கா தம்பி என்று நினைத்திருந்தேன். அது மட்டுமா எம் என் நம்பியாரும் எம் என் ராஜமும் அண்ணன் தங்கை என்று நினைத்து ரெண்டு பேரும் எவ்வளவு கெட்டவங்களா இருக்காங்கன்னு (சினிமாவுல) நினைச்சுருக்கேன்!

சரி இப்ப நம்ம சென்னுக்கு வருவோம்! மயூரேசென் முக்கியமா சுஷ்மிதா சென்னுக்கு என்ன உறவுன்னு தெரிஞ்சுட்டாப் போதும் :D :D

தாமரை
11-07-2006, 05:10 AM
சரி இப்ப நம்ம சென்னுக்கு வருவோம்! மயூரேசென் முக்கியமா சுஷ்மிதா சென்னுக்கு என்ன உறவுன்னு தெரிஞ்சுட்டாப் போதும் :D :D

அதைச் சொல்லி வர்மனதை நோகச் செய்ய வேண்டாம் என நினைத்தேன்.. அக்கா தம்பின்னு சொன்னா நம்பவா போறீங்க??:D :D :D

pradeepkt
11-07-2006, 05:26 AM
அதைச் சொல்லி வர்மனதை நோகச் செய்ய வேண்டாம் என நினைத்தேன்.. அக்கா தம்பின்னு சொன்னா நம்பவா போறீங்க??:D :D :D
நம்புவேன்... ஆனா மயூரேசன் இனிமேல் என்னை அண்ணான்னு கூப்பிடக் கூடாதுன்னு கண்டிசன் போட்டுருவேன் :D
கையோட கையா இதைப் பண்பட்டவர் பகுதிக்கு மாத்திருங்க :D

மதி
11-07-2006, 06:16 AM
நம்புவேன்... ஆனா மயூரேசன் இனிமேல் என்னை அண்ணான்னு கூப்பிடக் கூடாதுன்னு கண்டிசன் போட்டுருவேன் :D
கையோட கையா இதைப் பண்பட்டவர் பகுதிக்கு மாத்திருங்க :D.
இப்ப புரியுதா ஏன் நான் இவங்களுக்கு அந்த பேர் வச்சேன்னு.
புதுசா கதை சொல்ல சொன்னா..சொந்த கதையே பேசறாங்கப்பா..:D :D :D

pradeepkt
11-07-2006, 09:53 AM
.
இப்ப புரியுதா ஏன் நான் இவங்களுக்கு அந்த பேர் வச்சேன்னு.
புதுசா கதை சொல்ல சொன்னா..சொந்த கதையே பேசறாங்கப்பா..:D :D :D
ஒடனே ஆரம்பிச்சுருவியே உன் நிர்மா வசனத்தை!!
நீதான் சொல்லேன் புதுக்கதை! உன் புதுக்கதைகளைத்தான் ஃபோரம் வாசல்ல தினமும் மக்கள் பாக்குறாங்களாமே??? :rolleyes: :rolleyes: :rolleyes:

மதி
11-07-2006, 10:03 AM
ஒடனே ஆரம்பிச்சுருவியே உன் நிர்மா வசனத்தை!!
நீதான் சொல்லேன் புதுக்கதை! உன் புதுக்கதைகளைத்தான் ஃபோரம் வாசல்ல தினமும் மக்கள் பாக்குறாங்களாமே??? :rolleyes: :rolleyes: :rolleyes:
நான் எங்க சொல்றது..நான் கடைசியா உங்க கூட தான் ஃபோரம் வந்தேன். அப்புறம் போகவேயில்ல.. உடனே புரளிய கிளப்பி விட்டுடுவாங்க.. எல்லாம் கலி காலமப்பா..!:eek: :eek: :eek:

sarcharan
11-07-2006, 10:05 AM
நான் எங்க சொல்றது..நான் கடைசியா உங்க கூட தான் ஃபோரம் வந்தேன். அப்புறம் போகவேயில்ல.. உடனே புரளிய கிளப்பி விட்டுடுவாங்க.. எல்லாம் கலி காலமப்பா..!:eek: :eek: :eek:

அப்ப பிரதீப் வந்து உங்க ****களை பறித்துக்கொண்டாருன்னு சொல்ல வர்றீங்களா மதி!!!!!!!!!! என்னே உமது மதி!!!!!!!!
:D :D :D

மதி
11-07-2006, 10:17 AM
அப்ப பிரதீப் வந்து உங்க ****களை பறித்துக்கொண்டாருன்னு சொல்ல வர்றீங்களா மதி!!!!!!!!!! என்னே உமது மதி!!!!!!!!
:D :D :D
இத வேற சொல்லணுமா..எல்லாம் வரிசைப் படி தான் நடக்கும்..

மயூ
11-07-2006, 10:45 AM
இத வேற சொல்லணுமா..எல்லாம் வரிசைப் படி தான் நடக்கும்..
அழகுப் பதுமையை என் அக்காவாக்கப் பார்தத அசட்டுப் பசங்களை கடுமையாக கண்டிக்கின்றேன்.....:D :D :D

அப்பாடா நான் தப்பிச்சன்! தங்களுக்குள்ள பிச்சுக்க ஆரம்பிச்சிட்டீங்களே!!!!!!:p

ரீமா சென் என் அக்காஎன யாரும் இனிமேல் சொல்லக்கூடாது. (வேணும் எண்டா மச்சாள் என்று சொல்லுங்கோ):cool:

sarcharan
11-07-2006, 11:01 AM
அழகுப் பதுமையை என் அக்காவாக்கப் பார்தத அசட்டுப் பசங்களை கடுமையாக கண்டிக்கின்றேன்.....:D :D :D

அப்பாடா நான் தப்பிச்சன்! தங்களுக்குள்ள பிச்சுக்க ஆரம்பிச்சிட்டீங்களே!!!!!!:p

ரீமா சென் என் அக்காஎன யாரும் இனிமேல் சொல்லக்கூடாது. (வேணும் எண்டா மச்சாள் என்று சொல்லுங்கோ):cool:

ஹ்ம்ம் லொள்ளு.. எனக்கு போட்டியாய் நான் மயூரேசனை ஆக்க விரும்பவில்லை.....

mukilan
11-07-2006, 02:46 PM
பிரதீப்பு வயசாகிடுச்சுங்கிறதை சரியா நிரூபணம் செய்றீங்களே. சுஸ்மிதா சென் எல்லாம் ஓல்ட் ஆயாச்சுங்கோ. உடனே ஓல்ட் இஸ் கோல்ட்ன்னு சொல்வா நு கிளம்பிடாதேள். காத்ரினா கைஃப் அப்படின்னு ஒரு அம்மணி பாலிவுட்ல காட்ரினா சூறாவளி போற கிளம்பியிருக்கு. அப்புறம் பிபாஸான்னு ஒரு அழகுப் பிசாசாம், ஜான் ஆபிரகாமோடா தோழி. தமிழ்கூறும் நல்லுலகில் மலையாளக் கரை வரவுகளான் அசின், நயனதாரா, பாவனா இப்படி சின்ன சின்ன பொண்ணுங்களைப் பாருங்க.

ஓவியா
11-07-2006, 06:17 PM
மயூரேசென் அவர்கள் சொன்னது புதுக்கதை தான். இப்போ ஓவியா அக்கா ஒரு புதுக் கதை சொல்லுங்க!!

நன்பரே மன்றத்தில் தாங்களின் முதல் பதிவே எனக்கா..........:D :D
அதுவும் அக்கவா..:cool: ...
நன்றி......:)

அறிமுக பகுதியில் உங்களுடைய மடலை எதிர்பார்கின்றோம்....

புதுகதைத்தானே...கூடிய விரைவில் எழுதுகின்றேன்

pradeepkt
12-07-2006, 05:01 AM
பிரதீப்பு வயசாகிடுச்சுங்கிறதை சரியா நிரூபணம் செய்றீங்களே. சுஸ்மிதா சென் எல்லாம் ஓல்ட் ஆயாச்சுங்கோ. உடனே ஓல்ட் இஸ் கோல்ட்ன்னு சொல்வா நு கிளம்பிடாதேள். காத்ரினா கைஃப் அப்படின்னு ஒரு அம்மணி பாலிவுட்ல காட்ரினா சூறாவளி போற கிளம்பியிருக்கு. அப்புறம் பிபாஸான்னு ஒரு அழகுப் பிசாசாம், ஜான் ஆபிரகாமோடா தோழி. தமிழ்கூறும் நல்லுலகில் மலையாளக் கரை வரவுகளான் அசின், நயனதாரா, பாவனா இப்படி சின்ன சின்ன பொண்ணுங்களைப் பாருங்க.
என்னய்யா இன்னும் காத்ரினா, வாட்டர்பேக் நயந்தாரா பத்தி சொல்லிட்டு இருக்கீங்க, இங்ஙன இலியானா அசினையெல்லாம் எலி மாதிரி ஆக்கிட்டாப்ல... ஆனாலும் இவங்க எல்லாம் உலக அழகிகள் இல்லையே!!! பிபாஷா இப்ப எல்லாம் நடிக்க ஆரம்பிச்சுட்டாப்புல... அதுனால ஒத்து வரமாட்டாப்புல!

மதி
12-07-2006, 05:23 AM

அண்ணாச்சி...ஒலக அழகியள மட்டும் தான் பார்ப்பீயளாக்கும்...!:eek: :eek: :eek: :eek: :eek:

இணைய நண்பன்
12-07-2006, 05:38 AM
காக்காவும் வடையும்,
குரங்கும் வடையும்,
பாட்டியும் வடையும்னு கூட
கதையெல்லாம் இருக்கு.......

காக்காவும் வடையும் --பாட்டியும் வடையும் கதை தெரியும்.ஆனால் குரங்கும் வடையும் கதை எனக்குத் தெரியாதே...பாட்டி....பாட்டி..(ஓவியா)..அந்தக் கதையை எனக்காக கொஞ்சம் சொல்றீங்களா?

pradeepkt
12-07-2006, 06:29 AM
அண்ணாச்சி...ஒலக அழகியள மட்டும் தான் பார்ப்பீயளாக்கும்...!:eek: :eek: :eek: :eek: :eek:
ஆமா!!! நீ என்ன உலகிழவிகளைத்தான் பாப்பியாக்கும்???? :rolleyes: :eek: :rolleyes: :eek:

மதி
12-07-2006, 06:45 AM
ஆமா!!! நீ என்ன உலகிழவிகளைத்தான் பாப்பியாக்கும்???? :rolleyes: :eek: :rolleyes: :eek:
நான் இன்னார தான் பாப்பேன்னு சொன்னேனா? ஸ்டேட்மெண்ட் விட்டது நீங்க..!;) ;) ;) :cool:

மயூ
12-07-2006, 10:07 AM
காக்காவும் வடையும் --பாட்டியும் வடையும் கதை தெரியும்.ஆனால் குரங்கும் வடையும் கதை எனக்குத் தெரியாதே...பாட்டி....பாட்டி..(ஓவியா)..அந்தக் கதையை எனக்காக கொஞ்சம் சொல்றீங்களா?
இந்த தபா நான் வாயே திறக்கேல....
போன முறை மாதிரி என்னைக் கடிந்து கொள்ளக் கூடாது :) :) :)

ஓவியா
12-07-2006, 10:31 AM
இந்த தபா நான் வாயே திறக்கேல....
போன முறை மாதிரி என்னைக் கடிந்து கொள்ளக் கூடாது :) :) :)

சரி கடிக்கல மக்கா......:D

ஆனால்,

காலம் கடந்தாலும் சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தி அய்யாவை இன்னும் போற்றூகின்றொமே அதுபோல்........

ஆரம்பிச்சு வச்ச பெருமை உம்மையே சேரும்.....:cool:

தாமரை
24-07-2006, 04:48 AM
அந்த பால்காரன் ரொம்பத்தான் ஹை டெக்.. பால் தான்னாலும் வீட்டிக்கு வீடு இண்டர்நெட் மூலம் ஆர்டர் செய்து குழாயைத் திறந்தா ஆர்டர் பண்ணிய பால் உங்கள் வீட்டிலேயே.. உங்கள் கிரெடிட் கார்டில் பணம் கழித்துக் கொள்ளப்படும்..

என்னதான் டெக்னாலஜி முன்னேறினாலும் மனிதனின் கலப்பட புத்தி மாற்ரதில்லையே.. தண்ணீர் பாலை விட காஸ்ட்லின்னாலும் மனுஷன் புதுசா ஒரு திரவம் கண்டுபிடித்து வச்சிருக்கான்.. பாலோடு சேர்த்து கலந்து விடுவான்..

ஆனால் இன்புட் - அவுட்புட் சரியா காமிச்சாகணுமே.. அதற்காக ஒரு செயற்கைப் பசு வச்சிருந்தான்.. அது பாலும் கறக்காது ஒண்ணும் கறக்காது.. சும்மா மிச்சமான பாலில் இன்னும் ஒரு திரவம் கலந்து பசும்பால் என்று வித்துகிட்டு இருந்தான்..

மிச்சமான காசை எல்லாம் வச்சு ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்கணும் னு ரூபாய் தாள்களை மூட்டையாக் கட்டிகிட்டு ஒரு டாக்ஸி பிடிச்சு ஷோரூம் போனான்..

திடீர்னு டாக்ஸி வேற ரூட்டில திரும்ப, முன் சீட்டுக்கு அடியில பதுங்கி இருந்த குரங்குகள் பல்லை காட்டி இளிச்சிகிட்டே ஒரு மயக்க மருந்தை தூவ.. மனுஷன் சூ-வைக் கழட்டி மோந்து பார்த்தாப்பல பட்டுன்னு மயங்கிட்டான்..

குரங்குகள் அவன் ஏமாத்தி சேர்த்த பணத்தையெல்லாம் மூட்டையா தூக்கிகிட்டு போயிடுச்சு..

அடுத்த நாள் பேப்பர்ல கொட்டையாய் அதுதான் தலைப்புச் செய்தி...

குரங்குகள் கைது - கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற போது கையும் களவுமாய் பிடிபட்டன..

ஆமாம் கலப்பட பாலுக்கு வாங்கற மக்கள் கள்ள நோட்ட கொடுப்பாங்கன்னு பால்காரனுக்குத்தான் தெரியுமா இல்லை குரங்குகளுக்குத்தான் தெரியுமா??

பென்ஸ்
30-07-2006, 03:13 AM
ஆமாம் கலப்பட பாலுக்கு வாங்கற மக்கள் கள்ள நோட்ட கொடுப்பாங்கன்னு பால்காரனுக்குத்தான் தெரியுமா இல்லை குரங்குகளுக்குத்தான் தெரியுமா??

ஆமா... உங்களுக்கு தெரியுமா???

மயூ
30-07-2006, 07:30 AM
ஆமா... உங்களுக்கு தெரியுமா???
தெரிந்து இருந்தால் சொல்லி இருப்பாரில்ல....:confused: :confused: