PDA

View Full Version : காத்திருக்கின்றேன்.



றெனிநிமல்
28-06-2006, 09:58 PM
காத்திருக்கின்றேன்.

http://photos1.blogger.com/blogger/1111/1912/400/lovers.jpg

அன்று ஒரு நாள்
ஆற்றங்கரைதனில்.....
இலைமறை காயாக கண்டேன் அவளை!
ஈர்த்து விட்டாள் என்னையவள்
உண்மை ஒன்று சொல்லவா,
ஊருக்குள் அழகி அவள் மட்டும் தான்
எண்ணில் அடங்கா ஆசைகள்
ஏக்கத்தில் இங்கே தவிப்புக்கள்
ஐமூன்று வயதைக் கடந்தவளே
ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா
ஓடமாய் ஓடுகின்றேன் வழிகளின்றி
ஓளடதமாய் இருப்பாயா என் நோயிக்கு
அஃதே வருவாய் என்று காத்திருக்கின்றேன்.

இளசு
28-06-2006, 10:11 PM
காதல் அரிச்சுவடி.. ஆத்திச்சூடி..
அவள் மனம் வருடி, காதல் வெற்றி மலர் சூட
வாழ்த்துகள்.. றெனி..

விஜய்
28-06-2006, 11:20 PM
அ - ஃ கவிதை நல்லா இருக்கு. உங்கள் காத்திருப்பு வீணாகமல் வெற்றிபெற வாழ்த்துக்கள்

yogesh220
29-06-2006, 04:12 AM
ஐமூன்று வயதா?.....ரெனி பார்த்து..... இது காதலா? பாசமா?

கவிதை அருமை...

ஓவியா
29-06-2006, 12:52 PM
காதல் அரிச்சுவடி.. ஆத்திச்சூடி..
அவள் மனம் வருடி, காதல் வெற்றி மலர் சூட வாழ்த்துகள்.. றெனி..

றெனிநிமல் சார்
எத்தனை முறை வாழ்துக்கள் பெருவீர்? :) :)

ஓவியா
29-06-2006, 01:01 PM
காத்திருக்கின்றேன்.

http://photos1.blogger.com/blogger/1111/1912/400/lovers.jpg

அன்று ஒரு நாள்
ஆற்றங்கரைதனில்.....
இலைமறை காயாக கண்டேன் அவளை!
ஈர்த்து விட்டாள் என்னையவள்
உண்மை ஒன்று சொல்லவா,
ஊருக்குள் அழகி அவள் மட்டும் தான்
எண்ணில் அடங்கா ஆசைகள்
ஏக்கத்தில் இங்கே தவிப்புக்கள்
ஐமூன்று வயதைக் கடந்தவளே
ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா
ஓடமாய் ஓடுகின்றேன் வழிகளின்றி
ஓளடதமாய் இருப்பாயா என் நோயிக்கு
அஃதே வருவாய் என்று காத்திருக்கின்றேன்.

றெனிநிமல் சார்
காதல் ஆத்திச்சூடி.....கவிதை தூள்

(இது நிரந்தர காத்திருப்பு...)
ஓளவை வயதை கடந்தாலும் - நீ
அஃதே வருவாய் என்று காத்திருக்கின்றேன்.....:) ;) :) ;)

இணைய நண்பன்
29-06-2006, 01:01 PM
தலைப்பு காத்திருக்கின்றேன். அல்ல....
காதல் அரிச்சுவடி...
வாழ்த்துக்கள் றெனி

றெனிநிமல்
01-07-2006, 05:37 PM
நன்றி இளசு,விஜய் உங்கள் விமர்சனம் தான் எம் சொத்து!:)

றெனிநிமல்
01-07-2006, 05:38 PM
ஐமூன்று வயதா?.....ரெனி பார்த்து..... இது காதலா? பாசமா?

கவிதை அருமை...
ஹி ஹி ஹி.......... பதினாறும் நிறையாத பருவ மங்கை! என்றால் சரியாகுமா?

றெனிநிமல்
01-07-2006, 05:40 PM
றெனிநிமல் சார்
காதல் ஆத்திச்சூடி.....கவிதை தூள்

(இது நிரந்தர காத்திருப்பு...)
ஓளவை வயதை கடந்தாலும் - நீ
அஃதே வருவாய் என்று காத்திருக்கின்றேன்.....:) ;) :) ;)

ஓகோ! இது தான்
பாரதி காணாத புதுமைப்பெண்ணா!
இப்ப புறிஞ்சி விட்டது.:D

றெனிநிமல்
01-07-2006, 05:44 PM
தலைப்பு காத்திருக்கின்றேன். அல்ல....
காதல் அரிச்சுவடி...
வாழ்த்துக்கள் றெனி

நன்றி நன்றி உங்களுக்கு இல்லாததா?
"யார் அங்கே! இந்த காதல் அரிச்சுவடி தலைப்பையே சூடி விடுங்கள்!":)

உமாமீனா
15-02-2011, 06:10 AM
நல்ல அரிச்சுவடி - குளிக்கும் பொது அரைகுறையாய் பார்த்ததின் விளைவோ?